Wednesday, February 9, 2011

கவுண்டமணியும்… கண்டமேனிக்கு காமெடி பண்ணும் கேவலனும்…

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



ஆரம்பத்திலேயே அலாரம் அடிக்கிறேன்... 

இந்த உரையாடல் முழுக்க முழுக்க என் கற்பனையே...

விஜய் ரசிகர்கள் விருப்பம் இருந்தா கீழ்கொண்டு படிங்க... 

இல்லைனா அப்படியே போயிடுங்க...

முழுக்க படிச்சிட்டு குய்யோ..முயோனு கத்த கூடாது...


கவுண்டமணி :  வணக்கம் மக்களே..

நம்ம நிகழ்ச்சிக்கு மூஞ்சியில் சந்தானம் பூசி 
 
மாறுவேடத்தில் வந்தவரும்…

கால் முட்டியில் கர்ச்சீப் கட்டி கவர்மென்ட்டையே

ஏமாத்தியவருமான கேவலன் வர்றார்..




விஜய் :  தப்பா சொல்றீங்க ண்ணா, அது காவலன்


கவுண்டமணி : காவல் காக்க நீ என்னை டாபர் மேனா..

அப்புறம் ஏன்டா காவல் காக்குறேன்னு பிகரை கரெக்ட் பண்ண..


விஜய் :  அது எனக்கு தெரியாது…

நீங்க இயக்குனரை தான் கேட்கணும்..


கவுண்டமணி : ஆமா நாயே.. ஏதாவது நல்லதுனா அதை

நான் தான் செஞ்சேன்னு டமாரம் அடிப்பே.. 

அதுவே ஆப்பு வைக்கிற மாதிரி எதாவதுனா இயக்குனரை கை காமிப்பே..

ஏன்டா டபரா மூஞ்சா..பூவே உனக்காக னு ஒரு படம் நடிச்சியே அது

நல்லா தானே இருந்துச்சு.. இந்த படத்தில கூட ஏழு எட்டு சீன்ல நல்லா 

தானே நடிச்சி இருக்க… இதே போலவே நடிக்க வேண்டியதுதானே டா.. 

உனக்கு தான் காதல் படம் எல்லாம் நல்லா நடிக்க வருதுல்ல..

இல்லேன்னா உங்க அப்பனும் நீயும் சேர்ந்துகிட்டு சங்கவி , யுவராணி , 

சுவாதி னு சின்ன சின்ன பொண்ணுங்களை வச்சி செம கில்மாவா

படம் கொடுத்தீங்களே டா..





அது மாதிரியாவது நடிக்க வேண்டியது தானே.. 

ஏன்டா சண்டை படம் நடிச்சி வில்லன்னுங்களையும் எங்களையும் 

வளச்சி வளச்சி வெட்டுற…


விஜய் : ண்ணா.. ஆக்ஷன் படம் நடிச்சா தானே 

அரசியலுக்கு வர முடியும்…


கவுண்டமணி :ஆமாண்டா.. இதே நெனப்புல தான்…

தெருத்தெருவா தீவிரவாதிகளை புடிச்ச ஒருத்தன் ஒவ்வொரு

மேடையிலயும் கண்ணு சிவக்க சிவக்க பேசி எங்களை கட்சி 

மாறி கன்வர்ட் ஆக்க பார்க்குறான்.. இதுல நீ வேறயா..


விஜய் :  ஏண்ணா… அப்ப எனக்கு சண்டை படம் ராசி இல்லையா..



கவுண்டமணி : உனக்கு ராசி தாண்டா மவனே.. 

விநியோகஸ்தர்களுக்கு தான் ராசி இல்லை.. 

மேயுற மாடை நக்குற மாடு கெடுத்த மாதிரி.. 

உன்னை பார்த்துட்டு விக்ரமன் எல்லாம் பரத் தை வச்சி

சென்னை காதல் னு அட்டர் படம் எடுக்கிறாண்டா…


விஜய் :  ண்ணா.. நம்மை பார்த்து நாலு பேரு காப்பி அடிக்கிறான்னா

நாம வளர்ந்து கிட்டு இருக்கோம்னு தானே அர்த்தம்…


கவுண்டமணி : டே ஸ்பெக்ட்ரம் வாயா… 

நல்லது மட்டுமில்ல டா சமயங்களில் ரொம்ப கெட்டதும் மக்கள் 

கிட்ட வேகமா போய் சேர்ந்துடும்.. அப்புறம் என்ன சொன்னே.. 

உன்னை பார்த்து காப்பி அடிக்கிறாங்களா… டே நடுநிசி நாயே....

நீ நடிச்ச சமீபத்திய படங்கள் அத்தனையுமே ஆந்திரா ஜெராக்ஸ்

கடைல copy எடுத்தது தானே டா…

உன்னையும் அந்த ஜெராக்ஸ் ரவி யையும் தாண்டா ரொம்ப நாளா

தேடிக்கிட்டு இருந்தேன்.. மவனே நீ இன்னைக்கு மாட்டிகிட்டே…


விஜய் :  சரிங்ணா...அதை விடுங்க.. வேற ஏதாவது கேளுங்க…


கவுண்டமணி : ஹ்ம்ம்..மாட்டிகிட்ட மலை குரங்கே…

எதுக்கு Jaya TV ல பேட்டி குடுத்த...?


விஜய் :  அவங்க கூப்பிட்டாங்க.. நான் போனேன்...


கவுண்டமணி : அவ கூப்பிட்டா நீ போய்டுவ, அப்படிதானே..?


விஜய் :  ண்ணா…ஏதோ உள்குத்து மாதிரி இருக்கு…


கவுண்டமணி : டே சொறி புடிச்ச மொன்ன நாயே, உள்குத்தும் இல்ல..

காதுக்குத்தும் இல்ல..கேட்ட கேள்விக்கு பதில சொல்லு, 

ஆமாம், உன் மனுசுல என்ன பெரிய பச்சிலை புடிங்கின்னு நெனப்பா..?


விஜய் : :  ண்ணா…ஏண்ணா அப்படி கேட்குறீங்க… 


கவுண்டமணி :  பின்னே என்னடா… 

அவங்க கூப்பிட்டாங்க, நீ போன, இப்ப இந்த லூசு கிழவன்

கூப்பிட்டான்னு இங்கயும் போறியே, உன் படத்தில தான்  

அயிட்டம் சீன்சா வரும்னு பார்த்தா, 

நீயே அயிட்டம் ஆயிட்டியே டா ஆஸ்பெஸ்டாஸ் மண்டையா…



விஜய் :  நான் என்ன பண்றது…என் அப்பன் என் பேச்சை கேட்டாதானே…

அந்த பைத்தியம் புடிச்ச நாய் என்ன கோர்த்துவிட்டுட்டு

இளவயசு பொண்ணுங்களை வச்சி படம் எடுத்து ஜல்சா பண்ணுது…


கவுண்டமணி : ஆமாண்டா… நீ , சிம்பு , தனுஷ்னு வாரிசு நடிகர்கள்

யாருமே அவனவன் அப்பன் எடுக்குற படத்துல 

ஏன்டா நடிக்க மாட்றீங்க…




விஜய் :  உங்களுக்கு தெரியாதுனே.. ஒவ்வொரு படம் எடுக்கும் போதும் 

அடுத்து நீ என் படத்துல தாண்டா நடிக்கணும் னு எங்க அப்பா 

என்னை மிரட்டுவாருன்னா.. நான் தான் அப்படி எல்லாம் நடந்தா

நான் தற்கொலை பண்ணிக்கிட்டு அதுக்கு காரணம் நீ தான்னு 

கமிஷனர் க்கு லெட்டர் எழுதிபோட்டுடுவேன்னு பயமுறுத்தி

வச்சி இருக்கேன்…



கவுண்டமணி : நல்ல குடும்பம் டா ஏருல பூட்டின எருமை மாதிரி…

நல்ல துப்பு கேட்ட குடும்பம்… நீங்க எல்லாம் இருந்தா தமிழ் சினிமா 

கெட்டு போயிடும்…எங்காவது ஓடி போயிடு… 

நீயும் அஜித்தும் சந்தீச்சீங்களாமே.. 

வாட்ச் எல்லாம் குடுத்தியாம்..என்ன விஷயம்…



விஜய் :  அது வாண்ணா… எப்படியும் நம்ம ரெண்டு பேரும் இன்னும்

கொஞ்ச நாள் தான் படம் நடிக்க முடியும்..

அப்புறம் அவனுங்களே தொரத்தி விட்டுடுவானுங்க..

நான் நல்லா பிரியாணி செய்வேன்..அதனால ரேஸ் நடக்குற எடத்துக்கு

எல்லாம் போயி பிரியாணி வித்து பொழைக்க போறேன்னாரு..

நானும் நீங்க தான்னா உண்மையான தல…

என்னையும் பகுதி நேர பார்ட்னேரா சேர்த்துக்குன்கன்னு 

சோப்பு போட்டேன்…அதான் அதுக்கு அடையாளமா மாஸ்டர் க்கு

அட்வான்சா அந்த வாட்ச் கட்டி விட்டேன்…

கவுண்டமணி :அட மானங்கெட்டவனுங்களா…

எப்படியோ…உருப்பட்டா சரி…


விஜய் :  ரொம்ப நன்றிங்கண்ணா…


கவுண்டமணி : டே…அதுக்கு முன்னாடி ஒரு வாட்டி நல்லா

யோசிச்சிக்க டா அரசியல் வேணுமா…


விஜய் :  அண்ணே, உங்களுக்கு தெரியாது, 

நான் ஒருவாட்டி முடிவு பண்ணா என் பேச்சை 

நானே கேக்கமாட்டேன்...


கவுண்டமணி :ஏன் நீ ரெண்டு வாட்டி முடிவு பண்ணா தான் 

உன் பேச்சை கேப்பியா, ஏன்டா நாயே நீயே கேட்காத 

போது நாங்க எல்லாம் கேட்கணும் னு நீ எப்படி டா எதிர் பார்க்குற..

அப்புறம் உன் படத்த ரிலீஸ் பண்றதுக்கு பல ப்ராப்ளமாமே..

என்ன விளம்பரமா..


விஜய் :  இல்ல ண்ணா, யாரோ பண்றாங்க, 

ஆனா யார்னு தான் தெரியலை..


கவுண்டமணி : இந்த ரீல் எல்லாம் இங்க வேணாம் மவனே,

நான் உன்னவிட பெரிய தில்லாலங்கடி..யாரோ பண்றாங்களாம் , 

ஆனா யார்னு தெரியலையாம்.


விஜய் :  ண்ணா நீங்க வேணும் னா பாருங்க,

எலெக்ஷன் அப்ப தெரியும்...


கவுண்டமணி : மக்களே, நானும் இவன் திருந்துவான்னு பாக்குறேன் ,

ஆனா அது நடக்காது போல இருக்கே…ஏன்டா சினிமாவ கெடுத்தது

போதாதா, அங்கயும் வேற போனுமா…சரி டா.. 

இந்த பெட்டி கடைல கடன் சொன்னது, பீடிய திருடி குடிச்சது, 

கருப்பட்டிய நக்கிட்டு ஓடினது , திருட்டு ரயில் ஏறனது, 

எல்லாம் அங்கதான் இருக்கும்.. அப்டியே போய் மெர்ஜ் ஆயிடு..

மவனே தப்பி தவறி கூட இந்த பக்கம் வந்த, 

அப்புறம் நரிய விட்டு மூஞ்செல்லாம் நக்க விட்டுடுவேன்..

ஆமாம் ஒரு நரியை இன்னொரு நரி நக்குனா என்ன ஆகப்போது ..

ஆக்கத்தில் உதவி : கவிஞர் கோபிநாத்..

No comments: