Friday, March 30, 2012

மாத்தி யோசி .. 60

உண்மை பேசினா சொன்ன எதையுமே ஞாபகம் 

வச்சிக்க வேணாம்..பொய் பேசினா ஞாபகம் வச்சிக்கணும்..

ஞாபக சக்தியை அதிகரிக்க ஒரே வழி..

பொய் பேசுறது தான்..

என்னைப்புரிஞ்சிக்குங்கனு நாம ஒவ்வொருத்தருக்கிட்டையும்

கெஞ்சுவதுக்கு பதிலா, நாம அவங்களை புரிஞ்சிக்கிட்டு 

ஒதுங்கிடலாம் போல..# குறிப்பா பெண்களிடத்தில்..முடியல.

காட்டில் வாழணும்னா கருணை பார்க்க கூடாது..

காதலிச்சு கல்யாணம் பண்ணனும்னா காறித்துப்பல்களுக்கு 

எல்லாம் கவலைப் படக்கூடாது..


நான் விரும்பியபோது என்னை விட்டு விலகாத பெண்கள் 

தேவதைகள் னா.. நான் விலகி இருக்கும்போதும் என்னை 

விரும்பும் பெண்கள்..? # வார்த்தைகளுக்குள் வராத வரங்கள்..


எவனோ சொன்னதை நாம ஏன் பாஸ் கடைபிடிக்கணும்..

நாமே சுயமா சிந்திப்போம்..#அதை விட என்ன 

கழட்டுற வேலை..


ஒவ்வொரு முறையும் ஒரு பொண்ணு என்னைக்

கேவலப்படுத்தும்போதும் எனக்கு நானே சொல்லிக்கிறது..

# அப்புறம்.. அடுத்து எந்த பிகர்டா..?

கற்றுக்கொடுக்க நினைக்காம..கற்றுக்கொள்ள நினைத்தால்

மட்டுமே உருப்பட முடியும்னு சொல்றானுங்க..# அப்போ யார் 

தான் கற்றுக்கொடுப்பது…? என்னாங்கடா யாவாரம் பண்றீங்க..
தாய்மை,காதல்,பயம் இதுக்கெல்லாம் மொழி,இனம் னு எந்த 

பாகுபாடும் கிடையாது..அந்த வரிசையில் எப்போ பணம் 

சேர்ந்துச்சோ அப்போவே அழிய ஆரம்பிச்சாச்சு..


பொண்ணுங்க அதிகாரத்தோட சொல்லும்போது மதிக்கவே 

தோண மாட்டுது..அதையே கெஞ்சலா சொன்னா 

கஷ்டமா இருக்கு..கொஞ்சலா சொல்லும்போது 

ஜொள்ளிக்கிட்டே சரின்னு சொல்லிடுறேன்..#நான் சொல்பேச்சு 

கேட்கும் சூட்சுமம் இது தான் பொண்ணுங்களா..புரியுதா..?

பொசசிவ்ன்ஸ்சை பசங்க காதலிக்கும்போதும்,

பொண்ணுங்க கல்யாணத்துக்கு அப்புறமும் தான் 

அதிகம் வெளிப்படுத்துறாங்க..ஹ்ம்ம்..

அதான் பிரச்சினையே..

Tuesday, March 27, 2012

அப்ரைசல் பூதம்.. நெருங்கி வருது..
எல்லா கம்பெனிகளிலும் இன்னும் ஒரு மாசத்துக்கு களேபரம் தான்..

இனிமே டாஸ்மாக்ல இன்னும் கல்லா கட்டும்.. எப்படியும் 

எதிர்பார்க்கிறதை விட கம்மியா தான் அப்ரைசல் போடுவானுங்க...

அது எப்படி தான் வருஷம் பூரா வேலையே பார்க்காம அப்ரைசல் 

பீரியட் ல மட்டும் எதிர்பார்ப்பானுங்களோ தெரியல..

சரி..இனி அப்படியே கொஞ்சம் வேகமா,சுருக்கமா 

என்னோட புலம்பல்கள்..PERFORMANCE APPRAISAL..போடப்போற நாமத்துக்கு

புதுப்பெயர்..போங்கடா புண்ணாக்கு ரங்கனுன்களா..
நாங்கள் அப்படி செய்தோம்..நாங்கள் இப்படி செய்தோம் னு

அரசியல்வாதிகள் போல அறிக்கை கொடுக்க சொல்றானுங்க..

# ஏதாவது செய்திருந்தா தானே டா சொல்ல முடியும்..?
சிகரெட்,சரக்கு விலை எல்லாம் எழுதி வச்சி…எல்லாமே விலை 

ஏறி போச்சு…தயவு செய்து சம்பள உயர்வு கொடுங்க சாமின்னு 

ரெண்டு ஸ்மைலி போட்டுடவா..?


எனக்கு உண்மை தான் பேச வராது…பொய் எல்லாம் நல்லா கதை 

அடிச்சி விடுவேன்..ஆனா படிக்கிற என் பாஸ் க்கு 

நெஞ்சுவலி வந்துடுமேனு பார்க்க வேண்டியதா இருக்கு…

என்ன பண்ணலாம்..?


வருஷம் பூரா வீக் எண்டு னு கூட பார்க்காம வேலை

செஞ்சிருக்கேன்டா..உங்களுக்கு என்னை விட ஒரு நல்ல 

கொத்தடிமை கிடைக்க மாட்டான்டா னு HR கு 

மெயில் அனுப்பலாமா..?


இந்த அப்ரைசல் போடுற வரைக்கும் ஒரு மாசம் நமக்கு 

கீழ இருக்குறவங்களை வேலை வாங்குவது உண்மையிலேயே 

ரொம்ப கஷ்டம்..# சாணி அப்பின மாதிரியே மூஞ்சிய 

வச்சிக்கிட்டு திரியுறானுங்க..


என் பாஸ் க்கு அந்த பிரச்சினையே இல்ல..நான் தான் வருஷம் பூரா,

ஜட்டியில உச்சா போன குழந்தை போல ஒரே ரியாக்ஷன்

கொடுக்குறேனே..


அப்ரைசல் போட்டு முடிஞ்சதும் இந்த பாஸ் எல்லாம் வந்து 

ஆறுதல் சொல்லுவானுங்க பாருங்க..பாவம்..நம்ம பக்கமும் 

பேச முடியாம,மேனேஜ்மென்ட் பக்கமும் பேச முடியாம..

#பரிதாப ஜீவன்கள்..


ஒரு வருஷமா உண்டான காண்டை காட்டுவதற்கு சரியான 

நேரம் அப்ரைசல் போட்டதுக்கு அப்புறம் வரும் நாட்கள் தான்..

காலில் விழாத குறையா கெஞ்சினாலும் வேலை செய்யவே 

தேவை இல்லை..


அப்ரைசலுக்கு ஒரு மாசம் முன்னால ஆபிஸ்ல 

இருக்குறவனுங்களைப்    பார்க்கணுமே..அதுவரைக்கும் 

பிகர் கூட நடப்பது போல போனவனெல்லாம்,பீக் அவர் ல 

போறது போல பறப்பானுங்க..


அப்ரைசலுக்கு முன்னாடி , அவனவன் வேலையவே 

அரைகுறையா செய்யும் அப்பாடக்கர் எல்லாம் இந்த ஒரு 

மாசம் மட்டும் வாலண்டியரா வேலையைக் கேட்டு கேட்டு 

வேற ஒருத்தன் கிட்ட கொடுத்து செய்வானுங்க..

#ஏண்டா இந்த மானங்கெட்ட பொழப்பு...

ஆபிஸ் டைம் முடிஞ்சதும் அடுத்த நிமிஷம் ஓடி போகும்

நாயெல்லாம்..பொறுப்பு வந்த பருப்பு போல படம் 

போடுவானுங்க பாருங்க..அப்படியே பத்திக்கிட்டு வரும்..

#வீட்டுக்கு போனா பொண்டாட்டி தொல்லைன்னு 

ஆபிஸ்ல இருக்குறவங்க இந்த லிஸ்டில சேர மாட்டாங்க..


அப்படி பத்து மணி வரைக்கும் இருந்து என்னடா 

பண்ணினான்னு பார்த்தா , காலையில செய்ய வேண்டிய 

வேலை எல்லாம் சனியன் சாயங்காலம் தான் 

செஞ்சி இருக்கும்..அதையும் தூக்க கலக்கத்தில 

தப்பு தப்பா..


இன்க்ரிமென்ட்  கம்மியா இருக்குது இல்லை , நான் 

இவ்வளவு எதிர்பார்க்கிறேன்னு நம்ம பாஸ் கிட்ட 

சொல்லபோகும்போது தான் அவரு நமக்காகவே காத்துக்கிட்டு 

இருந்து நாம இன்னும் நிறைய இம்ப்ரூவ்மென்ட் 

பண்ணனும் னு சொல்வாரு பாருங்க..

சரக்கு வாங்க காசில்லைன்னு நாம சொல்லும்போது 

க்ளாஸ் கழுவவே இல்லைன்னு சொன்னா ஒரு 

எரிச்சல் வரும் பாருங்க...அப்படி இருக்கும்...

நாமம் போட்டுட்டானுங்களேனு  நாமே கடுப்பில இருப்போம்..

சும்மாவே சொம்படிச்சி சம்பளம் வாங்கும் சப்பை எல்லாம் 

வந்து ச்ச..இவ்வளவு நாள் வேலை செஞ்சதுக்கு பலனே 

இல்லை மச்சி..நம்மளை ஏமாத்திட்டாங்கன்னு 

சொல்வானுங்க பாருங்க..அதை தான் தாங்கவே  முடியாது..


செம காண்டுடன்...கண்ணீரும் கம்பலையுமாக...

3G ...

Sunday, March 25, 2012

ஏன் இப்படி ...59

வேலை சொல்றவன் வெளங்காத கூமுட்டையா இருந்தா , 

வேலை செய்யுறவன் எப்படி வெறுப்பில்லாம விருப்பத்தோட 

வேலை செய்வான்..#புண்ணாக்கு ரங்கனுங்க 

புரிஞ்சிக்கவே மாட்றானுங்களே..

கனவு காணுங்கனு கலாம் சொல்லிட்டாரு..அவர் 

வயசு அப்படி..கெரகம்..நான் கண்ணை மூடினாலே 

காதல் தொல்லை தான்..# என்ன எழவுடா இது..
பொண்ணுங்ககிட்ட பேசும்போது நாம நல்லா இருக்குறதும்,

நாசமா போறதும் நாக்கு நுனியில்தான் இருக்கு..

#ஒரு வார்த்தை சொல்லிட்டேன்…

ஒரு வாரமா பேச மாட்றா..
காரணமே சொல்லாம கோபப்படுறதும்,கோவிச்சுக்குறதும்..

#ச்ச..செம வெறுப்பாகுது..அட பன்னாடைகளா..சொல்லுங்கடா 

நான் எதுக்குடா சரிப்பட்டு வரமாட்டேன்..


எல்லாப்பூட்டுக்கும் சாவி இருக்குமாம்..எல்லாப்பிரச்சினைக்கும் 

தீர்வு இருக்குமாம்..பெண்களிடம் ஆண்களுக்கு வரும் 

பிரச்சினை நம்பர் லாக் போல.. தாவு தீருது.


உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்னு நாங்க சொன்னா

போதும்..எல்லாரும் வாலி பட சிம்ரன் கணக்கா 

கெத்து காட்றீங்க..# ஏன் பொண்ணுங்களா.. 


சில பேருக்கு இந்த இணையத்தைத் தாண்டியும் உலகம் 

இருக்குனு எப்படி புரிய வைக்கிறது…? 

# வித விதமா வெறுப்பேத்துறாங்க…

பெண்களின் ரியாக்ஷனை புரிஞ்சிக்கிறவன் 

பெரிய புத்திசாலிதாங்க..#எனக்கு சுத்தமா 

வெளங்க மாட்டுது..பிடிச்சிருக்குன்னு சொல்றாளா..

இல்ல ஓடிப் போயிடு நாயேன்னு சொல்றாளா…?

ஒரு தப்பை ஆண்கள் செய்தா ஒரு மாதிரியும்,அதே தப்பை 

அவங்க செய்தா வேற மாதிரியும் ரியாக்ஷன் கொடுக்க 

பெண்களால் மட்டுமே முடியும்..# என்னா திறமை..

ஒரு தப்பை பண்ணிட்டு பொண்ணுங்க கிட்ட சொன்னா..

பக்கம் பக்கமா திட்டிட்டு நாலு வார்த்தையில அட்வைஸ்

பண்ணுறாங்க..# பெண்களை புரிஞ்சிக்க எக்ஸ்ட்ரா 

மூளை வேணும் போலயே..

Tuesday, March 6, 2012

ஜோக்கூ..61
உன் இமைகளின் அசைவில் என் இதயம் துடித்தது..

உன் இதழ்களின் பிரிவில் என் இதயம் வெடித்தது..

# கடைசி வரைக்கும் ப்ரெண்டா இருக்கணுமா..? 

அடிப்பாவி..


என் இதயத்துடிப்பை கேட்டு உணர்ந்த நீ,உன்னுடன் 

நான் இணையத்துடிப்பதை கண்டறிய மாட்டாயா..?

#காய விடுறாளே.. 


எனக்குள் இருந்த என்னை உணர்ந்தபோது நான் 

நானானேன்..எனக்குள் இருந்த உன்னை கண்டுபிடித்தபோது 

நான் நாசமாய் போனேன்..# காண்டு.. 


எங்கேயோ இருக்கும் அவள் தினமும் வருகிறாள் என் கனவில்..

விலாசம் கொடுத்தா ஆட்டோல ஆளுங்களோட அவ 

அண்ணன் தம்பி வருவானோ…?


கருவறையும் இருட்டு..கல்லறையும் இருட்டு..

இதை நமக்கு உணர்த்தவே  அடிக்கடி அம்மா தர்றாங்க 

பவர் கட்டு..# யாரு ராஜா நீ..?

Monday, March 5, 2012

ஹனி பெயர்ச்சி..விட்டு செல்வதை விடவும் விலகி 

செல்வதே கொடுமையானது..புரிஞ்சிக்க மாட்றியேடி 

பம்ப்ளிமாஸ்..
பகிர்ந்து கொடுக்கும் பழக்கம் உள்ளவன் நான்..

இன்று சுயநலமாய்  மாறிவிட்டேன்..உன் காதல் 

கிடைத்த நொடி முதல்..

உடைந்தாலும் பிம்பம் காட்டும் கண்ணாடியைப்போல..

உன்னால் உடைந்த என் இதயமும் உன்னையே 

பிரதிபலிக்கிறது..யாரோ ஒருத்தி போல ஒவ்வொரு முறையும் என்னை 

வார்த்தைகளால் காயப்படுத்துகிறாய்..நீ என்னை விட்டு 

விலக நினைக்கும் ஒவ்வொரு முறையும் எனக்குள் நீ 

நெருங்கி வருகிறாய் என்பதை மறந்து.. 

முன்பெல்லாம் தனிமையில் இருக்கும்போது உன் 

நினைவுகள் வரும்..இன்று உன் நினைவுகள் 

வரவேண்டுமென்றே தனியாக திரிகிறேன் நான்..

# MISS YOU HONEY

என் நலன் கருதியே என்னை விட்டு விலகுவதாய் 

உளறுகிறாய் நீ..உன்னை விடுத்து எனக்கேதடி 

வாழ்க்கை பம்ப்ளிமாஸ்..

என் அருகினில் அமர அத்தனை தயக்கம் உனக்கு..

உணர்வுகளில் உன்னை சுமப்பவன் உணர்ச்சிகளுக்கா 

அடிமை ஆகிவிட போகிறேன்..பைத்தியக்காரி..உன்னால் மாறிய என்னை இன்று எனக்கே பிடிக்கிறது..

விட்டு விலகி என்னை மீண்டும் தொலைத்து விடாதே..

பிறகு உன்னாலும் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம்..


பிஸியா இருக்கும் போது  நீ டிஸ்டர்ப் பண்ணுவதை பத்தி 

நான் என்னைக்கும்  கவலைப் பட்டதில்லை..நீ டிஸ்டர்ப் 

பண்ணாத போதே நான் டிஸ்டர்ப் ஆகிறேன்..

# MISS YOU HONEY…


உன்னை நான் இவ்வளவு நேசிப்பதன் காரணம் எனக்கே 

புரியாதபோது,நீ புரிந்துக்கொள்ளவேண்டும் என நினைப்பது 

என் தவறு தான்..#போ..ஹனி..நீ போ..