Saturday, January 18, 2014

கம கம பிரியாணியும் , இரண்டாம் நாள் புளி சோறும்..


கம கம பிரியாணி



ரெண்டு படமும் ஒண்ணா வந்ததுல எங்க இன்னொரு வில்லு ,

ஏகன் போல ஆயிடுமோனு ரொம்ப பயந்துட்டேன்..



நான் அப்பவே சொன்னேன் வீரம் னு  பேரு வச்சதுக்கு பதிலா  

காரம் னு  வச்சி இருக்கலாம்னு.. ஆனா இது டேஸ்ட்டான 

ஹைதராபாத் பிரியாணி..



ஹரிக்கு சரியான போட்டி இந்த சிவா தான்..எவ்வளவு அருவா , 

எவ்வளவு ஆட்கள்.. ஒரு குடும்பத்துல எத்தனை பேரு..



பொதுவா தல பஞ்ச் டயலாக் பேசினா எனக்கு கொஞ்சம் 

டர் ஆகும்..தமாசா ஆகிடுமோனு.. ஆழ்வார் , ரெட்னு அடி 

கொஞ்சம் பலம்ல.. 



ஆனா இதுல ஏகத்துக்கும் பஞ்ச டயலாக்..ஆனா ஒவ்வொண்ணும் 

ஜிந்தாக் தாக் ஜிந்தா ஜிந்தாக் ஜிந்தாத் தத்தாக் 



டைரக்டருக்கு என்ன காண்டோ வேட்டில அழகா இருந்த 

அஜித்தை பாட்டுல கோட்டு போட்டு கோமாளி ஆக்கிட்டான்.. 

என்ன ரசனைடா உனக்கு.. பில்லா பார்க்கல நீ..



டிஸ்கவரில ஒருத்தன் போவானே அதை விட அருமையான 

காட்டுக்குள போயி பாட்டு வச்சி இருக்கான்..

மஞ்ச கலருல பேண்ட்டு வேற..



DSP காத்தாடி போல ஏண்டி பாட்டை ரீமேக் பண்ணி இருப்பாரே 

அந்த கருமத்தில பழைய கணக்கு பிள்ளை போல வேட்டிக்கு 

கோட்டு போட்டு ஆடவிட்டு இருக்கானுங்க 



தலையப்பத்தி எல்லாரும் தான் சொல்லிட்டாங்களே.. 

நான் இப்போ ஜொள்ளப்" போறது தமன்னாவைப் பத்தி 



தமிழ்நாட்டின் பெயரை தமன்னாடு மாத்த சொல்லி மீண்டும் 

ஒரு அறப்போராட்டமே பண்ணலாம்..எல்லாரும் தல 

வரும்போது சீட்டு நுனிக்கு வந்தா நான் தமன்னா வரும்போது..



சிறுத்தை படத்திலேயே சிலிர்க்க வச்சி இருந்தானுங்க டார்லிங்க..

வீரம் படத்தில தமன்னா  இன்னும் வீரியத்தோட இருக்கா..



ஒரு பாட்டுல மட்டும் கேவலமா மேக்கப் போட்டு காஞ்சுரிங் பேய் 

போல இருந்தா.. பால்கனியில இருந்து பார்த்தே பயந்துட்டேன்..



நேத்து நைட் ஷோ KG பிக் சினிமாஸ் ல பாதி பேரு

 தல னு  கத்துனானுங்க.. மீதி பேரு தமன்னான்னு கத்த சக்தி 

இல்லாம வாயில ஜொள்ளு வழிய பெருமூச்சு 

விட்டுக்கிட்டு இருந்தோம்.. 



வீரம்ல ஷேவ் பண்ண அஜித் பார்த்தா மனதை திருடி விட்டாய்

 பட அண்ணன் வடிவேல் கெட்டப் தோணுவது எனக்கு 

மட்டும் தானா..? அவ்வ்வ்வ் # எங்க ஆத்தா அப்பனுக்கு 

வேற அடுத்த வாரம் தானேடா ப்ரோக்ராம்மு 


இரண்டாம் நாள் புளி  சோறு



இப்போதான் ஜில்லா படம் பார்த்து முடிச்சேன் .. 

# இனி தூங்கினாப்போல தான் 


அட என்னத்த விமர்சனம் பண்ணிக்கிட்டு.. 

சுறா பார்த்தவுடனே வேட்டைக்காரன் தேவலாம்னு தோணுச்சு.. 

தலைவா பார்த்ததுக்கு இது எவ்வளவோ தேவலாம்..




என்னப்பா எதோ காஜலு பின்னாடின்னு ஏகப்பட்ட 

பில்டப் கொடுத்தானுங்க.. வெள்ளை டிரஸ் போட்ட ஒரு

 மழை டான்சுக்கு ஈடாகுமா..#ரொம்ப காஞ்சு

போயி இருப்பானுங்களோ 



ப்ரோ நீங்க டேப்பரா நடக்கிறதையும் , கண்ணை  சிமிட்டுறதையும் ,

ஐஸையும் அமிர்தாஞ்சனையும் ஒண்ணா தடவிக்கிட்டு 

பேசுவது போன்ற மாடுலேஷனையும் 

மாத்திட்டாலே போதும் ப்ரோ..




நம்ம டிம்மான் கும்கில கொம்பனுக்கு கொடுத்த மியூசிக்க 

ஆல்டர் பண்ணி அண்ணனுக்கு கொடுத்துட்டாரு போல..

ஹ்ம்ம்..NOT BAD NOT BAD 



வீரம்ல வந்த அஜித் வீடு தான் இதுல விஜய் தங்கச்சியோட புகுந்த வீடு..

# கருத்து - படம் பேரு தான் பட்டி பார்த்ததுனா வீட்டைக் 

கூட விட்டு வைக்க மாட்டீங்களாடா..



எல்லாரும் ப்ரோவ சக்தின்னு கூப்பிட்டா சம்பத் மட்டும் 

சரியா நந்தினு சொல்றாப்புல..#எனி உள்குத்து..



விஜயோட எந்த படத்திலயும் இல்லாம இந்த படத்தில

நிறைய குறியீடுகள் இருக்கும் போல..



போலிஸ பார்த்து யாரும் சிரிக்கக்கூடாதுன்னு சார் 

சொல்றப்பவையெ சிரிப்பு வந்துடுது.. சாரி ப்ரோ..



அமலா பாலுக்கு காக்கி சட்டைப் போட்டப்போ பால்வாடி 

புள்ளை போல இருந்துச்சு..காஜல் போடும்போது 

கான்வென்ட் புள்ள போல இருக்கு..