Sunday, September 30, 2012

ஒற்றை முத்தம்..
"உன் மனதிற்கு" விருப்பம் போல 

செயல்படு என்கிறேன்.."ஹ்ம்ம்..சொல்லுடா , 

என்ன பண்ணனும்" என்கிறாய்..லவ்யூடி ஹனி…பிரிவின் வலியை பிரயத்தனப்பட்டு , பல வார்த்தைகளில் 

உனக்கு சொல்கிறேன் நான்..அதையே எளிதாக , 

ஒரு பார்வையிலும்,அணைப்பிலும் எனக்கு 

உணர்த்திவிடுகிறாய் நீ..


மோகத்தின் மிகுதியில் நான் தரும் அத்தனை 

முத்தங்களையும் அற்பமாக்கி விடுகிறது.. காதலுடன் 

நீ கொடுக்கும் ஒற்றை முத்தம்..நீ இருக்கும் இடத்தில் நீ மட்டுமே சிறப்பு..நமக்கிடையேயான இடைவெளியை முத்தத்தால் 


நிரப்புகிறேன் நான்..மவுனத்தால் நிரப்புகிறாய் நீ..முரண்டு பிடிக்கும் உன்னை அடக்கும் 


அங்குசமாய் என் முத்தம்..அடிக்கடி சந்திக்காமல் இருப்பது உன்னை 


தவிர்ப்பதற்காக அல்ல..என்னைப்பிரிகையில் நீ 

தவிப்பதைக் காண முடியாததால் தான்..உன் பெயரில் உள்ளே ஒரே காரணத்தினால் 

வல்லினங்களும் மெல்லினங்களாக மாறி விடுகின்றன..சனியின் பார்வை உக்கிரமாக இருக்கிறதாம் 


என் ஜாதகத்தில்..ஹனி..காதல் வழியும் கண்களுடன் 

என்னை ஒரு முறை பாரேன்..சாதகமாக மாறிவிடும்..உன்னுடன் சண்டையிட முயற்சித்து.. உடனே கலங்கும் 


உன்னை சமாதானப்படுத்துவதில் முடிக்கிறேன்…

ஒவ்வொரு முறையும்...

Friday, September 28, 2012

ஏன் இப்படி ...68
பல நேரங்களில் ஹோட்டல்களில் சர்வர்களின் 


விருப்பமே நம்ம விருப்பமா மாற்றப்படுது..

# என்ன எழவுடா இது..போன்ல சத்தமா பேசுற ரூம் மேட்டைக் கூட சமாளிச்சுடலாம்..


ஆனா முத்தமா கொடுத்து இம்சிக்கிறவனைக் கொல்லணும் 

போல இருக்கு..#நொச்சு நொச்சுன்னு..முடியலைடா டேய்..முத்தம் கொடுப்பதும்,வாங்குவதும் சுகம் தான்..


ஆனா வெறுமனே அவங்க வாயை வேடிக்கை 

பார்க்கிறது நரக வேதனைடா சாமி..
காதலிக்கிறவனுக்கு கற்கண்டா இனிக்கும் முத்தம்,


வேடிக்கை பார்க்கிறவனுக்கு வேப்பங்காயா கசக்குது…

#கடுப்பேத்தாதீங்கடா கருமம் பிடிச்சவனுங்களா…அடுத்தவனைக் கெடுக்காம , நான் மட்டும் தானேடா 


கெட்டுப்போறேன்..அப்புறம் ஏன் கெட்டவன் 

கெட்டவன் கூவுறீங்க..#ஐயோ ராமா...
கல்யாணப்பத்திரிக்கையை நேர்ல கொடுத்தா போதாதாம்..


FB ல போடணுமாம்.. அட பதருகளா..FEB 14 அன்னைக்கு வாழ்த்தாம  , நண்பர்கள் தினம் அன்னைக்கு 

வாழ்த்தும் பொண்ணுங்களுக்கு ஈவு இரக்கமே கிடையாதா...?

#என்னாது நான் ப்ரெண்டா..மீ பாவம்..**ஜெனிலியா போல பண்றேன்னு சில பொண்ணுங்க சீன் 


போடுறது அவங்களை முழு லூசா காட்டுது..

ஜெனிலியா பேஸிக்காவே அரை லூசுன்றதால கொஞ்சம் 

அழகா இருக்கு..புரிஞ்சுக்குங்க பொண்ணுங்களா..* எனக்கு தெரியாதுன்னு சொல்லாம ஏதோ 

ஒண்ணை சொல்லிக்கேட்குறவனை குழப்புவதையே 

பல பேரு செய்யுறானுங்க… ஏன்டா ஏன்… அவன் அவன் கஷ்டமே ஆயிரம் இருக்கும்போது அடுத்தவன் 

செய்யுற வேலையில நொட்டை சொல்றவங்களே.. ஏன்டா ஏன்…? 

Tuesday, September 25, 2012

தேவதை
முத்தத்திலேயே நன்றி சொல்லவும்,மன்னிப்பு கேட்கவும் 

உன்னால் மட்டுமே முடிகிறது..லவ்யூடி ஹனி…மகிழ்ச்சியை மட்டும் நம்முடையது என என்னும் நீ,


 வருத்தங்களை மட்டும் உன்னுடன் வைத்துக்கொள்வது ஏனோ..?என்னை எதைப்பற்றியும் சிந்திக்க முடியாமல் செயலிழக்க 


செய்வது உன் சிரிப்பும்,அழுகையும்..என் மகிழ்ச்சிக்காக உன் வலியை மறைத்து சிரிக்கிறாய்.. 


நீ என்னுள் கலந்தவள் என்பதை மறந்து..பைத்தியக்காரி..காரணம் தெரிந்த உன் கோபம் தரும் வலியை விட..

ஏதும் சொல்லா மவுனம் என்னைக் கொல்லுதடி..

# ஹனி பெயர்ச்சி..உன்னுடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருக்கையில் 

விடியலே வேண்டாம் என என்னும் நான், பேசி 

முடித்தவுடன் விடியலுக்காக காத்திருக்க தொடங்குகிறேன்.. 

உன் முகம் காண…யாருக்கும் அடங்காமல் திமிராய் திரிந்தேன்..


அன்பால் அடக்கி , காதலால் கட்டுப்படுத்தி விட்டாய்..நான் உன்னை அடித்த சோகத்தில் அழுகிறாய் நீ.. 

உன்னை அடித்ததால் என் மேல் உண்டான கோபத்தில் 

அழுகிறேன் நான்..நான் காதல் கொண்டு தொடுவதற்கும்,மோகம் கொண்டு 

தொடுவதற்கும் உள்ள வித்தியாசம் உணர்ந்து அதற்கேற்ப 

முத்தங்கள் அளிக்கிறாய்..தேவதை ஸ்த்ரீயடி நீ..உனக்காக என் விருப்பங்களை "மாற்றிக்கொள்ள 

முயற்சிக்கிறேன்' நான்.. எனக்காக "அப்படியே 

ஏற்றுக்கொள்கிறாய்" நீ..தேவதை ஸ்த்ரீயடி நீ..

Monday, September 10, 2012

மாத்தி யோசி .. 67

விதிவிலக்கு எல்லா விஷயங்களுக்கும் உண்டு 


அப்படினா அது விதிவிலக்குக்கும் பொருந்தும் தானே..?


கருவில் இருக்கும்போது கவலைப்பட்டோமானு

தெரியாது..கல்லறையில் கவலைப்படுவோமானும் தெரியாது..

அப்புறம் வாழும்போது மட்டும் ஏன் கவலைப்படணும்..

மாத்தி யோசிங்க மக்களே..பொண்ணு மொபைல்ல பேலன்ஸ் இருந்தா அவளுக்கு பாய் 

பிரெண்ட் இருக்கான்னு அர்த்தம்..பையன் மொபைல்ல 

பேலன்ஸ் இருந்தா அவனுக்கு இன்னும் கேர்ள் பிரெண்ட் 

இல்லைன்னு அர்த்தம்.. 


எந்த உணர்ச்சியையும் நீண்ட நாள் கழிச்சி வெளிப்படுத்தும் 

போது அதிகமாத்தான் இருக்கும்.. என்னோட காதல் எனக்கு 

இன்னும் ஸ்பெஷல்.. அட ரெண்டு மூணு பேரு வந்து 

பகிர்ந்துக்குங்க பொண்ணுங்களா...

நீ எப்படி தாங்கப்போறியோ ஹனி.. 
மவுனம் காதலர்களுக்கான மொழி எனில்,முத்தம் கணவன் 

மனைவிக்கு இடையேயான மொழி…

#ஹ்ம்ம்ம்…நான் எப்போ…?
பொய்யாய் நடிக்கிறதை விட உண்மையா இருக்குறது 

ரொம்ப சுலபம்..முயற்சி பண்ணி பாருங்க..
கெட்டவங்களை யாரும் ஏமாற்ற முயற்சிப்பதில்லை..

அவர்கள் சீக்கிரம் ஏமாறுவதும் இல்லை..* *
உடலை "மெய்" னு சொல்லுவாங்க..சிலபேருக்கு உடம்பு 

முழுக்க "பொய்" யா இருக்கு..#என்னமா புளுகுறானுங்க.. மனித மனம் குரங்குனா,பசங்க மனம் மானங்கெட்ட குரங்கு..

#சந்தேகம் இருந்தா சைட் அடிக்கும் போது 

வந்து பாருங்க..வாவ்..ஊருக்குள்ள எவ்ளோ பிகர்ஸ்..* *
*தச்சு மம்மூ,பப்பு பூவானு குழந்தைகள் போல சில பெண்கள் 

சொல்லிக் கேட்கும்போது  அவ்வளவு சுகமா இருக்கு…ஹ்ம்ம்..*

Saturday, September 8, 2012

சிரிக்கும் கண்கள்.. 


முத்தத்தின் தொடக்கத்தில் உறைய வைத்து உயிரை 

உறிஞ்சும் நீ,முத்தத்தின் முடிவில் அதை திரும்பத்தந்து 

திகைக்க வைக்கிறாய்..சூழலுக்கு ஏற்றவாறு உருமாறி அலையும் ஆறு,

ஆழியில் அடங்குவதைப் போல… 

என் அத்தனை உணர்ச்சிகளும் உன் ஒருத்தியிடம் மட்டும்..

# ஹனி..*எனக்கு பிடிக்காதவைகளையே உனக்கு பிடித்த ஒரே 

காரணத்தினால் ஏற்றுக்கொண்ட என்னால்,நமக்கு 

அதிகம் பிடித்த உன்னை , பிடிக்காததுபோல் 

எப்படி நடிக்க முடியும்..?*
*
 

பிரச்சினைகளுக்கு இடையில் சிக்கி மூச்சுத் திணறுகிறேன்..

ஒரு புன்னகை வீசி செல் போதும்..பிழைத்து விடுவேன்..**என் காதலினால் உன்னில் அடங்குகிறேன் நான்.. 

உன் காதலினால் உன்னில் என்னை அடக்குகிறாய் நீ..

# அப்போ மொத்தத்தில நான் அடிமை..வெளங்கிடும்* 


உன்னுடன் இருந்த இனிமையான நினைவுகளே  என்னை 

இம்சிக்கும் இரவுகளுக்கு காரணமாய் அமைவது முரண்..

#என்னடா நடக்குது இங்க…என் கூட இருந்தவ எங்க..*


*

 


என்னைக் காதலித்துவிடக் கூடாதென தவிக்கும் உன் 

போராட்டம் தெரிந்தும் எப்படி நான் நண்பனாய் பழக..?

 


சிறு தூறலாய் என்னுள் நுழைந்த உன் நினைவுகள்,ஈர்ப்பு சாரலாய் 

மாறி இன்று காதல் பெருமழையாய் உருவெடுத்து 

என்னை வதைக்கிறது…வெள்ளம் வரும் முன் வந்து 

அடக்கி விடு அன்பே..

 சிலருக்கு மட்டுமே கண்களிலும் சிரிப்பு இருக்கும்..என்னை 

நீ பார்க்கும் ஒவ்வொரு முறையும் காதலுடன் கூடிய 

கள்ளச்சிரிப்பை காண்கிறேனடி..உன் கண்களில்… அதிகமாக பேசுவதும் உன்னிடம் தான்..

அதிகமாக மவுனிப்பதும் உன்னிடம் தான்..#ஹனி..  

Thursday, September 6, 2012

ஏன் இப்படி ...67

18 வயசு டேஞ்சர்னா , கல்யாணத்துக்கு காத்திருக்கும் இந்த 


25 - 30 ரொம்ப மோசமானது..பிகரோட போற ஆன்ட்டிகளையும் 

சைட் அடிக்கத் தோணுது..#செருப்படி சீக்கிரமே கிடைக்கும் போல.. 


தமிழை ENGLISH ல எழுதும்போது TAMIL னு எழுதக் கூடாதாம்.

அப்புறம் ஏன் தமிழ்ல ஆங்கிலம் னு சொல்றீங்க..

இங்கிலீஷ் னு சொல்ல வேண்டியது தானேனு கேட்டா 

பதில் சொல்ல மாட்றானுங்க..என்னாங்கடா உங்க நியாயம்..

 


நாலு நாள் சென்னையில மழை தூறினாலும் சூடு மட்டும் 

குறையவே இல்ல..முகத்தில ஆங்காங்கே டேஞ்சர் 

லைட்ஸ் வந்துடுச்சு..

 


ஒரு மாசத்தில பூந்தமல்லி ஹை ரோடைக் காணோம்..

நல்ல பாம்புக் கணக்கா வளைஞ்சு வளைஞ்சு போக 

வேண்டியதா இருக்கு..

 


குழந்தைக்கு பெயர் வைக்கிறதுக்கு யோசிக்கிறதை விட..

பார் க்கு பெயர் வைக்க ரொம்ப யோசிப்பானுங்க போல..

KICKOFF , SUB MARAINE , UNDERWORLD ..etc ..

 


விருப்பத்திற்கு மாறாக திணிக்கும்போது நல்ல விஷயங்கள் 

கூட வெறுப்பை தருது..#திருத்துவதற்கு நான் என்ன 

எக்ஸாம் பேப்பரா..என்னை விடுங்கடா டேய்… 

பொய் சத்தியம் , தெளிவான குழப்பம் வார்த்தைகளைப் போல 

தான் நானும் என் பாஸும்..# எதிரெதிரா தான் இருக்கணும்..

ஒத்துவரவே மாட்டுது..ச்ச..

 


ராமர் சிவனைக் கும்பிட்டாருனு சொல்லுவாங்களாம்.

அடுத்தவர் நலனில் அக்கறைக் காட்டும் சக மனிதனை

நான் வணங்கினால் தப்பாம்..என்னாங்கடா உங்க நியாயம்..

 


வெளித்தோற்றத்தில் அவலட்சணமா தோன்றும் நபர்கள் பழக 

ஆரம்பித்த பின் நாளுக்கு நாள் அழகா தெரியுறாங்க..

#எனக்கும் தோன்றி இருக்கு..என்னைப் பார்த்த 

மற்றவர்களுக்கும் தோன்றி இருக்கு..

Tuesday, September 4, 2012

மாத்தி யோசி .. 66
அடுத்தவங்களை முழுசா நம்பி அவங்க ஏமாற்றும் போது 

ஏற்படும் வலியை விட,நான் என்னை மட்டும் நம்பி 

எல்லாரையும் சந்தேகத்தோடையே  பார்க்குறது 

எவ்வளவோ பரவாயில்லை..


 


கல்யாணம் பண்ணுவதும்,கம்பெனி மாறுவதும் 

ஒண்ணுதான்..ஆரம்பத்தில நல்லா இருக்கும்..

சில மாதங்கள் / வருடங்களில் விட்டுப்போயிட்டா 

நிம்மதின்னு தோணும்..பசங்களை கோபப்படுத்தவும்,சமாதானப்படுத்தவும் 

பொண்ணுங்களுக்கு சில நிமிடங்கள் தான் தேவைப்படுது..பொண்ணுங்க எல்லாத்தையும் ரொம்ப நாளைக்கு ஞாபகம் 

வச்சிக்கிறது பசங்களுக்கு பிரச்சினை..பசங்க அடிக்கடி 

மறந்து போறது பொண்ணுங்களுக்கு ப்ளஸ்..வீம்புக்கு காதலிச்சு வீணாய்ப் போவதை விட..புத்திசாலி 

பேச்சுலராவே இருக்கலாம்..#காதலி கிடைக்காத காண்டு..கல்யாணம் பண்ணியும் பிரம்ச்சாரியா இருந்த விட்டுடுறீங்க..

ஆனா கல்யாணம் பண்ணாம சம்சாரியா இருந்தா 

தப்பா என்ன..#என்னாங்கடா உங்க நியாயம்…உயிர் எப்போ போகும்னே தெரியாத இந்த வாழ்க்கையில்

ம__போச்சேன்னு கவலைப்பட்டு என்ன ஆகப் போகுது..?அழகான பொய்யாய் இருக்குறதை விட..நான் கொஞ்சம் 

வருத்தப்பட வைக்கும் உண்மையாவே வாழ்ந்துட்டு போறேன்..


 
விஸ்வரூபம் படத்தின் பெயர் உருது எழுத்துகள் போல உள்ளது.

இது கண்டிப்பா முஸ்லிம் தீவிரவாதிகள் பத்தின கதைதான்னு 

இன்னுமா யாரும் கிளம்பலை..
 


விருப்பமில்லாம ஒண்ணை நல்லதுன்னு சொல்றதை விட,

அதை செய்வதில கிடைக்கும் திருப்தியும்,சந்தோஷமும் 

முக்கியம் ஆச்சே..

Sunday, September 2, 2012

நீ சூழ் உலகு..
என் சில்மிஷங்களினால் உன்னை சிரிக்க வைக்கிறேன்..

நீ சிரித்து என்னை சிலிர்க்க வைக்கிறாய்..
உன் காதலைப் பெற முடியாமல் நான் சற்று தடுமாறுவேனே

தவிர..இன்னொருத்தி பின்னால் தடம் மாற மாட்டேன்..
எந்தக் கவிதையை எழுத ஆரம்பித்தாலும்
உன் பெயரையே முதலில் எழுதுகிறேன்..

முதலும்,முடிவும் நீயே.

காமத்தின் வெளிப்பாடாய் என் முத்தம்..

காதலின் வெளிப்பாடாய் உன் முத்தம்..

#தேவதை ஸ்த்ரீயடி நீ..
இது நீர் சூழ் உலகாம்..எனக்கு மட்டும் நீ சூழ் உலகு.. 


என் சீண்டல்களில் சிலிர்த்து,சிணுங்கிக்கொண்டே  கைகள் 

கொண்டு முகம் மூடுகிறாய்..வெட்கத்துக்கே 

வெட்கம் வருகிறதாம்..#வெட்கப்பட்டுக்கிட்டே 

இருந்தா வெளங்கிடும்..
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதது குறித்து கோபிக்கிறாய்..

உன்னை என்னுடன் சேர்த்த காதல் நம்பிக்கை மட்டுமே 

உண்டு எனக்கு ஹனி.. 


மகிழ்ச்சியின் மிகுதியில் செத்துவிடலாம் என்கிறாய்..

பைத்தியக்காரி..புதிதாய் பிறப்போம் வாடி..


 


பல வார்த்தைகள் கொண்டு காதலை வெளிப்படுத்துகிறேன் நான்..

நீயோ ஒற்றை முத்தத்தில் புரியவைத்து விடுகிறாய்..


 


விடைபெற எத்தனிக்கையில் திரண்ட உன் கண்ணீர் 

துளிகளில் கரைகிறேன் " நான் "