Wednesday, April 29, 2015

மாத்தி யோசி .. 87ப்ராஜெக்ட் விஷயமா சவுகார்பேட்டை போயிருந்தேன்..

நிறைய பேரு சட்டை போட்ட செட்டியார் பொம்மை

போலவே இருக்கானுங்க..# அரே நிம்பள் உடும்பை 

கொரைங்கோ ஜி..JCB அருகே வண்டி ஓட்டுறதும்,நண்டு பிடிக்க போறதும் 

ஒண்ணுதான்..# எது முன்பக்கம்னே தெரியாம 

போயி மாட்டிக்கிறோம்.. 
"மன அமைதிக்காக ஓய்வெடுக்கிறார்" ராகுல் னு 

சொன்னா ஓ இது தான் இங்கிலிஷ்ல 

"REST IN PEACE" ஆ னு கேட்குறான்...


 


வேலைப்பளுவை சமாளிப்பதை விட,ஓபி அடிக்கும் 

டைம்பாஸ் பெருச்சாளிகளை சமாளிக்கிறதே பெரும் 

கஷ்டமா இருக்கு.. 


இந்த விராட் கோலியோட உடுப்பி வேற ,

லெமன் சோடா விளம்பரத்துக்கு வந்து மூடு 

கிளப்புறா..!!! ஏற்கனவே ஒருத்தி மாம்பழ ஜூசையே 

ஒரு மார்க்கமா குடிக்க வைக்கிறா...!!!

Monday, April 27, 2015

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 66அழுதுகிட்டே அன்பு காட்டவும், சிரிச்சுக்கிட்டே 

செருப்பால அடிக்கவும் பொண்ணுங்களால 

மட்டும் தான் முடியும்..# ஹர ஓ சம்பா..எல்லா விஷயத்திலயும் பாஸிடிவ்வா வர 

நினைக்கணும்.. தப்பில்லை..அதுக்காக HIV டெஸ்ட் 

ரிசல்ட்ல அப்படி நினைக்க கூடாது..# ஹர ஓ சம்பா..நல்லவனா வாழ்வதை விட, நடிக்கிறதை 

மெயின்டெயின் பண்ணுறது தான் கஷ்டமான விஷயம்..

# ஹர ஓ சம்பா..
வேலைப் பளு இருக்கோ இல்லையோ மூளைப் 

பளு அதிகமாயிடுச்சு..அழிந்து வரும் உயிரினங்கள் 

லிஸ்ட்ல சேர்ந்துடுவோமோ..?? #ஹர ஓ சம்பா..பந்தாவுக்காக ஸ்டுடியோ போயி போட்டோ எடுத்தது,
 
இப்போ செல்போன் செல்ஃபி யால பாத்ரூம் 
 
வரைக்கும் வந்து பதறடிக்குது.. #ஹர ஓ சம்பா..

Saturday, April 25, 2015

மஞ்சூர் மலைப் பயணம் - மஜாவான மரண பயம்உயிரைக் கையில பிடிச்சிகிட்டு ஒரு மலைப் பயணம்

முடிச்சு வந்தாச்சு..#படுகாஸ் டான்ஸ் ஆடி பாதம்

வீங்கி போச்சு..காட்டுயானை கூட செல்ஃபி எடுக்கணும்னு சொன்னான் 

ஒருத்தன் .. பொணத்துக்கு எவனும் பொண்ணு தர 

மாட்டான்னு சொன்னதும் வேணாம்னுட்டான்..டைல்ஸ் போட்ட பாத்ரூம் பார்த்திருக்கேன்.. யானைகளுக்கு 

தார் போட்ட பாத்ரூம் இப்போ தான் பார்த்தேன்..

#கூட்டத்துக்கே பேதி போல..ரோடெங்கும் சாணம்..6 மணிக்கு மேல அனுமதிக்க மாட்டோம்னு சொன்னவங்க 

அமவுண்ட் கொடுத்ததும் போக விட்டானுங்க..

#அடேய் ஆஃபிசருங்களா இப்போ மட்டும் யானை வராதாடா..???மலைப்பாதையில பைக்ல போனதுக்கு வண்டி ஸ்பேர் 

பார்ட்ஸும் எங்க ஸ்பேர் பார்ட்ஸும் இடம் மாறி 

பழுதானது தான் மிச்சம்..# "பம்பர் குலுக்கல்கள்"..எலிஃபன்ட்ஸ் க்ராஸ் ஆனா ஹெட்லைட் ஆஃப் பண்ணிட்டு

சைலென்ட்டா இருங்க..#"தமிழ்நாடு" வனத்துறை..

(உங்க ஆங்கிலப் புலமையைக் காட்ட நாங்களா கிடைச்சோம்..)வண்டி ஓட்டும்போது செல்போன் எடுக்குறதே தப்பு..

இதுல செல்பி வேற எடுக்குறானுங்க..#அடேய்..

அரைகுறை ஆர்வக்கோளாறுகளா அடங்கமாட்டீங்களாடா...புகை சிகரெட்டுல இருந்து வருதா இல்ல ஜீவனில் இருந்து

வருதானே தெரியலை..#உயிரைக் குடிக்கும் பனி..

மஞ்சூர் மரண பயம் காட்டிடுச்சு..சென்னையில வெயில் ஊசி போல குத்தினா  அங்க

பனி குத்துது..#இங்க குளிரினாலே எழுந்திரிக்க முடியலை.. 

அங்க தூங்க முடியலை..6.30 மணிக்கு எழுந்து அந்தக் குளிரில குளிச்சக் கொடுமையை 

கம்பேர் பண்ணா இன்னும் எவ்ளோ கஸ்டமர் கம்ப்ளைன்ட்ஸ்

வந்தாலும் சமாளிக்கலாம் ஹீட்டர் ல வர்ற தண்ணி சூட்டை விட உச்சா 

சூடா வருது..அவ்வவ் அதுல குளிக்க முடியாதே..இன்னும் எத்தனை நாளைக்கு தான் பசங்க கூடவே 

படுத்து தூங்கணும்னு தெரியலை..#சத்திய சோதனை..நல்லவேளையா ஒரு பேங்க் GM வீட்டுல தங்கவச்சாங்க.. 

லாட்ஜுக்கு நான் போகலை..#கூட வந்தவனெல்லாம் 

மொடாக் குடிகாரனுங்க..BAD BOYS  வடை சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள டீ ஆறிப்போச்சு..

# பனியோட சனியும் சேர்ந்துக்குது..#பாய்லர்லயா

வாய் வச்சி குடிக்க முடியும்..???கோவிலுக்கு போலாம்னு சொன்னவங்களை நம்பி போனா..

சாமி கும்பிடாம செல்ஃபி எடுக்குறானுங்க.. அடேய்..

ஆண்டவனையே அப்டேட் பண்ண வச்சிடுவீங்க போலேயே...மலை மேல ஆக்சிஜன் தான் பற்றாக்குறை..

ஆல்கஹால் பற்றாக்குறையே இல்லை..

# அவ்வளவும் கர்நாடகா இறக்குமதி.. எத்தனை மூட்டை..!!!!ஸ்டார்ட் மியூசிக்..காந்தக் கண்ணழகி.. லெஃப்ட்ல பூசு.. 

தோ பார்.. ரைட்ல பூசு னு  நைட்டு 12 மணி வரை ஆட்டம்..

# அந்த ராத்திரியில சோறு குழம்பு வடிச்சிப் போட்ட அன்பு 

உள்ளங்களை என்னனு சொல்றது..# இவங்க எல்லாம் 

ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கணும்..கால்கள் ரெண்டும் அந்த ஆட்டம் ஆடுச்சு..

அது குளிரினாலையா,குடிச்சதாலையா இல்ல குத்தாட்டம் 

ஆடவானு தெரியலை..படுகாஸ் டான்ஸ் கூட சேர்த்து கண்ணம்மாபேட்டை 

குத்தையும்,பேட்டா ராப்பையும் கலந்து அடிச்சி

# கால் வீங்கி போச்சுப்பா!@#$%^&*பாட்ஷா படத்துல தலைவர் சொல்ற மாதிரி "நான் ஆடி 

நீ பார்த்திருக்கியானு",ஆடாதவங்களை எல்லாம் 

ஆட வச்சிட்டாங்க..# என்னா பீட்டு..!!!!!சிட்டில கல்யாணத்துக்கு சொந்தக்காரங்க வர்ற மாதிரி 

காலை 9 மணிக்கு சூரியன் வந்து 10.30 மணிக்கெல்லாம் 

போயிடுச்சு..# பகல் 12.30 மணிக்கு மேல பனி இறங்கி

மலையையே மறைச்சிடுச்சு..ஹ்ம்ம்ம்ம்...
இப்பவும் மலை,கடல்,ரயில்,விமானம்,யானை எல்லாம் 

பார்க்க அவ்ளோ பரவசமா இருக்கு..#ஆனா யானையை 

காட்டுல பார்க்க மட்டும் செம டர்ரா இருக்கு..பசியை விடக் கொடுமையானது பந்தியில உக்கார 

காத்திருக்குறது தான்..#ஒருத்தன் உட்காந்தா ஊருக்கே

இடம் பிடிக்கிறான்.. சமைக்கிற இடத்துக்கே போகலாமோனு

யோசிக்க வச்சிட்டாங்க..சரக்கடிக்கவும்,சாப்பிடவும் பசங்க எவனுக்கும் 

காத்திருக்குறதே இல்ல..# பந்திக்கும் போதைக்கும்

முந்து.. முடியலேன்னா ஓரமா குந்துனு.. என்ன ஒரு பாலிசி..!!!!!! என்னதான் உடம்பு வலி இருந்தாலும் இன்னும் 

ஆறு மாசத்துக்கு தேவையான உற்சாகம் வந்துடுச்சு..

# நன்றி மக்களே..!!!!

Tuesday, April 14, 2015

CAPARO காதல்


உன் பெயராய் உச்சரிக்கும் என் இதயத் துடிப்பை 

எவரேனும் கேப்பாரோ..

 

என் மீதான உன் காதலை சொல்ல விடாமல் தடுப்பது 

யார் உன் அப்பாரோ..?
 

என் மனது WHEEL HUB பாய் உன்னை சுற்றியே சுழல..
 

உன் காதலே என் இதய இன்ஜினின் CONNECTING ROD

டாய் உழல..
 


வாழ்வினில் முன்னேற உன் சிரிப்பு ஒன்றே 

DRIVE SHAFT டாய் என்னை உந்தும்..
 


காதலுடன் நீ அணைக்கையில் உன் கைகளிரண்டும் 

SUPPORTING ARM மாய் என்னை ஏந்தும்..
 


ஜல் ஜல் என கொலுசு அணிந்து நீ ஜிங் என்று குதித்தால்,

எனக்கு மட்டும் கண்கள்,காதுகள்,இதயம், மெய் என 

ஃபோர்-ஜிங்காய் கேட்க..
 


உன் உதட்டு சுழிப்பு IBH (INTERNAL BLOOD HEATER) ஆக 

எனைத் தாக்க..
 


CLAW POLES போல உன் கண்களும் என் கண்களும் 

சேர்ந்து காதல் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்..
 


உன் வாசனை WORM COVER ராய் என்னை 

சூழ்ந்து கொய்யும்..
 


நீ காட்டும் அக்கறை INPUT SHAFT டாய் என்னை இயக்க..
 


GEAR போல உனக்கேற்ப செயல்படும் என் நிலையைக் 

கண்டு நானே வியக்க..
 


உன் வாழ்க்கை துணையாக வர விரும்பி 

விண்ணப்பித்த என்னை..
 


RECESSION என்று REJECT செய்யாமல் RECRUIT

செய்யடி பெண்ணே...

Friday, April 10, 2015

மாத்தி யோசி .. 86.

மீட்டிங்ல எவனாவது பேசும்போது கவுண்டமணி 

வசனங்களும்,என்னை யாராவது கேள்வி கேட்டா 

வடிவேலு வசனங்களும் தான் ஞாபகம் வருது..

# சிரிப்பை அடக்க எவ்ளோ சங்கடமா இருக்கு..!!!!நண்பன் வீட்டுல இருந்த கிடார் எடுத்து வாசிச்சேன்.. 

என் வாய் தான் பாடுது..கிடாரிலிருந்து டொய்ங் 

டொய்ங்னு தான் வருது..(என் மைண்ட் வாய்ஸ் :

 "உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை")
மனிதன் உயிர் வாழ என்ன வேண்டும்னு பக்கத்து


வீட்டு பையனைக் கேட்டா,"ஒரு கத்தி,கேமரா,ஷூ, 


கொஞ்சம் புரதம் நிறைந்த பூச்சிகள்"னு சொல்றான்..


#Bear Grylls அட்டகாசங்கள்..DOCTOR ஐ சுருக்கமா DR. னு போடுறாங்க..

தமிழ்ல போடும்போது மரு. னு போடுவாங்களா 

இல்ல டாக். னோ, டார் னோ போடுவாங்களா...????


அனேகன் பார்த்தேன்.. GRAPHICS CARD மாட்டுறது..

MOUSE WIRE INSERT பண்றதுன்னு எவ்ளோ ஈஸியா 

இருக்குது SYSTEM ADMIN வேலை.. 

Tuesday, April 7, 2015

ஏன் இப்படி ...91
கனவில மோனல் கஜ்ஜாரை காதலிச்சு கல்யாணம் 

பண்ணி குழந்தையும் பிறந்து ஸ்கூல் அட்மிஷன் ஃபார்ம்

வாங்க வரிசையில நிக்கும்போது அலாரம் அடிச்சுடுச்சு..

# ரொம்ப காஞ்சு போயி இருக்கேன் போலயே கடவுளே..பசியினாலே மயக்கம் வரும்.. எனக்கு கேண்டீன்ல 

சாப்பிட்ட உடனே மயக்கம் வருது..# எத்தனை பேருக்கு 

தான் "கும்பி பாகம்" கொடுக்கணுமோ தெரியலையே..ஜெயா டிவில மட்டும் தான் டப்பிங் சீரியல் 

போடாம இருந்தானுங்க..இப்போ வந்துடுச்சு..

பிரியமானவளே வாம்..#புது பிசாசுகள்..ஒரு விஷயத்தை பத்தி பேசி மொக்கை போடுறானுங்களேனு

சாமர்த்தியமா பேச்சை மாத்தினா அதுல இதை விட

மொக்கை போடுறானுங்க..#முடியலைடா டேய்...சில பேரு கூட இருக்குறதை விட தனியாவே 

இருந்துடலாம் போல..# காது வலிக்குதுடா டேய்.. 

Saturday, April 4, 2015

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 65
நல்லவனுக்கு எதிரி கெட்டவன் இல்லை..

நல்லவனாவும் இருக்க முடியாம,கெட்டவனா மாற 

பயந்துகிட்டும் ஒரு கும்பல் திரியுதே..அவனுங்கதான்..பசங்களுக்கு எனெர்ஜி தர எவ்வளவு விஷயங்கள் 

இருந்தாலும் ஒரு பொண்ணோட பார்வைக்கு ஈடு 

இணையே இல்ல..# லவ் யூ ஆல் பொண்ணுங்களா..!!!!!!சரக்கடிக்கவும்,சாப்பிடவும் பசங்க எவனுக்கும் 

காத்திருக்குறதே இல்ல..# பந்திக்கும் போதைக்கும் முந்து..

முடியலேன்னா ஓரமா குந்துனு.. என்ன ஒரு பாலிசி..!!!!!! இப்போவெல்லாம் யாரும் உன் மனசுல நான் 

இருக்கேனானு கேட்குறதில்லை.. உன் WHATSAPP , 

FACEBOOK ல யாரெல்லாம் இருக்காங்கனு தான் கேட்குறாங்க..ரோட்டுல நடக்குற விபத்துகளில் கணிசமானவை 

சாலை வளைவுகளை பார்க்காம முன்னாடி வண்டியில 

பின்னாடி உட்காந்து இருக்குறவங்க வளைவுகளை 

பார்க்கிறதால தான்..# ரோட்டைப் பார்த்து ஓட்டுங்கடா டேய்.. 

Wednesday, April 1, 2015

தியேட்டருக்கு போவியா..???? போ...வி....யா....??????????????????
செயல் - படம் பார்ப்பது..

பொருள் - கொம்பன் ..

முடிவு - தீராத தலைவலி..இந்த படத்தை தடை செய்ய சொன்னவங்க

நோக்கம் வேறயா இருக்கலாம்..ஆனா அவ்வ்வ் ...

#தப்பு பண்ணிட்டேனே..தப்பு பண்ணிட்டேனே..லக்ஷ்மி மேனன்,போன படத்துல ஆன்ட்டி போல

இருந்தா..இதுல பாட்டி போல இருக்கா...!@#$%கொம்பன் - அதீத இரைச்சல்..

ஹரிக்கு போட்டியாளர்கள் வரிசையில

இந்த இயக்குனரையும் சேர்த்துடலாம்..பார்லி டீ குடிச்சிட்டு போயி படம் பார்த்ததுக்கே

இப்படினா..வெறும் பருப்பு சாதம் மட்டும்

சாப்பிட்டு போயிருந்தா பைத்தியம் பிடிச்சி இருக்கும்..கொம்பன் படத்துல,மதுரை ஜெயில்ல "ஜில்லா" 

படம் போட்டு காட்டுறாங்க..

குவாண்டனமோ ஜெயிலை விட கொடுமை 

படுத்துவானுங்க போலயே..

ஏன் இப்படி ...90
பைக்ல பில்லியன் சீட்டை உயரமா வச்சி ஒவ்வொரு 

ஸ்பீட் பிரேக்கர் ஏறும்போதும் ஹெட்லைட்டுக்கு 

முத்தம் கொடுக்குறானுங்க..எனக்கு தற்பெருமை அடிச்சுக்கிறதே பிடிக்காதுன்னு

 பீத்திக்குறானுங்க.. இதுக்கு நீங்க தற்பெருமையே அடிச்சிக்கலாம்..

# 9 ஓட்டைல ரெண்டை அடைச்சுக்கலாம் போல..10 நிமிஷத்துல வர்றேன்னு பாஸ் கிட்ட பொய் சொல்லிட்டு 

மொபைலை ப்ளைட் மோடுல போட்டு பாண்டிச்சேரி 

வந்தான் ஒருத்தன். 10 நிமிஷத்துல பாத்ரூமுக்கு தான் 

போக முடியும்னு புரிஞ்சிக்காத பாஸைக் காரி துப்புறதா..? 

இல்ல பொய்யைக் கூட சரியா சொல்லத் தெரியாத 

நாயை அடிக்கிறதா...?

கல்யாண பேனர்ல சுய விளம்பரத்துக்கு போட்டோ 

போட்டுக்கிட்டா தப்பில்லை..கண்ணீர் அஞ்சலி பேனர்ல 

எதுக்குடா...?# யார் செத்தாங்கனே தெரிய மாட்டுது..
கைக்குட்டையை கர்ச்சீப் னு சொல்லிட்டேன்..

அதை ஹேண்ட் கீ னு  சொல்லணுமாம்..

#இதுக்கெல்லாமா 10 நிமிஷம் தாளிக்குறது..!!!!