Monday, January 30, 2012

ஜோக்கூ.. Part 60 ( RC ஸ்பெஷல் 15 )
கண்களை மூடிய பின்னும் ஒரு வெளிச்சம்..

அடிச்சது RC ல..

அதான் அப்படி..
பாட்டில் முடிந்தாலும்,போதை ஏறினாலும்,கீழே விழுந்தாலும் 

எந்திரிச்சி நின்னு சொல்வேன்..

RC இன்னொரு லார்ஜ்..

என் நிழலைக்கண்டு கூட நான் பயந்திருக்கிறேன்..

ஆனால் உன் நினைவு இருந்தால் போதும்..எந்த பயமும் இல்ல..

# போடா..RC யே நம்ம பக்கம்..பழக்கமில்லாதவனும் போதை ஆகிறான்..பேரை கேட்ட 

பின்பு.. புண்ணாக்கும் புத்தன் ஆகிறான்..4 லார்ஜ் போன பின்பு..

# RC அடிச்சா அச்சா – மீ...சோகம் மறந்து சொர்க்கம் காட்டும் 

உன்னத படைப்பு RC..


Friday, January 27, 2012

ஏன் இப்படி ...56


உனக்கு உன்னை பிடிக்கிற மாதிரி நீ இரு டா..அப்புறம் 

எல்லாருக்கும் உன்னை பிடிக்கும்னு சொல்றா..

#கமல் படம் ஏதாவது பார்த்திருப்பானு நினைக்கிறேன்..
நமக்கு பிடிச்சவங்களே நம்மை சில நேரங்களில்

காயப்படுத்துறாங்க..நாம அதிகம் முக்கியத்துவம் 

கொடுக்காதவங்க சில நேரங்களில் நெகிழ வைக்கிறாங்க..

#என்ன வாழ்க்கைடா இது..
இந்த உலகத்தில மிகச்சிறந்தது.. ஒரு பெண்ணோட 

உண்மையான அன்பு.. - விடுதலை படத்தில

விஷ்ணுவர்தன்..ஹ்ம்ம்..எனக்கில்ல..எனக்கில்ல..
எதை எதையோ கண்டுபிடிக்க முடியுது..ஆனா சிரிச்சுக்கிட்டே 

சில்லறை வேலை பார்க்குறவனுங்களை லேட்டா தான் 

கண்டுபிடிக்க முடியுது..

#என்னா ட்ரிக்சா வேலை பார்க்குறானுங்க. ஒண்ணுமே இல்லாத விஷயம்னு நாம நெனச்சா,அதை பெரிய 

விஷயமா மாத்துறதும்,பதறி துடிச்சா சின்ன விஷயத்துக்கு 

ஏன்டா இப்படி பதறுறேனு கேட்குறதும்

#முடியலை பொண்ணுங்களா..


முகம் அழகா இருக்குறதை விட,அகம் அழகா இருந்தா போதாது…

# வெள்ளையா இருக்குறவன் விஷமில்லைன்னு 

சொல்லிக்கிட்டு திரியுறானுங்க..
அடுத்தவன் பிரச்சினைக்கு மட்டும் எல்லா நேரமும் 

ஆளாளுக்கு ஏதாவது தீர்வு வச்சிக்கிட்டே இருக்கானுங்க..

# வேலையைப் பாருங்கடா டேய்..


கேள்வி கேட்டு முடிக்கும் முன்பே அவனுங்களா முடிவு பண்ணி 

ஒரு பதிலை சொல்றானுங்க..( கொல்றானுங்க)

# அப்புறம் ஏண்டா கேள்வி கேக்க சொல்றீங்க பிக்காலிங்களா..சின்ன வயசுல பாயில தூங்கி  காலையில தரையில 

எந்திரிச்சா சிரிப்பாங்க..இப்போ சரக்கடிச்சு அதையே 

செஞ்சா கழுவி கழுவி ஊத்துறாங்க..#சத்திய சோதனை.
ஸ்வீட் கடை வேலைக்கு சர்க்கரை வியாதிக்காரனை 

வேலைக்கு வச்சாப்புல இருக்குது..

#57 வயசுல இவனுக்கு 22  வயசுல ஒரு PA வா..ஹ்ம்ம்..

Thursday, January 26, 2012

மாத்தி யோசி .. 57


எத்தனை பொண்ணுங்ககிட்ட கேவலப்பட்டாலும் அடுத்த பிகரை 

நோக்கி எப்போதும் என்னை இயக்கிக்கொண்டு இருக்கும் ஒரு 

காரணம் "ஊருக்குள்ள இவ மட்டும் தான் பிகரா..? போடி.."
ஆத்திரப்பட்டு குரலை உயர்த்தி கொத்தவால்சாவடி போல 

ஆக்குறதை விட..ஸ்மைல் பண்ணி வாதிடும்போது சாந்தோம் 

சர்ச் போல சந்தோஷமா இருக்கு.
அடுத்தவங்களுக்கு என்னை பிடிக்கலையே னு வருத்தப்பட்டதை

விட,எனக்கு என்னை பிடிக்கிற மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சதுக்கு

அப்புறம் நிறைய பேருக்கு என்னை பிடிக்குது..பிரெண்ட்ஷிப்பும்,புகைப்பழக்கமும் ஒண்ணு..பழகிட்டா சீக்கிரத்தில 

விட முடியாது.காதலும்,சரக்கும் ஒண்ணு.ஒரு முறை வாந்தி 

எடுத்துட்டா உடனே தொட பிடிக்காது.
அடுத்தவங்க எப்படிப் பட்டவங்கனு யோசிக்கிறதுக்கு முன்னர் 

நாம எப்படிப் பட்டவன் னு யோசிச்சா பல பிரச்சினைகள் தீரும்..

எவன் கேட்குறான்..கண்களால் காயப்படுத்தினால் அவள் காதலி..கை,கால் 

உடையும் அளவுக்கு காயப்படுத்தினால் அவள் மனைவி..

#பக்கத்து வீட்டு அங்கிளுக்கு செம அடி..
எல்லாருக்குள்ளையும் காதல் இருக்கு..அதை வெளிக்கொண்டு 

வர்ற அந்த ஒருத்தர் யாருன்னு தேடிக்கண்டுபிடிக்கிறது 

தான் சுவாரசியம்..தப்பு நம்ம மேல இருந்தா தான் விட்டுக்கொடுக்கனும்னு 

அவசியம் இல்ல..கொஞ்சம் புத்தி இருந்தாலே போதும்..

#வீணாய்ப் போனவனுங்க கூட எதுக்கு விவாதம்..வானம் போல மனசு இருந்தா நல்லவனாம்..அதுல மேகம் 

போல் தினமும் புதுசா பெண்கள் வேணும்னு நான் கேட்டா 

மட்டும் கெட்டவனாம்..#என்னாங்கடா உங்க நியாயம்..ஆறுதல் சொல்றவனுக்கு பிரச்சினை வரும் வரை தான் 

அடுத்தவனுக்கு ஆறுதல் சொல்லுவான்.உங்க மேல 

நம்பிக்கை வைங்க மக்களே.

Wednesday, January 25, 2012

காதலைத் தேடி..
ஒவ்வொரு முறையும் உன்னை சந்தித்து பிரியும்போது , 

சந்தோஷத்தின் முடிவு என்றே எண்ணுகிறேன்..பின்பு உன் 

நினைவுகள் வந்து என்னை ஆக்கிரமிக்க அதுவே ஆரம்பம் 

என்பதை உணர்கிறேன்.
உன்னிடம் நான் ஊடல் கொண்டு உள்ளேன் என்பதை நான் 

கூறிய பிறகே உனக்கு தெரிகிறது..காதலை வெளிப்படுத்த 

தெரிந்த அளவிற்கு எனக்கு காயத்தை வெளிப்படுத்த

தெரியவில்லையோ…
என்னைக் காயப்படுத்தும் உன் வார்த்தைகளுக்கு மருந்து 

உன் புன்னகைகளும்,முத்தங்களும் மட்டுமே..காயங்களை 

தரும் நீ மருந்திட மறக்காதே..
நான் காயப்பட்டால் என்னை விடவும் அதிகம் துடிப்பவள் நீ..

இப்போது புரிகிறதா,நான் உன்னைக் கனவிலும்

காதலிப்பதற்கானக்காரணம்..
மற்றவர்களிடம் சற்றே கடுமையாகவும்,உன்னிடம் மட்டும்

மென்மையாகவும் நடந்து கொள்கிறேன் நான்..நீ அப்படியே 

எனக்கு நேரெதிர்..#போடி பம்ப்ளிமாஸ்..
என்னை சந்திக்க நீ காரணங்களை தேடுகிறாய்..ஆனால் ஹனி..

நானோ ஒவ்வொரு முறையும் காதலைத் தேடியே 

உன்னை சந்திக்கிறேன்..சந்திப்பை நான் உண்டாக்கினால் சந்தோஷம் மட்டுமே 

மிஞ்சிய எனக்கு..நீ உருவாக்கிய சந்திப்பினால் திகைப்பும்,

திளைக்க திளைக்க மகிழ்ச்சியும்..லவ் யூடி ஹனி..
நேற்று முதன் முறையாக உன் கனவில் நான் வந்ததாக 

கூறி ஆச்சரியப்பட்டாய். ஹனி..என் கனவில் நீ வராவிட்டால் 

தான் எனக்கு அது ஆச்சர்யம்.
உன் நிலை உணர்ந்து என் காதலை மறைத்து நடிக்கிறேன் நான். 

நான் நடிப்பது தெரிந்து கள்ளச்சிரிப்புடன் என் காதலை 

தேடுகிறாய் நீ..#பம்ப்ளிமாஸ்..லவ் யூடி..


உண்மையானக் காதலை உணர வைத்தவளும் நீ தான்..

அதே காதலை வெறுக்க வைத்தவளும் நீ தான்..

Saturday, January 14, 2012

ஜோக்கூ.. 59
காதலில் உன் மவுனப் பார்வைகள் 1000 செய்திகள்

சொல்லும்..கல்யாணமான பின்பு உன் மவுனப்பார்வை 

உணர்த்துவது ஒன்றை மட்டுமே..

#சொல்றதை செய்றியா இல்லியா..?
உன்னுடன் கைக்கோர்த்து,உன் தோளில் சாய்ந்து நடந்த 

போதே உணர்ந்தேன்.. சரக்கு கொஞ்சம் ஓவரா 

அடிச்சிட்டேனா மச்சி..
உன் வருகையை எதிர்பார்த்து நான் நடந்த தடம் 

இன்று ஒற்றையடிப்பாதை யாய்..

சனியனே..வேற வழியில போனா சொல்லித் 

தொலைக்க வேண்டியது தானே..
கெட்டதை மறந்துவிட தான் எத்தனிக்கிறேன்..உன் அறிமுகம் 

எனக்கு அடிபட்ட போது தானே கிடைத்தது..பிறகெப்படி மறக்க..? 

நர்ஸ் நல்லா இருந்துச்சுப்பா..


சேலையைப் பார்க்காமல் வேலையைப் பாருடா என்றவரிடம் 

சொன்னேன் சென்னை சில்க்ஸ் ல சேல்ஸ்மேன் வேலை 

வாங்கி தர முடியுமா..

Friday, January 13, 2012

செப்பு சிலையை சைட் அடிச்சி சைபர் க்ரைம்ல சிக்குன சோக ஸ்டோரி.. 2அட.ச்ச..எப்பவுமே நான் கூட படிக்கிற 

பொண்ணுங்களையும், வீட்டு பக்கத்திலையும்,அதுக்கு 

அப்புறம் வேலை செய்யுற இடத்திலையும் 

பொண்ணுங்களை பார்க்கவோ,பேசவோ மாட்டேன்..

சீக்கிரம் விஷயம் வெளிய தெரிஞ்சுடும்னு.. 

ட்ரான்ஸ்போர்ட்டர்  படத்தில JASON STATHEM ரூல்ஸை 

ப்ரேக் பண்ணி மாட்டிக்கிட்டது போல என் ரூல்ஸை 

ப்ரேக் பண்ணி நான் மாட்டிக்கிட்டேனே..

( ENGLISH படம் பார்க்குறாறாம் .. ) இந்த முடிக்கு 

தான் இதெல்லாம் வேணாம்னு ஒதுங்கி இருக்க 

ஆரம்பிச்சேன்.. ஆனா அவ அதுக்கு அப்புறம் தான் 

ஓவரா புழிய ஆரம்பிச்சா ..பீலிங்க்சை..நான் கொய்யா மரத்தடியில உட்காந்துகிட்டு பசங்க கூட 

போன் ல பேசுறது வழக்கம்.. இவ துணி துவச்சுக்கிட்டு

இருந்தா..நான் கண்டுக்கலை..அவளே கேட்டா..

ஏன் கணேஷ்..நாம சின்னவயசுல எவ்வளவு ஜாலியா

விளையாடினோம் ல..எதை பத்தியும்,யாரை பத்தியும்

கவலை இல்ல..ஹ்ம்ம்..இப்போ நெனச்சு பார்த்தா கூட

சந்தோஷமா இருக்கு.. அப்படியே இருந்து இருக்கலாம்..

உனக்கு ஞாபகம் இருக்கா.. ஒரு நாள் நாம ரெண்டு 

பேரும் மொட்டை மாடியில இருட்டுல உட்காந்து 

காலையில 3 மணி வரைக்கும் பேசிக்கிட்டு இருந்தது..

அப்போ கூட நீ எனக்கு பிடிச்ச நீல ஷர்ட் போட்டு இருந்த..

எனக்கு ஒரு எழவும் ஞாபகம் இல்ல.. ஆமாண்டி..இதை 

எல்லாம் நல்லா எழவு கொட்டு..ஆனா போலீஸ் ல 

போட்டு கொடுத்துடு நெனச்சுகிட்டு..

உனக்கு எல்லா ஞாபகம் இருக்கு போல..இப்போ 

மட்டும் என்ன ப்ராப்ளம்..பேச வேண்டியது தானே..

அது எப்படி முடியும்..யாராவது தப்பா நெனச்சா..

என்னனு 

எதோ ஒண்ணுனு..அதனால தான் நான் உன்கிட்ட 

சரியா பேசுறதே இல்ல..ஆனா உன் கூட பேசணும் 

போல இருக்கும் தெரியுமா..?அடிப்பாவி..பொதுவா நான் தானே இப்படி எல்லாம் 

புரியாம பேசி புலம்புவேன்..நீ என்னையே புலம்ப 

விடுறியேனு மனசுக்குள்ளயே நினைத்தேன்..

அப்போ போன் ல பேச வேண்டியதுதானே..ஆமா..என் 

நம்பரை கூட ஞாபகம் வச்சிக்காம யார்னு 

தெரியலைன்னு சொன்னவ தானே நீ..?

நான் என்னடா பண்ணட்டும்..நானா எதுவும் 

சொல்லல..அண்ணன் தான் கேட்டாரு..யார் நம்பர் இது..

தினமும் இத்தனை மெசேஜ் வருதுன்னு..யாராவது 

பிரெண்டா இருக்கும்னு தான் சொன்னேன்..அவரா 

கம்ப்ளைன்ட் கொடுத்துட்டார்.. னு சொல்லி முடிக்கவும் 

அவ அப்பன் வந்துட்டான்.. மறுபடியும் துணி 

துவைக்க ஆரம்பிச்சுட்டா.. ( சனியனே..சீரியல் 

செட்டு போல வாங்கி குவிக்கிறியே டா.. ? )அப்புறம் நான் கோயம்புத்தூர் வந்ததுக்கு அப்புறம்..

ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை வீட்டுக்கு 

போயிக்கிட்டு இருந்தேன்.. அப்படி ஒரு சண்டே 

காலையில ஒரு பச்சை கலர் சுடிதார் போட்டுக்கிட்டு 

வந்து நின்னா.. கணேஷ்..இந்த டிரஸ் எனக்கு நல்லா 

இருக்கானு கேட்டா.. உடனே நானோ..பொதுவா 

தேவதைகள் எல்லாம் வெள்ளை கவுன் தான் 

போட்டுக்கிட்டு வரும்னு படத்தில காட்டுவாங்க..

ஆனா இன்னைக்கு தான் தேவதை சில நேரங்களில்

பச்சை சுடிதார்லையும் வரும்னு தெரிஞ்சுகிட்டேன்னு

சொல்லவும் ச்சீ..போடா னு சொல்லிட்டு ஓடிட்டா.. 

( எவ்வளவு கேவலப்பட்டாலும் நீ திருந்த மாட்ட..

நீ திருந்த மாட்ட.. ) சிணுங்குறது எல்லாம் 

நல்லாத்தான் சிணுங்குறா ..ஆனா  ஒண்ணும் சரியா 

சிக்னல் தர மாட்றாளேனு ஒரு குழப்பம்.. ஆனா பெரிசா

பாதிக்கலை..அப்போ அவளை மடக்க நான் சின்சியரா

ட்ரை பண்ணலைன்னு சொல்றது தான் உண்மை.. 

இந்த சொல் பதத்திற்கு மன்னிக்கவும்..அன்றைய

காலக்கட்டத்தில் என் மன நிலை அப்படி 

தான் இருந்தது..இப்படியே ஒரு வருஷம் எங்களுக்குள்ள என்ன 

இருக்குனு தெரியாமையே ஓடிக்கிட்டு இருந்துச்சு..

நான் வீட்டுக்கு போகும்போது எல்லாம் என் வீட்டுக்கு  

அடிக்கடி வருவா..எங்க அம்மாகிட்ட ரொம்ப நேரம் 

மொக்கை போடுவா.. என் வீட்டு வாசல்ல இருக்க

மாடிப்படியிலேயே உட்காந்து இருப்பா.. யாரும் 

இல்லைனா மட்டும் என் கூட பேசுவா.. பதிவு 

ரொம்ப நீளமா போறதால அவ கூட இருந்த பல 

சம்பவங்களை சொல்ல முடியல..சொல்லிக்கிற 

அளவுக்கும் ஒண்ணும் நடக்கல.. அதனால அப்படியே 

லூஸ் ல விடுவோம்.. அதுக்கு அப்புறம் கொஞ்ச 

நாளில் நாங்க பக்கத்து ஏரியா போயிட்டோம்..இந்த ஏப்ரல் ல தான் கோர்சை கம்ப்ளீட் பண்ணா.. 

ஜாப் தேடிக்கிட்டு இருந்தா.. என் பிரெண்ட் ஒருத்தன்

TCS ல இருக்கான்.So அவன்கிட்ட ரெபெர் 

பண்ணலாம்னு அவ அண்ணன் கிட்ட சொல்லி 

அவ CV யை எனக்கு மெயில் அனுப்ப சொன்னேன்..

அனுப்பினா..நானும் பார்வர்ட் பண்ணிட்டேன்.. அதுல

இருந்து அவளோட மொபைல் நம்பரையும் மறக்காம

எடுத்துக்கிட்டேன்.. அதுக்கு  அப்புறம் ஒரு தடவை 

TCS ல இருந்து கால் வந்துச்சான்னு மெசேஜ் 

அனுப்பினேன்..இல்லப்பா னு ரிப்ளை வந்துச்சு..

சரி நான் அவன் கிட்ட கேட்குறேன் னு ரிப்ளை 

பண்ணினேன்.. அவ்வளவு தான்.. அதுக்கு அப்புறம் 

ஒரு நாள் சரக்கடிச்சு கிட்டு இருக்கும்போது தோனுச்சு.. 

ஹாய் ரே..நல்லா இருக்கியா..உனக்கு என் கூட 

பேசணும் னு தோணவே இல்லையா னு ஒரு 

மெசேஜ் அனுப்பினேன்..ரிப்ளை வரலை..அதோட இருக்கு.. எனக்கும் அவ கிட்ட பேச தயக்கமா 

இருக்கு.. என்ன பேசுறதுனே தெரியலை.. 

இப்போவெல்லாம் மாசத்துக்கு ஒரு முறை 

சென்னை போறேன்..ஒவ்வொரு முறை ஊருக்கு 

போகும்போதும் அவ வீட்டைக் க்ராஸ் பண்ணித்தான்

போறேன்..அவளைப் பார்க்கணும்னு நினைத்து 

ஒவ்வொரு முறையும் பார்க்காமலையே திரும்புறேன்..எது எப்படியோ ரேவதி.. நமக்குள்ள இருக்குறது 

என்னனு தெரியாமலையே இருக்கட்டும்.. இப்போ நான் 

வேற மாதிரி இருக்கேன்.. இப்படியே இருந்துடுறேன்..

உனக்காக இதுவரைக்கும் ஒரு 10 தடவைக்கு மேல நீ 

என் கிட்ட கேட்ட  TEMPTETION CHOCOLATE வாங்கி வச்சி 

இருந்து கொடுக்க முடியாம போச்சு.. 

அடுத்த தடவையாவது முடியுதானு பார்ப்போம்..


இது எழுதி முடிச்சி ரொம்ப நாள் ஆயிடுச்சு..

கடந்த நவம்பர் 12  ந் தேதி நம்பிக்கையே 

இல்லாம அவளுக்கு போன் பண்ணேன்..

ஆச்சர்யமா எடுத்து பேசினா..

அன்னைக்கு போட்ட ட்விட்ஸ் இதோ..

3 வருஷம் கழிச்சி இன்னைக்கு ஒரு தேவதை ஸ்திரீ கிட்ட பேசினேன்.. நாள் பூரா மகிழ்ச்சிக் கொள்ள வச்சிட்டா..

என்னை ஞாபகம் இருக்கானு கேட்டேன்..உன்னை எப்படிடா மறக்க முடியும் னு சொல்றா.
12 Nov Favorite Reply Delete 


எனக்கு உன் கிட்ட பேச கொஞ்சம் தயக்கமா இருந்துச்சுனு சொன்னேன்..என் கிட்ட பேச உனக்கென்ன தயக்கம்னு கேட்குறா..


நீ இவ்வளவு ப்ரீயா பேசுற..நான் தான் 3 வருஷத்தை வீனாக்கிட்டேனோனு கேட்டேன்..டே..திருட்டு ராஸ்கல்..என்னடா சொல்ல வர்றனு கேட்டா…
12 Nov Favorite Reply Delete 

ஒண்ணுமில்ல னு பழுப்பிட்டேன்..சிரிச்சுக்கிட்டே கொழுப்புடா உனக்குன்னு சொன்னா..


ஐயோ..முன்னர் போல இருந்து இருந்தா இன்னைக்கு சரக்கடிச்சு மட்டை ஆகி இருப்பேன்..ஹ்ம்ம்..நான் வேற சரக்கடிக்கிறதை குறைச்சுட்டேனே..
12 Nov Favorite Reply Delete


அதுக்கு அப்புறம் சில தடவை கால் பண்ணேன்..

அவ எடுக்கலை..மெசேஜுக்கும்  ரிப்ளை இல்ல..

கடந்த டிசம்பர் 5 ந் தேதி..மறுபடியும் அவளுக்கு போன் 

பண்ணினேன்..போன் எடுத்து ஹலோ சொல்லிட்டு அவ 


அண்ணனோ,இல்ல அப்பனோ தெரியலை..அவன்கிட்ட

கொடுத்துட்டா..நான் போதையில இருந்ததால குரல் 

அடையாளம் கண்டுபிடிக்க முடியலை.


அவன் யாருப்பா உனக்கு வேணும்..நீ யாரு எங்க இருந்து 

பேசுற னு கேட்கவும்..நான் உடனே அவ அண்ணன் பேரை

சொல்லி..ரமேஷ் இல்லையா அங்கிள் னு கேட்டேன்.. 

இது ரமேஷ் நம்பரா னு அவன் காண்டா கேட்க..

நான் சாரி அங்கிள்..தப்பா டயல் பண்ணிட்டேன் 

போலன்னு சொல்லிட்டு வச்சிட்டேன்..

ஒரு வாரம் கழிச்சி நான் சென்னை  போயி இருந்தப்போ , 

அவ வீட்டுக்கு போனேன்... 

நேர்ல பார்த்து பேசி பைசல் பண்ணிடலாம்னு..


கொய்யால...வீட்டைப் பூட்டிட்டு குடும்பத்தோட 

ஏதோ கல்யாணத்துக்கு போயிட்டாங்க..


அட வாத்சாயனா..நான் ஏன் இவ கிட்ட மட்டும் 

இவ்வளவு மொக்கை வாங்குறேன்...?

Thursday, January 5, 2012

மாத்தி யோசி .. 56

ஒரு பொண்ணு I LOVE YOU சொல்றதை விட..ஒரு பையன் 

சொல்ற அந்த மூணு வார்த்தை அதிக பிரகாசம் தருது..

மச்சி..SALARY CREDITED ...மச்சி..சாயங்கலாம் சைட் அடிக்க கோயிலுக்கு போலாம்ங்க்றான்

ஒருத்தன்.சரக்கடிக்க போலாம்ங்க்றான் இன்னொருத்தன்.

சைட் அடிச்சிட்டு சரக்கடிக்கலாம்னு சொன்னேன் நான்.

#நல்ல நட்பு.
அடிப்படை பிரச்சினைகளை தீர்த்தாலே,நமக்கு தேவையானது 

கிடைக்க ஆரம்பிச்சுடுது..


ON DUTY ல போயி கஸ்டமர் கிட்ட அடிவாங்குறதை நெனச்சா 

கஷ்டமா இருந்தாலும் , கையில காசு இல்லாம இருக்கும்போது

அனுப்புறானுங்களே..சந்தோஷம்.#நல்லா இருங்கடா டேய்..தூக்க மாத்திரை,க்ளோரோபார்ம் எல்லாம் வேஸ்ட்..பொங்கல் 

எவ்வளவு சீக்கிரமா வேலையைக் காட்டுது..#சொக்குதுடா சாமி..CHECK DM  இப்போ TREND டா..CHECK CM னு போட்டாலாவது 

புண்ணியமா போகும்..அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சுன்னு சொல்வாங்க.

அது காதலுக்கு பொருந்தாதுன்னு நினைத்தேன்..

எல்லாத்துக்கும் பொருந்தும் போல..

#கன்ட்ரோல் பண்ணிக்கடா கணேஷ்..உடனே தப்பா புரிஞ்சிக்கிட்டு யாரும் சண்டைக்கு வந்துடாதீங்க..

காதல்னு சொல்லிக்கிட்டு கட்டுப்படுத்துற மாதிரி நடந்துக்குறதை 

நான் சொல்லலை..எல்லா நேரத்திலும் உணர்வுகளை வெளிக்காட்ட கூடாது போல..

சில நேரங்களில் கட்டுப்பாடோட இருக்கணுமோ..

#காதலை என்னால கட்டுப்படுத்த முடியலையே கடவுளே..
ஓவரா புகழாதடா னு சொல்றா..அடி ஹனி..உன்னைக்குறித்து

உரைக்கையில்,பொய்யே மெய்யாய் மாறிவிடும்போது,

உண்மையைப் பேச எனக்கென்னடி தயக்கம்..

Wednesday, January 4, 2012

வலை வீசும் மீன்கள்

அன்பு காட்ட அம்மாவா,கண்டிப்பு காட்ட அப்பாவா, 

நல்வழிப்படுத்தும் போது ஆசிரியரா,ஆறுதல் அளிக்கும் 

ஆண்டவனா எனக்காக எல்லா நேரமும் ஏதாவது ஒரு 

அவதாரம் எடுத்துக்கிட்டே இருக்கியேடி..லவ் யூடி ஹனி..நான் ஏதாவது செய்து உன்னை சந்தோஷப்படுத்துறேன்..

நீ எதுவுமே செய்யாமையே என்னை சந்தோஷப்படுத்துற..

அது தான்டி ஹனி உன்னோட ஸ்பெஷல்..
உன்னிடம் கவிதை பேசி காதலிக்க எனக்கு ஆசை தான்..

ஆனால்,நான் ஆரம்பிக்கும் முன்னரே ஆயிரம் கவிதைகள்

சொல்கின்றனவே உன் கண்கள்..
மீன்களுக்கு வலைவீசி பார்த்திருக்கிறேன்..ஆனால் மீன்களே 

வலை வீசுவதை உன்னிடம் தான் கண்டேன்..நான் என் காதல் 

கொண்டு உன்னை சிறை பிடித்தால்,நீ என்னை கண்களில் 

சிறை பிடிக்கிறாயடி கள்ளி
என்னிடம் நீ என்ன எதிர்பார்ப்பாய் என்று தெரிந்து பூர்த்தி 

செய்கிறேன் நான்..ஆனால் நீயோ ஒவ்வொரு முறையும் 

என்னை வியப்பில் ஆழ்த்துகிறாய்..# அப்பன் கிட்ட போட்டு 

விட்டுட்டா சார்..
என் மீது தெரியாமல் பட்டதற்கு நீ மன்னிப்பு கேட்கிறாய்..

இதற்காக தவமிருக்கும் நான் நன்றி அல்லவா சொல்ல

வேண்டும்..தேங்க்ஸ் ஹனி..
தேவதை ஒன்று கனவில் தோன்றி உன் உயிரை ஏழுகடல்,

ஏழுமலை தாண்டி கிளியின் உடலில் பாதுகாக்கவா என்றது..

அது ஏற்கனவே 500 km தாண்டி அம்பத்தூர் எஸ்டேட் பக்கத்தில 

ஒரு கிளிகிட்ட தான் இருக்குனு சொல்லிட்டேன்..
உன் அன்பினால் நான் தடுமாறி விடுவேனோ என்று

கவலைப்படுகிறாய்..பைத்தியக்காரி…தடம் மாறி சென்ற 

நான் திருந்தியதே உன் அன்பினால் தானேடி..
என் கோபத்தினை நான் மவுனத்தில் காட்டுகிறேன்..நீ உன் 

காதலை மவுனத்தில் காட்டுகிறாய்..#நீ என்னுடன் பேச

தயங்குவதற்கும்,நான் உன்னுடன் பேசிக்கொண்டே 

இருப்பதற்கும் இப்போது தான் அர்த்தம் புரிகிறது..எப்போதும் எதிர்காலத்தை எண்ணியே கவலைப் படுகிறாய் நீ..
நான் நிகழ் காலத்தில் சற்றே சந்தோஷமாக வாழ்வோமே
என்கிறேன்..லவ்யூடி ஹனி..

Tuesday, January 3, 2012

ஏன் இப்படி ... 55கொடுமை,கொடுமை னு ஒரு பழமொழி சொல்லுவாங்களே..

அது எதுக்கு பொருந்துதோ இல்லையோ பல நேரங்களில் 

ட்விட்டருக்கு பொருந்துது..SUGGESTIONS 

சொல்லியே சாவடிக்கிறாங்கப்பா..
நமக்குள்ள எவ்வளவு ஒத்துப்போகுதுன்னு ஆரம்பிக்கும் 

பல உறவுகள்..தனிப்பட்ட ரசனைக்கு மதிப்பு தராததாலையே 

பிரிஞ்சும் போயிடுது..
தெரியாத்தனமா ஏதாவது நல்லது செய்யும்போது ஒருத்தனும் 

பார்க்க மாட்றான்.சொன்னாலும் கேட்கமாட்றான் தப்பு 

செய்யும்போது எங்க இருந்து தான் வருவானுங்களோ..
வண்டியில போகும்போது திரும்பும் முன் இன்டிகேட்டர் 

போட சொன்னா..ஏரோபிக்ஸ்  எல்லாம் பண்றானுங்க..

#அட பைத்தியம் பிடிச்ச நாயிங்களா..
ADVANCE HAPPY WORLD AIDS DAY னு ஒரு மெசேஜ் வருது..

அட பரதேசி நாயிங்களா..# எந்த டே வந்தாலும் 

அதுக்கு வாழ்த்தா..?
கோவமே வராதவனுக்கு கூட பசிக்கிற நேரத்தில வேலை 

சொன்னா வெறி ஆகத்தான் செய்யும்னு ஏன் இந்த 

சீட்டு தேய்க்கிறவனுங்களுக்கு தெரியமாட்டுது ஆண்டவா..
கொங்கு மண்டல சாலைகளில் ஓடும் கார்களில் அதிகமா 

சொகுசு காரா போகுது..#என்னா யாவாரம் டா பண்றீங்க..
குடிச்சுட்டு புலம்புறவனைக் கூட மன்னிக்கலாம்..ஆனா 

குடிக்காமலேயே எப்போ பார்த்தாலும் புலம்புறவனை 

பொறுத்துக்கவே முடியாது..#நியூ இயர் சண்டே வந்தா நான் 

என்னடா பண்ணுவேன்..

 
என்னை விட 10 வயசு பெரிய பெண்ணை நான் அக்கானு

கூப்பிடுறேன்.ஆனா எட்டாவது படிக்கிற பொண்ணு என்னை 

அங்கிள்னு கூப்பிடுது..#முன் மண்டை முடி..அவ்வ்வ்...

 
ரீசன் கேட்டா ஆன் தி ஸ்பாட்ல அடுக்குறானுங்க..சொல்யூஷன் 

கேட்டா நீயே சொல்லு னு அந்தர் பல்டி அடிக்கிறானுங்க..

#ஏன்டா இப்படி..

Monday, January 2, 2012

ஜோக்கூ.. Part 58 ( RC ஸ்பெஷல் 14 )

என்னை மாற்றியது நீ,மயக்கியது நீ,

உன்னைக்காணாமல் தவிப்பது மட்டும் நான்...

நீ எங்கே..என் RC அன்பே..
மாதம் முழுதும் இரவோடு இருக்க நினைக்கும் 

நிலவை போல,நானும் RC யுடன் இருக்கவே 

ஆசைப்படுகிறேன்.அதுக்கு தேய்பிறை..

எனக்கு பணப்பற்றாக்குறை.


இப்போதெல்லாம் உன்னை நினைப்பது அனிச்சை 

செயலாகி விட்டது…காண்டு பொங்கும் 

தருணங்களில்..# RC

உன்னை நேசிப்பதை நான் மறந்தாலும்,

என் நா ஒரு நாளும் மறப்பதில்லை..

அன்புள்ள RC

உன் அருகாமை இருந்தால் போதும்…சண்டே 

ஆபிஸ் போறதும் சாதாரணமானது தான்..

# அன்புள்ள RC க்கு..

Sunday, January 1, 2012

மது,மாது

அவற்றால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு 

அவை மட்டுமே..# மது , மாது
தொடங்கும் போது ஆர்வம்..முடிக்கும் போது பெரு மூச்சு..

பாட்டிலும் படுக்கையும் ஒண்ணு தானோ.. # மது,மாது
 
காரணம் ஆயிரம்..# மது,மாது
 
தான் செய்யும்போது யாருக்கும் தெரியாமலும்..
அடுத்தவனுக்குனா அட்வைஸ்களை அள்ளித் 
தெளிக்கவும் ஆரம்பிக்கிறானுங்க..# மது,மாது
 
போக,வர சிறந்த இடம்.. நிரந்தரமாக தங்குவதற்கு 
அல்ல..# மது,மாது
 
பெரும்பான்மை ஆண்களின் விருப்பம்..
இரவில் மட்டும்..# மது,மாது
 
கொஞ்ச நேர போதை..# மது,மாது
 
பழக்கமாய் இருக்கும் வரை பிரச்சினை இல்லை..
அடிமை ஆனால் ஆப்பு தான்..# மது,மாது
 
தற்காலிகத் தீர்வு #.# மது,மாது
 
விடுபட விரும்பாத மயக்கம்..# மது,மாது
 
தெளிவான குழப்பம்.. # மது,மாது
 
நம்முள் நுழைந்து நம்மையே மறக்க செய்யும்..# மது,மாது
 
ஒவ்வொன்றும் ஒரு விதம்..# மது,மாது
 
கண்களை கவரும் கவர்ச்சிக்கே முன்னுரிமை..# மது,மாது
 
ரெண்டுமே நமக்குள்ள இருக்கும்போது மத்தவங்களுக்கு 
ஈசியா தெரிஞ்சுடும்..# மது,மாது
 
எந்த சந்தேகமும் இல்லாம நம்மை முழுசா 
ஒப்படைக்கும்போது மட்டுமே ஆனந்தத்தின் 
எல்லை தெரியுது..சில நேரம் துன்பத்தின் 
எல்லையும்..# மது,மாது

HAPPY NEW YEAR PEOPLE

மக்கள் அனைவருக்கும் 

I WISH YOU A VERY HAPPY AND SUCCESSFUL NEW YEAR ...பயபுள்ளைங்க JANUARY  1  அன்னைக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்  னு

தமிழ்ல சொல்றாங்க.. சித்திரை 1 அன்னைக்கு HAPPY NEW YEAR னு

சொல்றாங்க..சரி போயித்தொலையுறாங்க..

அப்புறம் ஆறு வருடங்களுக்கு பிறகு சிகரெட்,சரக்கு னு எந்த 

போதையும் இல்லாம எனக்கு இந்த புது வருடம் 

ஆரம்பிச்சி இருக்கு...ம்ம்ம்..இதுவும் நல்லாத்தான் இருக்கு...


பார்க்கலாம்...


எனக்கும் SELF DISCIPLINE ( சுய ஒழுக்கம் )  , SOCIAL DISCIPLINE 

 ( சமூக ஒழுக்கம் ) வந்து இருக்குனு நினைக்கிறேன்..


இப்படியே தொடர்ந்தா என்னை விட , எனக்கு 

பிடிச்சவங்களுக்கு சந்தோசம்.. அதனால முயற்சி பண்றேன்..


முடிஞ்ச வரைக்கும் எல்லாருக்கும் நல்லதே நினைப்போம்..


சாலைகளில் செல்லும் போது கவனமா இருங்க.. 

உயிர் உங்களுக்கு மட்டும் முக்கியம் இல்ல..

மத்தவங்களுக்கும் தான்..


விழிப்புடன் இருப்போம்..விபத்துகளை தவிர்ப்போம்...


என்றும் அன்புடன்..


உங்கள்  3G @ CG ...