Thursday, August 29, 2013

ஏன் இப்படி ...76



தற்கொலை பண்ணிக்கிட்டவனுக்காக வருத்தப்படாம 

எங்கிட்டே சொல்லிட்டு செத்திருக்கலாம்னு சொல்றவனுங்க சங்கை 

கடிக்கணும் போல இருக்கு..!!!

 


நொந்து போயி இருக்கோம்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் ஆறுதல் 

சொல்லலைனாலும் பரவாயில்லை.. அட்வைஸ் பண்றேன்னு 

அழிச்சாட்டியம் பண்ணாதீங்கடா டேய்



காலையில கண்விழித்ததும் தினமலர் பேப்பர் கண்ணுல 

பட்டது..தலையங்கம் "கைவிரிப்பு..."# வெளங்கிடும்.. பக்கத்து ரூம் 

பரதேசிகளை வெட்டினா சரியாயிடும்..

 



சண்டை  போடுறவனுங்களை விட , சொம்பு அடிக்கிறவனுங்க 

தொல்லை ஓவரா இருக்கு..#என்னமா அடிக்குறானுங்க.

 



எங்களுக்கு ஒரு விஷயம் பிடிக்கலைன்னு நாங்க சொல்லியும் அதையே 

பேசிப்பேசி காண்டாக்கிப் பார்க்கிறதுல உங்களுக்கு என்ன சந்தோசம் 

பாஸ் / கேர்ள்ஸ்..?




தப்பு பண்ணியதை மறைக்கிறவன் கூட பரவாயில்லை..அதை 

இன்னொருத்தன் மேல போடுறவனுங்களா.. உங்களைத் திட்ட 

வார்த்தையே இல்லைடா..!!!

 



பதில் தெரியலைனா சொல்லமுடியாதுன்னு கெத்தா சொல்லிடுங்க.. 

கேள்விக் கேட்ட எங்களையே , அழும் அளவுக்கு குழப்பாதீங்கடா டேய்..

 



நாங்க உங்களைக் கேள்விக் கேட்டா மட்டும்"உனக்கு மட்டும் ஏன் 
 
இப்படியெல்லாம் தோணுதுன்னு" கேட்டு 

எங்களைக் கொன்னு எடுப்பதை 

எப்போதான் நிறுத்துவீங்க பாஸ் / கேர்ள்ஸ்..?

 
நீங்க தப்பு பண்ணியதை நாங்க கண்டுபிடிச்சு கேள்விக் கேட்கும்போது
மட்டும் புரியாத மாதிரியே முகத்தை வச்சிக்குறீங்களே..? 
எப்படி பாஸ் / கேர்ள்ஸ்..?
 
காதலியிடமும் , பாஸிடமும் அடிக்கடி கரகாட்டக்காரன் செந்தில் 
ரியாக்ஷன் கொடுக்க வேண்டி இருக்கு..#ச்ச.. என்ன வாழ்க்கைடா இது..

Thursday, August 22, 2013

மாத்தி யோசி .. 70



ரெண்டு பெரும் மாறி மாறி கொடுத்துக்கிட்டா தான் அது கைமாத்து.. 

எப்பவும் ஒருத்தனே கொடுத்தா அது ஏமாத்து..

(வாங்குனா கொடுக்கவே மாட்றானுங்க..)



கூண்டுல மாட்டிக்கிட்ட அப்புறம் சிங்கமா இருந்தா என்ன..? 

சிறு முயலா இருந்தா என்ன..? தற்கொலை பண்ணிக்க 

காதலிச்சா என்ன..? கல்யாணம் பண்ணா என்ன...?

 


கொஞ்சநாளில் சரியாகிடும்னு  தனக்குத்தானே 

சமாதானம் சொல்லிக்கிறானுங்க..அது,சரி 

ஆகலைனா சலிச்சுக்குறானுங்க.. 

#இதுக்குதான் நான் ஆரம்பத்திலேயே 

அசால்டா இருக்குறது..அக்காங்..





நிறைய பேசினாலும் , இல்ல ரொம்ப நாள் பேசாம விட்டாலும் 

கருத்து வேறுபாடுகள் அதிகமாகுது.. #ஹ்ம்ம் .. எல்லா 

உறவுகளிலும் இடைவெளி அவசியமாகிறது..

 


கேள்விக் கேட்குறவனைக் காண்டாக்க ஒரே வழி..புரியாத மாதிரியே
 
நடிக்கிறது..#எவ்வளவு ஆடிட்டிங் பார்த்திருப்போம்..


 
ஆம் என்பது பெரும்பாலான நேரங்களில் புரியாமலையே 

சொல்லப்படுகிறது..# ஆமாங்கனு மொக்கை போடாதீங்க ப்ளீஸ்..

 


தேவைகளைப் பொறுத்தே இப்போதெல்லாம் தேவதைகள் 

தீர்மானிக்கப்படுகிறார்கள்..#ஹ்ம்ம்...
 


 
நல்லவன் என்பவன் யாரெனில் எனக்கு தீங்கு செய்யாதவன்..# நல்லா 

இருக்குடா உங்க லாஜிக்..!!!



 
நேத்து நடந்த ஒரு நல்ல விஷயம் ஒருத்திக்கு புடவை 

எடுக்கப்போறேன்னு இன்னொருத்திக்கிட்டனு மாறி மாறி 

சொன்னேன்..#ரெண்டு பெரும் நம்பலை..# விஷயம் தெரிஞ்சா கூட நான் 

பொய் சொன்னேன்னு சொல்ல முடியாதுல.. 

Thursday, August 15, 2013

ஏன் இப்படி ...75



பொய் சொல்ல விரும்பாதவனையும் அண்டப்புளுகனா மாற்றும் 

திறமை பாஸ்களுக்கும், பொண்ணுங்களுக்கும் மட்டுமே உண்டு..

# உண்மையை சொன்னா மதிக்க மாட்றீங்களே..



நாங்க எவ்வளவு உண்மையா இருந்தாலும் நம்பாம,அடுத்தவங்க 

கிட்ட எங்களைப் பத்திக் கேட்பதை வழக்கமா வச்சி இருக்குறீங்களே 

ஏன் பாஸ்..? ஏன் பொண்ணுங்களா..?



எங்களோட உண்மைத் தன்மையை ஒவ்வொரு முறையும் 

நிரூபிச்சுக்கிட்டே இருக்கணும்ன்ற உங்க எதிர்பார்ப்பை 

எப்போ தான்  மாத்திக்குவீங்க பாஸ் & கேர்ள்ஸ்…? 




மேனேஜர் ஆயீட்டாலே மல்டிபிள் பெர்சனாலிட்டி வந்துடுமோ..?  

அந்நியன்,அம்பி,அரைவேக்காடு ,அதிகப்பிரசங்கினு ஆறேழு இருப்பான் 

போல.. என்னமா பெர்பார்மன்ஸ் பண்றானுங்க..



கேள்விக்கு பதிலா இன்னொரு கேள்வியை சொல்வதே 

இந்த பாஸ்களுக்கும் பொண்ணுகளுக்கும் பொழப்பா போச்சு.. 



ORKUT வந்த புதுசுல ஒவ்வொரு பொண்ணு பேரா தேடித்தேடி ப்ரெண்ட் 

ஆக்கிக்கிட்டேன்.. இப்போ மறுபடி அந்த நப்பாசை வந்து FACEBOOK ல 

தேடுனா.. அடச்ச ..ஒவ்வொரு பொண்ணு 

பேரு (பொண்ணானு  தெரியாதே ) ..

கூடவும்  ஒரு கும்பலே கடலை போடுது..அட போங்கடா 


நாங்களும் மனுஷங்க தான்.. மெஷின் இல்ல..எங்களுக்கும் பீலிங்க்ஸ் 

இருக்குனு எப்போதான் புரிஞ்சுக்குவீங்க பாஸ் / கேர்ள்ஸ்...?



பாஸ்களும் பொண்ணுங்களும் ஒரு பதிலில் திருப்தி 

அடையவே மாட்டாங்களா…? நாக்குத் தள்ளுதுடா சாமி..



குழப்புற புத்திசாலியை விட,தெளிவான முட்டாளிடம் வேலை 
 
பார்க்கிறது பரவாயில்லை..ஹ்ம்ம்.எனக்கு வாச்சது குழப்புற 
 
முட்டாள்..தினமும் மரணப்போராட்டம்..பைத்தியம் பிடிச்ச மொண்ணை 
 
நாயி..

 
 
அவமானப்படுத்தியவனை விட,அதை வேடிக்கை பார்த்தவங்க மேல 
 
காண்டு ஆவுறாங்க சில டோமருங்க என் ஆபிஸ்ல..#அட 
 
வெளக்கெண்ணை குப்பனுங்களா.?

Wednesday, August 14, 2013

தலைவா ஆஆஆஆஆஆ



சந்துல சத்தம் அதிகமா இருக்கு ..பொதுவா ரெண்டு  விஜய் 

படத்திலையும்  கதையே இருக்காதே..அப்புறம் ஏன் 

இந்த சண்டை..? # சமாதானமா போங்கப்பா.. 



படம் சென்னையில தியேட்டர்ல ரிலீஸ் ஆகல..

ஆனா CD ல ரிலீஸ் ஆயிடுச்சு..




தமிழ்படத்துக்கு அப்புறம் அதிகமான படங்களோட சாயல் 

இதுல தான்..நாயகன்,பாட்ஷா,ஏன் இந்திரா உட்பட..

 


தமிழ்படத்துல கலாய்ச்சு காமெடி பண்ணி இருந்தாங்க..

இவனுங்க காப்பி அடிச்சி காமெடி பண்ணி இருக்கானுங்க.. 



என்ன  எழவுடா இது.. படம் தான் ரிலீஸ்  லேட்டாகுதுன்னு 

பார்த்தா அதைப் பத்தி பேசவும் எத்தனை தடங்கல்கள் எங்க ஆபிஸ்ல .. 



தலைவா படம் பார்த்த நாளில் சன்  டிவி ல சுறா படம்  

போட்டு இருந்தாங்க..அதையே பார்த்து இருக்கலாமோன்னு தோணுச்சு  




சுறா , வேட்டைக்காரன் மாதிரி "காவியங்கள்" கூட நடிங்க பாஸ்..

ஆனா தலைவா மாதிரியான "சமூகப்படங்கள்" வேணாம்..

ரொம்ப வலிக்குது. 



இதுல அமலா பாலுக்கு வேற யூனிபார்ம் போட்டு 

விட்டு வெறுப்பேத்துறானுங்க.. 


ஒரு உயிர் போயிடுச்சி..கருத்து சொல்லாம இருக்கலாமுன்னு 

இருந்தா விட மாட்டானுங்க போல.. 



எத்தனையோ மொக்கை படங்கள் பார்த்துட்டு நடைபிணமா 

வாழுற மக்களை நினைத்து பாருங்க பா..



படம் தமிழ்நாட்டுல ரிலீஸ் ஆனா கண்டிப்பா அரை மணி நேர 

படம் கட் ஆகும்..இல்லைனா நிறைய இடங்களில் 

வசனக்கட்டு உண்டு..


தே போல Y.G மகேந்திரன் அப்புறம் பாஸ் என்கிற பாஸ்கரன் 

படத்தில் ஆர்யா அண்ணனா வருவாரே அவங்க வீட்டுக்கு 

எல்லாம் கல்லடி கன்பார்ம். என்னா பில்டப்பு



விஜய் வீடை கோயிலாவும் அண்ணனை தெய்வம்னு சொல்லி 

ஒரு வசனம். காதுகளை இறுக்கமா மூடிக்கிட்டேன்.. 

அப்புறம் எப்படிடா படம் ரிலீஸ் ஆகும்


3 மணி நேரம் தவமாய் தவமிருந்த சேரனே 2 மணி நேரமா 
 
சென்னையில் ஒரு நாள்னு வந்துட்டாரு..இவனுங்க 3 மணி 

நேரம் மொக்கை போடுறானுங்க.



ப்ளாக் பஸ்டர் ஆகும்னு பார்த்தா கடைசியில 

பிளாஸ்டிக் பக்கெட் ஆயிடுச்சே..



தலைவா  படத்தில ஒரே ஆறுதல் டூயட் சாங் இல்ல.

அதனால தலையில கலர்கலரா நூடுல்ஸ் எல்லாம் 

கவுத்துட்டு எல்லாம் வரல..



மொத்தத்தில மாஸ் ஹீரோ னு சொல்லிட்டு இருந்த விஜயை 

தமாஸ் ஹீரோவா ஆக்கி விட்டுஇருக்கானுங்க..

Thursday, August 8, 2013

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 63



முரண்டு பிடிக்கும் பெண்களையும்,மிரண்டு நிற்கும் பெண்களையும் 

சமாளிப்பது சுலபம்..கண்களில் நீருடன் மருண்டு நிற்கும் 

பெண்களை சமாளிப்பதே கடினம்..
 
எத்தனை கவனமாய் இருப்பினும் காதல் கொண்ட மனதும்,

கள்ளம் செய்த மனதும் கண்களில் தெரிந்து விடுகிறது..

 

சம்சாரியா ஆகப்போறேன்னு சொன்னா பசங்க 

பயப்படுறாங்க..சாமியாரா ஆகப்போறேன்னு சொன்னா 

பொண்ணுங்க பயப்படுறாங்க..

 


ஆண்களால் காயப்பட்ட பெண்களைக் காட்டிலும்,

பெண்களால் காயப்பட்ட ஆண்களை தேற்றுவதே மிகக் கடினம்..
 


ஆனந்தத்தில் வரும் கண்ணீர் அற்புதமானது..

விரக்தியில் தோன்றும் சிரிப்பு வேதனையானது..
 

வார்த்தைகளில் வசமாக்க முடியாத கவிதைகளில் ஒன்று , 

குழந்தைகளின் முத்தம்..

 


அவள் மேல் உள்ள சந்தேகத்தில் குடிப்பவனை விட , 

தன் பலகீனங்களைக் கண்டு பயந்து குடிப்பவனே அதிகம்..
 


தன்னுடல் பற்றி அறிந்ததை விடவும் பெண்ணுடல் பற்றி 

அறிந்தவன் பிரகாசிக்கிறான் படுக்கையில்..ஹ்ம்ம்..