Wednesday, May 30, 2012

மாத்தி யோசி .. 63


எதிர்ப்பைக் காட்ட நம்மில் பெரும்பாலானோர் 

பயன்படுத்துவது மவுனத்தை மட்டுமே..

# அது எல்லா நேரங்களிலும் பயன்படாதுனு புரியுறது இல்லை...ஒரு பொண்ணு எவ்வளவு சீக்கிரம் நம்ம மேல 

கோபப்படுறாளோ அவ்வளவு சீக்கிரம் நம்மகிட்ட 

நெருங்கி வருவான்னு நம்புங்க..#கான்பிடன்ஸ் பாஸ்..

எல்லாரும் எல்லாருக்கும் நல்லவங்களா இருக்க 

முடியாதுன்னு சொன்னா ஒத்துக்க மாட்றானுங்க..

#சாத்தானுக்கு கடவுளே எதிரி தானே..

திருடனுக்கு போலீஸ் வில்லன் தானே..AN IDEA CHANGE YOUR LIFE னு சொன்னதுக்கு பதிலா

 WIFE னு சொல்லி இருந்தா நம்ம ஊருல 

மார்க்கெட் பிடிச்சி இருக்கலாம்..#முட்டாப்பசங்க..


எல்லாமே விதிப்படி தான் நடக்குதுனா அப்புறம் ஏன் 

கடவுள் கிட்ட வேண்டிக்கணும்..? அவர் ஏதாவது 

சாய்ஸ் வச்சி இருப்பாருன்னா..?

எனக்கு குழந்தைகள்னா ரொம்ப பிடிக்கும்..அதுக்கு 

தான் பொண்ணுங்க பின்னாடி சுத்துறேன்..

யாருமே உதவி செய்ய மாட்றாங்க..

# புரிஞ்சிக்குங்க பொண்ணுங்களா..
கணக்குல வரும் ப்ராப்ளம்களுக்கே தீர்வு இருக்கும்போது,

வாழ்க்கையில இருக்காதா…

#தேடுவோம்..நல்லா தேடுவோம்..வாழ்க்கையில கவலைகள் இல்லைனா நம்ம 

மனவலிமை என்னனு நமக்கு தெரியாமலேயே போயிடுது…

# நன்றி ஹனி..

என்னைக் காதலிச்ச பெண்களை மறந்திட முடியுது..

ஆனா நான் காதலிச்ச பெண்களை வெறுக்க கூட முடியல..

# என்னா பிகர்ஸ்..ஹ்ம்ம்..


சூடுபட்ட தங்கம் நகை...அடிபட்ட கம்பி ஒயர்...

அழுத்ததுக்குள்ளான கல் வைரம்...சூடுபட்டு,அடிபட்டு,

அழுத்தப்பட்ட ஆண் புருஷன்...

# PROUD TO BE A BACHELOR..அதான் எவளும் 

கிடைக்க மாட்றாளே..

Friday, May 18, 2012

ஏன் இப்படி ... 63


நம் எல்லாக்கேள்விகளுக்கும் பெண்களிடம் பதிலிருக்கு..

ஆனா அவர்களின் எந்த கேள்விக்கும் அவர்களை 

திருப்திபடுத்தும் பதில் நம்மிடம் இல்லை.
பசங்க கட்டம் கட்டுறதுக்கும்,கடலை போடுறதுக்கும்,

கரெக்ட் பண்ணுறதுக்கும்,காதலிக்கிறதுக்கும்,கல்யாணம்

பண்ணுவதற்கும் பல பொண்ணுங்களுக்கு வித்தியாசமே 

தெரிய மாட்டுது..

எல்லாரும் வேலை செய்யுற ஆபிஸ்லயும்,எல்லாரும் 

வெட்டியா இருக்குற ஆபிஸ்லயும் இருக்குறது 

ரொம்ப கஷ்டம்..
வாய் வலிக்காம ஒருத்தன் பேசுறான்..எனக்கு தான் 

தலைவலி வந்துடுச்சு..# இவனை எல்லாம் 

பேசிக்கிட்டே ______ பெத்தாங்களா..?காதலிப்பதாலே உடம்பு அடிக்கடி சிலிர்க்குதுன்னு

சொன்னான்..காதலிக்காம கரெண்ட்டை தொடு மச்சி..

இன்னும் சிலிர்க்கும்னேன்..சைலென்ட் ஆயிட்டான்..

#விதவிதமா டார்ச்சர் பண்ணுறானுங்களே..துக்கத்தை மறைத்து வைப்பதைக் காட்டிலும்,மகிழ்ச்சியை 

மறைத்து வைப்பதே மிகக்கொடுமை..

#கரெக்ட்டா போட்டுக் கொடுத்துடுறானுங்க..தேவைகளில் திருப்தி அடைபவர்களை விட..மனதை 

சமாதானப்படுத்திக் கொள்பவர்களே அதிகம்..

#வேற என்ன பண்ணி தொலையுறது..

அதான் கிடைக்கலையே..


காதலிக்காம இருக்குறதை விட..காதலிக்கிறவன் கூட 

இருப்பதே மாபெரும் தவறு..#கொன்னு எடுக்குறானுங்க..பேச்சுலர்ஸ்னாலே பொறுப்பில்லாதவங்கனு முடிவு

பண்ணிடுறாங்க.ஊருக்குள்ள காவாலித்தனம் பண்ற 

பெரும்பாலானோர் கல்யாணமானவங்கதான்னு புரியமாட்டுது
நாக்குல சனி இருக்குற நாலு பேரோட இருக்குறதை விட,

தனியாவே இருந்துடலாம் போல..# பைத்தியம் பிடிச்ச 

மொண்ணை நாயிங்க..

Wednesday, May 16, 2012

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 59

அண்ணான்னு கூப்பிடுற அழகான பிகர்களை விட,

செருப்பை தூக்கிக் காட்டும் சுமார் மூஞ்சிகளே பரவாயில்லை..


பூ எதுவா இருந்தா என்ன..நமக்கு வாசனை தான் முக்கியம்..

#பிகர்களை சூப்பர்,சுமார்,டொக்குன்னு வகை பிரிச்சா 

சைட் அடிக்க முடியும்…?
காதலிக்கிறவன் கண்ணுக்கு கண்டதெல்லாம் கவிதை..
கல்யாணம் ஆனவன் கண்ணுக்கு காதலிக்கிறது எல்லாம் கழுதை..லவ் மேரேஜ் பண்ணுறவன் விதியேனு புலம்பிக்கிட்டு

வாழுறான்..அரேஞ்டு மேரேஜ் பண்ணுறவன் சதியேனு 

நொந்துக்கிட்டு வாழுறான்..பர்தாவுக்கும்,குர்தாவுக்கும் வித்தியாசம்

தெரியாதவனுக்கு…வோட்காவுக்கும்,ஒயினுக்கும் 

வித்தியாசம் தெரியவா போகுது..?
தவறென்று தெரிந்தும், எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு

வாழ்ந்து..பாரில் பீர் கூலிங் இல்லை என்றதும் 

கோபம் வந்தால்..வா..நீயும் என் நண்பனே..

கூரில்லாத ஆணியாலும்,பீரில்லாத சனியாலும் 

எந்த பயனும் இல்ல..


என்ன சாப்பிடலாம்னு ப்ளான் பண்ணுறதை விட..

எந்த சரக்கடிக்கலாம்னு ப்ளான் பண்ணுவதே 

சனிக்கிழமையின் சிறப்பு... 
வாழ்க்கையை ரசிச்சு ரசிச்சு வாழ வைக்கிறதும் 

பொண்ணுங்க தான்..வெறுக்க வைக்கிறதும் 

பொண்ணுங்க தான்..#ஹனி பெயர்ச்சி..

Saturday, May 12, 2012

மாத்தி யோசி ..62
மாற்றான் தோட்டத்து மல்லிகளைகளை விட,

மாக்கான் தோட்டத்து மல்லிகைகளே களவாடப்படுகின்றன..

#கொழுந்தியாளைப் பாதுகாக்குறேன்னு 

பொண்டாட்டியைப் பறிகொடுத்துடாதீங்க பசங்களா..
சில பெண்கள் தமிழ் பேசி கேட்கும்போது தேன்ல 

போட்ட ஐஸ் கட்டிகளை போல ஜில்லுனு 

தித்திப்பா இருக்கு..#யம்மா..யம்மா..யம்மா…ஹ்ம்ம்….
ஜட்டி போட்டுக்கிட்டு லுங்கி கட்டுறவங்களும்,

வெயில் நேரத்தில் வெந்நீர் குடிக்கிறவங்களும் 

ஒண்ணு..முட்டாப்பசங்க..கிராமத்தில பச்சை பெல்ட் போட்டவன் தான் பெரிய 

மனுஷன்.சிட்டியில ஜட்டி பட்டி வெளிய 

தெரிஞ்சா தான் அவன் யூத்..
சட்டை,பேன்ட் கிழிஞ்சிருந்தா கூட வெளிய 

காயப்போடலாம்..ஆனா ஜட்டி..?


பிராண்டட் சட்டை,பேன்ட் வாங்காதவன் கூட ஜட்டியில 

மட்டும் நல்ல பிராண்டா தான் பார்த்து வாங்குவான்..

#உடும்பு மார்க் ஜட்டிகள்..கண்டதை கவ்விடுச்சுனா..?


காசு , கரண்ட்,கன்னி,தண்ணி இது எல்லாம் இல்லாதப்போ 

தான் அதோட அருமை தெரியுது..பக்குவமா 

கையாளணும் பசங்களா..பொண்ணுங்க கோபப்பட பல நேரங்களில் நாமே 

காரணமா இருக்கோம்..அவங்க மேல தப்பு இருந்தாலே 

நமக்கு கோபம் வராது..நம்ம மேல தப்பு இருக்கும்போது 

கோபம் வரவா போகுது..
சனிக்கிழமை சாயங்காலம் வானம் கூட "மப்பா" 

தான் இருக்கு..இயற்கையோடு சேர்ந்து வாழணும்..

அதனால மக்களே..சியர்ஸ்..


நேற்று சில பேரை ஏமாத்தினப்ப  கிடைக்காத சந்தோஷம்,

பக்கத்து வீட்டு குழந்தைகள்கிட்ட ஏமாந்தப்போ கிடைச்சது..

#அப்பா ஆசை வந்துடுச்சோ..

Thursday, May 10, 2012

ஏன் இப்படி ... 62வார்த்தைகளாலும்,செயல்களாலும் காயப்படுத்துபவர்கள் 

மத்தியில் பார்வையால் காயப்படுத்த பெண்களால் 

மட்டுமே முடியும்..# வேடிக்கைப் பார்த்தது ஒரு குத்தமா..? 

என்னா முறைப்பு…!!


 
இளையராஜாவையோ,ரஹ்மானையோ,சச்சினையோ 

தப்பா பேசினா கோபம்  வரும் நமக்கு..ஈழத் 

தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு காட்ட 

எப்படி நேரமிருக்கும்…?இந்த NH 47 ல அரை மணி நேரத்துக்கு ஒரு 

ஆம்புலன்ஸ் போயிக்கிட்டே இருக்கு..

கடவுளே.. BE SAFE ON ROADS மக்களே..
காரணங்கள் தேவை இல்லை,ரிசல்ட் தான் வேணும்னு 

நம்மகிட்ட சொல்றவன்..அவனுக்கு மேல இருக்குறவன் 

கேட்டா அவனும் நாம சொல்ற காரணங்களையே 

தான் சொல்றான்..#அப்புறம் ஏன்டா இப்படி..


எந்த ஒரு பழக்கத்தையும் சில நாட்கள் விட்டுட்டு மறுபடியும் 

தொடர்ந்தா கஷ்டமா இருக்கும்..ஆனா காதலிக்கிறதை 

மட்டும் எப்போ பண்ணாலும் நல்லாவே இருக்குது…
நம்ம ஊருல எப்போ கரண்ட் வரும்னு கூட 

கண்டுபிடிச்சிடலாம் போல..ஆனா பொண்ணுங்க 

மேல காதல் எப்போ வருதுனே தெரிய மாட்டுது..

# கண்ணை சிமிட்டிக்கிட்டே இருக்கா..

எனக்கு காதல் வந்துடுச்சு..
எல்லாத்துக்கும் சரின்னு சொல்றான் ஒருத்தன்..

எடுத்தவுடனே முடியாதுன்னு சொல்றன் ஒருத்தன்..

இவனுங்க மத்தியில நான் எப்படி பொழப்பை நடத்துறது…  

எல்லாரும் நீ என்னை காதலிக்கிற வரைக் 

காத்திருப்பேன் னு சொல்வாங்க..இவ என்னடான்னா 

நீ என்னைக் காதலிக்காத வரைக்கும் 

காத்திருப்பேன்னு சொல்றா..#ஞே..உனக்காக மாறிய என்னை,இனி யாருக்காகவும் 

மாற்றிக்கொள்வதாய் இல்லை..#கடைசியில 

எனக்கும் காதல் தோல்வியா..அட வாத்சாயனா..

இதென்ன சோதனை..


நம்மோட குறைகளை கண்டு விலகினா கூட 

பொறுத்துக்கலாம்..ஆனா அடுத்தவங்களோட ஒப்பிட்டு 

பார்த்து நீயும் அப்படி தான் இருப்பனு சொல்லி 

விலகுறதை தான் தாங்கிக்க முடியல..

Sunday, May 6, 2012

சிறகுகள் இல்லா தேவதை..
ஒப்பிட முடியாத ஒரு சில விஷயங்களில் ஒன்று 

தான் நீ..# ஐ லவ் யூ ஹனி..


உன்னை மறக்க முடியாமல் நான் தவிப்பதை 

எண்ணிக் கவலை கொள்கிறாய் நீ..நீ நிம்மதியாய் இருக்க ,

உன்னை மறந்தது போல் நடிக்கிறேன் நான்..# ஹனி பெயர்ச்சி..


என் மகிழ்ச்சிக்காக சிறிது நேரமேனும் சந்திக்க 

சம்மதிக்கிறாய் நீ.. நொடிப்பொழுதுகளில் என் மனவாட்டம் 

அறியும் உன் கண்களைக் கண்டே பயந்து 

தவிர்க்கிறேன் நான்..#போ..நீ..போ..முடியல..பம்ப்ளிமாஸ்..
இறப்பின்றி வாழ அமிர்தம் வேண்டி அத்தனை 

கஷ்டப்பட்டார்களாம் தேவர்கள் ..உன் இதழ் முத்தம் 

வேண்டி நான் கஷ்டப்பட்டதை விடவா..?


பிறந்த நாள் பரிசாக முத்தம் தருகிறேன் என்றாய்..

உன் ஒவ்வொரு முத்தம் பெற்ற பிறகும் புதிதாய் 

பிறப்பேன் என்றேன் நான்..உடனே வெட்கப்பட்ட  

உன்னைக்கண்டு செத்துக்கிடக்கிறேன்..ம்..சீக்கிரம் உயிர் கொடு..


என் அத்தனை எதிர்பார்ப்புகளையும் அடித்து நொறுக்கி 

விடுகிறது உன் ஒரு அலட்சியப்பார்வை..


உன் ஒவ்வொரு அசைவுகளையும் அணு அணுவாய் 

ரசித்துக் காதலித்தவன்,எப்படி ஹனி உன் மேல் காதல் 

இல்லாதது போல உன்னிடம் நடிக்க முடியும்..

#புரிஞ்சிக்க மாட்றியேடி பம்ப்ளிமாஸ்..


உன்னிடம் நான் காதலை எதிர்பார்த்துக் 

காத்திருப்பதன் காரணம்,அத்தனை நம்பிக்கையை 

நீ தந்தது தான்..#நம்பிக்கை துரோகம் தப்புன்னு சொல்வாங்க..

உன்னைப்பற்றி சிந்திக்கும் ஒவ்வொரு முறையும் 

என் மனம் உன்னை சந்திக்கவே ஏங்குகிறது..

Saturday, May 5, 2012

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 58
சீன் போடாத பிகர்களும் இல்ல..

சைட் அடிக்காத பசங்களும் இல்ல..


ஆன்ட்டிகள் எனும் அற்புதங்களை நோக்கி 

செல்லும் போது அவமானங்கள் எனும் சிறு கற்கள் 

வரத்தான் செய்யும்..தொடச்சு போட்டு 

போயிக்கிட்டே இருங்க..

#இதுக்கெல்லாம் பயந்தா தொழில் பண்ண முடியுமா..


அனாசின் போட்டும் போகாத தலை வலி கூட

 RC அடிச்சா போயிடுது..# RC னா ரிலாக்சிங் சிரப் பா..

ஆன்ட்டிகள் அவமானப்படுத்தினால் அதிர்ச்சி அடையாதீர்கள்..

அவள் அரவணைக்கும் காலம் மிக அருகில் என்று 

ஆறுதல் அடையுங்கள்..# ஹர ஓ சாம்பா..போதை ஆவது சாணியை மிதிப்பது போல..

தண்ணி பட்டா போயிடும்..ஆனா பொண்ணுங்களைக் 

காதலிக்கிறது ஆணி மிதிப்பது போல..

காயம் ஆறினாலும் தழும்பு போறதில்லை..
பெண்களெல்லாம் பேயென்று போதையில் புலம்புவர் 

அரவணைக்கும் ஆன்ட்டி கிடைக்காதவர்..
ஆப்பிளைக் கடிக்கிறது சுலபம்..ஆனா ஆன்ட்டியை 

மடிக்கிறது கொஞ்சம் கஷ்டம்...#ஹர ஓ சாம்பா..நான் என்ற கர்வமும்,எனக்கு என்ற சுயநலமும் அழிவது 

துக்க வீடுகளில் மட்டுமே..# நேற்று நேர்ல  

பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்..மதுப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது.. 

மாதுப்பழக்கம் மன நலத்திற்கு தீங்கானது..#ஹர ஓ சாம்பா..ஆபிஸ்ல எத்தனை டென்ஷன்,கவலைகள் இருந்தாலும் 

வெளியில வந்து பெண்கள் கூட்டத்தை பார்த்தாலே 

மனசு லேசாகி ஜில்லுனு ஆயிடுது..#நன்றி தேவதைகளே..

Friday, May 4, 2012

தேவதை ஸ்த்ரீ
உன் காதலை சுவாசித்தே வாழ்கிறேன் நான் என்றேன்..

நீ வாழவே நான் சுவாசிக்கிறேன் என்றாய் நீ..

தேவதை ஸ்த்ரீயடி நீ..


கரிமிலவாயுக்கொண்டு உயிர்க்காற்றைத் தரும் 

மரங்களை போல..என் சோகங்களைக் கொண்டு 

மகிழ்ச்சியைத் தரும் தேவதை ஸ்த்ரியடி நீ..

நீ பூசும் ஒவ்வொரு வாசனைத் திரவியமும் உன் 

மீது பட்டபின்பு தன் சுயம் இழந்து கர்வம் தொலைக்கின்றன..
உன்னை வியப்படைய செய்யவே புதுப்புது தகவல்களை 

தேடி அலைகிறேன் நான்..ஒவ்வொரு முறையும் 

வித விதமான முகபாவனைகளில் மூழ்கடிக்கிறாய் நீ..

காதலித்ததாக வேண்டுமென்ற கட்டாயம் இருப்பின் 

எனக்கு ஒரு பெண் போதும்..ஆனால் நான் வாழ நீ வேண்டும்.


நீரைப்போலவே நீயும்..என் மனநிலைக்கு ஏற்றவாறு 

ஒவ்வொரு முறையும் மாறி என்னை ஏந்திக்கொள்கிறாய்..என் மீதான உன் காதலை வெளிக்கொணர எனக்கிருக்கும் 

ஒரே அஸ்திரம்..நீ யார் எனக்கு எனக் கேட்பதே..

#பேயாட்டம் ஆடிட்டா..
உன் திருப்திக்காக பொய்யாய் நடிக்கிறேன்..ஆனால் 

சில கணங்களிலேயே உண்மையை உளற வைத்து 

விடுகிறாய்..#எனக்கு இன்னும் பயிற்சி வேண்டுமோ..?


ரோஜாவும்,மல்லிகையும் தங்கள் வாசனைக் 

குறித்து போட்டியிட,புன்னகையுடன் அனுப்பிவைத்தேன்

 உன்னிடம் ..நீ சூடி தந்த பின்பு மவுனமாய் 

இருக்கின்றன இரண்டும்.
உன் ஒவ்வொரு வார்த்தைகளையும் காற்றை விட வேகமாய்

கிரகிக்கும் எனக்கு..நீ விடைபெற எத்தனிக்கும்போது 

உதிர்க்கும் அப்புறம் பார்க்கலாம் / பேசலாம் மட்டும் 

கேட்பதே இல்லை..

Thursday, May 3, 2012

ஏன் இப்படி ... 61
எக்ஸாம்ல வெறும் பேப்பரை வச்சிக்கிட்டு 

இருக்குறவன்கிட்ட இன்னொருத்தன் வந்து எனக்கு 

பேப்பர் காட்டுடானு கேட்டா பையன் ஒரு ரியாக்ஷன் 

கொடுப்பான் பாருங்க..அதையே தான் நானும் 

கொடுக்குறேன் என் கிட்ட வந்து ஏன் மச்சி..

நீ யாரையுமே காதலிக்க மாட்றேனு கேட்குறவனுங்க கிட்ட  

முடிவெட்ட சலூனுக்கு போகாம சில பேரு சிற்பிக்கிட்ட 

போவானுங்க போல..என்னமா செதுக்கி இருக்கான்..

BSNL புதுசா ஒரு டேப்லட் அறிமுகப்படுத்தி

இருக்காங்களாம்.தெரியுமாடானு கேட்டா.. அது 

என்ன டேப்லட் மச்சி..பன்றிக்க்காயச்சலுக்கு 

கவர்ன்மென்ட் கொடுக்குதான்னு கேட்குறான் ஒருத்தன்.

நோய் வந்துடக்கூடாதுன்னு முன் எச்சரிக்கையா இருக்குறது 

தப்பு இல்ல..அதுக்காக இன்னும் கண்டே பிடிக்காத 

நோய் வந்துடுமோன்னு கவலைப்பட்டா காண்டா 

இருக்குமா இல்லையா..?

#பாஸ் கேட்குற கேள்வி அப்படி தான் இருக்கு..
கழிசடைகள்கிட்ட வேலையைக் கொடுத்துட்டு ரிசல்ட் 

வரலைன்னு புலம்புறானுங்க புண்ணாக்குங்க..

# வேலி ஓரம் ஒதுங்குறவனைக் கூட்டிட்டு போயி 

வெஸ்டர்ன் டாய்லெட்ல விட்டா எப்படி வரும்
செய்வதெல்லாம் சூனியக்காரன் வேலை..ஆனா முகத்தை 

மட்டும் சுட்டி விகடன்ல வர்ற குழந்தை போல வச்சி

இருக்கானுங்க..#உலகமகா நடிப்புடா சாமி..
நம்மோட கோபத்தை புரிஞ்சிக்காம சண்டை போடும் பெண்கள்..

அவங்க கோபத்தை மட்டும் நாம புரிஞ்சிக்கணும்னு 

எதிர்பார்க்கிறாங்க..# அது தெரியாமத் தானே எல்லா 

ஆண்களும் முழிக்கிறோம்..
அடிச்சாக்கூடா தாங்கிக்கலாம் போல..ஆனா யாராவது 

அட்வைஸ் பண்ணாலே அழுகையா வருது..

#என்னை விட்டுடுங்கடா டேய்..மயக்கமா இருக்கு..
நம்ம மக்களின் அனைத்து கவலைகளுக்கும் ஒரே மருந்து சரக்கு..

ஆனா அந்த மருந்திலும் இப்போ ஏகப்பட்ட கலப்படம்..

#விடிய விடிய ஒரு புல் அடிச்சும் சப்புன்னு இருக்கு..


காதல் எப்போ வரும்னு தான் இத்தனை நாள் காத்துக்கிட்டு

இருந்தேன்..இப்போவெல்லாம் கரண்ட் எப்போ வரும்னு 

காத்துக்கிட்டு இருக்கேன்..

# பொண்ணுங்க இல்லைனாலும் பரவாயில்லை..

புழுக்கம் இல்லாம இருக்கணுமே..

Wednesday, May 2, 2012

காதல் கள்ளி

உன்னுடன் பேச காரணங்களைத் தேடியே களைத்து 

போகிறேன் நான்..ஒவ்வொரு முறையும் சிரித்து 

பேசியே பொய்க்காரணங்களைத் தேட ஊக்கமளிக்கிறாய் நீ..என் அத்தனை பொய்களையும் சுலபமாக கண்டுபிடித்துவிட 

முடிகிறது உன்னால்..என் உண்மையானக் காதலை மட்டும் 

நீ உணராமல் போனது ஏனடி..?


என்னுள் கலந்த உன்னை பிரிக்க நினைப்பது கண்களில் 

இருந்து பார்வையைப் பறிப்பது போல..நீ இன்றி நான் 

ஒன்றுமில்லை ஹனி..முத்தை சுமப்பதினால் சிப்பிக்கு பெருமை போல..

என்னுள் நீ வந்த பிறகே எனக்கு மரியாதை..

அழகான உவமைகள் நிறைந்தது தமிழ் மொழி 

மட்டும் தானாம்..உன்னுடன் ஒப்பிட முயன்றேன்..

ஒன்று கூட தேற வில்லை..பனிப் பாறையாய்  இருந்த என்னை,உன் கண்களின் 

வெளிச்சம் கொண்டு உருக வைத்த தேவதை ஸ்த்ரியடி நீ..


நீ இன்றி நான் தனிமையில் வாடுகிறேன்..ஆனால் அந்த 

தனிமையோ எப்போதும் இணை பிரியாமல் என்னுடன்..

# என்னடா நடக்குது இங்க..என் கூட இருந்தவ எங்க..என் மீதான உந்தன் காதல் சூரிய வெளிச்சம் போல..

சில நேரங்களில் சுகமாக உன் கூடலில்..சில நேரங்களில் 

சூடாக உன் ஊடலில்..

காதல் கோடையில் காமத்தாகம் கொண்டு தவிக்கிறேன்..

உன் இதழில் ஊறும் எச்சில் அமுதம் தந்து உயிர் கொடு ஹனி..நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென நினைப்பது என் 

காதல்..நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென 

நினைப்பது உன் காதல்..தேவதை ஸ்த்ரீயடி நீ..

Tuesday, May 1, 2012

ஏன் இப்படி ... 60

பொண்டாட்டியை பக்கத்தில வச்சிக்கிட்டு போன்லயே 

பேசிக்கிட்டு இருக்கானுங்க..இவனெல்லாம் ஒரு 

பொண்ணைக் கல்யாணம் பண்ணியத்துக்கு பதிலா 

போனையே கல்யாணம் பண்ணி இருக்கலாம்..

#நாங்க எத்தனை பேரு சும்மா இருக்கோம்னு 

தெரியுமாடா உங்களுக்கு..ச்ச..திங்கத் தெரியாதவனுக்கு 

தான் பன்னு கிடைக்குது..

எல்லா பொருளும் தயாரிச்சு சில வாரங்களுக்கு 

பிறகே கிடைக்குது..டாஸ்மாக்ல எந்த சரக்கை 

வாங்கினாலும் அதிகபட்சம் பத்து நாளைக்குள்ள 

தயாரிச்சதாவே இருக்கு..மிகப்பெரிய நுகர்வோர் சந்தை
எல்லாருக்கும் அவங்கவங்க லெவலுக்கு சில 

பிரச்சினைகள் இருக்கு..ஆனா பல பேருக்கு அது 

என்னனே தெரிய மாட்டுது..எல்லாத்துக்கும் பயப்படுறாங்க..
பிரச்சினை இது தான்னு சொன்னா தீர்வு தேடலாம்..பிரச்சினை 

என்னனே தெரியாது..ஆனா நீதான் அதுக்கு தீர்வு 

சொல்லணும்னா நான் என்ன பண்ணுவேன்..

# விதவிதமா டார்ச்சர் பண்ணுறானுங்களே..


பொண்ணுங்க அழும்போதும்,பசங்க புலம்பும்போதும் 

கூட இருப்பது தான் மிகக்கொடுமை..#முடியலடா சாமி..


மரணமொக்கைப் போட்டாலும் முகம் மாறாம சிரிச்சுக்கிட்டே 

இருக்க எப்படி தான் முடியுதோ..#சொம்படிக்கிறதுல 

சாம்பியன்ஷிப் வச்சா நம்ம மக்கள் ஈஸியா ஜெயிச்சுடுவாங்க..
பிரச்சினையைக் கூட சமாளிச்சுடலாம்..ஆனா 

அதுக்கு ஒவ்வொருத்தனும் கொடுக்குற அட்வைஸ்களை 

நினைத்தால் தான் டர் ஆகுது..#சம்மன் இல்லாம 

ஆஜர் ஆகி அழ வைக்கிறானுங்க..
சுவிசேஷக் கூட்டங்களில் ஸ்தோத்திரம் சொல்றது 

போலவே வணக்கம் சொல்றானுங்க..ஏன்டா ஏன்..

காலையிலேயே பயமுறுத்துறானுங்க .


போன் வந்த புதுசுல நேரில் பேசுறது குறைந்தது..

இப்போ பேஸ்புக் வந்ததுக்கு அப்புறம் போன் ல 

பேசுறது குறைந்து போகுது..

நீண்ட நாள் கழித்து என் நண்பர்கள் எவன் போன் 

பண்ணினாலும் அவனவன் கல்யாணத்தைப் பத்தியே 

பேசுறானுங்க..# கல்யாண வயசு வந்துடுச்சோ..ஹ்ம்ம்..

எனக்கு ஒண்ணு கிடைக்க மாட்டுதே..