Wednesday, November 30, 2011

மரித்து போகும் என் கவிதைகள்



யாரைப்பற்றியும் கவலை இன்றி எந்த இடத்திலும் புகைப்பிடிக்கும் 

என் விரல்கள்..ஏனோ குழந்தைகளை கண்டதும் உடனே 

மறைந்து கொள்கின்றன..




என்னை அதிகமாக மகிழ வைக்கவும்,நெகிழ வைக்கவும் 

உன்னால் மட்டுமே முடிகிறது..

# தேவதை ஸ்திரீ..




என்னிடம் சிறந்தது எது என்பது என்னை 

விட உனக்கே தெரிகிறது..  


உன் புடைவைத்தலைப்பால் நீ என் தலை 
துவட்டவேண்டும் என்பதாலேயே நான் தினமும் குடை 
எடுத்து போக மற(று)க்கிறேன்..

யார் யாரோ சிலாகிக்கும் என் கவிதைகள் உன் கவனம் 
பெற முடியாமல் போகையில் மரித்து போகின்றன..
# மனுஷன் பீல் பண்ணி சொன்னா மொக்கை பண்றாளே

என்னை சிலிர்க்க வைக்க சில்லென்ற பனி தேவையில்லை..
உன் சிரிப்பும் பார்வையும் போதும்..
 
அழகிய பாவை நீ பக்கம் இருக்க செடியில் பூத்திருக்கும் 
பூவை ரசிப்பதற்கு நானென்ன ஆக்கங் கெட்ட கூவையா..?
#நீ நாசமா போவ னு எக்கோ கேட்குதே..யாருப்பா அது..?
 
இப்போதெல்லாம் மற்றவர்களுடன் அதிகம் பேசாமல் 
வார்த்தைகளை சேமிக்கிறேன்..உன்னுடன் உரையாடும்போது 
வார்த்தைப் பஞ்சம் வராமலிருக்க..

உன்னை விட்டு விலக நினைக்கும்
ஒவ்வொரு முறையும் நீ முன்பைக்காட்டிலும் 
என்னை முழுதாய் ஆட்கொள்கிறாய்..
 

உன்னைப்பார்த்த நாள் முதல் பற்றி எரிகிறேன் நான்.. 
என்னைப் "பற்றி " "அணைத்து" விடேன்..ப்ளீஸ்..

Tuesday, November 29, 2011

ஏன் இப்படி ...51




நாளைக்கு நல்லவனா மாறுவது அப்புறம்..அதுக்கு 

முன்னால இன்னைக்கு செய்யுறதுக்கு அனுபவிக்கனும்.

# ஆளாளுக்கு புலம்பாதீங்கப்பா..



பொண்ணுங்க விஷயத்தில மட்டும் எனக்கு தப்பு,சரி,நியாயம்,

அநியாயம் எல்லாமே ஒண்ணுபோலவே தோணுது..

#நான் என்னைக்குத் தான் மாறுவேனோ..




நான் வீட்டில இருந்தாலும் ஆபிஸ்ல இருந்தாலும் 

ஒண்ணு தான்..வீட்டில இருக்கும்போது எப்போதுமே 

பெண்கள் நினைவா இருக்கும்..ஆபிஸ்ல இருந்தா 

அப்போ அப்போ வேலை ஞாபகம் கொஞ்சம் வரும்..



என்னைக் காதலனாக ஏற்றுக்கொள்ள நீ தயாராக இல்லை..

உன்னை வெறும் தோழியாக ஏற்றுக்கொள்ள நான் 

தயாராக இல்லை..விலகி செல்லவும் விருப்பமில்லை..

#என்ன எழவுடா இது..



புரிஞ்சிக்காத பொண்ணை அவசரப்பட்டு காதலிச்சாலும்

இம்சை..புரிஞ்சிக்கிட்ட பொண்ணை காலதாமதமா 

காதலிச்சாலும் இம்சை..#ச்ச..என்ன வாழ்க்கை டா இது..





வர வர நம்ம மக்களுக்கு காதலிக்கிறதுக்கும்,கரெக்ட் 

பண்ணுறதுக்கும் வித்தியாசமே தெரிய மாட்டுது..

1 வருஷத்தில 4 லவ் பண்ணுறாங்க..

#முடியலைடா சாமி..










பொண்ணுங்க என்னை விரும்பியபோது எனக்கு 

காதலிக்கணும்னு எண்ணமே வரலை..இப்போ 

எல்லாருக்கும் கல்யாணம் முடிஞ்சிபோச்சி..எனக்கு 

இப்பதான் காதலிக்கணும்னு எண்ணம் வருது..

#என்னை எல்லாம் என்ன பண்ணலாம்..



அறிமுகமில்லாதவர்களிடம் இருக்கும் ஆரம்பத்தயக்கம் 

போலவே கடினமாக உள்ளது,பிரியமானவர்களின் நிரந்தர 

பிரிவுக்கு முன்னரான சந்திப்பும்..


சில பெண்கள் நம் வாழ்க்கையில் ஒருமுறை வந்து,

பின் வாழ்நாள் முழுதும் வராவிட்டாலும்..மனதை விட்டு நீங்க

மறுப்பது ஏனோ..?# வேற ஏதும் பிகர்கள் 

கிடைக்கலைன்னு அர்த்தமா..? 


எந்தப்புத்துல எந்த பாம்பு இருக்கோனு புலம்பி

தள்ளுறானுங்க..எல்லாப்பூவிலும் தேன் இருக்கும்னு 

ஏன்டா உங்களுக்கு தெரிய மாட்டுது

பச்சிலைப் புடுங்கிங்களா..?

Monday, November 28, 2011

ஹனி.. ப்ளீஸ்..




தகதகிக்கும் வெயில் இருந்தவனுக்கு தாகம் தீர்க்கும் 

மழையாய் வந்து உடனே மறைவது என்னடி நியாயம்..

# ஏதாவது பேசு ஹனி..பேசு..



தமிழ் தெரிந்த அத்தனை பேரும் எழுத முடிந்த 

ஒரே கவிதை உன் பெயர் மட்டுமே..



நீ மவுனமாய் இருந்தாலே நான் மரித்துப்போவேன்..

நீயே மரித்த பின்பு ..?




என் மது,புகைப்பழக்கத்தை குறைக்க நீ அத்தனை கடின 

வார்த்தைகளை பயன்படுத்தி இருக்க வேண்டாம்..

தினம் ஒரு முத்தம் தருகிறேன் என்றிருந்தால் போதும்..

அதை விட வேறென்ன போதை இருக்க முடியும்..?




தன்னிச்சையாய்  என் விரல்கள் உன்னை தொடர்பு கொள்ள

நினைத்தாலும்,உழைத்து களைத்து உறங்கத்துடிக்கும் 

உன் உடல்சோர்வே என் உணர்வுகளை உறுத்தி தடுக்கிறது..





பேசி காயப்படுத்தும் பெண்கள் மத்தியில் உன் மவுனம் 

மட்டுமே என் உயிரை உலுக்கி எடுக்கிறது..

ஏதாவது சொல்லுடி ஹனி ப்ளீஸ்..



எந்த பெண்ணிடமும் எல்லை மீறி பழகாத என்னை 

எல்லைகளற்ற ஏகாந்தத்திற்கு எடுத்து சென்றவள் நீ…

ஏமாற்றம் தராதே ஹனி..ப்ளீஸ்..



நிஜத்தில் நீ என்னை விட்டு விலகியே இருந்தாலும்,

நினைவுகளாய் என்னுள் நிறைந்து இருக்கிறாயடி ..

நிழற்படங்களை விடவும் நிஜத்திற்கே உயிர் உண்டு.. 

கருணை காட்டேண்டி ப்ளீஸ்..



உன்னை முத்தமிட்டு மோட்சம் பெற முயன்று ஒவ்வொரு 

முறையும் தோற்றுப்போகிறேன்..நான் மோட்சம் பெற 

தேவதை நீயே தடையிடலாமா..கொஞ்சம் யோசி..

வஞ்சனை இல்லாமல் என்னை நேசி ஹனி..



என்னிடம் ஏன்டா கோபப்பட மாட்ற  என்று

சிணுங்குகிறாய்..பைத்தியக்காரி..

உன் மீதான என் காதலை வெளிப்படுத்தவே எனக்கு 

நேரம் போதவில்லை..

இதில கோபம் வேறயா..?

Sunday, November 27, 2011

ஜோக்கூ....54





நேற்று அவள் பார்த்த பார்வைக்கு அர்த்தம் தெரியாமால் சென்று 

இன்று ஆபத்தில் மாட்டிக்கொண்டேன்..

#அங்கிளுக்கு ஆபிஸ் லீவுப்பா..




உன் கல்யாணத்திற்கு வந்து ஏமாற்றத்தினால் கண்களில் 

கண்ணீரோடு இருந்தவரை உணரவில்லை என் காதலை.

#கேசரி தீர்ந்து போயிடுச்சாம்ல.


என்னை ஆனந்தத்தில் ஆட வைத்ததும் நீ..

அடி வாங்கி ஓட வைத்ததும் நீ.. 

# அண்ணன் காரனுங்க இல்லாத பொண்ணுங்களா பாருங்க பசங்களா..

அடி பின்றானுங்க.




கண்களை மூடினேன்...கனவில் நீ...

கண்விழித்து பார்த்தேன்...ஹாஸ்பிட்டலில் நான்...

# சனியனே..எந்த பியூட்டி பார்லர் போயி தொலைஞ்ச..





உலகை சுற்ற வேண்டும் என்ற ஆசை எல்லாம் இல்லை..

உன்னை சுற்றவே எனக்கு நேரம் போதவில்லை..

#உடம்பை குறைடி பம்ப்ளிமாஸ்...

Saturday, November 26, 2011

இதயத்தின் சாவி





என் காயத்திற்கு காரணமான காதலும் நீ,

அதற்கு மருந்தும் நீ..




வலிகளும் வேதைனைகளும் நிரம்பிய என் இதயத்தின் 

சாவி நீ தானடி..நீ இன்றி அவைகளை வெளியே எறிய முடியாது..

#சீக்கிரம் வாடி ஹனி..




இப்போதெல்லாம் என் இதயத்துடிப்பு என்பது ஒரு நாளைக்கு

  15 முதல் 25 என்று ஆகிவிட்டது.. ஆம்..

உன் குறுஞ்செய்திகளினால் மட்டுமே அது துடிக்கிறது..



உன் இதயத்தில் இடம்பிடிக்க நான் என்றுமே முயன்றதில்லை..

அதை நான் திருடி வெகு நாட்கள் ஆகிவிட்டதே...



அடித்தாலும் அன்னையிடமே அடைக்கலம் புகும் 

குழந்தையைப் போல , நீ எத்தனைக் காயப்படுத்தினாலும் 

உன்னிடமே ஓடி வருகிறேன்..



சிப்பிக்குள் விழுந்து முத்தாய் மாற தவிக்கும் 

மழைத்துளியைப்போல , உனக்குள் நிறைந்து உறைந்து 

முக்தி பெறவே தவமிருக்கிறேன் நான்..

வரம் கொடு வானவில்லே..



பேசிய மணிகளை விட,பேசாமல் இருக்கும் 

நிமிடங்களே மிகவும் நீளமாய்த் தோணுதடி..



உன் ஓரவிழிப்பார்வையினால் பற்றி எரிகிறேன் நான்..

ஒரு தீக்குச்சியைப் போல..எரிந்து கொண்டே தான் இருப்பேன்..

நீ வந்து உன் உதடுகளால் என்னை அணைக்கும் வரை..



எல்லோரும் கவிதை எழுதிக் காதலிக்க,நான் மட்டும் 

கவிதையைக் காதலிக்கிறேன்..ஹ்ம்ம்..எனக்கான 

கவிதை எங்க இருக்கோ..

என்ன பண்ணிக்கிட்டு இருக்கோ..?



உன்னைக்காண காத்திருந்த நிமிடங்களை விட 

உன்னைப்பார்த்து கொண்டு இருக்கும் நிமிடங்கள் 

வேகமாய் கரையுதடி..

Friday, November 25, 2011

நீதிக்கதைகள்.. 14





படுக்கையில் பல்வேறு பெண்களின் உரையாடல்கள்..

வேலைக்காரி – சீக்கிரம்..உங்க மனைவி வந்துடப்போறாங்க..
 
பக்கத்து வீட்டு பெண் – ஐயோ..பொறுமையாங்க..

சத்தம் கேட்டு யாராவது வந்துடப்போறாங்க..

காதலி – இன்னும் ஒரு தடவை டா..

மனைவி – என்னங்க..பேன் ல எவ்வளவு தூசி பாருங்க..

அப்புறமா அதை ஒட்டடை அடிங்க..



நீதி – இதுல கூடவா  நான் சொல்லணும்..புரிஞ்சுக்குங்கப்பா..


ஒரு கணவனும் மனைவியும் 8 வயசு பையன் கிட்ட நாங்க 

உள்ளே புதையல் எடுக்குறோம் ( கோட் வேர்ட் )..

நீ பால்கனியில நின்னுகிட்டு தெருவில என்ன நடக்குதுன்னு 

சொல்லு னு சொன்னாங்களாம்.. அவனும் வெளியில் நின்னு 

சொல்ல ஆரம்பிச்சானாம்..

கீழ் வீட்டு ஆன்ட்டி காய்கறி வாங்குறாங்க,பக்கத்து வீட்டு தாத்தா 

வாக்கிங் போறாரு,எதிர் வீட்டு அங்கிளும் ஆன்ட்டியும் 

புதையல் எடுக்குறாங்க..

அப்பா - என்னடா சொல்ற..பப்ளிக்கா வா எடுக்குறாங்க.. 

பையன் - இல்லப்பா . ஆனா அவங்க பையனும் பால்கனி ல 

நின்னுகிட்டு என்னைப்போலவே எல்லாத்தையும் 

சொல்லிக்கிட்டு இருக்கான்..

நீதி – வெஷம்..வெஷம்..வெஷம்..


ஒரு உடம்பு முடியாத கணவனைக் கூட்டிக்கிட்டு அவன் 

மனைவி ஆஸ்பத்திரி போனாளாம்..

டாக்டர் – அவருக்கு சத்தான உணவு கொடுங்க..அடுத்த 

வீட்டு பிரச்சினைகளை பத்தி அவர்கிட்ட பொறணி பேசாதீங்க..

அவரை வச்சிக்கிட்டு சீரியல் பார்க்காதீங்க..நகை வேணும்,

புடவை வேணும்னு கேட்டு தொல்லை பண்ணாதீங்க.. 

ஒரு 3 மாசத்தில அவர் சரியாயிடுவார்..

வீட்டுக்கு வரும் வழியில கணவன் கேட்டானாம்..

டாக்டர் என்னடி சொன்னாரு..

மனைவி – உங்க நிலைமை ரொம்ப சீரியஸா இருக்காம்..

நீங்க பிழைக்கிறது கஷ்டம்னு சொல்லிட்டார்..



நீதி – கல்யாணம் பண்ணா காலன் கூடவே இருப்பான்..



ஒரு அப்பா தன் பசங்களுக்கு மான் கறி செஞ்சு தந்துட்டு 

அவங்களுக்கு என்னனு சொல்லாம ஒரு க்ளூ கொடுத்தாராம்..

அப்பா – இப்படி தான் உங்க அம்மா என்னை அடிக்கடி 

கூப்பிடுவா..( டியர் )

பையன் – யாரும் சாப்பிடாதீங்க..இது நாய் கறி..

நீதி – இந்த டர் வேலை எல்லாம் எங்க கிட்ட வேணாம்…



ஒரு லிப்ட் குள்ள ஒரு பையனோட கை முட்டி ( ELBOW ) தெரியாம 

ஒரு பொண்ணோட நெஞ்சு மேல மோதிடுச்சாம்..

பையன் – உங்க இதயமும் இது போலவே மென்மையானதா 

இருந்தா ப்ளீஸ் என்னை மன்னிச்சுடுங்க..

பொண்ணு – உங்க தம்பியும் இது போலவே ஸ்ட்ராங்கா இருந்தா 

என் ரூம் no 312..


நீதி – குத்துங்க..எஜமான்..குத்துங்க.. 

இந்த பொண்ணுங்களே இப்படி தான்..



இது பழசு தான்..இருந்தாலும் இப்போ மறுபடியும்..

ஒரு மேனேஜர்,ஒரு ஆபிசர்,ஒரு தொழிலாளி மூணு பேருக்கும் 

முன்னால ஒரு தேவதை தோன்றி வரம் தந்துச்சாம்..

தொழிலாளி – எனக்கு எக்கச்சக்கமா பணத்தோட எங்க சொந்த 

ஊருல ஒரு பங்களா கொடு..

ஆபிசர் – எனக்கு கனடா ல ஒரு பெரிய பேலஸ்..

நிறைய பொண்ணுங்க.. தேவைக்கு அதிகமா வே பணம்..

மேனேஜர் – அந்த ரெண்டு முட்டாப்பசங்களும் இன்னும் 

ஒரு மணி நேரத்துக்குள்ள என் ஆபிஸ் ல இருக்கணும்…


நீதி – எப்பவுமே முதலில் அந்த மேனேஜர் முதலை  

வாயனுங்கள பேச விடுங்க..இல்லைனா இப்படி 

தான் ஆப்படிப்பானுங்க..

Thursday, November 24, 2011

மாத்தி யோசி ..52



சில நொடிகள் சிரிப்பே ஒரு புகைப்படத்தை அழகாக்கும்போது,

எப்பவும் சிரிச்சு கிட்டும்,சிரிக்க வச்சிகிட்டும் இருந்தா 

வாழ்க்கை எவ்வளவு நல்லா இருக்கும்..யோசிங்கப்பூ..



டே..சோம்பேறி.. 7 மணி வரை என்னடா தூக்கம்னு பசங்க 

தான் எழுப்புறானுங்க..இதே வார்த்தைகளை ஒரு பொண்ணு 

போன் பண்ணி எழுப்பி சொன்னா எவ்வளவு நல்லா

இருக்கும்..#யாராவது வாங்களேன்..ப்ளீஸ்..



நான் நல்லவன்,கெட்டவன் னு சொல்ல நீ யாரு..

பிடிச்சிருந்தா வந்து பழகு..இல்லையா விலகி போயிடு..

ஏன்டா எழவு கொட்டி இம்சைக் கூட்டுறீங்க..



நான் டீ,காபி சாப்பிட மாட்டேன் னு சொன்னா அடடே..

அப்படியா..நல்ல பழக்கம்னு ஆச்சர்யப்படுறாங்க.. 

ஆனா பிராந்தி,விஸ்கி குடிப்பேன்னு சொன்னா 

அடச்சீய்..னு காறித்துப்பறாங்க..

தப்பு யார்மேல இருக்கு..?



 

பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதாம்..

போன ட்விட்டு போல உண்மையை சொன்னா பிகர் 

கிடைக்காது போலேயே..


 

காலையில PIRELLI பார்க்கலாம்னு பேஷன் டிவி 

பக்கம் போனா,அதுக்குள்ளே கைரளி டிவி ல அமலா பால்..

மூடு மாறி மல்லுக் கரையோரம் ஒதுங்கிட்டேன்..

மைனா..மைனா..



சிக்கன் சோறுக்கு நல்லா இருக்கோ இல்லையோ 

பீருக்கு சரியான சைட் டிஷ்..ஆகாஹா..ஆகா..


MIB படத்தில வர்ற மாதிரி நினைவுகளை அழிக்க ஏதாவது 

கண்டுபிடிச்சா நல்லா இருக்கும்..

#தேவை இல்லாதது மட்டுமே ஞாபகத்தில நிறைந்து இருக்கு..

எந்த கடையில பழைய GF கிடைக்கும்னு தெரியலை..

கிடைச்சா ரெண்டு வாங்கணும்..எத்தனை நாளைக்கு 

தான் மொட்ட பசங்களையே கூட சேர்த்துக்கிட்டு சுத்துறது…



ஆபிஸ் டைம் முடிஞ்சதும் உடனே கிளம்புறவன் வேலை

இல்லாதவனும் இல்ல..தினமும் லேட்டா வீட்டுக்கு 

போறவன் வெட்டி முறிக்கிறவனும் இல்ல..

Wednesday, November 23, 2011

அர்த்தம் தெரியுமா....Part 11



காதலிக்கிறது சூயிங் கம் சாப்பிடுறது போல தான் ..

ஆரம்பத்தில ஸ்வீட்டா தான் இருக்கும்..

அப்புறமா தான்..# காதலி கிடைக்காத காண்டு..



சரக்கு-பெண்கள்..மிக்சிங்-தேவைகள்...

சில சரக்குகளுக்கு மிக்சிங்கே அவசியமில்லை..

சில சரக்குகள் எந்த மிக்சிங்குக்கும் அடங்காது..




சைட் டிஷ் இல்லாம சரக்கடிக்கிறதும், பெண்கள் இல்லாமல்

வாழ நினைக்கிறதும் ஒண்ணு தான்..

முடியும் ஆனா கஷ்டமா இருக்கும்..



பெண்களை கவர்வது ஒரு ரயில் போல தான்.. 

பார்வை,பழகும் விதம்,பேச்சு,பெர்சனாலிட்டி னு பல பெட்டிகள்.. 

ஆனா அத்தனைக்கும் அடிப்படை 

அன்புங்கற எஞ்சின் மட்டுமே..



வாழ்க்கையில வந்து போகும் பெண்களை விட,

வாழ்க்கையாய் வந்து போக மறுக்கும் பெண்களே

தேவதை ஸ்திரீகள்..

Tuesday, November 22, 2011

ஜோக்கூ.....53



பள்ளி செல்லும் குழந்தைகள் சிரித்துக்கொண்டே 

கை அசைக்கின்றன..அழுது கொண்டே ஆபிஸ் போகும் 

என்னைப்பார்த்து..




அவளும் நோக்கினாள்..ஆன்ட்டியும் நோக்கினாள்..

அவர்கள் ஒருவருக்கொருவர் தெரியாமல் 

இருவரையும் நோக்கினேன்..



காத்திருப்பது பைத்தியக்காரத்தனம் என்று தெரிந்தும் 

பதிந்துவிடவே ஏங்குகிறது மனது..

வேலை வாய்ப்பு அலுவலகத்திலும்,சேலை 

சூடிய பெண்களிடத்திலும்.




நீ என் கூட இருந்தா எனக்கு பயமே இல்லை என்றேன்..

அப்படியா என்றாள்... ஆம்..விஜய் படம் கூட பார்ப்பேன் 

என்றதும் பதறி துடிக்கிறாள்.




மாடி வீட்டு மாலதிக்கு நூல் விட்ட என்னை அவள் 

மாமன் முறைத்தபோது , அடுத்த வீட்டு ஆன்ட்டி காட்டிய 

சைகை சொல்லியது...

அரவணைக்க நான் இருக்கிறேன் என்று..

Monday, November 21, 2011

தேவதை ஸ்த்ரீயடி நீ



நீ என்னை கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் உன் 

பார்வையால் உயிரை கடைந்து செல்கிறாயடி..

ஒன்ஸ் " மோர் " ப்ளீஸ்..





உன்மேல் கோபம் கொள்ளும் தருணங்களில் நீ 

காட்டும் குழந்தைத்தனமான முகபாவனைகள் காதலை

தான் அதிகரிக்க செய்கிறது..



என் மேல் நீ காட்டும் கோபம் குழந்தையின் மீது அன்னை கொள்வது 

என்று உணர்ந்தேன்..அதிவேகத்தினால் அடிபட்டு கிடந்த 

என் அருகில் அழுதபடி நீ இருந்த போது..





கணித்ததில் சொல்லிக்கொடுத்தது வினாடிகள் சேர்ந்து 

நிமிடம் ஆகுமென்று..காதல் சொல்லிக்கொடுத்தது 

உனக்காக காத்திருக்கும் வேளைகளில் உன் நினைவுகள் 

சேர்ந்து நிமிடங்கள் ஆகுமென்று..


உன்னை அடைய எதை வேண்டுமானாலும் இழப்பேன்..

ஆனால் என்னையே இழக்க சொன்னால் எப்படியடி..? 






ஊடலின் உச்சத்தில் இனி நம்மிருவருக்கும் இடையே 

ஒன்றுமில்லை என்கிறாய்..உனக்கு எப்படியோ..

நீ இன்றி இனி எனக்கு ஒன்றும் இல்லை தான்..





கனவுகள் எப்போது கருப்பு வெள்ளையில் தான் வருமாம்..

எனக்கு மட்டும் வானவில்லாய்..கனவில் நீ..






நீ எங்கே இருக்கே என்றே தொடங்கும் எனது உரையாடல்கள்..

நீ எப்படி இருக்கே என்றே தொடங்குகிறது 

உனது உரையாடல்கள்..

தேவதை ஸ்த்ரீயடி நீ..








உன்னுடன் சண்டையிட்டு பின் சமாதானம் ஆகையில் 

என் ஈகோ தொலைந்து எளிமையானவன் ஆகிறேன்..

சண்டையிடவேனும் நீ வேண்டுமடி..







நான் மட்டுமே என்று நினைத்த என்னை , 

நாம் என நினைக்க வைத்தவள் நீயடி..

Sunday, November 20, 2011

மாத்தி யோசி ..51



எங்கே உரிமைகள் அதிகம் ஆகுதோ,அங்கே சண்டை 

வரவும் வாய்ப்புகள் அதிகம்..





1 இருந்த என்னை நீ வந்து ஜோடியாய் ஆக்கினாய் 11 றாய்.

பிறகு நாம் குழந்தை பெற்று குடும்பமாய் ஆகியபோது 111.

# கோவிந்தா..



யாரும் என்னை விரும்பவும் வேணாம்..

யாரும் என்னை வெறுக்கவும் வேணாம்..

என்னை விட்டுடுங்கடா சாமி..



எப்போதுமே ஏமாற்றங்களை தருபவள் எப்படி ஏஞ்சலாக 

இருக்க முடியும்..எனவே தேடி வரும் என்னை திட்டி 

துரத்தாதீர்கள் தேவதைகளே..



நல்லது சொன்னா நான் ஏத்துக்க மாட்டேன்னு அர்த்தம்

இல்லைங்க..அதுக்காக சொல்ற அத்தனையையும் 

ஏத்துக்கணும்னு எந்த அவசியமும் இல்லையே..



புறம் பேசுறவங்களை விட டேஞ்சரானவங்க அதை நம்மகிட்ட 

போட்டு குடுக்குறவங்க..அவனாச்சும் சாப்டா சொல்லி

இருப்பான்..இவனுங்க உசுப்பேத்தி அழ வைக்கிறானுங்க..



அழகா இருக்கும் அத்தனையும் எனக்கு பிடிக்கணும்னு 

அவசியம் இல்ல..எனக்கு பிடிக்கும் அத்தனையும் 

அழகா இருக்கணும்னும் அவசியம் இல்ல..

ரசனைக்கு அர்த்தமே அதானே..

இது புரியாம கொல்றானுங்க சார்..



நான் செய்யாதது எல்லாம் நல்லதும் இல்ல..

நான் செய்றது எல்லாம் கெட்டதும் இல்ல..

நான் நானாகவே வாழ்வதில் உங்களுக்கு 

என்னடா நஷ்டம்..



எவ்வளவு படிச்சாலும் இந்த பொண்ணுங்க SMS அனுப்பும்போது 

ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள்..

I LOVE YOU னு டைப் பண்ணுறதுக்கு 

பதிலா I LIKE YOU அனுப்புறாங்க..




இவன் இப்படித்தான் னு ஏன்டா முடிவு பண்ணி 

முத்திரை குத்துறீங்க..எல்லா நல்லவனுக்கும் ஒரு 

இறந்த காலம் உண்டு..எல்லா கெட்டவனுக்கும் 

எதிர் காலம் உண்டு..சாவடிக்காதீங்க டா..

Saturday, November 19, 2011

அர்த்தம் தெரியுமா.. Part 10





காதல் - பெண்கள் வீட்டினில் ஹாயாக இருப்பது.. 

ஆண்கள் ரோட்டினில் நாயாக அலைவது..



கணிதம் – எண்கள் மட்டுமே அடிப்படை.. 

கணேஷ் – பெண்கள் மட்டுமே அடிப்படை..



அடுத்தவன் காயப்படுத்தினாலும் அவனைத் திருப்பி 

காயப்படுத்தாம அவன் நிலைமையைப் புரிஞ்சிக்க முயற்சி

பண்ணுவதே உண்மையான மனமுதிர்ச்சி.


FIGURE கும் FINGER கும் சின்ன வித்தியாசம் தான்..

FINGER மடக்குவது சுலபம்.. 

FIGURE மடக்குவது கொஞ்சம் சிரமம்.. 




தண்ணியில தெரியுற நிலா போல தான் பொண்ணுங்களும்..

எட்டி நின்னா ரசிக்கலாம்..கிட்டப்போயி தொட்டா 

பிம்பம் கலைஞ்சிடும்..

(வெளித்தோற்றத்தை பார்த்து ஏமாந்து போவாதீங்க பசங்களா…)

Friday, November 18, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 51



மடிக்கிற பிகர் எல்லாம் கடவுள் உனக்கு கொடுத்த பரிசு..

மடிக்க முடியாத பிகர் எல்லாம் மத்தவங்களுக்கு நீ தரும் பரிசு..



அழகானவைகளை தேடி அலைந்து அன்பானவைகளை 

இழந்து விடாதே..அரவணைக்கும் ஆன்ட்டிகளுக்கு அர்ப்பணம்..



சரக்கில்லாத பாட்டிலை குலுக்கி பார்க்குறதுக்கு சமம்..

அன்பில்லாத அழகான பெண்களை காதலிப்பது..



 

தப்பு தப்பா வேகமா நிறைய செய்வதை விட..ஒண்ணை 

பொறுமையா சரியா செய்யணும்..6 ,7 பிகர்களுக்கு கட்டம் 

கட்டுவதை விட,ஒரு ஆன்ட்டியை ஒழுங்கா மடக்கினா போதும்..


 

தோல்வி முடிவு அல்ல..வெற்றியின் ஆரம்பம்..பிகர் உடனான 

காதல் தோல்வியே ஆன்ட்டியின் அரவணைப்புக்கு 

அஸ்திவாரம்,ஆனந்தமான ஆரம்பம்..


 


வாழ்க்கையில் பெண்கள் இல்லாமல் இருப்பதும் , 

நண்பர்களோடு சரக்கில்லாமல் இருப்பதும் கார்ட்டூன்னை 

ரேடியோவில் கேட்பதுக்கு சமம்..

 


பெண்கள் எனும் பூக்களால் நிறைந்தது வாழ்க்கை தோட்டம்.. 

பிகர்கள் எனும் மொட்டுகளை பறிக்க நினைத்து ஏமாறுவதை விட..

மிச்சத்தை நீங்களே புரிஞ்சிக்குங்கப்பா..



கிறக்கத்தை தரும் காதலியின் நெருக்கத்தை விட,

அழுகையில் ஆறுதலாய் இருக்கும் ஆன்ட்டியின் 

அரவணைப்பே அலாதியானது..

 


எந்த பெண்ணை பார்த்தால் சரக்கு தேவைப்படலையோ 

அவளே சில்பான்சி .எந்த சரக்கை பார்த்தால் எல்லா 

பெண்களையும் மறக்க முடிகிறதோ அதுவே ஜில்மேக்ஸ்.





கிறக்கத்தை மட்டுமே தரும் காதலியை விட அரவணைப்பினில் 

ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கும் ஆன்ட்டியை ஆதரிப்போம்..

Thursday, November 17, 2011

மொத்த சொர்க்கம் - மிச்ச நரகம்





கவிதை எழுத வேண்டுமென்றால் எதைப்பற்றி 

எனக்கவலைப்படுபவர்கள் மத்தியில் எனக்கு மட்டும் 

கவலையே இல்லை..

கவிதை என்றால் நீ தானே..




கொஞ்சம் நீ தான் மொத்த சொர்க்கம்...

கொஞ்சும் என்னை கெஞ்ச விடும் நீ தான் மிச்ச நரகம்.




உன்னிடம் காதலை நான் வெளிப்படுத்தும் முன்னரே அதை 

விட நீ அதிகமாக வலியை தந்தாலும் ஏற்றுக்கொள்ள 

தயாராகிவிட்டேன் அன்பே..




பக்கத்தில் இருந்த போது உன்னை பார்க்காமல் தவிர்த்த நான்,

உன் பக்கத்தில் வேறொருவன் இருப்பதை பார்க்க 

முடியாமல் தவிக்கிறேனடி..



நினைவுகளில் நிற்கும் பல உறவுகளை விட..

உந்தன் நினைவுகளே எனக்கு உறவாய் போதுமடி.

உன் நினைவுகள் என்னை படுத்தினாலும்,

பிடிக்கவே செய்கிறது..




உன்னைப்பற்றி பல மணி நேரம் பேசுபவன் நான்..

ஒரு நிமிடம் கூட என்னை விட்டுக்கொடுக்காமல் 

பேசுபவள் நீ..#என்னமோ போ..




வார்த்தைகளால் காயப்படுத்தும் என்னை திரும்ப 

காயப்படுத்தாமல் என் கோபத்தின் காரணத்தை தேடி தீர்க்கும் 

நீ நிச்சயம் தேவதை தானடி..




ஊடல் கொண்ட நேரங்களில் நீயும் நானும்.. அதுவே கூடல் 

சமயத்தில் நாம் ஆகி விட்டோம்..

#எப்படி வார்த்தையில விளையாண்டேன் பார்த்தீங்களா..

வார்த்தை விளையாட்டல்ல..இது வாழ்க்கை விளையாட்டு..




உன்னை வருந்த வைத்து மன்னிப்பு கேட்ட என்னை விட,

காயப்பட்ட வலியோடு "பரவாயில்லை விடு " என்று என்னை 

மன்னித்த நீயே சிறந்தவள்.



உன்மீதான என் காதலை அடக்க பிரபஞ்சமே பத்தாது 

எனும்போது 140 ல் எப்படி அடக்க..

#போதையில இல்ல..சரக்கடிக்க வக்கில்லாத காண்டு..

Wednesday, November 16, 2011

மாத்தி யோசி ..50



காபி டேவில் காதலியோட இருக்கும் நேரங்களை காட்டிலும்,

நண்பர்களோடு நாயர் கடை பெஞ்ச்சில் அமர்ந்து டீ குடிப்பது

தனி சுகம்..#மச்சி..கிங்க்ஸ் வாங்கு..




திட்டோ,பாராட்டோ அது நம்முடைய ஒரிஜினல் கேரக்டரை

பார்த்து வரும்போது சந்தோஷமா ஏத்துக்குங்க..

மத்தவங்களுக்காக வாழ நாம மகாத்மா இல்லை..


ஐ லவ் யூ னு சொன்னா நேரில் பார்க்கும்போது ரெண்டு 

கன்னமும் சிவக்குற அளவுக்கு தர்றேன்னு மிரட்டுறா..

முத்தம் கொடுத்தா கூட கன்னம் சிவக்கும்னு 

தகவல் சொன்னேன்..



எனக்கு நல்லதா தெரியுறது உங்களுக்கு கெட்டதா 

தெரியும்போது..ஏன் உங்களுக்கு கெட்டதா தெரிவது 

எனக்கு நல்லதா தெரியக்கூடாது..

என்னப்பா உங்க நியாயம்..



நீ நல்லவனா கெட்டவனா னு  கேட்குறாங்க..சில பேருக்கு 

நல்லவனா தெரியுற நான்,சில பேருக்கு கெட்டவனா தெரியுறேன்..

நான் எப்பவுமே நானாக தான் இருக்கேன்..

உங்க பார்வையில தான் வித்தியாசம்..





காளிதாசனுக்கு நாக்குல எழுதி கவிபாட வச்சி ரசிச்சதும் 

ஒரு பெண் தான்..எனக்குள்ள காதலை விதைச்சு 

கவிதைகளுக்கு காரணமும் பெண்கள் தான்..




நான் விரும்பின பொண்ணு கூட தான் வாழ முடியலை..

என்னை விரும்புற பொண்ணுங்க கூடயாவது 

வாழ்ந்துட்டு போறேன்..#கமான் கேர்ள்ஸ்..



பிரச்சினைக்கு நான் தான் காரணம்..பிரச்சினைக்கு 
நானா காரணம்..? இந்த ரெண்டுமே வேலைக்கு ஆவாது..
நானும் பிரச்சினைக்கு காரணம்னு உணர்ந்தா 
தான் தீர்வு கிடைக்குது..#அனுபவம்..

நான் பூமியில பிறந்தது உங்க எல்லாருக்கும் பிடிச்சவனா 


வாழ இல்லைடா..என்னை விட்டுடுங்கடா..

எழவு கொட்டாதீங்க ப்ளீஸ்..


இடி இடிச்சா அர்ஜுனா னு சொல்லுவாங்க..

நேத்து ராத்திரி நான் அனுஷ்கா,அமலா பால்னு

அலறுனேனாம்..#முத்திடுச்சோ..ஹ்ம்ம்..