Wednesday, October 10, 2012

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 61
சில்மிஷங்கள் செய்யும்போது சிரிக்கும் பிகர்களை விட,

சிலிர்க்கும் ஆன்ட்டிகளே அதிகம் ஈர்க்கிறார்கள்..

# ஹர ஓ சாம்பா..வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வைக்கும் 


பிகர்களை விட,வாய்ப்புகளை உருவாக்கத் தூண்டும் 

ஆன்ட்டிகளை அரவணைப்போம்..# ஹர ஓ சாம்பா..உயிர் எடுக்கும் பிகர்களைக் காட்டிலும்,உயிர் கொடுக்கும் 


ஆன்ட்டிகள் அற்புதமானவர்கள்..# ஹர ஓ சாம்பா..ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கு ஒப்பாரி வைக்கும் 


பிகர்களை விடுத்து,பிரச்சினைகளுக்கு மத்தியில் 

இருப்பினும் புன்னகைக்கும் ஆன்ட்டிகளை அரவணைப்போம்..

# ஹர ஓ சாம்பா..கர்வம் கொடுப்பது காதல்..


கர்வம் அழிப்பது காமம்..கர்வத்தைக் கொடுக்கும் காதலியை விட,கர்வத்தைக் 


கொல்லும் ஆன்ட்டிகளை ஆதரிப்போம்..

#ஹர ஓ சாம்பா..என்னா வனப்பு..சுத்தலில் விடும் பிகர்களை விட, சுத்த விடும் ஆன்ட்டிகளே 


அதிகம் ஈர்க்கிறார்கள்..#நீங்கலாம் எந்த எந்த 

வீதியிலடி இருக்கீங்க..?


பசங்க பார்க்குறாங்கன்னு தெரிஞ்சா பிகர்கள் முகத்தில் 


வருவது கர்வம்..ஆன்ட்டிகள் முகத்தில் வருவது வெட்கம்..

# அழகு..ஹர  சாம்பா..

யார் வேணும்னாலும் காதலிக்கலாம்..ஆனா காதலிக்கும் 

எல்லாரும் காதலிக்கப்படுவதில்லை..

#புலம்ப விட்டுட்டாளுங்களே வாத்சாயனா..அல்வா கொடுக்கும் காதலியை விட , 


அல்வா கேட்கும் ஆன்ட்டிகளை அன்போடு ஆதரிப்போம்...

#ஹர ஓ சாம்பா..

Monday, October 8, 2012

காதல் ரேகை
நண்பர்கள் கூட்டத்தில் நான் இருக்கையில்,சிறு பறவை 

போல என்னைக் கடந்து செல்கிறாய் நீ.. என் உடலை விட்டு 

உயிர் மட்டும் தொடர்கிறது உன்னை..


நீ அணிந்திருக்கும் மூக்குத்தியை விடவும் அழகாய் 


ஜொலிப்பது நீ போட்டிருக்கும் முகப்பருக்கள் தான்.. 

மான்களை விட புள்ளி மான்கள் தானே எப்போதும் அழகு..
பூமியில் இருந்து அழிந்துவிட்ட ஒரு தொல் விலங்கை 


போல என் காதலும் மாறிவிடுமோ என அஞ்சுகிறேன்.. 

என் காதலைக் காப்பாத்து ஹனி..
அதிகாலை வேளைகளில் சூரிய வெளிச்சம் பட்டு 


தெறிக்கும் பனித்துளிகளை போல, உன் அதரங்களின் 

அரை முறுவல்களில் பட்டு தெறிக்கிறது என் காதல்..
உன் கண்களின் வெளிச்சம் கொண்டே என் காதல் ரேகை..


 உன் அரவணைப்பின் சுகம் கொண்டே என் ஆயுள் ரேகை..


பொய்களை காப்பதை விடவும் உண்மைகளை மறைப்பது 


மிகவும் கடினம்.. லவ்யூடி ஹனி..


கண்களுக்கு பின்னால் காதல் சமுத்திரத்தை எப்போதும் 

தயாராக வைத்திருக்கிறாய் நீ..நீ நெகிழும் தருணம் 

அதை வெளிப்படுத்துகிறாய் என் மீது..நான் தான்

 நிலைகுலைந்து போகிறேன்..அந்த காதல் சமுத்திரத்தில்..உன்னை வெல்கிறேன் நான்..என்னை வெல்கிறாய் நீ..


நம்மை வெல்கிறது காதல்..என் சுவாசம் கூட முழுதாய் வெளிப்பட மறுக்கிறது..


நீ என்னுடன் இல்லாத நேரங்களில்..கடவுள் மீதும்,காதல் மீதும் முழுதாய் நம்பிக்கை 

வை என்கிறேன்..

"ம்..நம்புறேன்டா.. உன்னை மட்டும்" என்கிறாய்.. 

லவ்யூடி ஹனி..

Saturday, October 6, 2012

ஏன் இப்படி..69

ஒரு விஷயம் தனக்கு தெரியலை / புரியலை னு 


சொல்லுறவங்களை விட,தெரியும் / புரியுது னு 

சொல்லி மாட்டிக்கிறவங்களே அதிகம்..ஒரு விஷயத்தை அடுத்தவன் செய்து அது தப்பா 


போகிறவரை காத்திருந்து அட்வைஸ் பண்ணுறவனுங்களே..

முதல்லையே சொல்லி தொலைய வேண்டியது தானே..

 இப்போ வந்து ஏன் எழவு கொட்டுறீங்க...ஒரு பிரச்சினைக்கு அட்வைஸ் பண்ண அம்புட்டுபயலும் 


ஓடி வர்றான்..அழைப்பு இல்லாமையே.. தீர்வு கேட்டா 

ஓடி போயிடுறானுங்க..சொல்லிக்காமையே..
ரோட்ல ஒரு பொண்ணு குனிஞ்ச தலை நிமிராம போச்சு..


இந்த காலத்தில இப்படி அடக்கமா ஒரு பொண்ணானு 

திரும்பி பார்த்தா சுள்ளுன்னு சுட்டுச்சு..எதிர் வெயில்..ஆபிஸ்ல ஒரு பெரிய முதலை தகிடுத்தத்தம் பண்ணியதை 


ஒரு சின்ன முயல் கண்டுபிடிச்சி சிங்கத்திடம் சொன்னா,

முதல் ஆபத்து முயலுக்கு தான்..#ரெண்டு பேரும் எப்படா 

கூட்டு சேர்ந்தீங்க…?


குற்றத்தை செஞ்சவனை விட,அதை கண்டுபிடிச்சவனுக்கே 


ஆபத்து அதிகம்..# ஆபிஸ் அவலங்கள்..
தப்பு செய்தவனுக்கு இருக்க குற்ற உணர்ச்சியை விட,


அதை கண்டுபிடிச்சும் சொல்லமுடியாத நிலைமையில 

இருக்குறவனுக்கே குற்ற உணர்ச்சி அதிகம்..
பொய் சொல்றவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான்..


ஒரு உண்மையை கண்டுபிடிச்சி அதை சொல்ல முடியாம

 சங்கடத்தில் இருக்கான் ஒருத்தன்..
எதிரிகளை விட துரோகிகளாலேயே ஆபத்து அதிகம்…


# எங்கேயும் எப்போதும்.. கண்ணு சிமிட்டுற நேரத்தில 

காலை வாருறானுங்க..அவ்வவ்வ்வ்வ்…ஒரு வேலையை சுலபமாக்க ஒருத்தனும் வழி சொல்ல மாட்றான்..


அதை மேலும் சிக்கலாக்க அத்தனை பேரும் ஆளுக்கு பல 

வழிகள் சொல்றாங்க..# ஓடிப் போயிடுங்கடா டேய்..

Thursday, October 4, 2012

ராட்சசி..என் வலியை விட,உனக்கு வலிப்பதை என்னால் தாங்க 

முடியாது என தெரிந்தும் அடிக்கடி ஊடல் கொ(ல்)ள்கிறாய்..

# ராட்சசி..உனதருகில் இருக்கையில் மட்டும் என் இதயம் வேறு 


விதமாய் துடிப்பது ஏனோ..?பொங்கிவரும் காதல் கொண்டு நீ என்னைப்பார்த்து 


கண்களால் சிரிக்கும் ஒவ்வொரு முறையும் என் இதயம் 

ஒரு துடிப்பை தவற விடுகிறது..நீ என்னை முத்தமிட நெருங்கும் அந்த கணம் 


எனக்குள் இன்னொரு இதயம் முளைக்குதடி..உன்னைக்காணும் வரையில் சத்தமின்றி சூரியக்கடிகாரமாய் 


துடித்த என் இதயம்,உன்னைக்கண்ட கணம் முதல் 

அத்தனை இசைக்கருவிகளின் ஒலியோடு துடிக்கிறது.

மிக அழகாய்..
நீ தலைக்குளித்து ஈரக்கூந்தல் உலர்த்தும் காலை வெயில் 


நேரம் எனக்கு மட்டும் தெரியுதடி..அழகாய் ஒரு வானவில்..என்னிடம் இருக்கும் அத்தனை கேள்விகளுக்கும் உன்னிடம் 


பதில் இருக்கிறது…சமயங்களில் கேட்காத கேள்விகளுக்கும்..
நீ என்னை நெருங்கி வரும் தருணம் மட்டும் நியூட்டனின் 


மூன்றாம் விதி பொய்த்துவிடுகிறது..

# அவ்வளவு காஞ்சு போயி கிடக்கிறேன்..ஆள் அரவமற்ற அறையின் ஒரு ஜன்னலின் வழியே நுழைந்து 


மறு ஜன்னலின் வழியே வெளியேறும் சருகாய் என் காதல்..

 உன்னுள் நுழைந்து வெளியேறும் முன் கவனித்துவிடேன் ஹனி..

Tuesday, October 2, 2012

மாத்தி யோசி..68
ஒரு ஆபிஸ்ல வேலைக்குன்னு போனாலே ஏகப்பட்ட 

பிரச்சினைகள் இருக்கும்..அதுல முதல் பிரச்சினை அந்த 

ஆபிஸ்க்கு வேலைக்கு போறது தான்..

அதனால ஆபிஸை மாத்துங்க..

கூட்டத்தில இருக்கும்போது அமைதியாய் இருப்பவன் 

ஆடு என கொ(ல்)ள்க..ராஜாவா,ரஹ்மானா னு ரெண்டு ஆண்களைப் பற்றி 

விவாதம் பண்றவங்க ஏன் அனுஷ்கா ஷர்மாவா, 

அனுஷ்கா ஷெட்டியானு விவாதம் பண்ண மாட்றாங்க..# ஏக்கம்..


நல்லவர்களுக்கு வரும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு 


அவங்களே தான் காரணமா இருக்காங்க..# பைல்ஸ் ரீசன்கெட்டவன் இன்னொரு கெட்டவனை நல்லவனாக் 


காட்ட முயற்சிப்பதில்லை..ஆனா நல்லவன் னு 

சொல்லிக்கிறவங்க அடுத்தவனைக் கெட்டவனாக் 

காட்டுவதில் தெளிவா இருக்காங்க..

# அப்போ யாரு கெட்டவன்..?
ரகசியங்கள் வெளியேற மட்டும் எத்தனையோ 


வழிகள் உருவாகின்றன..ஒரு விஷயம் நமக்கு சரின்னு தோணியதுக்கு அப்புறம்,


அதை நியாயப்படுத்த எத்தனை காரணங்கள் கிடைக்குது..!!!!குழந்தைகளுக்கு மட்டுமல்ல, குமரிகளுக்கு இடையிலும் 


போதிய இடைவெளி தேவை..# கூட்டமா வந்தா சைட் 

அடிக்க சங்கடமா இருக்கு..


ஒரு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடையாது / முடியாது னு 


இருக்கும் நிலையில் தற்காலிகத்தீர்வு 

தெரிந்தால் தொடரலாமே..வருத்தப்படுறதுல 

என்ன நன்மை…?


சில வருடங்கள் முன்பு மரங்கள்,கோவில்களை அடையாளமாக்கி 

வழி சொல்லுவாங்க..இப்போ டாஸ்மாக்,ATM 

மை பயன்படுத்துறாங்க..#வீதிக்கு வீதி இது ரெண்டும் 

தானே இருக்கு…ஹ்ம்ம்ம்….