Thursday, October 30, 2014

மாத்தி யோசி 73


Temple run ல வர்ற ராட்சசனை விடவும் மோசமா மேல 
 
விழுந்து பிறாண்டுரானுங்க உங்களை  follow up பண்றேனு 
 
# வேலை செய்ய விடுங்கடா டேய்..
பண்டோரா கிரகத்தில இருந்து பாகிஸ்தான்,பலுசிஸ்தான் 

வரைக்கும் நல்லா தமிழ் பேசுறாங்க..நம்ம பய புள்ளைங்க 

இன்னும் சரியா பேச மாட்டுதுங்க..
லிட்டருக்கு 4 சொட்டு உஜாலா விளம்பரம் போல 
 
ரெண்டு கண்களுக்கு 4 சொட்டு னு போய்க்கிட்டு இருக்கு..
 
#"சென்னைக் கண் " சங்கடங்கள்..
அடுத்த வீட்டுல என்ன நடக்குதுனே தெரியாம இருக்குற 
 
அபார்ட்மெண்ட் வாழ்க்கை எவ்ளோ நல்லதுனு உதவி 
 
வேணுமானு கேட்டு உதை வாங்கும்போது தான் தெரியுது
பசங்க பொண்ணுங்களோட போன்ல கடலை 

போடுறபோது ப்ரோமோஷன் கால்னு எதாவது 

பொண்ணு பேசுனா ஜிவ்வுனு இருக்கு..

#நானும் ரவுடிதாண்டா.. என் கையிலயும் முத்தம் குடுங்க..

Tuesday, October 28, 2014

ஏன் இப்படி ...80


#Save us @ sangam cinemas னு tag போடலாமான்னு 

யோசிக்க வச்சிட்டானுங்க #யான்யான் படத்துல நிறைய காரணங்கள் இருக்கு 

ஆனா கதையை மட்டும் காணோம் # பெஸ்டிவல் 

மூடையே பாழாக்கிட்டானுங்கJESUS SAVES MINISTRIES தானே..எங்க ஏரியால ஒரு 

போஸ்டர்.. JESUS SAVES "MINISTERS" மதம் பார்க்காமல் 

மம்மியை இயேசு காப்பாத்துவார்னு..


 
நீதி தேவதைக்கே தண்டனை வழங்கிய நீதிபதியைக் 

கைது செய்னு இன்னொரு போஸ்டர்..#பாஸ்போர்ட் 

வாங்கிட்டு பாரின் போயிடலாமா...???அடுத்தவனுக்கு அடிவயித்துல அடுப்பைப் பத்த 

வச்சி பார்க்கிறதுல அப்படி  என்னடா உங்களுக்கு 

ஆனந்தம் #போனஸ் புலம்பல்கள்

Sunday, October 26, 2014

மாத்தி யோசி .. 72


லட்சுமி மேனன் குரல் , உஷா உதுப் 10 வருஷம் முன்னாடி
 
பாடியது போலவே இருக்கு..# மம்தா மோகன்தாஸ்,
 
ரம்யா நம்பீசன் வாய்ஸ்ல இருந்த கிக் இல்லையே..
ரேடியோ மிர்ச்சியில மறுபடியும் சுச்சி வாய்ஸ் 
 
கேட்டதுக்கு அப்புறம் செம எனெர்ஜியா இருக்கு..
 
# ப்ளைட் நம்பர் 983.. I am Waiting...சட்டை போடாம கூட ஆபிஸ் போயிடலாம் ஆனா 
 
சன் ஸ்க்ரீன் லோஷன் போடாம போகக் கூடாது போல..
 
# ச்ச எவ்வளவு அலைச்சல்..இவனுங்க கஸ்டமர்ஸா 
 
இல்ல "கஷ்டமர்ஸா"..முடியலடா டேய்
அணில் - மகேஷ் பாபு புதுசா ஏதோ PARAGON னு ஒரு 
 
படம் நடிச்சி இருக்காறாமே.. ரீமேக் பண்ணிடலாமா

அணில் குஞ்சு - ண்ணா.. அது செருப்பு விளம்பரம் ங்ணா..இந்த டோலக்பூர் எங்க இருக்குனு தெரிஞ்சா 

சொல்லுங்கப்பா.. மலை,கடல்,பாலைவனம்,காடு,பீம்,

சுட்கி,மானங்கெட்ட மகாராஜா னு எல்லாமே இருக்கு..

வெகேஷனுக்கு போகலாம்னு இருக்கேன்..

Friday, October 3, 2014

ஏன் இப்படி ...79

தமிழ்,தெலுங்கு சினிமாவுல வருவதை விட எதிர்பார்க்காத,

அதிகமான ட்விஸ்ட் என் வாழ்க்கையில வருது.. 

அட தேவுடா...!!!!!!!!!!!!!!!!
நம்ம ஊருல எறும்பு புத்து,ATM க்கு அடுத்து எண்ணிக்கையில 

இன்ஜினியரிங் காலேஜ் தான் இருக்கும் போல.. ஏன் இப்படி..இஞ்சினியர்கள உருவாக்க சொன்னா இயந்திரங்களை 

உருவாக்குறானுங்க..நல்லதில்லை.. நல்லதில்லை.. 

இது நாட்டுக்கு நல்லதில்லை...

இந்தியா FIFA வேர்ல்ட் கப் உள்ள போக ஒரே வழி நாம 

அத நடத்துறது தான்..# யாராச்சும் உதவி பண்ணுங்கப்பா ப்ளீஸ்..
தண்ணியை வச்சி மோர் னு எழுதி இருந்தாலே நாங்க மொண்டு 

மொண்டு குடிப்போம்.. தாளிச்சு வச்சா குடிக்க மாட்டோமா..? 

# ஆபிஸ் அலப்பறைகள்
இங்கிலீஷ் ல சொல்லிக்கொடுத்தாலே அது இன்டர்நேஷனல் 

ஸ்கூல் ஆயிடுமாடா.. # ச்ச.. ஊருக்குள்ள எங்க 

பார்த்தாலும் INTERNATIONAL SCHOOL
வாழைப்பழத்தை விட அதோட தோல் அதிகமான 

எடை இருக்கு..கேண்டீனுக்கு கொடுக்கவே ஸ்பெஷலா 

விளைய வைக்கிறானுங்களா..? # ஆபிஸ் அலப்பறைகள்
ஹைவேஸ் ல போகும்போது இந்த அரை லூசுங்க அடிக்கிற 

ஹாரன் சத்தத்துல ஹார்ட் அலேக்கா வெளிய வரும் 

போல இருக்கு.

திருவிழா பேனர்ல அம்மனை விட அரை அடி 

பெருசா அனுஷ்கா ,ஹன்சிகா போட்டோ..

# அம்மன் அருள் பொருகனு தமிழை தப்பா வேற எழுதிக்கிட்டு 

# பாவம் டா அம்மன்
ஆடி மாத தள்ளுபடி ல அவ கூட ஜவுளிக்கடைக்கு போகாம 

ஆடிட்டிங் னு  சொல்லி தப்பிச்சு,போன சண்டே மாட்டிக்கிட்டேன்..

# 3 கடை, 7 மணி நேரம், 4200 ரூபா சுவாகா...