Saturday, May 30, 2015

ஏன் இப்படி..? 95
வண்டியோட DIFFERENTIAL ல திருஷ்டி பொம்மையை
 
வரையுறானுங்க..# அடேய்.. ஆர்டிஸ்டுகளா..
 
அடியில எவன்டா கண்ணு வைக்குறான்..???

காஃபி ஷாப்ல பொண்ணுங்க போடுற சீனை விட ,
 
ரோட்டுக்கடையில பானிபூரி பேல்பூரி சாப்பிடும்போது
 
போடுற சீன் இருக்கே..!@#$%^& ஐயோ ராமா 

ரீமேக் பண்றதுல ஒரு விவஸ்தை வேணாமாடா..?
 
விளம்பரத்தைக் கூடவா..? விஜயை முந்திடுவான் 
 
போல விஷால்..#thums up

அக்ஷயைத் திருதியை அன்னைக்கு காஞ்சனா 2 க்கு 
 
வந்த கூட்டத்தை விட கஜானா ஜுவெல்லரியில 
 
கூட்டம் அலை மோதுது..#காஞ்சிபுரம் 

ஹைவேல ஒரு நாயி கார் ஹெட் லைட்டை சீரியல் 

லைட்டு போல ஏகத்துக்கும் போட்டுக்கிட்டு போகுது..

#அடேய்..உனக்கு மட்டும் கண்ணு தெரிஞ்சா போதாதுடா..

எதிர்ல வர்றவனுக்கு தெரியணும்.. 

இல்லைனாலும் சங்கு சங்கு தான்..

Monday, May 25, 2015

கண்களின் சிரிப்புஇறப்பில் மட்டுமே முழுமையான இழப்பின் வலியை

உணர முடியும் என்றிருந்தேன்..இப்போது 

இருக்கும்போதே உணர்கிறேன்..# ஹனி பெயர்ச்சி..
உன் பார்வையின் கூர்மையே என்னால் தாங்க 
முடியாது..நீ கண்களில் சிரிக்கையில் கரைந்தே 
விடுகிறேனடி..
என் மீதான அத்தனை காதலையும் இரண்டு 
கண்களில் கொண்டுவர உன்னால் மட்டும் 
எப்படி முடிகிறது ஹனி..?

 
நீ கேட்கும் "சாப்பிட்டியா"வில் அடங்கி விடுகிறது..
என் மீதான உனது மொத்த அக்கறையும்..
உன் கோப முள்ளால் மற்றவர்களுக்கு சப்பாத்திக் 
கள்ளியாய் தெரிகிறாய்.. உன்னுள் இருக்கும் அன்பு 
நீரை உணர்ந்தவன் நான் மட்டுமே ஹனி ..

Wednesday, May 20, 2015

ஏன் இப்படி..? 94பிரிட்ஜ் ல இருந்து ஜில்லுனு தண்ணீர் எடுத்து 


பானையில ஊத்தி வச்சி குடிக்கிறானுங்க..

# அட பதருகளா....!@#$%^&
 


சென்னையில செம வெயில்டா..அங்க எப்படி 

இருக்குனு கேட்குறான்..அடேய்.. நான் 

 சுவிட்சர்லாந்துலயாடா இருக்கேன்..

சுங்குவார்சத்திரம் தான் டா.. 


 


ஈர வெங்காயம் போல பீலிங்கா ஸ்டேடஸ் போடுறவன் 

மேல வர காண்டை விட..என்ன ஆச்சுடானு அவன்கிட்ட 

கேட்டு "ஒண்ணுமில்லைடானு" மொக்கை வாங்குறவனுங்க 

மேல பரிதாபம் தான் வருது..
நாங்க பார்க்கும்போது கண்டுக்காம போறது 
 
கூட பரவாயில்லை..அதுக்கப்புறம் பார்க்க கூடாத 
 
எதையோ பார்த்த மாதிரி ஒரு ரியாக்ஷன் 
 
கொடுக்குறீங்களே அதத்தான் பொண்ணுங்களா 
 
தாங்கிக்க முடியலை..வீ பாவம்.தர்பூசணி,ஐஸ் போட்டகிர்ணி, சுள்ளுன்னு மோரு,

ஜில்லுனு பீரு,வெள்ளரிப்பிஞ்சு, ஈரப்பஞ்சுனு 

எதுக்குமே அடங்க மறுக்குதே..# வெயில்..

Friday, May 15, 2015

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 67


அந்த நேரத்தில மூர்க்கமா செயல்படுவது தான் 

ஆண்மைன்னு கலர் போஸ்டர் அடிக்கிறவனுங்களை

நம்புறவங்களே..#எப்போ தான் திருந்த போறீங்க..சரக்குக்காக காத்திருப்பதை விட அதன் பிறகு 
சாப்பாட்டுக்காக காத்திருப்பதே கொடுமையானது..
#ஹர ஓ சம்பா..

 
செல்போனை பயன்படுத்துங்க.. சக மனுஷனை 
நேசிங்கடானு சொன்னா... செல்போனை நேசிக்குறானுங்க..
சக மனுஷனை பயன்படுத்திக்கிறானுங்க..
!@#$%^& ஹர ஓ சம்பா..வார்ம்அப் பண்ணாலே வெயிட் குறையும்னு 
நினைக்கிறது போலதான்,பார்த்தாலே ஃபிகர் பிக்கப் 
ஆயிடும்னு நினைக்கிறதும்..# வொர்க் அவுட் பண்ணனும் 
மச்சி..ஹர ஓ சம்பா..

 
அழகான பெண்கள்,அசிங்கமான பெண்கள் 
என்றெல்லாம் வகைகள் ஏதுமில்லை..அது ஆண்களின் 
அப்போதைய அவசரங்களையும்,அவசியங்களையும் 
பொறுத்தது..#ஹர ஓ சம்பா..

Sunday, May 10, 2015

ஏன் இப்படி ...93இயற்கை உபாதை எல்லாம் அடக்கிட்டு மேட்ச் 

பூரா உளறிக்கிட்டு ரிசல்ட் வந்தப்புறம் மேட்ச் 

பிக்ஸிங் னு சொல்றவனுங்களை என்ன பண்ணலாம்..???அடிச்சி பிடிச்சி ஜன்னலோரம் காத்தாட உட்கார்ந்தா,

பக்கத்திலேயே பெரிய உருவமா ஒருத்தர் வந்து 

மூச்சு திணற வைக்கிறார்..#முடியல..பெரிய பதவியில இருக்குறவங்க பெரும்பாலும் 

ஏதாவது பினாத்திக்கிட்டே இருக்காங்களே..ஏன்..?இவனுங்க என்னமோ பிளைட் ஓட்டுற பைலட் மாதிரி,

பஸ் ஓட்டுற டிரைவரை குறை சொல்றானுங்க..

#உசுப்பேத்தி விட்டு சும்மா ஓட்டுறவனை எங்கயாவது 

சொருவ வச்சிடுவானுங்க ..போலயே.!@#$%^&இங்கிலீஷ் புக் வச்சிக்கிட்டு படிக்கணும் இல்ல 

மூடிட்டு  தூங்கணும்..பிகர்கள் முன்னாடி 

பரிதவிக்குது ஒரு பக்கி..

Monday, May 4, 2015

உன் நான்மனுஷன் எத்தனை விஷயங்களை கண்டுபிடிச்சாலும்

நெருக்கமானவர்களின் இழப்புக்கு மட்டும் மருந்து 

கண்டுபிடிக்க முடியல..#ஹனி பெயர்ச்சி..என் கண்ணீர் துளிகளின் அர்த்தம் உணராத 

உன்னிடம் வார்த்தைகளால் விவரித்து என்ன 

பயன்..? # போடி..போ..செய்வது அற்ப விஷயமெனினும்,செய்வது உனக்காக 

என்றிருக்கையில் அத்தனையும் ஆனந்தமே ஹனி..


 


இத்தனை நாள் உனக்கு மட்டுமே தெரிந்த 

உண்மையான நான்,இனி எனக்குள் மட்டும்..

#ஹனி பெயர்ச்சி..


 


எனக்கு விருப்பமான பல விஷயங்களை 

உனக்காக விட்டதென்னவோ உண்மைதான்..

அதற்காக என் காதலையும் விட சொன்னால் எப்படி..?

Friday, May 1, 2015

ஏன் இப்படி ...92மனசு லேசாக சிரிங்கடானு சொன்னா மூளை குழம்பி 

லூசான மாதிரி சிரிக்குறானுங்க..

#எனக்கு பயந்து பயந்து வருதுடா டேய்.. ரைமிங்கா 5 வார்த்தை பேசினா அதுல ஒரு வார்த்தை 

அசிங்கமான அர்த்தமா ஆயிடுது..# எல்லா வார்த்தையையும் 

கெடுத்து வச்சி இருக்கோம்.."ஜன கண மன" என்ன பாட்டுனு தெரியுமா னு கேட்டா 

ஆய்த எழுத்து படத்தோட பாட்டுனு சொல்லுது 

பக்கத்து வீட்டு பக்கி..காங்கிரஸ்ல உனக்கு தெரிஞ்ச லீடர் யாராச்சும் 

சொல்லுடானு கேட்டா எதிர்பார்த்தது போலவே 

குஷ்பூனு சொல்றான்..# நல்லா வருவீங்கடா...!@#$%^&முன்கோபம் அறவே கூடாதுனு சொல்லி முடிக்கலை..

 "நான் எப்போ கோபப்பட்டேன்"னு சூடாகிடுறானுங்க..

# இவனுங்களுக்கு போயி ஒருத்தன் புத்தி சொல்றான்

பாரு..லூசுப்பய..