Friday, January 30, 2015

ஏன் இப்படி ...88
இந்த நாதஸ்வரம் சீரியலை ஞாயிற்றுக்கிழமை மட்டும்

தான் போடலை போல..மற்ற எல்லா நாளும்

ஊதுறானுங்க..#முடியலைடா டேய்..50 கி.மீ. தினமும் ட்ராவெல் பண்ணி அசதியா வந்து

"அம்மா பசிக்குதுனு" நான் ஈனஸ்வரத்தில முனகினாலும்

நாதஸ்வரம் முடிஞ்சு தான் சோறு கிடைக்குது..
நேத்து அடுத்தடுத்து ரெண்டு சீரியல் பார்க்கிற துர்ப்பாக்கிய

நிலைமைக்கு ஆளானேன்.. ஒண்ணுல டைவர்ஸ் கேஸு 

ஓடுச்சு..ஆன்ட்டியை உஷார் பண்ணவன் பக்கத்திலேயே

நின்னான்.. இன்னொண்ணுல ஒரு படி மேல போயி 

டைவர்ஸ் ஆகாமையே ,கல்யாணம் பண்ணி ரெண்டாவது

புருஷன் கிட்ட முதல் புருஷன் வந்து இருக்கான்னு 

சொல்லுது..# நான் ஒரு நாள் சீக்கிரம் வந்தது குத்தமாடா...????எல்லா சீரியலையும் ஒரு டைவர்ஸ்ஆனது,

ஆகப்போறது,கல்யாணத்துக்கு அப்புறம் உஷார் ஆனது,

உஷார் பண்ணி மாட்டுனது இப்படியே ஓடும் போல..!@#$%

Thursday, January 22, 2015

மாத்தி யோசி .. 82
உச்சி குளிர ஐஸ் வச்சி சொம்பு அடிக்கிறதே உரிச்ச 
 
கோழி கணக்கா உங்களைத் தொங்கவிட தான்னு
 
உங்களுக்கு எப்போதான்டா புரியப்போகுது..? இனி பிள்ளைகளுக்கு பேரு வைக்கிறதுக்கு பதிலா 
 
நிறைய யோசிச்சு ஃபேஸ்புக் ஐடி யும்,ட்விட்டர் 
 
ஹேண்டிலும் தான் வைக்கணும் போல..RIO 2 படத்துல பறவைகள் பண்ற ரொமான்ஸைப் பார்த்து 
 
எல்லாம் நான் பொறாமைப் பட ஆரம்பிச்சுட்டேன்..
 
#SHAME ON YOU GIRLS.. எனக்கு யாராவது 
 
வாழ்க்கை கொடுங்க ப்ளீஸ்..பஞ்சாயத்து பண்றேன்னு பிரச்சினையை பெருசாக்கி 
 
சட்டை கிழிய விடுறானுங்க..இவனுங்க சமாதானத்துக்கு
 
பயந்தே சண்டை போட்டவன் கூட சமரசம் ஆயிடலாம் போல..ஒருத்தொருக்கொருத்தர் புரிஞ்சிக்கிட்டு தான் 
 
காதலிக்கணும்னு சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை..
 
நான் தான் ஒவ்வொருத்தியையும் பார்த்தவுடனே
 
லவ் பண்ண ஆரம்பிச்சுடுறேனே..# ஐ த்ரீ லவ்யூ..

Sunday, January 18, 2015

ஏன் இப்படி ...87
வர வர யாரும் உங்க பேரு என்னனு கேட்க மாட்றாங்க..

பேஸ்புக் ஐடி யும்,ட்விட்டர் ஹேண்டிலும் தான் கேட்குறாங்க..எல்லாரும் சேர்ந்து தப்பு பண்ணிட்டு என்னை மட்டும்

அடி வாங்க விடுறானுங்க..#குவாலிட்டி

டிபார்ட்மென்ட் கொடுமைகள்..நல்லவேளை சிட்டியில எந்த ரோடு ஓரத்திலையும் 

மரங்கள் இல்லை..போற வேகத்தில ப்ரேக் அடிச்சா 

மரக்கிளையில மாட்டிக்குவானுங்க போல..

#பொறுமையா போங்கடா டேய்..NOKIA LUMIA,AIRTEL 2G ல கொட்டாவி விட்டுகிட்டே 

கூகுள் ஓப்பன் பண்ணேன்.. நான் தூங்குற வரைக்கும்

லோட் ஆயிக்கிட்டே இருக்கு..# அடேய்..!@#$%"பாதுகாப்பின் காவலரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்"

னு கர்த்தரைப் பார்த்துக் கேட்குறாங்க..

#அடேய்..அப்போ நீங்க என்னடா பண்ணுவீங்க...?????

Thursday, January 15, 2015

அழகின் அர்த்தம்
கண்களில் சிரிக்கையில் கரைந்தே விடுகிறேனடி..உன் கண்களின் வசீகரம் கண்ட பின் என் வாழ்க்கை 

கருப்பு வெள்ளையாகவே இருந்து விட ஆசைப்படுகிறேன் ஹனி..வண்ணங்கள் நிறைந்த வானவில்லும் வாசனைப் பூக்களுமே 

அழகு என்று எண்ணி இருந்தேன் உன் கண்களை காணும் வரை..நான் கற்றது கையளவு.. கல்லாதது கவிதைகள் பேசும் 

உன் கண்கள் அளவு..அத்தனை மொழிகளின் அகராதியிலும் உன் அழகுக்கு 

அர்த்தம் தேடி சோர்ந்து விட்டேன்..இனி தேவலோகத்தில் 

தான் தேட வேண்டும் போல..

# செத்து போயி தேடிட்டுவானு கமெண்ட் போடுறவன்

செருப்படி வாங்குவான்.. 

Tuesday, January 13, 2015

ஏன் இப்படி ...86
தம்,சரக்கு எல்லாம் அடிச்சிட்டு ஊதிக்காட்டி வாசனை
வருதானு கேட்குறானுங்க..#சனியனுங்களா அது நாத்தம்டா..
சரக்கு அடிச்சா சந்தனம் மணமா வரும்..
இதுல என்னடா சந்தேகம் உங்களுக்கு..கல்யாண வாழ்த்து பேனர்ல ஒருத்தன் அரிவாளோட 
நிற்கிறான்..# டேய்.. நீ வாழ்த்த போறியா இல்ல
வெட்டப் போறியாடா..அரசியல்வாதிகள் வீட்டு கல்யாண பேனர்ல மாப்பிள்ளை
பொண்ணு போட்டோவை பூதக்கண்ணாடி கொண்டு தான்
பார்க்கணும் போல..# ஆணுக்கும் ஆணுக்கும் 
கல்யாணமோனு ஜெர்க் ஆயிட்டேன்..நைட் ல இருக்குற நை,ட் ரெண்டும் தமிழ் எழுத்துக்கள் தானே..

அப்போ இது தமிழ் வார்த்தை தான்னு தர்க்கம் பண்றான்

 8 வது படிக்கிற பையன்.. அப்போ இங்கிலிஷ்ல 

 என்னடான்னு கேட்டா NIGHT னு சொல்றான்.. இரவு னு ஒரு வார்த்தை கேள்விப்பட்டு இருக்கியாடானு 

கேட்டா, ம்..கடன் வாங்குறதுனு சொல்றான்..

(எவனோ இரவலை தப்பா சொல்லிக் கொடுத்து இருக்கான்..)

Saturday, January 10, 2015

மாத்தி யோசி .. 81

கல்யாணம் பண்ணுற கொடுமையை விட மோசமானது 
போட்டோவுக்கு போஸ் கொடுக்குறது தான்..
#வேடிக்கை  பார்த்த எனக்கே கழுத்து வலிக்குது..
போஸ் கொடுத்தவன் நிலைமை..????இந்த TIKONA 4G போஸ்டர் பார்க்கும்போது எல்லாம்
டிக்கிலோனா னு படிக்கிறேன்..# EFFECTS OF LEGENDS.உழைப்பால் உயரணும் சரி தான்..யார் உழைப்பில யாரு
உயரணும்ங்கற விஷயம் தான் ஒருத்தொருக்கொருத்தர் மாறுபடுது..விதவிதமா செல்ஃபி எடுக்குறதை நிறுத்திட்டு வண்டிக்கும்,
உங்களுக்கும் இன்சூரன்ஸ் எடுங்க..இப்போதான் 
அரசாங்கப் பிரதிநிதிக்கு 350 ரூபாய் மொய் எழுதினோம்..எவனைப் பார்த்தாலும் பாரின் பேக்ரவுண்டுல போட்டோ 

அப்டேட் பண்றானுங்க.. இவனுங்க போறானுங்களா.. 

இல்லை போட்டோ ஷாப் வேலையா ..?? இருங்கடா 

நான் முதல்ல பாஸ்போர்ட் எடுக்குறேன்..

போட்டோ ஷாப் படிக்கிறேன்

Monday, January 5, 2015

ஏன் இப்படி ...85ச்ச இந்த வருஷமும் GOOD FRIDAY வெள்ளிக்கிழமை வருது..

சனிக்கிழமை வந்தா  ரெண்டு நாள் லீவா இருக்கும்ன்றான்

ஒருத்தன்..#அடேய்..என்கிட்டே வர்றவன் எல்லாம் 

ஏன்டா இப்படியே இருக்குறீங்க..Hy nw yr னு மெசேஜ் அனுப்புறாங்க.. அடேய்..

அரைத்  தூக்கத்தில ஒண்ணும் புரியாம அலறி 

அடிச்சி எழுந்தேன்டா..பாஸ்பரஸ் நியூ இயர் னு ஒரு மெசேஜ்..

 நான் பொட்டாசியம் பொங்கல் வாழ்த்துக்கள்னு

ரிப்ளை பண்ணிட்டேன்..
மாபெரும் கடன் திருவிழா னு ஒரு போஸ்டர்..

அடுத்தவனை கடன்காரனா மாத்துறதில உங்களுக்கு 

அவ்வளவு கொண்டாட்டமாடா...???சம்பந்தமே இல்லாத ரெண்டு விஷயத்தை 

எப்படியெல்லாம் சம்பந்தப்படுத்தி பேசுறீங்க..!!! 

சத்தியமா இந்த சூட்சுமம் மட்டும் புரியவே மாட்டுது 

பாஸ்/கேர்ள்ஸ்..

Saturday, January 3, 2015

மாத்தி யோசி .. 80இன்னைக்கு டாட்டா நானோ கார்ல போனேன்..
 
முட்டை போண்டாவுக்குள்ள மாட்டிக்கிட்ட மாதிரியே
 
ஒரு ஃபீலிங்..இப்போவெல்லாம் பொண்ணுங்க வெட்கப்படுறதைப்
 
பார்க்கிறது அபூர்வம்னா பசங்க வெட்கப்படுறதைப்
 
பார்க்கிறது கொடூரம்..#ஐயோ..அம்மா..!!!கல்யாணம் ஆகாம புலம்புறதே பரவாயில்லை போல..
 
பொண்ணு கெடச்ச அப்புறம் பயபுள்ளைங்க தாவணில 
 
குத்தின சேஃப்டி பின் மொதக்கொண்டு வர்ணிக்கிறேன்னு
 
வறுத்தெடுக்குறானுங்க..இத்தனை நாளா நான் நம்பி இருந்த மீரா எனக்கு 
 
கிடைக்காததால நான் கார்த்திகா வைத் தேடி போக 
 
வேண்டியதா ஆயிடுச்சு..இனி கல்யாணம்,காதுகுத்து னு எந்த விசேஷத்துக்கும்
 
போட்டோகிராபர் தேவையே இல்ல போல..
 
எங்கும் செல்ஃபி மயம்..

Thursday, January 1, 2015

அர்த்தம் தெரியுமா..? 13நல்லதில் நல்லது - ஒரு பொண்ணுக்கிட்ட முத்தம் 

கேட்கப் போயி மொத்தமும் கிடைப்பது..

#எனக்கு கிடைக்கலையே..ஹ்ம்ம்ம்….நல்லதில் கெட்டது - உதட்டில் முத்தம் கொடுத்த அவ ,


சிகரெட் பிடிச்சதை கண்டுபிடிக்கிறது..

# KINGS கவுத்துடிச்சிப்பா..கெட்டதில் நல்லது - தம் அடிச்சதைக் கண்டுபிடிச்சிட்டு


சரக்கடிச்சதைக் கண்டு பிடிக்காதது..# நன்றி - BACARDI LIMON கெட்டதில் கெட்டது - முதலில் முத்தம் கொடுத்த 


கன்னத்திலேயே , பளார்னு அறைந்து அடிச்சி தொரத்துறது..

# அவ்வ்வ்வவ்.. அவசரப்படுட்டனோ…?கோழைகளின் கோபம் மரணம்..