Tuesday, May 7, 2013

உதயம் - NH 4வணக்கம் நண்பர்களே..

மிக நீண்டதொரு இடைவெளி.. இதுபோல் ஒரு பெரிய பதிவு எழுதி.. 


தலைப்பைப் பார்த்ததும் திரைப்பட விமர்சனம்னு நினைக்காதீங்க..

இது ஒரு சங்கத்தின் உதயம்.. NH 4- Not Happy 4 வருஷம்னு 


அர்த்தம்... தலைவர் , செயலாளர் உட்பட அனைத்து பதவிகளுக்கும்

ஆட்கள் தேவை..என் உடம்பு அடிவாங்குற உடம்பு இல்லைங்க.. 


அதனால ஆக்கம் மற்றும் ஊக்கம் மட்டும் மட்டும் நான்..


அட ஆமாங்க.. இது ஒவ்வொரு ஆபிஸ்லயும் வருஷாவருஷம் 


நடக்கும் கொடுமையைப் பத்தி.. அதுதான் அப்ரைசல் அவலங்கள் ..

எல்லாருக்கும் ஏப்ரல் 1ந்  தேதி முட்டாள்கள் தினம்னா எங்க 


கம்பெனியில அது மே  7 ந் தேதி..பெரும்பாலான ப்ரைவேட்

கம்பெனியில இது தான் விதி..

ஏமாத்துறானுங்கனு தெரிஞ்சும் பல்வேறு பிரச்சினை
களால 


வேற கம்பெனி மாற முடியாம ஏமாந்துக்கிட்டே இருக்கோம்..

அழுகிற குழந்தையை எதையாவது சொல்லி ஏமாத்தி சமாதானப்படுத்தும்


அன்னையைப் போல,அடுத்த வருஷ அப்ரைசல் வரும்போது

நீயே ஆச்சர்யப்படுவ பாருன்னு சொல்லியே 


அசால்டா அல்வா கொடுப்பானுங்க..

நாமும் கர்நாடகா அரசு கண்டிப்பா காவிரியை திறந்து 

விடும்னு வாயப் பொளந்துக்கிட்டு பார்க்கிற மாதிரி பார்ப்போம்..

இப்படியே  ஓவர் பில்டப் தந்து , கடைசியில 


மிஷ்கினோட முகமூடி போல மொத்தமா கிழிஞ்சிடும்.. நாமும் அடுத்த மூணு மாசத்துக்கு நம்ம தமிழக 

அரசியல்வாதிகள் மக்களுக்கு நல்லது செய்கிற மாதிரி நடிச்சி

ஒண்ணுமே செய்யாதது போல வேலை செய்கிற மாதிரி 


நடிச்சி வேலை செய்யாம இருப்போம்..


ஆனா கொஞ்ச நாளிலேயே தமிழக மக்கள் அடுத்த 

தேர்தலில் பார்த்துக்கிறோம்டா  உங்களைனு

சொல்லிட்டு சொரணையே இல்லாம ஓட்டு போடுற 


மாதிரி தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டு ,

சென்னை சூப்பர் கிங்க்ஸ் கடைசி அஞ்சு  ஓவர்ல அடிச்சி 


ஜெயிக்கிற மாதிரி உயிரைக்கொடுத்து வேலைகளை

எல்லாம் செஞ்சு முடிப்போம்..ஆனா.....

எக்ஸ்ட்ரா இன்னின்க்ஸ்ல வர்ற ரப்பர் வாயனுங்க போல , நமக்கு மேல 

இருக்குறவனுங்க இதை நீங்க அப்படி செய்து இருக்கலாம் இப்படி

செய்து இருக்கலாம். தேவை இல்லாம உங்களால எங்க எல்லாருக்கும் 


டென்ஷன் னு  வாணலியும் இல்லாம வனஸ்பதியும்

இல்லாம வாயிலேயே வடை சுட்டு நம்மை சூர 


காண்டாக்குவானுங்க..இதைக்  கேட்குற  நமக்கு வெயில்ல

வெந்நீரைக் குடிச்சிட்டு விஜய் படம் பார்க்கிற மாதிரி வெறி ஏறும்...
அப்ரைசல் போடுற முதல் மாசம் வரைக்கும் எவனுமே HR department டில் 

இருக்குறவனுங்களைக் கண்டுக்க மாட்டோம். அதை எல்லாம்

மனசுல வச்சிக்கிட்டு இந்த ஏப்ரல் மாசம் இவனுங்க போடுற ஆட்டம் 


இருக்கே..ஐயயயயாவ்... முமைத் கானையே மிஞ்சிடுவானுங்க..

 


தனியா உட்காந்து இருக்க பயந்துக்கிட்டு வாசக்கதவை தொறந்து 

வச்சிக்கிட்டு எவனாவது வரமாட்டானானு பார்த்த

ஆலி வாயனுங்க எல்லாம் , இந்த ஒரு மாசம் மாட்டும் 


இவனுங்க என்னமோ அனுஷ்கா , அமலா பால் கூட பேசிக்கிட்டு

இருக்குற மாதிரியும் அதை நாம தொந்தரவு செய்ய வந்த 


மாதிரியும் சீன போடுவானுங்க.. ஏதாவது வேலை விஷயமா

இவனுங்களைப் பார்க்க போனா , EXCEL ல ஒரு 


DATA கூட எடிட் பண்ண தெரியாதவெனெல்லாம் என்னமோ

ROCKET SCIENCE வேலை செய்ற விஞ்ஞானி 


போல மானிடரையே வெறிக்க வெறிக்க

பார்த்து நம்மை வெறுப்பேத்துவானுங்க..


இந்த கூத்து ஒருபக்கம் இருந்தா , ரொம்ப நாளா போன் ல 

கூட பேசாம நக்சலைட்டுகள் போல தொடர்பு எல்லைக்கு

வெளிய இருந்த நாயெல்லாம் மிஸ்டு கால் கொடுக்கும்..


என்னமோ ஏதோனு நாம பதறி அடிச்சி போன் பண்ணினா...

எப்படி இருக்கேனு கேட்காம, அப்புறம் மச்சி.. எப்போடா ட்ரீட்னு

கேட்பானுங்க.. நாமளும் அரசியல்வாதிகளின் தேர்தல் 


அறிக்கை படிச்சது போல ஒண்ணுமே புரியாம முழிப்போம்...

அப்புறம் சொல்வானுங்க பாருங்க...

அப்ரைசல் எப்படியும் பல்கா போட்டு இருப்பானுங்க.. 


இப்போ எவ்வளவு மச்சான் சம்பளம் வாங்குற..? னு

என்னமோ பொண்ணு கொடுக்கப்போறவனுங்க மாதிரியே 


கேட்பானுங்க... நாம பெத்தவங்க கிட்டேயே  

உண்மையான சம்பளத்தை சொல்லி

இருக்க மாட்டோம்... இல்லைடா இந்த வருஷமும்


ஏமாத்திட்டானுங்கடானு நாம சொல்லி முடிச்சதும் 

அந்த பக்கம் புயல் அடிக்கிற மாதிரி ஒரு

பெருமூச்சு வரும்.. அப்போ நமக்கு வரும் 


பீலிங்கின் பெயர் தான் " கொலைவெறி..."..

வேற கம்பெனி மாறலாம்னு இருக்கேன்டானு  சொன்னதும் , 

சரளாவின் சாகசங்கள் , மாமியின் மன்மத லீலை 

படிச்சவனெல்லாம் நம்ம பீல்ட் இப்போ கொஞ்சம்

டல்லா இருக்குடா.. நம்ம பொருளாதாரத்தைப்

பத்தி அதுல அப்படி போட்டு இருக்கு , இதுல இப்படி 


போட்டு இருக்குனு சொல்வானுங்க பாருங்க..

பனங்கள்ளு குடிச்சிட்டு  பச்சை மிளகாய் கடிச்ச மாதிரி 


நமக்கு சுர்ருன்னு மண்டைக்கு ஏறும்..இப்படி பேசிப் பேசியே நம்மை


கிட்டத்தட்ட தற்கொலைக்கு தூண்டி 

விட்டுட்டு , சும்மா இருந்த நம்மை 

சரக்கைத் தேடி ஓட வைப்பானுங்க. 

அதோட அந்த நாயெல்லாம் 

அடுத்த அப்ரைசலுக்குத் தான் இனி மிஸ்டு கால் கொடுக்கும்..


இதுக்கு இடையில கம்பெனிக்குள்ள வாய் உதார் விட்டு 


திரியுமே சில மானகெட்ட கேரக்டர்ஸ் ,

அதுங்க கொடுக்குற அலப்பறை இருக்கே..அப்ப்ப்ப்ப்பா..

WORLD CUP மேட்ச் வரும்போதெல்லாம்  திடீர் , திடீர்னு தினுசு


தினுசா முளைக்கிற  ஆக்டோபஸ் ஜோசியம் ,  அணில் ஜோசியம் ,

ஆட்டுப் புழுக்கை ஜோசியம் போல , அல்லைக்கைகள் எல்லாம் ஒண்ணு 


சேர்ந்துக்கிட்டு எனக்கு தெரியும் இவ்ளோ தான் இன்க்ரிமெண்ட்டு..

யார் யாருக்கு எவ்ளோன்னு எனக்குத் தெரியும்.. 


ஆனா சொல்லாமாட்டேன்னு பெனாத்துவானுங்க.. 

அப்பவும் நாலு பிக்காலிகள் இவனுங்க

பின்னாலேயே அமலா பால்கிட்ட ஆட்டோகிராப் வாங்க 


போறது போல சுத்தி , கரப்பான்பூச்சிகளை எல்லாம்

காட்ஸில்லா வாக்கி விட்டுவானுங்க..

அதுங்க இதே நெனப்புல நம்மகிட்ட வந்து சீன போட்டு செருப்படி 


வாங்கி செத்துடுங்க.. இந்த பாவம் வேற சேர்ந்துக்கும்.. அட ச்ச...ஹ்ம்ம்ம்ம்.... இது எல்லாம் தெரிஞ்சு இருந்தும் சூப்பர் ஸ்டார் 

படத்துக்கு வர்றது போல ஒரு நல்ல

ஓப்பனிங் காக காத்துக்கிட்டு இருக்கோம்...

பாரதிராஜா பட பர்ஸ்ட் சீன போல.. பார்.....ப்....போம்....

பரதேசிBILL FORGE  பெருமையுடன் வழங்கும்  பரதேசி..

APRIL 1 APRIL 15


MAY 7 பெரும்பாலான பிரைவேட்    கம்பெனியில 

இதான் நடக்குது ...ஹ்ம்ம்ம் ..