Monday, December 29, 2014

ஏன் இப்படி ...84


QUALITY DEPARTMENT ல இருக்குற ஒரே தொல்லை 

எவன் கக்கா போனாலும் நாம தான் கழுவணும்..

ச்ச # கருமம் பிடிச்சவனுங்க கண்ட இடத்தில் 

பிரச்சினை பண்ணி வைக்கிறானுங்க..சட்டை வேர்க்குற அளவுக்கு வேலை செய்யுறது தப்பில்லை..

ஆனா இங்க நான் சாக்ஸ் நனையுற அளவுக்கு வேலை 

செய்யுறேன்..# கொத்தடிமைகள் குடோனின் கொடுமைகள்.. தப்பு செய்வதை விட மோசமான விஷயம் ஆகாவலி எல்லாம்

அட்வைஸ் பண்ணும்போது தலையை சொறிஞ்சிக்கிட்டு

நிக்கிறதுதான்..# விட்ருங்கடா டேய்..ரஹீம் ஐயங்கார் பேக்கரி,பெரம்பூர் ஹைதராபாத் பிரியாணி 

வரிசையில அஸ்வினி சைவ உணவகம் "100% ஹலால்"னு 

ஒரு போர்டு..#காப்பி அடிங்க..ஆனா கவனமா அடிங்க..சட்டையில ஒட்டு போட்ட மாதிரி ரோடெங்கும் பேட்ச்சிங் 

பண்ணி இருக்கானுங்க..நேஷனல் ஹைவேஸ் லையே 

இப்படி இருந்தா,மத்த ரோடு..?#வெளங்கிடும்..

Tuesday, December 23, 2014

மாத்தி யோசி .. 79
"ஆ" படம் எப்படிடா இருக்குனு கேட்டான் ஒருத்தன்..

என் பொழப்பே "ஊ" னு  இருக்கு,ஏன்டா படத்தைப் பத்தி 

கேட்குறனு கடிச்சி வச்சிட்டேன்..சீசனுக்கு சீசன் நல்லவன் வேஷம் போடுறவனை விட 

அயோக்கியனுங்க சவகாசமே தேவலாம்..

#சாமி சரணம்னு சாவடிக்கிறானுங்க..


முன்னெல்லாம் அரசியல் தலைவர்களை வரவேற்க பல 

பேனர் வைப்பாங்க..இப்போ ஒரே பேனரை பல இடத்தில் 

வைக்கிறாங்க..# கற்பனைப் பஞ்சம்..ஜன்னல் மூடி இருந்தாலும் சாலையோர செடிகள்,

மரங்கள் வந்தா தலையை குனிஞ்சுக்கிறேன்..#அனிச்சை செயல்..நம்ம ஊருல "ஒவ்வொரு குழிக்கும்" இடையில எவ்வளவு 

அழகா "ரோடு" போட்டு இருக்காங்க..!!! # மழைக்கால மெர்சல்கள்..

Wednesday, December 17, 2014

காதல்அன்பு காட்டி அக்கறை கொள்வது என் அன்னை எனில்,

காதலுடன் கண்டிப்பு காட்டுவது நீயடி ஹனி..எல்லாருக்கும் தாய் தான் முதல் தேவதை.. 

நீ எனக்கு இன்னொரு தாயாய் வந்த தேவதை..

# லவ்யூடி ஹனி..


பல பெண்களின் கண்கள் கவிதை பேசும்..

ஆனால் கவிதையாய் கண்கள் கொண்டவள் நீயடி..


அன்பான பார்வையில் ஹைக்கூவையும்,

காதல் பார்வையில் கஸலையும் பேச உன்னால்

மட்டுமே முடிகிறது..உன் கண் அசைவுகளின் முன்னே கவிதையின் 

அத்தனை வடிவங்களும் சரண்டர் ஆகுதடி..

Saturday, December 13, 2014

ஜோக்கூ..63உன்னுடன் ஒப்பிடுகையில் வாத்து முட்டை கூட  

வாசனையாய் இருக்குதடி # குளிச்சுத் தொலைடி குரங்கே..என் கண்களின் வழியே காதல் வைரஸ் செலுத்தி உன் 

முகத்தை சிவக்க வைக்கிறேன்..#"சென்னைக் கண்" பாதிப்பு..


GLORY ஆகும் கண்களினால் என் இதயத்தை திருடும் 

CHORI யே..#லவ்யூடி ஹனி..


நீ உளறிக்கொட்டுவதை கூட என்னால் புரிந்து 

கொள்ள முடியும்..கண்களால் பேசுகிறேன் என்று 

காண்டு ஆக்காதே ப்ளீஸ்..


என் கண்களைப் பார்த்து கவிதை சொல்லுடா 

என்கிறாய்..நான் கழுதையைப் பார்த்தே கவிதை

சொல்லுவேன்..கண்களைப் பார்த்து சொல்ல முடியாதா என்ன..?

Friday, November 28, 2014

மாத்தி யோசி .. 78
கார்,பீர் ரெண்டுக்கும் பேரு வைக்கும் முன்னாடி நியூமராலஜி 
 
பார்க்க சொல்லணும்..நிறைய பிராண்டு வருது,
 
நல்லா இருக்கவும் மாட்டுது விற்கவும் மாட்டுது..அண்ணா நகர்ல இருந்து நான் ஆபிஸ் வர்றதுக்கு 
 
பதிலா ஆப்போசிட்ல போனா ஆந்திராவுக்கே 
 
போயிடலாம் போல..# TERRIFIC TRAFFIC..பீர் 100 ரூபாயா இருக்கும்போது கூலிங் இல்லாமையே 
 
110 க்கு வித்தானுங்க..இப்போ விலை ஏறினதுக்கு அப்புறம் 
 
கூலிங் பீர் மட்டும் தான் இருக்காம்..அது 130 ரூபாயாம்.. 
 
கேரளா போல இனி வீட்டிலேயே தான் காய்ச்சணும்..வீடு வாங்குறீங்களானு கேட்டு ஒரு பொண்ணு 
 
போன் பண்ணுச்சு..கல்யாணம் பண்ணிக்க பொண்ணுதான் 
 
கிடைக்க மாட்டுது..மெயில் ஐடி கொடுங்க என் 
 
போட்டோவும் ஜாதகமும் அனுப்புறேன்..அப்புறம் தான் 
 
வீடு பத்தி யோசிக்கணும்னு சொன்னேன்..
 
சிரிச்சுக்கிட்டே போன் வச்சிட்டா..SMS வருமா...? 
 
# I am waiting  சட்டையில 4வது பட்டன் 4சென்டிமீட்டர் கீழே இறக்கி 
 
காஜா எடுத்து இருக்கானுங்கன்ற ரேஞ்சுக்கு ஃபெயிலியருக்கு 
 
காரணம் சொல்றானுங்க..

Tuesday, November 25, 2014

மாத்தி யோசி .. 77க்ளைமேட் மாறினதுல ஒரு தொல்லை ஆபிஸ்க்கு ரெண்டு 
மணி நேரம் பஸ்ல போறது தான்..# ஹக்கீஸ் 
போட்டுட்டா போக முடியும்.. நானும் எவ்ளோ நேரம் 
எச்சில் துப்பியே சமாளிக்கிறது.. சிகரெட் விளம்பரத்தில பிழியுறதைப் பார்த்தா நான் 
வெளியில இருக்குற கருப்பை விட பல மடங்கு உள்ளே 
இருக்கும் போலயே..# கிங்ஸ் குழிக்குள்ள தள்ளாம 
விடாது போல    நான் கம்யூனிசத்துக்கு மாறிட்டேன்..இனிமே இட்லி 
சுடாதீங்கனு என் அம்மா கிட்ட சொன்னேன்..உனக்கு 
வேணாம்னா போடானு சொல்லிட்டாங்க..
#அவங்க அ.தி.மு.க. ஆதரவாளர் போல..கோயம்புத்தூர் க்ளைமேட்கே எனக்கு எட்டாவது , 
ஒன்பதாவது ஓட்டையில புகை வந்துச்சு..இங்க வந்ததுக்கு 
எக்ஸ்ட்ரா ரெண்டு ஓட்டை உருவாகி புகையா போகுது..இப்படி எல்லாம் புலம்பும்போது தான் தோணுது 
இன்ஜினியரிங் படிச்சதுக்கு பதிலா இட்லி மாவு 
அரைச்சி வித்து இருக்கலாம் போல..

Saturday, November 22, 2014

ஏன் இப்படி ...83


பல வருஷம் கழிச்சி இன்னைக்கு தான் எக்சர்சைஸ் 

பண்ணலாம்னு மொட்டை மாடிக்கு போனேன்..

செம மழை..# இந்த சிங்கிள் பேக் தான் நிரந்தரம் போல..காலையில எழுந்து எக்சர்சைஸ் செய்யணும்னு அலாரம் 

வைக்கும்போது இருக்குற எனர்ஜி அலாரம் அடிக்கும்போது 

எங்க போகுதுனே தெரியலை..#எவ்வளவு சோம்பலா இருக்கு ட்ராபிக் ஆக காரணமே ஒழுக்கமின்மை தான்னு புலம்பிட்டு 

எங்களை ஓவர்டேக் பண்ணி எதிர் திசையில் இருந்து 

வண்டி வர முடியாத அளவுக்கு ப்ளாக் பண்ணி

நிக்கிறான் ஒருத்தன்..#டேய்.. உங்களுக்கு 

வெட்கமே இல்லையாடா..?மச்சி நீ சொன்னதை நான் லைக் பண்றேன்டா..

எங்கடா கமெண்ட் போடுறதுன்னு கேட்குறான் ஒருத்தன்..

நேர்ல பேசிக்கிட்டு இருக்கும்போது

#அடேய்..பித்து பிடிச்சி திரியுறீங்களேடாஉதார் விட்டுட்டு போன இடத்தில உதை வாங்காத 

குறையா அசிங்கப்பட்டு வந்து கூட மறுபடியும் அதே 

தவ்லத்தோட திரியுறானுங்க#டேய்..நான் தான் 

கூட இருந்து பார்த்தேனேடா..

Thursday, November 20, 2014

மாத்தி யோசி .. 76லவ் பண்றவனிடம் கூட நட்பு வச்சுக்கலாம்..
 
ஆனா காலம் கடந்தும் இன்னும் கல்யாணம் ஆகாதவனுங்க 
 
கூட மட்டும் சகவாசமே வைக்கக்கூடாது..
 
#காது வலிக்க புலம்புறானுங்கஎன் அண்ணனுக்கு(கஸின்) 3 வருஷமா பொண்ணு 
 
தேடுறாங்க..இப்போ வந்தவாசில ஒரு பொண்ணு 
 
இருக்குனு சொன்னாங்க..காட்டுவாசியா இருந்தாலும் 
 
ஓகே கட்டி வைங்கன்னு சொல்லிட்டேன்.. அவதார்ல வர்ற இக்ரானை கூட ஈஸியா மெயின்டைன் 
 
பண்ணிடலாம் போல..இந்த பொண்ணுங்களை மேய்க்கிறது 
 
கஷ்டம்டா சாமி..#எத்தனை கேள்வி கேட்குறாளுங்க..எவன் தான் ஊழல் பண்ணலை,லஞ்சம் வாங்கலைன்னு 
 
நாமே சமாதானம் சொல்லிக்கிற அளவுக்கு கெட்டுப்போயி
 
இருக்கோம்..#சுஜாதா காலமாயிட்டார்..
 
ஷங்கர் மட்டும் போராடுனா போதுமா..? 
 
யோசிப்போம் மக்களே..பாஸ் கிட்ட பேசும்போது நவரசங்கள் போக பாதரசத்தோட 

சேர்த்து பத்து ரசமும் காட்டுறானுங்க முகத்தில..

எங்கடா கத்துக்கிட்டீங்க இந்த வித்தையை..

# சொம்புகளின் சாகசங்கள்..

Tuesday, November 18, 2014

ஏன் இப்படி ...82


பத்தாவது படிக்கிற பக்கத்துவீட்டு பையன்கிட்ட 

விளையாட்டா கேட்டேன்.. பள்ளிப்பேருந்துக்கு எவ்ளோ 

கட்டணம்னு.. புரியாம முழிச்சவன்கிட்ட விளக்கி சொன்னதும் 

ஸ்கூல் பஸ் கு எவ்ளோ சார்ஜ்னு தமிழ்ல கேட்க 

வேண்டியது தானேனு சொல்றான்..# தமிழ் வாழ்க..!!!!!!!!!!!!வனரோஜா இல்ல வாசமில்லாத ரோஜா போனா கூட 

வயித்தை உள்ளே இழுத்துக்குறேன்..

#ஐயையோ வயசாயிடுச்சோ..தொப்பை தொல்லை 

தாங்க முடியலையே நாராயணா..காலா காலத்துல கல்யாணம் ஆகாம இருக்கவன் 

கனவுல கன்னிப்பெண்கள் தானே வரும்..வெட்கமே 

இல்லாம CANDY CRUSH வருதுனு சொல்லுது ஒரு நாயி..நண்பர்களின் சோகத்தில் பங்கெடுத்துக்கலாம்னு 

துணைக்கு போனா,நம்மை சிக்க வச்சி நுங்கை 

எடுத்துட்டு விடுறானுங்க..

#கூட வந்தது ஒரு குத்தமாடா..???லோக்கல் கேபிள்ல ராத்திரி 10 மணிக்கு செம 

சூடான பொண்ணை வச்சி லேகியம் வித்தானுங்க..

குப்புறப்படுத்துட்டு காலையில எழுந்து பார்த்தா 

கந்த சஷ்டி கவசம் ஓடுது..

Sunday, November 16, 2014

மாத்தி யோசி .. 75


4 நாளா இந்த சமூகத்தை கம்யூனிஸக் கண்கள் 

கொண்டு பார்க்கிறேன்..#"சென்னைக் கண்" 

செமையா சிவந்துடுச்சுயுவி எப்படியும் உலகக்கோப்பை அணியில் இடம் 
பிடிப்பார்னு இன்னும் நம்புறானுங்க..# தட் நெல்லா..? 
இனிமே தான் வயலை வாங்கி,நட்டு மொமெண்ட்..ராயுடு,ரோஹித் சதமடிச்சதுக்கு திட்டுறானுங்க 
கம்பீர்,ஷேவாக்,யுவராஜ் சிங் எல்லாரும் அணியில் 
இடம் பிடிக்கணும்னா 20 பேரு வச்சி தான்டா விளையாடணும்..மேட்சில ஒரு கட்டத்துக்கு பிறகு எவனுமே டீம்
ஸ்கோர் பார்க்கலை..ரோஹித் ஷர்மா ஸ்கோர் மட்டும் 
தான் கவனிச்சோம்..#நீ பின்னு மச்சி..இன்னும் நாள் இருக்கே..தங்கம் தகதகனு மின்னும்னு சொன்னானாம் தமன்னா 

இடுப்பை பார்க்காதவன்..என்னை வேலை செய்ய 

விட்டாதானேடா தெரியும்..#நான் செய்வேன்டா..

நல்லா செய்வேன்..

Wednesday, November 12, 2014

கம்யூனிசக் கத்தி..எப்பவுமே கதை கேட்காதவரு இந்த படத்தில தான் கேட்டு 
 
இருப்பாரு போல..நல்லவேளை கத்தி அவ்ளோ 
 
மொக்கையா இல்ல..கதிரேசனோட சுருக்கம் கத்தியாம்.. ஒருவேளை சுந்தரேசனு 
 
பேரு வச்சி இருந்தா படம் பேரு சுத்தினு இருக்குமோ..?து.ம.து படத்துல வர்ற பாத்ரூம் அழுகை போல இல்லாம 
 
சுமாராவே அழுது இருக்காரு..இருக்காத பின்னே..?
 
சாரோட சமீபத்திய படங்களைப் பார்த்து நாம கதறி 
 
அழுததை கவனிச்சு இருக்காருல..ப்ரோ..ஒரு சின்ன வேண்டுகோள்.. கண்ணை சிமிட்டி 
 
வாயைக் கோணி வசனம் பேசி காமெடி ட்ரை 
 
பண்ணாதீங்க ப்ரோ..கஷாயம் குடிக்கிற மாதிரி 
 
செம கடுப்பா இருக்கு..கோலா கம்பெனிக்காரன் தான் இந்த வேலை 
 
பார்த்து விட்டுட்டான்..நகைக் கடைக்காரன் மேல 
 
ஏதாவது கேஸ் இருக்கானு பார்த்துக்குங்க ப்ரோ.. 
 
அப்புறம் ஈமு கோழி கதை ஆகிட போகுது..
நீங்க விளம்பரப்படம் நடிக்கிறதை நிப்பாட்டிட்டு கதைக் 
 
கேட்டுட்டு நல்ல படமா நடிங்க ப்ரோ..அது போதும்..
 
பயபுள்ளைங்க சமாளிக்க படாதபாடு படுறானுங்க பாவம்..ப்ரோ..நீங்க எதுக்கும் சொல்வதெல்லாம் உண்மை,நீயா நானா
 
ஷோவெல்லாம் பாருங்க..ரியாக்ஷன் எப்படி குடுக்கணும்னு
 
தெரியும்..இன்னொரு விஜயை பார்க்கும் போது நீங்க கொடுத்த
 
ரியாக்ஷன்ல காலையில சாப்பிட்ட இட்லி வெளிய வர்றது 
 
போலவே இருந்துச்சு எனக்கு..மக்கள் பிரச்சினையைப் பேசுற சமூகப்படம்னு சொன்னதும் 
 
எனக்கு புதிய கீதை,மதுர,தலைவா லாம் ஞாபகம் வந்து 
 
கிலி ஆயிடிச்சு..நல்லவேளை..நன்றி ப்ரோ..


மோடி கூட கை குலுக்கி,ராகுலை பார்க்கிறேன்னு
 
பீதியக்கிளப்பி அம்மாகிட்ட ஆசீர்வாதம் வாங்கி அப்படியே
 
கம்யூனிசம் பேசி குழப்பி..#ண்ணா.. சூப்பர் ஸ்டார் ஆக 
 
அரசியல் தகுதி வந்துடுச்சிங்கண்ணா..

Wednesday, November 5, 2014

மாத்தி யோசி .. 74

இன்னைக்கு லீவ் போடு மச்சி கத்தி படத்துக்கு போலாம்னு 

சொன்னான் ஒருத்தன்..நான் கம்பெனிக்கே போறேன்னு
 
சொல்லிட்டேன்..# ஏழாம் அறிவுக்கு 1000,அஞ்சானுக்கு 500,

யானுக்கு 420 செலவு பண்ணதே இன்னும் வலிக்குதுமழையில நனையும்போது அவ்ளோ ஆனந்தமா இருக்கு..

அப்புறமா நச நச னு அவஸ்தையா இருக்கு..#DELICATE POSITIONபொண்ணுங்களோட விதண்டாவாதத்துக்கு முன்னாடி 

பசங்க எவ்ளோ விவாதம் பண்ணாலும் எடுபட மாட்டுது..

என்னமா பேசுறாங்க..#அதனால தான் "MOTHER TONGUE " கோ..விட்டுக் கொடுத்து வாழணும் இது TEAM WORK.. 

போட்டுக் கொடுத்து பொழப்பை ஓட்டணும்..

இது SHAME WORK..அது தான் நடக்குது இங்க..

#ஆபிஸ் அவஸ்தைகள்


இப்போ வெல்லாம் அப்புறம் மச்சி னு கேட்டாலே 

சரக்கடிக்கலாமா னு கேட்குறானுங்க..

# நல்ல நட்பு வட்டாரம்..(என்னையும் சேர்த்து தான்..)

Monday, November 3, 2014

ஏன் இப்படி ...81


காய்ச்சலா இருக்குனு சொன்னா Y ma Rain la Dipped ah னு 

கேட்குறா ஒருத்தி ..# காய்ச்சலே தேவலாம் போல 

இருக்கே கடவுளே ..எவனுக்கோ பொண்ணை கட்டிக் குடுத்துட்டு என் கிட்ட 

வந்து ஏன் இன்னும் குழந்தை பிறக்கலைன்னு கேட்டா 

நான் என்ன பண்ணுவேன்..# MR ஆன என் ஆபிஸ் அவஸ்தைகள்..
தீபாவளிக்கு ஒரு ஹோட்டல் கூட இல்லை .. 

ஆனா அத்தனை ஒயின்ஸ் ஷாப் பும் திறந்து இருக்கு..

# பாண்டிச்சேரி பகீர் இம்சைகள்..# குடும்பத்தோட 

பயணம் பண்ணுவதில் எவ்ளோ பிரச்சினைகள்..குழந்தைகளுக்கு அம்மாவை தான் அதிகம் பிடிக்கும்னு 
 
தெரிஞ்சும் உனக்கு யாரைப் பிடிக்கும்னு ஓயாம கேட்டு 
 
இம்சை பண்றதைப் போல உங்க சந்தோஷத்துக்காக நாங்க 
 
உங்களுக்கு கட்டுப்பட்டு உங்க சொல்படி தான் 
 
நடக்கிறோமானு எத்தனை தடவை தான் கேட்பீங்க..? 
 
முடியல பாஸ் / கேர்ள்ஸ்..
தீபாவளியை எப்படிடா கொண்டாடுனீங்க னு கேட்டா 

செம சரக்கு மச்சி.. புல் போதை னு சொல்றானுங்க..

# டேய்..என் கிட்ட மட்டும் ஏன்டா இப்படி சொல்றீங்க..

ஏற்கனவே எவனும் எனக்கு பொண்ணு குடுக்க மாட்றான்..

Thursday, October 30, 2014

மாத்தி யோசி 73


Temple run ல வர்ற ராட்சசனை விடவும் மோசமா மேல 
 
விழுந்து பிறாண்டுரானுங்க உங்களை  follow up பண்றேனு 
 
# வேலை செய்ய விடுங்கடா டேய்..
பண்டோரா கிரகத்தில இருந்து பாகிஸ்தான்,பலுசிஸ்தான் 

வரைக்கும் நல்லா தமிழ் பேசுறாங்க..நம்ம பய புள்ளைங்க 

இன்னும் சரியா பேச மாட்டுதுங்க..
லிட்டருக்கு 4 சொட்டு உஜாலா விளம்பரம் போல 
 
ரெண்டு கண்களுக்கு 4 சொட்டு னு போய்க்கிட்டு இருக்கு..
 
#"சென்னைக் கண் " சங்கடங்கள்..
அடுத்த வீட்டுல என்ன நடக்குதுனே தெரியாம இருக்குற 
 
அபார்ட்மெண்ட் வாழ்க்கை எவ்ளோ நல்லதுனு உதவி 
 
வேணுமானு கேட்டு உதை வாங்கும்போது தான் தெரியுது
பசங்க பொண்ணுங்களோட போன்ல கடலை 

போடுறபோது ப்ரோமோஷன் கால்னு எதாவது 

பொண்ணு பேசுனா ஜிவ்வுனு இருக்கு..

#நானும் ரவுடிதாண்டா.. என் கையிலயும் முத்தம் குடுங்க..

Tuesday, October 28, 2014

ஏன் இப்படி ...80


#Save us @ sangam cinemas னு tag போடலாமான்னு 

யோசிக்க வச்சிட்டானுங்க #யான்யான் படத்துல நிறைய காரணங்கள் இருக்கு 

ஆனா கதையை மட்டும் காணோம் # பெஸ்டிவல் 

மூடையே பாழாக்கிட்டானுங்கJESUS SAVES MINISTRIES தானே..எங்க ஏரியால ஒரு 

போஸ்டர்.. JESUS SAVES "MINISTERS" மதம் பார்க்காமல் 

மம்மியை இயேசு காப்பாத்துவார்னு..


 
நீதி தேவதைக்கே தண்டனை வழங்கிய நீதிபதியைக் 

கைது செய்னு இன்னொரு போஸ்டர்..#பாஸ்போர்ட் 

வாங்கிட்டு பாரின் போயிடலாமா...???அடுத்தவனுக்கு அடிவயித்துல அடுப்பைப் பத்த 

வச்சி பார்க்கிறதுல அப்படி  என்னடா உங்களுக்கு 

ஆனந்தம் #போனஸ் புலம்பல்கள்

Sunday, October 26, 2014

மாத்தி யோசி .. 72


லட்சுமி மேனன் குரல் , உஷா உதுப் 10 வருஷம் முன்னாடி
 
பாடியது போலவே இருக்கு..# மம்தா மோகன்தாஸ்,
 
ரம்யா நம்பீசன் வாய்ஸ்ல இருந்த கிக் இல்லையே..
ரேடியோ மிர்ச்சியில மறுபடியும் சுச்சி வாய்ஸ் 
 
கேட்டதுக்கு அப்புறம் செம எனெர்ஜியா இருக்கு..
 
# ப்ளைட் நம்பர் 983.. I am Waiting...சட்டை போடாம கூட ஆபிஸ் போயிடலாம் ஆனா 
 
சன் ஸ்க்ரீன் லோஷன் போடாம போகக் கூடாது போல..
 
# ச்ச எவ்வளவு அலைச்சல்..இவனுங்க கஸ்டமர்ஸா 
 
இல்ல "கஷ்டமர்ஸா"..முடியலடா டேய்
அணில் - மகேஷ் பாபு புதுசா ஏதோ PARAGON னு ஒரு 
 
படம் நடிச்சி இருக்காறாமே.. ரீமேக் பண்ணிடலாமா

அணில் குஞ்சு - ண்ணா.. அது செருப்பு விளம்பரம் ங்ணா..இந்த டோலக்பூர் எங்க இருக்குனு தெரிஞ்சா 

சொல்லுங்கப்பா.. மலை,கடல்,பாலைவனம்,காடு,பீம்,

சுட்கி,மானங்கெட்ட மகாராஜா னு எல்லாமே இருக்கு..

வெகேஷனுக்கு போகலாம்னு இருக்கேன்..

Friday, October 3, 2014

ஏன் இப்படி ...79

தமிழ்,தெலுங்கு சினிமாவுல வருவதை விட எதிர்பார்க்காத,

அதிகமான ட்விஸ்ட் என் வாழ்க்கையில வருது.. 

அட தேவுடா...!!!!!!!!!!!!!!!!
நம்ம ஊருல எறும்பு புத்து,ATM க்கு அடுத்து எண்ணிக்கையில 

இன்ஜினியரிங் காலேஜ் தான் இருக்கும் போல.. ஏன் இப்படி..இஞ்சினியர்கள உருவாக்க சொன்னா இயந்திரங்களை 

உருவாக்குறானுங்க..நல்லதில்லை.. நல்லதில்லை.. 

இது நாட்டுக்கு நல்லதில்லை...

இந்தியா FIFA வேர்ல்ட் கப் உள்ள போக ஒரே வழி நாம 

அத நடத்துறது தான்..# யாராச்சும் உதவி பண்ணுங்கப்பா ப்ளீஸ்..
தண்ணியை வச்சி மோர் னு எழுதி இருந்தாலே நாங்க மொண்டு 

மொண்டு குடிப்போம்.. தாளிச்சு வச்சா குடிக்க மாட்டோமா..? 

# ஆபிஸ் அலப்பறைகள்
இங்கிலீஷ் ல சொல்லிக்கொடுத்தாலே அது இன்டர்நேஷனல் 

ஸ்கூல் ஆயிடுமாடா.. # ச்ச.. ஊருக்குள்ள எங்க 

பார்த்தாலும் INTERNATIONAL SCHOOL
வாழைப்பழத்தை விட அதோட தோல் அதிகமான 

எடை இருக்கு..கேண்டீனுக்கு கொடுக்கவே ஸ்பெஷலா 

விளைய வைக்கிறானுங்களா..? # ஆபிஸ் அலப்பறைகள்
ஹைவேஸ் ல போகும்போது இந்த அரை லூசுங்க அடிக்கிற 

ஹாரன் சத்தத்துல ஹார்ட் அலேக்கா வெளிய வரும் 

போல இருக்கு.

திருவிழா பேனர்ல அம்மனை விட அரை அடி 

பெருசா அனுஷ்கா ,ஹன்சிகா போட்டோ..

# அம்மன் அருள் பொருகனு தமிழை தப்பா வேற எழுதிக்கிட்டு 

# பாவம் டா அம்மன்
ஆடி மாத தள்ளுபடி ல அவ கூட ஜவுளிக்கடைக்கு போகாம 

ஆடிட்டிங் னு  சொல்லி தப்பிச்சு,போன சண்டே மாட்டிக்கிட்டேன்..

# 3 கடை, 7 மணி நேரம், 4200 ரூபா சுவாகா...

Sunday, September 28, 2014

ஹனி
என் தூக்கம் கெடாமலிருக்க உனதாசையை மறைத்து 


மவுனிக்கிறாய் நீ.. உன் ஆசை அறிந்த பின் தூக்கம் 

தொலைத்து தவிக்கிறேன் நான்..

 


என் காதலை உனக்கு உணர்த்த வேண்டுமென 

நினைக்கிறேன் நான்.. என்னை உணர வைக்கிறாய் நீ..


 

செடிகளில் பூக்கள் பூப்பது  இயற்கை தான்.. உன்னைப் பார்க்கையில் 

என் ஒவ்வொரு செல்களிலும் பூக்கள் பூக்கிறதே..!!!
உன் ஓர விழிப்பார்வையில் என் ஐம்புலன்களிலும் 

ATOM BOMB வெடித்து விளையாடுகிறாயே ஹனி..
நீ சாதாரணமாக தான் புன்னகைக்கிறாய்..
 
எனக்குள் தான் எண்ணிடலங்கா பூகம்பங்கள்..உன் மீதான அதீத அக்கறையில் நான் செய்யும் செயல்களை
 
கண்டிக்கிறாய்.. உன் கண்களில் வழியும் காதலுடன் கூடிய
 
சிரிப்பை நான்  அறியேன் என்றெண்ணி..நான் வாசனைத் திரவியங்களை உபயோகிக்க மறுப்பதன்
 
காரணம் , உன் வாசனைக்கு நிகரான ஒன்று இதுவரை
 
கிடைக்கவில்லை ஹனி..

Wednesday, September 24, 2014

ஏன் இப்படி ...78
நேற்று நண்பனிடம் ரவை உப்புமாவின் கொடுமைகளை 


பட்டியலிட்டு மனதை மாத்தி சேமியா உப்புமா சாப்பிட வச்சேன்.

இரவு என் ரூம் மேட்ஸ் கிண்டியது ரவை

உப்புமா..#வாழ்க்கைன்றது,,!@#$%
 என்னதான் உலகத்திரைப்படமா இருந்தாலும் அதை தமிழ்ல 
டப்பிங் பண்ணி பார்த்தாதான் நமக்கு திருப்தி..
(ஜாக்கி சான் படமே சைனீஸ்ல வெறியாகுது)


தண்ணீர் கலக்காத மோர் தெரியும்..
தயிர் கலக்காத மோர் தினமும் குடிக்கிறேன்..
#ஆபிஸ் கேண்டீன் அவலங்கள்..
5 நிமிஷம் பேசிட்டு இதை வார்த்தை விடாம 4 வரி மெயிலா
அனுப்புங்கனு சொல்றது  என்ன விதமான டார்ச்சர்
# பாஸ் பாறைகள்..இந்த CANDY CRUSH கருமத்தை விளையாட ஆரம்பிச்ச 
அப்புறம் கனவுல எல்லாம் கலர் காம்பினேஷன் பார்த்துட்டு
இருக்கேன்..# DELICATE POSITION
இந்த "CANDY CRUSH" விளையாட ஆரம்பிச்ச அப்புறம் என்

 "LIFE" வீணாப் போச்சு.. # நல்லவேளை நண்பர்கள்  

LIFE அனுப்புனாங்க..இதோ மறுபடி வரேன்..
எல்லா இஞ்சினியரிங் காலேஜ் வாசலிலும் ஏதோ ஒரு 

பேங்க் ATM இருக்கு..# நல்லா இருக்குடா உங்க குறியீடு..அப்படியே மெடிக்கல் காலேஜ் வாசலில் பேங்க் கட்டி 

விடுங்கடா.. போற போக்கை பார்த்தா ஸ்கூல் வாசலிலும் 

கட்டணும் போல..
6 மாசத்துக்கு ஒரு தடவை சிகரெட் விலையை ஏத்திடுறானுங்க.. 

10 வருஷத்துக்கு மேலாக விலை ஏறாம இருக்குற ஒரே 

பொருள் BOOMER BUBBLE GUM தான் போல ..
அவனவன் 6 லட்ச ரூபா சம்பளம் வாங்கிகிட்டு அழகான TL 

ஆன்ட்டிகிட்ட ஆசையாசையா வேலை செய்யுறான்..நான் 4 லட்ச 

ரூபா சம்பளத்துக்கு நரமாமிசம் சாப்பிடுற நாதாரிகள் கிட்ட 

நாயா வேலை செய்யுறேன்..

# சாப்ட்வேர் சரசங்கள் Vs ஆட்டோமோடிவ் 

இண்டஸ்ட்ரி அவஸ்தைகள்..

Saturday, January 18, 2014

கம கம பிரியாணியும் , இரண்டாம் நாள் புளி சோறும்..


கம கம பிரியாணிரெண்டு படமும் ஒண்ணா வந்ததுல எங்க இன்னொரு வில்லு ,

ஏகன் போல ஆயிடுமோனு ரொம்ப பயந்துட்டேன்..நான் அப்பவே சொன்னேன் வீரம் னு  பேரு வச்சதுக்கு பதிலா  

காரம் னு  வச்சி இருக்கலாம்னு.. ஆனா இது டேஸ்ட்டான 

ஹைதராபாத் பிரியாணி..ஹரிக்கு சரியான போட்டி இந்த சிவா தான்..எவ்வளவு அருவா , 

எவ்வளவு ஆட்கள்.. ஒரு குடும்பத்துல எத்தனை பேரு..பொதுவா தல பஞ்ச் டயலாக் பேசினா எனக்கு கொஞ்சம் 

டர் ஆகும்..தமாசா ஆகிடுமோனு.. ஆழ்வார் , ரெட்னு அடி 

கொஞ்சம் பலம்ல.. ஆனா இதுல ஏகத்துக்கும் பஞ்ச டயலாக்..ஆனா ஒவ்வொண்ணும் 

ஜிந்தாக் தாக் ஜிந்தா ஜிந்தாக் ஜிந்தாத் தத்தாக் டைரக்டருக்கு என்ன காண்டோ வேட்டில அழகா இருந்த 

அஜித்தை பாட்டுல கோட்டு போட்டு கோமாளி ஆக்கிட்டான்.. 

என்ன ரசனைடா உனக்கு.. பில்லா பார்க்கல நீ..டிஸ்கவரில ஒருத்தன் போவானே அதை விட அருமையான 

காட்டுக்குள போயி பாட்டு வச்சி இருக்கான்..

மஞ்ச கலருல பேண்ட்டு வேற..DSP காத்தாடி போல ஏண்டி பாட்டை ரீமேக் பண்ணி இருப்பாரே 

அந்த கருமத்தில பழைய கணக்கு பிள்ளை போல வேட்டிக்கு 

கோட்டு போட்டு ஆடவிட்டு இருக்கானுங்க தலையப்பத்தி எல்லாரும் தான் சொல்லிட்டாங்களே.. 

நான் இப்போ ஜொள்ளப்" போறது தமன்னாவைப் பத்தி தமிழ்நாட்டின் பெயரை தமன்னாடு மாத்த சொல்லி மீண்டும் 

ஒரு அறப்போராட்டமே பண்ணலாம்..எல்லாரும் தல 

வரும்போது சீட்டு நுனிக்கு வந்தா நான் தமன்னா வரும்போது..சிறுத்தை படத்திலேயே சிலிர்க்க வச்சி இருந்தானுங்க டார்லிங்க..

வீரம் படத்தில தமன்னா  இன்னும் வீரியத்தோட இருக்கா..ஒரு பாட்டுல மட்டும் கேவலமா மேக்கப் போட்டு காஞ்சுரிங் பேய் 

போல இருந்தா.. பால்கனியில இருந்து பார்த்தே பயந்துட்டேன்..நேத்து நைட் ஷோ KG பிக் சினிமாஸ் ல பாதி பேரு

 தல னு  கத்துனானுங்க.. மீதி பேரு தமன்னான்னு கத்த சக்தி 

இல்லாம வாயில ஜொள்ளு வழிய பெருமூச்சு 

விட்டுக்கிட்டு இருந்தோம்.. வீரம்ல ஷேவ் பண்ண அஜித் பார்த்தா மனதை திருடி விட்டாய்

 பட அண்ணன் வடிவேல் கெட்டப் தோணுவது எனக்கு 

மட்டும் தானா..? அவ்வ்வ்வ் # எங்க ஆத்தா அப்பனுக்கு 

வேற அடுத்த வாரம் தானேடா ப்ரோக்ராம்மு 


இரண்டாம் நாள் புளி  சோறுஇப்போதான் ஜில்லா படம் பார்த்து முடிச்சேன் .. 

# இனி தூங்கினாப்போல தான் 


அட என்னத்த விமர்சனம் பண்ணிக்கிட்டு.. 

சுறா பார்த்தவுடனே வேட்டைக்காரன் தேவலாம்னு தோணுச்சு.. 

தலைவா பார்த்ததுக்கு இது எவ்வளவோ தேவலாம்..
என்னப்பா எதோ காஜலு பின்னாடின்னு ஏகப்பட்ட 

பில்டப் கொடுத்தானுங்க.. வெள்ளை டிரஸ் போட்ட ஒரு

 மழை டான்சுக்கு ஈடாகுமா..#ரொம்ப காஞ்சு

போயி இருப்பானுங்களோ ப்ரோ நீங்க டேப்பரா நடக்கிறதையும் , கண்ணை  சிமிட்டுறதையும் ,

ஐஸையும் அமிர்தாஞ்சனையும் ஒண்ணா தடவிக்கிட்டு 

பேசுவது போன்ற மாடுலேஷனையும் 

மாத்திட்டாலே போதும் ப்ரோ..
நம்ம டிம்மான் கும்கில கொம்பனுக்கு கொடுத்த மியூசிக்க 

ஆல்டர் பண்ணி அண்ணனுக்கு கொடுத்துட்டாரு போல..

ஹ்ம்ம்..NOT BAD NOT BAD வீரம்ல வந்த அஜித் வீடு தான் இதுல விஜய் தங்கச்சியோட புகுந்த வீடு..

# கருத்து - படம் பேரு தான் பட்டி பார்த்ததுனா வீட்டைக் 

கூட விட்டு வைக்க மாட்டீங்களாடா..எல்லாரும் ப்ரோவ சக்தின்னு கூப்பிட்டா சம்பத் மட்டும் 

சரியா நந்தினு சொல்றாப்புல..#எனி உள்குத்து..விஜயோட எந்த படத்திலயும் இல்லாம இந்த படத்தில

நிறைய குறியீடுகள் இருக்கும் போல..போலிஸ பார்த்து யாரும் சிரிக்கக்கூடாதுன்னு சார் 

சொல்றப்பவையெ சிரிப்பு வந்துடுது.. சாரி ப்ரோ..அமலா பாலுக்கு காக்கி சட்டைப் போட்டப்போ பால்வாடி 

புள்ளை போல இருந்துச்சு..காஜல் போடும்போது 

கான்வென்ட் புள்ள போல இருக்கு..