Sunday, February 27, 2011

3G யின் வாழ்க்கையில் இதுவரை வந்த தேவதை ஸ்திரீகள்…Part 3

ஹ்ம்ம்…இப்படியாக என் பள்ளிக்கூட காதல்கள்

என்னை கடந்து போயின…

ரெண்டு பொண்ணுங்களை பத்தி சொல்லாம விட்டுட்டேன்…

அதுல ஒருத்தி ஜெயந்தி…

என்னைவிட ஒரு வருஷம் ஜூனியர்…எங்க தெருவில

தான் இருந்தா…அவங்களோடது தெலுகு குடும்பம்…

( காதலுக்கு ஏதுடா மொழி…" மொழியே " காதல் தானே..)

அவ அண்ணன் பேரு கிரி…அவர் எங்க ஏரியா கிரிக்கெட் டீம் ல

சீனியர் செட்டு… நாங்க ஜூனியர்…நான் ஆல் ரவுண்டர் னு  

நானே சொல்லிக்கிட்டு திரிவேன்…
 
( இந்தியன் ப்ளேயர்ஸ் போல…)

அவங்க வீட்ல இருக்குறவங்க யார்கிட்டயும் நான் 

அவ்வளவா பேசுனது இல்ல… அவளையும் அவ அண்ணனையும் 

தவிர… எப்பவுமே தெருவுல விளையாடிகிட்டு கூச்சல் 

போட்டுக்கிட்டு இருந்ததால எங்க  பசங்களை யாருமே 

வீட்டுக்குள்ள விட மாட்டாங்க… 
 
( எப்படிடா விடுவாங்க…எப்ப பாரு அழுக்கு டவுசரும்…

காஞ்ச தலையுமா தானே இருந்து இருப்பீங்க…)

எது எப்படியோ அவகிட்ட ஸ்கூல் ல வச்சி பேசிடுவேன்… 

அவளும் என்னை பேர் சொல்லி தான் கூப்பிடுவா… 

(கூப்பிட தானே நாயே பேரு வச்சாங்க… 

அப்புறம் என்னை பெருமை…)
 
நல்லவேளையா…என்னை அவ அண்ணா னு கூப்பிடலை… 

அப்படி மட்டும் சொல்லி இருந்தான்னா… 
 
( என்ன நாயே பண்ணி இருப்ப… வேற பிகர்

பின்னாடி போயிருப்ப…) 
 
ச்சி..இப்படி ஒரு கெட்ட எண்ணத்தோட என்கூட 

பழகாதேன்னு கண்டிப்பா சொல்லிருப்பேன்…
 
எங்க ஸ்கூல் வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்டது… எங்க தொகுதி ல அப்பவெல்லாம் 4 , 5 வகுப்புகளில் முதல் 3 இடம் 


பிடிக்கும் மாணவ / மாணவியருக்கு ஸ்காலர்ஷிப் போல ஒண்ணை


தருவாங்க… கொஞ்சம் பணம்..எவ்வளவுன்னு ஞாபகம் இல்லை… 

ஒரு வருஷத்துக்கு தேவையான நோட்டுகள்… ஜாமின்ட்ட்ரி 


பாக்ஸ்…etc…with ஒரு மெத்தை… அந்த பஞ்சு மெத்தையை எங்க

அம்மா அழுக்கா இருக்குனு ஊற வச்சி துவச்சி உப்ப

வச்சி தூக்கி போட்டாங்க…
 
நான் ஏற்கனவே 4 வதில் அதை வாங்கி இருக்கேன்…

இந்த தடவை 5 வதில்… நான் , ராஜ் குமார் , ஜெனிபர், 4 வதில்

இருந்து ரெண்டு பசங்க மற்றும் ஜெயந்தி…
 
யார் இந்த ஜெனிபர் னு கேட்டீங்கன்னா… கொஞ்சம் wait பண்ணுங்க…


இந்த பதிவு முழுக்க ஜெயந்தியையும் , ஜெனிபர் ரையும் பத்தி

மட்டும் தான்… 
 
இந்த பதிவை எழுதும் போது தான் பழைய பிரெண்ட்

ஒருத்தனுக்கு போன் பண்ணி ஜெயந்தியை பத்தி விசாரிச்சேன்…

( என்ன…எதாவது சான்ஸ் இருக்கானு நாக்கை தொங்க போட்ருப்பே …)

வாய்ப்பு இருக்குமான்னு… ( நான் சொல்லலை…) 
கண்டிப்பா வாய்ப்பு இருக்குடா…ஆனா அதுக்கு அவ புருஷனும்

அவ குழந்தைகளும் ஒத்துக்கனுமேனு சொன்னான்…
 
(என்னது…குழந்தைகளா… 

பிம்பிளிக்கி…பிளாப்பி..மாமா…பிஸ்கோத்து…)
 
அட…கடவுளே இந்த கொடுமை எப்பட நடந்தது னு கேட்டா…


இந்த விபத்து நடந்து 3  வருஷம் ஆச்சாம்… 

பொண்ணு பேரு பூஜவாம்… ( அதெல்லாம் எதுக்குடா உனக்கு…)
 
சரி…நல்லா  இருக்கட்டும்…  ( இது வாழ்த்து மாதிரி தெரியலையே 

மவனே…வயித்தெரிச்சல் மாதிரில தெரியுது…)
 
அப்போ…அந்த மொட்டை மாடி பறக்கும் முத்தங்களும்… 

காக்கா கடி கடிச்ச தேன் மிட்டாயும்… அவங்க வீட்டு சூடான 

வெண் பொங்கலும்… ( நாயே…திங்கறதிலையே இரு… ) 

என் மேல காட்டிய அன்பும்..அத்தனையும் நடிப்பா…

சொல்லு ஜெயந்தி வெறும் நடிப்பா… ( ஆமாண்டா…)

சரி… விடுங்க சார்.. ஊருக்குள்ள இருக்குது ஆயிரம் கட்சி..

அவ இல்லைனா அவ தங்கச்சி… ஆனா அவளுக்கு தங்கை 


இல்லையே… ( உன் கூட தங்க இல்லை னு  புலம்புற…சரியா…? 
 
அடுத்ததா ஜெனிபர்… ஜெனிபர்…  
கூடவே இருக்குற வரைக்கும் அந்த அன்பு புரியாது… 

அவங்க பிரிஞ்சி போன அப்புறம் தான் நாம பீல் பண்ணுவோம்…

இதே தான் நடந்தது எனக்கும்.. இவ எனக்கு 3 வதில் இருந்தே நல்ல

பிரெண்ட்…நான் கிறிஸ்டியன் பிரபா வை காதலிக்கிறேன்னு இவ


கிட்ட தான் முதல்ல சொன்னேன்… எனக்கு அப்ப தெரியலை…

இவ பத்ரி பட பூமிகா போல இருந்து இருக்கான்னு…

அப்ப ஆரம்பிச்ச சண்டை…எங்க ரெண்டு பேருக்குள்ளையும்…

வழக்கம் போலவே நானும் இவ கிட்ட அவளை பத்தியே பேசி


இருக்கேன்…செம காண்டு ஆகிட்டா…
 
எனக்கு உண்மையிலே தெரியாது ஜெனி… 

தெரிஞ்சி இருந்தா உன்னை நான் மிஸ் பண்ணி இருக்க மாட்டேன்…

( பின்ன…என்ன கிஸ் பண்ணி இருப்பியோ…? )
 
அவ வீடு எங்க வீட்ல இருந்தும்..பிரகாஷ் வீட்ல இருந்தும் பக்கம்… 


பிரகாஷும் அவ கிட்ட ஒரு நல்ல பிரெண்டா தான் பழகினான்.. 

என்னை போலவே… எங்களால அப்போ அவளை தப்பா நினச்சி 

பார்க்க தோணலை… ஆனா.. ஜெனி யும் நல்ல அழகா தான் இருப்பா…

ஆனா என்ன கொஞ்சம் குள்ளம்…( இவரு அப்படியே ஆறு அடி 

இருந்தாரு...)

ஜெனி ..Do you remember…? நீயும் நானும் அந்த ஸ்காலர்ஷிப்
 
வாங்கிட்டு H.M மோட  மாருதி Omni ல வந்து கிட்டு இருந்தோம்… 


எனக்கு ஒரு பக்கத்தில நீ…மறுபக்கத்தில ஜெயந்தி… 
 
( உண்மையை சொல்லு…அவளுங்களாவா வந்து 

பக்கத்தில உட்காந்த்தாளுங்க…)

அந்த இடத்தை பிடிக்க நான் பட்ட பாடு இருக்கே…

அய்யையோ… அந்த ரெண்டு சின்ன பசங்களும்…
 
( என்னது..சின்ன பசங்களா…? அப்போ ஐயாவுக்கு என்ன வயசுங்க…? )
 
அதாங்க நாலாவது படிக்கிற அந்த பசங்க ரொம்ப கரைச்சல் 

குடுத்தானுங்க…அப்புறம் சீனியாரிட்டியை  காட்டி பயமுறுத்தி

நான் போயி நடுவுல உட்காந்துட்டேன்…
 
ஜெனி… தூக்கம் வருதுன்னு நீ என் தோள்ல சாஞ்சி படுத்த…

நான் உன்னை தட்டி விட்டுகிட்டே வந்தேன்… அப்ப நீ அழுத..


எனக்கு புரியலை…இப்ப நினச்சி பார்த்த ஏக்கமா இருக்கு ஜெனி…
 
( ரொம்ப காஞ்சு போயி இருக்குறதாலையா…? )

கடைசி வரைக்கும் நான் உன்னை கண்டுக்கவே இல்லை 

ஜெனி…அதுக்காக இப்போ மன்னிப்பு கேட்டுக்குறேன்…
 
உனக்கு ஒரு விஷயம் தெரியுமா… ஜெனி… 4 மாசத்துக்கு 

முன்னால நான் பிரகாஷ்கூட பேசிகிட்டு இருந்தேன்…

அவனுக்கு நான் போன் பண்ணினதே உன்னை பத்தி எதாவது 

details தெரியுமான்னு கேட்கத்தான்…டே..பிரகாஷ் . சாரி 

மாமா ..கோச்சுக்காதே… நான் உன்கிட்ட அன்னைக்கே

உண்மையை சொல்லிட்டேன்…
( அந்த ராணியை பத்தி சொல்லும்போது இன்னொரு

பொண்ணுன்னு சொன்னியே…அது இவ தானா… 

இதெல்லாம் ஒரு வாழ்க்கை வரலாறுன்னு எப்படி 

Follow  பண்றேன் பார்த்தியா…? )


அப்ப தான் அவன் சொன்னான்… நீ இதுக்கு முன்னாடி நான்
 
குடி இருந்த அதே வீட்டுல தான் குடி இருக்குறதா… 

பிரகாஷுக்கும் , சந்தோஷுக்கும்  தெரியும்… நான் 


அன்னைக்கு எவ்வளவு சந்தொஷப்பட்டேன்னு…
 
நான் எட்டாவது படிச்சி முடிக்கிறவரையில் ஒரே வீட்டில் 

தான் குடி இருந்தோம்…அந்த ஓனருக்கு மூணு பசங்க…

ஒரு பொண்ணு.. அந்த மூணு அண்ணனுங்களுக்குமே நான் 

ரொம்ப  pet… அந்த அக்கா கிட்ட மட்டும் எப்பவுமே கொஞ்சம் 

Distance Keep up பண்ணேன்…ஏன்னே தெரியலை… 
 
( என்னது…நீ ஒரு பொண்ணு கிட்ட Distance Keep up 

பண்ணியா….ஆச்சர்யமா இருக்கு…!!!! ) 
 
அதுல ரெண்டாவது அண்ணனுக்கு தான் நான் அன்னைக்கு

உன்னை பத்தி விசாரிக்கலாம்னு போன் பண்ணேன்…


நான் : அண்ணா.. உங்க வீட்ல ஜெனிபர் னு ஒரு 

பொண்ணு குடி இருக்காளா…


அவர் : ஏண்டா கேட்குற…அப்படி யாரும் இல்லையே…
 
நான் : அண்ணா…நல்லா யோசிச்சி பாருங்க… எங்க பசங்க கிட்ட

இருந்து உறுதியான தகவல் வந்து இருக்கு…அவங்க மொத்தம் 


மூணு பேரு அக்கா , தங்கைங்க… முதல் பொண்ணு பேரு 


ஐயையோ…மறந்து போச்சே..சரி...ரெண்டாவது பொண்ணு 


ஸ்டெல்லா… இவ கடைசி ஜெனிபர்… அண்ணா…பொண்ணு 

கொஞ்சம் குள்ளமா இருப்பா…வட்ட முகம்… யார்கிட்டயும் 

அதிகம் பேச மாட்டா.. பார்த்தாலே நல்ல பொண்ணுன்னு

தெரியும்னா…

அவர் : அட…பாவி… அத்தனை அடையாளமும் சரியா


சொல்றியே டா…உண்மையை சொல்லுடா…


உனக்கு எப்படி தெரியும்…?

நான் : அவ என் கூட 5 வது வரைக்கும் படிச்சவன்னா…


அப்பவே எனக்கு அவ நல்ல பிரெண்ட்…

அவர் : டே…நீயெல்லாம் மனுஷனாடா… 5 வதில் படிச்ச 


பொண்ணை இத்தனை வருஷம் கழிச்சி ஞாபகம் வச்சி


இருக்கே…என்னடா...ஆட்டோக்ராப்பா ..

( ன்னா… உங்களுக்கு தெரியாதுனா… இது ஒரு மோசமான

ஆசாமி ண்ணா…)
 
நான்  : அண்ணா…அதெல்லாம் நேர்ல சொல்றேன்… 


மொதல்ல எனக்காக அந்த பொண்ணுகிட்ட நீங்க பேசணும்…

அவர் : யாராவது தப்பா நினைக்க போறாங்கடா…

நான் : அதனால தான்னா உன்னை பேச சொல்றேன்… 


உங்க தம்பிகிட்ட சொல்லாம்னா அவருக்கும் இன்னும்


கல்யாணம் ஆகலை…அதனாலதான்…நீங்க ண்ணா 


ஊருக்குள்ள ஓர் பவுசான ஆளு…Family Man…
 
அவர் : சரிடா…என்னனு போயி பேசுறது….?
 
நான் : உன் கூட 5 வதில் படிச்ச ஒரு பையன் உன்னை பத்தி 


என் கிட்ட கேட்டான்னு சொல்லுங்க… கண்டிப்பா அவ 


யாருன்னு கேட்பா…கணேஷ் னு சொல்லுங்க…


எனக்கு நம்பிக்கை இருக்கு… அவளுக்கு என்னை நிச்சயம்


ஞாபகம்  இருக்கும்…
 
அவர் : எல்லாம் சரி டா… அவங்க வீட்டை காலி பண்ணி


ஆறு மாசம் ஆகுதே…
 
நான் : ணோவ்…வெறுப்பேத்தாதேன்னா…


இதை மொதல்லையே சொல்ல வேண்டியது தானே…
 
( என்ன ராஜா பண்றது… உன் வாழ்க்கையில் இப்பவாவது 

ஒரு ஒளி விளக்கு தெரியுதேன்னு சந்தோஷப்பட்டேன்…

அதுவும் வழக்கம் போல தான்னு இப்ப தானே தெரியுது… )
 
அவர் : கோவப்படாதே டா… அந்த பொண்ணு இதே ஏரியா ல


தான் இருக்கான்னு நினைக்கிறேன்… போன வாரம் கூட 


ரோட்ல பார்த்தேன்…
 
நான் : ஏன்னா… அந்த பொண்ணு எவ்வளவு நாளா 


அங்க இருந்தா…
 
அவர் : ஒரு 5 வருஷம் இருக்கும்டா…
 
நான் : என்னது நாசமாய் போச்சு… அத்தனை வாட்டி 


என்னை வீட்டுக்கு வா…வீட்டுக்கு வாடா னு கூப்பிட்டீங்களே…

ஒரு தடவையாவது எங்க காம்பவுண்டுல வயசு பொண்ணு 


இருக்குதுடான்னு சொல்லி இருந்தா டிமிக்கி கொடுக்காம

உடனே ஓடி வந்து இருப்பேனே..ஏன்னா என் வாழ்க்கையில்


இப்படி எல்லாரும் சேர்ந்து விளையாடிட்டீங்க…
 
அப்புறம் அந்த ஏரியா வில இருந்தா பசங்களுக்கு எல்லாம் 


போன் பண்ணி கெட்ட கெட்ட வார்த்தையால வாயிலேயே


வயலின் வாசிச்சேன்…ஒருத்தன் கூட அந்த வீட்ல ஒரு 


பொண்ணு இருக்குனு சொல்லலைங்க… 
 
( உன் கோபம் நியாயமானது… என்ன ஒரு துரோகம்…)

அதுல ஒருத்தன் சொன்னான்… அவர் தம்பி தாண்டா

உன் ஆளோட அக்காவுக்கு நூல் விட்டாரு…அவர் கிட்ட வேணும்னா

கேட்டு பாருன்னு…அவர் தம்பிக்கு போன் பண்ணி அவரையும்


திட்டினேன்…ஏன்னா எனக்கு சொல்லலைன்னு …


அட பாவி அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைடா…

ஸ்டெல்லாவுக்கு இப்ப கல்யாணமே ஆயிடுச்சி…நீ வேற எதாவது


சொல்லிக்கிட்டு திரியாதேனு சொல்ல… உன்னை பத்தி 

நான் கேட்க… அவர் மர்மமா சிரிச்சிகிட்டே என்னாடா…

லவ்வா…
அதெல்லாம் ஒண்ணுமில்லைனா…ரொம்ப நாள் கழிச்சி

அவளை பார்க்கனும்னு தோணுச்சி..அதான்னு நான் சமாளிக்க… 


மன்னிச்சிடு ஜெனி… நீ யாரையாவது காதலிக்கிறியான்னு 

நான் அவர் கிட்ட கேட்டேன்… அவரோ…ச்சி..ச்சி..அது 

ரொம்ப நல்ல பொண்ணுடான்னு சொன்னாரு…
 
எனக்கு தெரியும் ஜெனி… இருந்தாலும்… இத்தனை வருஷம் 

கழிச்சி உன்னை பார்க்கும் போது நான் வேற எதாவது பேசி

உன்னை சங்கடப்படுத்திட கூடாதுன்னு தான்…
 
நான் சென்னை வரும்போது…உன் வீட்டுக்கு என்னை

கூட்டிகிட்டு வர்றேன்னு சொல்லி இருக்காரு…
 
காத்துகிட்டு இருக்கேன் ஜெனி…

நிச்சயம் இந்த தடவை உன்னை

இழக்க மாட்டேன்…

Saturday, February 19, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 6


சரக்கு கிடைத்தவுடன் கழட்டி

விடுவதல்ல நட்பு…

சைடு டிஷுக்கு சண்டை

போடுவதே உண்மையான நட்பு…


குடிகாரனாய் இருப்பது

ரொம்ப சுலபம்…
குழந்தை கொடுப்பது போல…

குடியை விடுவது தான்

மிகக்கடினம்..
குழந்தை பெறுவது போல…நீ தேடி போகும் போதை 

சீக்கிரம் தெளிந்து விடும்…

மிக்சிங் ஏடாகூடமாகி உன்னை

தேடி வரும் போதை கட்டன் 

சாயா குடிச்சாலும் கலையாது…

எல்லாரும் ஹாப் அடிக்கும்

போது நீயும் அதே அளவு குடித்தால்

அது உன் திறமை..

நான் புல் தாண்டியும் அசால்டாக

இருப்பேன் என்று சொன்னால் 

அது உன் நம்பிக்கை...
உன் நம்பிக்கையில் நீ வெற்றி 

பெற்றால் அது தான் சாதனை..
நீ எவ்வளவு குடித்தாலும் 

வாந்தி எடுக்காமல் இருக்க முடியும்... 

உண்மை தான்...

அதற்கு நீ இரண்டு விஷயங்களை

பின்பற்ற வேண்டும்...

1. சரக்கடித்து விட்டு சூடாக 

எதையாவது சாப்பிட வேண்டும்...2. பெண்களை பத்தி நினைக்க கூடாது...
Friday, February 18, 2011

லூசுக் கிழவனின் லுச்சாதனங்கள் ..

திருட்டு ரயிலேரியத் திருடனே..!

திரைஉலகை வைத்து தீராது 

திருகல் தரும் தில்லாலங்கடியே...!

மூன்று  மணம் புரிந்த மூதேவியே..!

மனைவி , துணைவி என்று 

வார்த்தையில் விளையாடும் வல்லூறே…
 
நீ இருக்கும் வரை தமிழ்நாடு 

ஆகாது நல்லூரே….

௨ன் ஆண்டும் ( வாழ்நாள் )

முடியவில்லை
நீ ஆண்டும் எங்களால் முடியவில்லை,

நீ வேண்டுமென்று நாங்கள் 

விரும்பவில்லை,
உன் ஆட்சியில்..மீன் பிடிக்க 

சென்றவனும் வீடு திரும்பவில்லை…


அகழியில்விழுந்தவனும்,
 
௨ன் அரசியல் வலையில் 

விழுந்தவனும்

கரைக் கண்டதில்லை...!


தமிழ்தான் தான் எனது 

மூச்சு என்றாய்…

ஆனால் அண்டை நாட்டிடமும் ,

இத்தாலி அன்னையிடமும்

கையேந்தி வாங்கி தின்றாய்…தினம் தினம் கேட்குது 

மக்களின் கூப்பாடு…
குண்டு துளைத்த உடலுக்கு

சமர்ப்பணமாகுமோ

௨ன் ஒருவேளைச் சாப்பாடு

(கேட்டா உண்ணாவிரதமாம்)…!

பறவைகள் தங்க அவைகள் 

கட்டிக்கொள்ளும் கூடு,

௨ன் பதவித்தங்க நீ கட்டுவாய்

( படம் காட்டுவாய் ) பல வீடு...!

மதுரையை ஆண்ட மன்னரேல்லாம்

முன்னரே மாண்டு விட்டனர்

இருந்திருந்தால் மீண்டும் மாய்த்திருக்க

வேண்டும் உன் மகனால்...!உன் அப்பாடக்கர் மகனின் பெயரோ

ஸ்டாலின்” 

ஆனால் தமிழில் பெயரிட

வேண்டுமென்கிறாய் திரைஉலகை,

இதில் என்னய்யா உனக்கு உவகை…தள்ளாத முதுமையிலும் எழுதுகிறாய்

படங்களுக்கு கதை வசனம்…
விலைவாசியை பற்றியோ…

விகாரமாய் கொள்ளப்படும் மக்களை

பற்றியோ என்றாவது நீ பட்டதுண்டா விசனம்…

நாலு பேருக்கு நல்லது செய்வாய் 

என்று பார்த்தால்… 

நாட்டை நாலு துண்டாக்கி 

வாரிசுகளுக்கு கணக்கை தீர்த்தாய்…

வைத்திருக்கிறாய்

துணைக்கு மீடியா…

ஆப்பு வைத்தாலே 

உனக்கு ராடியா…மகளுக்கும் மன்னனுக்கும் கனெக்ஷன்…

இந்த  மானங்கெட்டவனுக்கோ பல 

கோடி ரூபாய் கலெக்ஷன்…

மலை அளவு பிரச்சினை என்றாலும் ,

மக்கள் உயிர் போகும் பிரச்சினை 

என்றாலும்…

சளைக்காமல் நீ அடிப்பாய்

சிங்குக்கு தந்தி…

மதி இழந்த மனித உருவில் 

திரியும் நீ ஒரு மலை மந்தி ( குரங்கு )…

மறைந்தாலும் வாழ்பவர் உலகிலுண்டு,

நீ வீழ்ந்தாலும் உன் கிளையிலிருந்து

முளைக்கும் பல விஷக்கன்று...!
(துண்டாய்ப் போகும் தமிழ்நாடு)


ஒரே ஒரு உதவி செய்யுங்கள்…
உண்மை தலைவர்களை ஆள விடுங்கள்…
தமிழ்நாட்டு மக்களை வாழ விடுங்கள்…( ஆனா…எவன் இங்க

உண்மையானவன்னு

தெரியலையே…)

ஆக்கத்தில் உதவி : கவிஞர் கோபிநாத் 

Saturday, February 12, 2011

ஜோக்கூ...Part 18 ( சரக்கு ஸ்பெஷல்.. 3 )

1. வாரம் முழுதும் குடிப்பேன்…

யாராவது வாங்கி தந்தால்…

கை காசு என்றால் காத்திருப்பு

தவிர்க்க முடியாதது…2.விடியலே வேண்டாம் என்கிறது 

என் விழிகள்…

என் சனிக்கிழமை இரவு

முழுதையும் நீ சந்தோஷமாக

ஆட்கொண்டதால்…

சனிக்கிழமைக்கு சரக்கு...

சண்டேக்கு முழுக்கு..3. உனக்காக நான் வாழ்கிறேன்

என்பதை விட…

உன்னால் நான் வாழ்கிறேன் 

என்பதே உண்மை…

டாஸ்மாக் பற்றி தமிழக அரசு…4. போதையை தூக்கிவிடும்

பொய்யான சரக்குகள் சீக்கிரம்

வாந்தியாய் வெளியேறி விடும்…

கலப்படம் அற்ற கவர்ன்மென்ட்

சரக்கு மட்டுமே காலையில் 

வரை கின்னுன்னு இருக்கும்…


5. உன்னுடன் இருக்கும் போது

மட்டும் எனக்கு சனிக்கிழமையே 

சந்தோஷமாக இருக்கிறது…

நீ இல்லாத நாட்கள் எழவு நாட்களை போலவே...

புரிஞ்சவன் தான் பிஸ்தா..Part 15

1. பையன் : அன்பே நீ ஒரு


நைட்டி போட்ட ரோஜா…
 
பொண்ணு : அப்போ நீ…?
 
பையன் : நான் அதை அவுத்துட்டு
 
போடும் ராஜா…


2. ஒரு மூணு வயசு பையனும் 

அவன் அம்மாவும் ரோடுல நடந்து 

போயிகிட்டு இருந்தாங்களாம்..

அந்த சின்ன பையனுக்கு கால் வலி

தாங்க முடியலையாம்..

பையன் : அம்மா...தூக்கு...

அம்மா : ஆமாண்டா..உனக்கும் உன் 

அப்பனுக்கும் வேற வேலையே இல்லை..

எப்ப பாரு தூக்கு..தூக்கு னு 

நச்சரிச்சிகிட்டு.. ச்ச...


3. பெண்களை சந்தோஷப்படுத்த எனக்கு

தெரிஞ்சி 70 வழிகள் இருக்குங்க...

1 . அவங்க என்ன சொன்னாலும் மறுப்பு 

தெரிவிக்காம மகிழ்ச்சியோட ஆமாம் போடுறது...

2. பாக்கி வழிகள் எல்லாம் 69 தில் அடக்கம்...


4. பெண் 1 : எப்படிடி...உன் புருஷன் ராத்திரி

சீக்கிரமாவே வந்துடறாரு...

ஒரு நாள் கூட லேட்டா வரமாட்ராறு.. 

பெண் 2 : நீங்க வந்தாலும் வரலைனாலும் 

நான் ராத்திரி 9 மணிக்கு எல்லாம்

" படுக்க " போயிடுவேன்னு சொன்னேன்... 


5. பையன் : அம்மா..எனக்கு தம்பி 

பாப்பா வேணும்...

அம்மா : கொஞ்ச நாள் பொறுத்துக்க

கண்ணா... உங்க அப்ப வெளிநாடு 

போயி இருக்கார்...அவர் வந்ததும்

அப்பா கிட்ட சொல்றேன்...

பையன் : இல்ல ம்மா.. நாம அப்பாவுக்கு

ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்..

அம்மா : டே...உங்க அப்பனுக்கு 

நீயே ஒரு சர்ப்ரைஸ் தான் டா... 


மாத்தி யோசி..Part 18

1. தனுஷ் : உன்னை வெள்ளாவி

வச்சி தான் வெளுத்தாய்ங்களா..

இல்லை வெயிலுக்கு காட்டாம வளத்தாய்ங்களா..

தாப்சி :  உன்னை சோறு போடாம 

தான் வளத்தாய்ங்களா...இல்லை 

சோறே காட்டாம தான்  வளத்தாய்ங்களா..
2. நான் வயசுக்கு வந்து 12 வருஷத்துக்கு 

மேல ஆச்சு… இன்னும் ஒரு பிகர் கூட

எனக்கு மடங்கலை…அப்படின்னு சொல்லாதே..
 
நான் வயசுக்கு வந்து 12 வருஷத்துக்கு 

மேல ஆச்சு…இன்னும் ஒருத்தியால கூட

என்னை மடக்கி போட

முடியலைனு சொல்லு..
3. பெண் : நீங்க மேக்கப் போட்டு முடிச்சதும்

என் கணவரின் கண்களுக்கு நான்

அழகாக தெரிவேனா..?
 
பையன் : நிச்சயமா மேடம்..ஆனா 

உங்க கணவர் புல் மப்புல இருக்கணுமே…

4. காதலை சொல்ல சிறந்த வழி…
 
அந்த பொண்ணுக்கு முத்தம் கொடுங்க..

நீ என்னை லவ் பண்ணா அந்த முத்தத்தை

நீயே வச்சிக்க.. லவ் பண்ணலைனா அதை

திருப்பி கொடுத்துடுன்னு எந்திரன் 

ஸ்டைல் ல சொல்லுங்க…
 
முத்தம் உதட்டுக்கு பதிலா செருப்பால

கொடுத்தா நான் பொறுப்பில்ல..


5. பாண்டிங் : நம்ம பசங்க எல்லாரும் பேட் ,

பால் எடுத்துகிட்டு கிரௌண்ட் குள்ள

போறோம்..மளமளனு  ரன்சும்

விக்கெட்டும் குவிக்கிறோம்…

வேர்ல்ட் கப்பை தூக்குறோம்…
 
டோனி : வேர்ல்ட் கப்பு மேல கையை 

கிய்ய வச்சேண்டு வையி

கொண்டே புடுவேன்…


நீதிக்கதைகள்..Part 10


1. ராமுவும் , ராஜாவும் நண்பர்கள்..

ஒரு நாள் ரெண்டு பேரும் கோவிலுக்கு

சைட் அடிக்க போனாங்களாம்.

ரெண்டு பேருமே ஒருத்தனுக்கு

தெரியாம ஒருத்தன்

ஒரே பொண்ணுக்கு நூல் விட்டானுன்களாம் ..

கொஞ்ச நாள்ல ரெண்டு பேருக்குமே விஷயம்

தெரிஞ்சி போயி நாடு ரோட்ல

அவனுங்க சட்டை

கிழியுற அளவுக்கு சண்டை 

போட்டானுன்களாம்… 


நீதி : சண்டைனா சட்டை கிழிய

தான் செய்யும்.சண்டையில கிழியாத

சட்டை எங்க இருக்கு…2. ஒரு பொண்ணு ராத்திரியில 

தனியாக போயிகிட்டு

இருக்கும் போது ஒருத்தன் வந்து

அவளை கற்பழிச்சிட்டானாம். 

அதுக்கு அப்புறம்...


ரவுடி : உன்னோட வீட்டில போயி 

என்னனு சொல்லுவடி..


பொண்ணு : ஒரு ரவுடி வந்து என்னை ரெண்டு

முறை கற்பழிச்சிட்டான்னு சொல்லுவேன்...

ரவுடி : அடியே..நான் உன்னை 

ஒருமுறை தானே கற்பழிச்சேன்..

பொண்ணு : உன்னை பார்த்தா களைப்பு 

அடைஞ்சா மாதிரியே தெரியலை..

நீ எப்படியும் என்ன ரெண்டாவது வாட்டி 

ரேப் பண்ணுவேன்னு எனக்கு தெரியும்..நீதி : இந்த பொண்ணுங்களே இப்படி

தான் எஜமான்..

குத்துங்க எஜமான் குத்துங்க...3. கம்பெனியோட மேனேஜர் ஒரு நாள்

ரவுண்ட்ஸ் வந்தாராம்...

அப்போ ஒருத்தன் சும்மாவே நின்னுகிட்டு 

வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தானாம்..

மேனேஜர் : ஹே..தம்பி..இங்க வா..

பையன் : சார்..சொல்லுங்க சார்...

மேனேஜர் :உனக்கு மாசம் எவ்வளவு சம்பளம்..

பையன்: 5000 ரூபாய் சார்..

மேனேஜர் : இந்த...இதுல 15000 ரூபாய் இருக்கு...

உன்னோட மூணு மாச சம்பளம்..

என் கம்பெனில வேலை செய்ய தான் நான் 

சம்பளம் கொடுக்குறேன்..

வேடிக்கை பார்க்க இல்ல..

என் கண்ணுலேயே படக்கூடாது...

நீ நாளையில இருந்து 

வேலைக்கு வர வேண்டாம்..


பையனும் ஒண்ணும் 

சொல்லாம போயிட்டானாம்..

மேனேஜர் :யாருயா அந்த பையன்.. 

எந்த செக்ஷன் ல வேலை செஞ்சான்..

பியூன் : அவன் கொரியர்

கொடுக்க வந்த பையன் சார்...


நீதி : பெரும்பாலான மேனேஜர்கள்

மூளையே இல்லாத மக்கு 

மண்டையா இருக்காங்களே.. ஏன் சார்...


4. ஒரு பேங்க்ல கொள்ளை நடந்துச்சாம்.. 

எல்லாத்தையும் எடுத்துகிட்ட பிறகு...

அதுல ஒருத்தன் கேட்டானாம்...

கொள்ளைக்காரன் : யாராவது எங்களை

அடையாளம் காட்ட முடியுமா...?

ஒருத்தன் : என்னால முடியும்...

உடனே அவனை சுட்டு கொன்னுட்டாங்களாம்...

இன்னொருத்தனை பார்த்து அதே

கேள்வியை கேட்டானாம் அந்த 

கொள்ளைக்காரன்..

நம்ம பையன் : என்னால முடியாது சார்...

ஆனா என் மனைவி பார்த்தா..

அவளால அடையாளம் காட்ட 

முடியும்னு நினைக்கிறேன்...நீதி : வாய்ப்புகளை தவற விடக்கூடாது..

சரியாக பயன்படுத்திகொள்ளவேண்டும்..

5. பரீட்சை ஹாலில்...

பையன் :  ஹே..ப்ளீஸ் டி...

ஸ்டார்டிங் மட்டும் சொல்லுடி..

நான் ஏதாவது கதை அடிச்சி விட்டுடுறேன்...

பொண்ணு : நான் சொல்ல மாட்டேன் ப்பா..

சார் பார்த்தா அப்புறம் என்னையும்

வெளியில அனுப்பிடுவாரு...

பையன் : நீ சொல்லலைனா நான் 

நிச்சயம் பெயில் ஆயிடுவேன் டி...

பொண்ணு : சரி போயி தொலை... 

இது தான் அந்த பதிலோட ஸ்டார்டிங்...

"THE "

நீதி : எக்ஸாம் ஹால்ல எந்த

பொண்ணு சார் ஹெல்ப்

பண்ணி இருக்கா...