Sunday, October 30, 2011

மாத்தி யோசி ..46எல்லாருமே சரியா நடந்துக்கணும்னு எதிர்பார்த்தா யார் 


தான் தப்பு பண்ணுறது..# MISTAKES ARE THE SECRET OF SUCCESS ...
 

வாழ்க்கையில வெற்றி பெற்ற எல்லாரும் CTRL C + CTRL V 

யூஸ் பண்ணி இருப்பாங்க..
பெண்கள் வீட்டினில் ஹாயாக இருப்பதும்.. 

ஆண்கள் ரோட்டினில் நாயாக அலைவதும் தான் காதலா..? 

சாதிக்கிறதை விட சமாளிக்கிறதுக்கு தனித்திறமை வேணும்..

பிகர் உஷார் பண்ணுறதை விட அதை மெயின்டெயின் 

பண்ணுறது தான் கஷ்டம்னு சொன்னேன்..
நமக்கு பிடிச்சவங்களுக்காக தெரிஞ்சே செய்ற 

பைத்தியக்காரத்தனமான செயல்களும் ம்ம்..

சந்தோஷமா தான் இருக்கு..எனக்கான வாழ்க்கை துணையை கடவுள் முடிவு பண்ணி

இருப்பார்னா,அப்புறம் எதுக்கு மற்ற பெண்கள் மேல் 

காதல் வர வைக்கணும்..#என்னய்யா உன் நியாயம்..நகைச்சுவை உணர்வு இல்லாத மனிதர்கள் சஸ்பென்ஷன்  

இல்லாத பைக் போல..ஒவ்வொரு தடைகளிலும் தடுமாறணும்..


வளையல்,கம்மலில் ஏற்பட்ட புதுமைப்புரட்சி கொலுசுகளில் 

வராததன் கரணம் அதை பெரும்பான்மை பெண்கள் 

பயன்படுத்தாததாலா இல்லை வெளியே தெரியாததாலா..   


மன்னிச்சு மனுஷனா இருக்கலாம்..ஆனா மறுபடியும் அதே 

ஆளை நம்பி ஏமாந்தா சத்தியமா நாம மனுஷனே இல்ல..

Saturday, October 29, 2011

ஏன் இப்படி ...46காதலையும்,காய்ச்சலையும் எவ்வளவு மறைச்சாலும் 

அடுத்தவனுக்கு ஈஸியா தெரிஞ்சுடுது ..
பாஸ் அமைவதெல்லாம் பகவான் கொடுத்த வரம்..

எனக்கு மட்டும் சனி பகவான் வரம் கொடுத்துட்டார் போல..

# முடியல..டிசைன் டிசைனா கொல்றானே..
இப்போதைக்கு என் நிலைமை..மகாநதி படத்தில் வரும் 

சங்கீதா போல..!@#$%^ பசங்களா..எத்தனை பேரு 

தாண்டா ஆடிட்டிங் னு வருவீங்க..

நான் மனுஷனா இல்ல மெஷினா..?
காலையிலேயே பீலிங்கா பேசுனா என்ன மப்பானு 

கேட்குறவளுங்களை என்ன பண்ணுறது..
ஆண்களுக்கு ஒரு நல்ல முடி வெட்டுபவரும்,

பெண்களுக்கு ஒரு நல்ல டைலரும் கிடைக்கிறது 

ரொம்ப கஷ்டம் போல..ட்விட்டர்ல வந்து புத்தி சொல்றதுக்கு பதிலா பேப்பர்ல 

எழுதி உங்க கண்ணு முன்னால ஒட்டி

வச்சுக்குங்க ப்ளீஸ்..#முடியலை..என் கூட பழகி பின் விலகியவர்கள் மிக மிகக் குறைவு..

என்னுடன் பழகாமலையே விலகி போனவர்கள் மிக அதிகம்.

# நான் என்ன பண்ணுவேன்..? புரியலையே..ஒரு நல்ல பழக்கத்தை ஆரம்பிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு..

ஆனா ஈஸியா விட்டுட முடியுது..அதுவே ஒரு கெட்ட 

பழக்கத்தை ஈஸியா ஆரம்பிக்க முடியுது..

விட தான் கஷ்டமா இருக்கு..நம்மிடம் ஒருவரைப்பற்றி தப்பா பேசிட்டு,அவர் 

இருக்கும் போது புகழுறானுங்க பாருங்க..

அருவருப்பா இருக்கு..# அட..அசிங்கம் பிடிச்சவனுங்களா..நாம எப்போ சந்தோஷமா இருக்கோம்னு இந்த 

பெத்தவங்களுக்கு எப்போ தெரியுதோ அப்போ 

கல்யாணம் பண்ணி வச்சிடுறாங்க..

Friday, October 28, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 46பெண்களுடன் பழகுவது ஒரு கலை..

அதை கற்று அறிந்த எவனும் எதற்கும் யோசிக்கிறதே இல்லை..

#எல்லாம் தானா நடக்குது.


பெண்கள் இருக்கும் ஆண்களின் வாழ்க்கையில் சில 

முட்கள் இருக்கலாம்..ஆனால் அவர்கள் இல்லாத ஆண்களின் 

வாழ்வில் ஒரு பூ கூட இருக்க முடியாது..

#எனக்கு பிஞ்சுக்கே வழி இல்ல..
ஆன்ட்டிகள் அதிகம் இருக்கும் வீதிகள்,அன்பாலும் 

அழகாலும் நிறைந்தது..#தேவதை வீதிகள்..
வேலை சில நேரம் சரக்கை மறக்க செய்கிறது..

சில சரக்குகள் வேலையையும்,வேதனையையும் மறக்க செய்கிறது..

#RC அடிச்சா இல்லை வலி.


வாழ்க்கையில ஆயிரம் ஆணிகள்,அடிகள் இருக்கும்…

அவைகள் இருந்தால் தான் ஆன்ட்டிகளையும்,RC யையும் முழுதாய் 

உணர முடியும்..#இதுக்கு போயி அலட்டிக்கலாமா…?நம்பிக்கை,அன்பு ரெண்டையும் எந்த அளவுக்கு அதிகமா,

ஆத்மார்த்தமா வச்சி இருக்கமோ,அவங்க அதை 

உடைக்கும்போது ஆழமான,அழுத்தமான வலி ஏற்படும்.


பிகர் மடிக்க பசங்களுக்கு பைக் மட்டும் இருந்தா போதாது..

விடுற லுக்குல ஒரு கிக்கு வேணும்..

பேக்கு போல பார்த்தா பிகர் போயிடும் காத்தா…
ஊளையிடும் நாய்களுக்கு மற்றவர்கள் உறங்குவதை பற்றி 

எந்த கவலையும் இல்லை..

#இதுக்கு வேற எந்த அர்த்தமும் இல்லை..

நீங்களா எதையாவது நெனச்சு குழம்பாதீங்க..


LOVER ரிடம் LOYALTY இல்லாமல் போகும்போது எல்லாமே

OVER ஆகி விடுகிறது..

#நேத்து அடிச்ச சரக்கு எனக்கு ஓவராயிடுச்சி போல.
அன்பை பெற ஈகோவை இழந்து விடுங்கள்..

இல்லையெனில் இருவர் ஒருவர் ஆகாமல் நாலு 

பேராகி நாசமா போக வேண்டியது தான்..

Thursday, October 27, 2011

ஈகோ காதல்
என் மேல் கோபம் இருந்தால் நேரில் பார்க்கும்போது 

அடித்து கூட விடு..அலட்சியப்படுத்தாதே..

வலிக்கிறதடி..
மேக  மூட்டமாய் உன் நினைவுகள்..

எந்நேரமும் மழை வரலாம்..

என் விழிகளில்..
ஒருவருக்கொருவர் நாம் யாரென காட்ட ஈகோ கொண்டு 

பேசாமல் இருந்தோம்.நம்மை தனித்தனியே தவிக்கவிட்டு 

தான் யாரென காட்டிவிட்டது காதல்.
என் வெற்றிடம் நிரம்ப உன் தெற்றுப்பல் 

சிரிப்பு ஒன்றே போதும்..என் வாழ்வினில் சிறந்த நாள் என்பது 

உன்னுடன் இருந்த நாட்களே..
உன்னிடம் என் கோபத்தை காட்ட சிறந்த வழி 

உன்னை முத்தமிடுவதே..சந்தோஷத்தைக்காட்ட சிறந்த வழி..

அதுவும் அதே தான்..

# நான் ஏன் திருந்தணும்...? 


வலிகளை அடக்கி தாயின் முகம் கண்டதும் வீறிட்டு 

அழும் சேயைப்போல..என் கவலைகளும் காதலும் 

உன் குரல் கேட்கும்போதும்,முகம் பார்க்கும்போதும் 

பீறிட்டு பொங்குதடி..

 

உன்னை எதனுடன் ஒப்பிடுவது என்று எனக்கு ஏகப்பட்ட குழப்பம்..

நீ தான் ஒவ்வொரு  முறையும்  உனக்கே உரித்தான 

அனுபவங்களை தருகிறாயே..

 

உன் சிரிப்பினில் என்னை செயலிழக்க செய்கிறாய்..

பின்பு முத்தம் தந்து உயிர்ப்பிக்க செய்கிறாய்..

படைத்தலும்,அழித்தலும் கடவுள் செயல் எனில்..

காதலி நீயே என் கடவுள்..

அன்பே சிவம் போல எனக்கு காதலே கடவுள்..


காதலின் அடையாளமாய் கவிதைகளை சேமித்து 

வைக்க சொல்கிறாய்..பைத்தியக்காரி..என் காதல் தான் 

உன் உருவில் என் வாழ்க்கை  முழுதும் 

உடனிருக்கப்போகிறதே..பிறகென்னடி பம்ப்ளிமாஸ்..

Wednesday, October 26, 2011

மாத்தி யோசி ..45
மக்கள் கூட்டம்..தியேட்டரில் குப்பை..

விஜயின்  வேலாயுதம்..

இது சிலேடை..


 

கூட்டமே இல்லை..ஆனாலும் தியேட்டரில் குப்பை..

விஜயின்  வேலாயுதம்..

இது நேரிடை..உதிரும் ரோஜாவையே நீ நேசிக்கும்போது..

உதிரத்தோடு கலந்த என்னை மட்டும் வெறுக்கவா போகிறாய்..

#Donated Blood for a Beauty..B +

ஆபிசுக்கு லேட்டா வந்து மேனேஜரையும்,வீட்டுக்கு லேட்டா 

வந்து மனைவியையும்,காதலியை காக்க வச்சிட்டும்,

சமாளிக்கத் தெரிஞ்சவங்க எதையும் சமாளிப்பாங்க..

அளவுக்கதிகமாய் நான் சரக்கடித்து மட்டையாகி ஹேங்

ஓவரில் தவிப்பது மீண்டும் சரக்கடித்து அதை சரிப்படுத்தவே…பொண்ணுங்களும் புதிர் போல தான்..பதில் தேட 

முயற்சியே பண்ணாதீங்க…பதிலைக் கண்டு பிடிச்சதுக்கு 

அப்புறம் கேள்வி மாறிடும்..குழந்தையா இருக்கும்போது பொம்மைகளோடு விளையாடிட்டு, 

குமரியா ஆன பின்பு பசங்க வாழ்க்கையில விளையாடுறாங்க.. 

பேபியா இருக்கும்போது TOYS..லேடி ஆன பின்னாடி BOYS..

#ஏன் பொண்ணுங்களா ஏன்..

கொஞ்ச நேரம் TWITTER,FACEBOOK ல chat பண்ணவே எனக்கு 

நாக்கு தள்ளுதே...எப்படி சில பேரு நாள் பூரா கேள்வி கேட்டு 

கிட்டும்,பதில் சொல்லிகிட்டும் இருக்காங்க..? 

தலைவணங்குகிறேன்..
அதிர்ஷ்டத்தினால ஒரு பொண்ணு நம்ம கூட பழகலாம்..

நாம பழகும் விதம் தான் கண்டினியூ பண்ணனுமா இல்ல 

காறித்துப்பிட்டு போகணுமான்னு அவளை முடிவு பண்ண வைக்கும்..தேடி போனதே சரியில்லைன்னு இருக்கும்போது தானா 

தேடி வர்றது மட்டும் எப்படி சரியா இருக்கும்.. 

# குழப்பமா இருக்கே..

Tuesday, October 25, 2011

ஏன் இப்படி ...45

வேலாயுதம்னு சொல்லி ப்ளேடும் ஒரு ஆயுதம் தான்னு 

நிரூபிக்காம இருக்கணும் கடவுளே..தொடர்ந்து 

எங்களால அடி வாங்க முடியாது..நாங்க பாவம்..
க்ரில் சிக்கன் போல க்ரிஸ்பியா பேசாம,விளக்கெண்ணையில 

போட்ட வெண்டைக்காய் மாதிரி வழ வழனு பேசுறவனுங்க 

மத்தியில நான் எப்படி வேலை செய்ய..?கண்டுக்காத கடவுளுக்கு காணிக்கையா கொட்றான்..

கஷ்டப்படுற நான் கதறி அழுது கேட்டாலும் 

கொடுக்க மாட்றான்..மாசக்கடைசி கடன்..ஒரு விஷயத்தை பத்தி பேசும்போது நமக்கு தெரிஞ்சதை 

சொல்ல விடாம அவங்களுக்கு தெரிஞ்சதை மட்டும் நாம 

கேட்கணும்னு நினைக்கிறது என்ன விதமான வியாதி..?
எந்த விஷயத்தை பேசுனாலும் இதே மாதிரி தான் எனக்கு 

கூட நடந்து இருக்குனு ஆரம்பிச்சு அறுவை 

போடுறவனுங்களை என்ன பண்ணலாம்…?
ஒரு வேலையை செய்ய நினைக்கும்போதும் சரி,

சும்மா இருக்கும்போதும் சரி பலவிதமான சிந்தனைகள் 

மனசில ஓடுது..என்ன பண்ணலாம்..
சிலருடனான சந்திப்பு சில நிமிஷங்களிலேயே வெறுத்து 

போயிடுது..சில பேரை சில நிமிஷம் சந்திச்சாலும் நினைவை 

விட்டு நீங்க மறுக்குறாங்க..ஹ்ம்ம்..

எங்க இருக்காளோ அந்த ஸ்கை ப்ளூ சுடிதார்..?பிரச்சினைகளை தீர்ப்பதை விட பிரச்சினைக்கு 

காரணமானவர்களை தீர்த்துக்கட்டுவதிலையே குறியா 

இருக்கானுங்க..# சண்டையை அப்புறம் போடலாம்..

பிரச்சினையை சால்வ் பண்ணலாம் வாங்கடா..ஒருத்தனோட கோபத்தை தூண்டும்போது தான் அத்தனைக் 

குப்பையும் வெளிய வருது..கழுவி கழுவி ஊத்திக்கிறானுங்க.

.# கேட்கவே நாராசமா இருக்குடா டே..நிறுத்துங்கடா..
கொடுமையில யும்  கொடுமை ரெண்டு டிபார்ட்மென்ட் ஹெட் 

சண்ட போடுறதை வேடிக்கை பார்க்கிறது..

தடுக்கவும் முடியலை..இடத்தை விட்டு போகவும்

முடியலை..#நல்லவேளை என் பாஸ் புள்ள பூச்சி..
 
ஆனா விஷமாச்சே..

Monday, October 24, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 45


வெளியே தெரியாத ஒண்ணை எப்படிடா திருட முடியும்..

# மனதை திருடிவிட்டாய்..(அப்புறம் MONEY யை 

முழுங்கிவிட்டாய் னு புலம்பணும்...)


தினமும் குளிக்கிறவனை விட சென்ட்டு போட்ட பாண்டைகளுக்கு 

தான் இங்கே  மரியாதை அதிகம்..அன்பான பெண்களை விட 

அலட்டல் பிகர்களுக்காக அலையும் அன்பர்களுக்காக..


எல்லா பிகரும் பார்க்க வேண்டுமென்று நினைக்காதே..

சில பிகர்கள் கண்டுக்காம போறதே நல்லது தான்..

# அவ ஆளு முரட்டு தனமா இருக்கான் சார்.


ஆன்ட்டிகள் அழகாக இருக்க வேண்டுமென்று அவசியம் இல்லை..

அழகாய் இருந்தால் தான் அவர்கள் ஆன்ட்டிகள்..

இல்லையெனில் DON 'T டிகள்..
ஆண்களின் பார்வைகள் எத்தனை வகைப்படினும் அனைத்தும் 

சேரும் ஒரே புள்ளியாய் பெண்கள்..

# கண் முன்னே எத்தனை பூக்கள்..!!!பெண்களின் பார்வை சாதாரணமாய் தெரிந்தாலும்,

அதீத சக்தி கொண்டவை..விதைகளை போல..
ஸ்டாப்ளர் பின்னும் பொண்ணும் ஒண்ணு தான்..

ஈஸி யா மனசுல உக்காந்துடுறாங்க..

எடுக்கும்போது கொஞ்சம் கஷ்டமா இருக்கு..

போன பின்னும் தடங்கள் மட்டும் அழியாம..


உடம்பு கூல் ஆக வேணும் AC.. 

மைண்ட்  ப்ரீ ஆக வேணும் RC..
போதை ஏறிய இரண்டாம் பாதியில் எதுவும் பாதிப்பு வருவதில்லை..

மீறி வாந்தி வந்தால் அது முதல் பாதியில் செய்த 

மிக்சிங் தவறுகளாலே தான்.


அரவணைக்கும் ஆன்ட்டிகளிடம் அன்பாய் இரு..

சீன் போடும் பிகர்களிடம் ஜில்பான்சியாய் மட்டும் இரு…

Sunday, October 23, 2011

வார்த்தைகளுக்குள் அடங்கா வானவில்
இரு வரி  கவிதையாய் நாம்..பிரிந்து விடாதே..

நான் அர்த்தமற்று போய் விடுவேன்..அடிக்கடி சிரிக்கும் என்னை எல்லோரும் ஏளனமாக பார்க்க..

சிந்தையில் இருந்து என்னை சிலிர்க்கவும்,சிரிக்கவும் 

வைக்கும் உன்னை நான் என்ன செய்ய..உன் இதயத்தினுள் சென்று காதலை அறிய 

முடியாவிட்டாலும்,என்னைக்கண்டதும் படபடக்கும் 

உன் இமைகளில் கண்டு கொண்டேனடி..#மான்விழி..
உன்னைப்பற்றி எழுத எத்தனித்த போதே தெரிந்துகொண்டேன்..

247 எழுத்துக்களும் போதாதென..

#வார்த்தைகளுக்குள் அடங்கா வானவில்..
மொழியின் இலக்கணங்களை உடைத்தெறிந்து பேசும் 

மழலையின் பேச்சுக்கு இணையானது ஊடலில்

நீ சிணுங்கும் வார்த்தைகளும்..
எப்போதும் உன்னை அலட்சியப்படுத்தியே 

வாழ்கிறேன் நான்..தலைபோகும் அவசரத்திலும் நீ 

இல்லாது நான் தவித்து விடுவேன் என்று 

உணர்ந்து தகவல் அளித்து செல்கிறாய் நீ..

 
உனக்கு அடிக்கடி நான் போன் பண்ணுவது..

உன்னை தொந்தரவு செய்ய அல்ல..உன் 

குரலைக்கேட்காமல் நான் தொந்தரவுக்குள்ளாவதால் தான்..

என்னிடம் பேசுவது உன் அன்றாட நாளின் ஒரு நிகழ்ச்சி..

ஆனால் எனக்கோ அது மட்டுமே அன்றைய 

தினத்தின் மகிழ்ச்சி..


 

என் மீது விருப்பமில்லாமல் நடிப்பதில் உனக்கு 

அப்படி என்னதான் விருப்பமோ..

 

என்னை உனக்குப்பிடிக்கவில்லை என்றிருந்தால் கூட 

இத்தனை கவலைப்பட்டிருக்க மாட்டேன்..

ஆனால் நெருங்கிப்பழக நீ பயப்படுவதே உயிரை  

உலுக்கும் சித்ரவதையாய் இருக்குதடி..

Thursday, October 20, 2011

மாத்தி யோசி ..44வேலாயுதம் னா அரக்கர்களை மட்டும் இல்லைடா,

ஆடியன்ஸையும் அழிக்கும்..

#பன்ச் எல்லாம் ரெடி பண்ணிட்டேன்.

ஜெராக்சும்,அணிலும் ஏமாத்தாதுன்னு நினைக்கிறேன்.உண்மையா விரும்புன பையன் முகத்தில தாடி..

பொய்யா நடிச்ச பொண்ணு கழுத்துல வேற ஒருத்தன் 

கட்டிய தாலி..# T .R எபக்ட்..
வருத்தப்படுவதும்,விதண்டாவாதம் பண்ணுவதும் 

அப்போதைக்கு சரின்னு தோணும்..ஆனா அதனால 

எந்த பயனும் இல்ல..நான் சீரியஸா இருந்து எதையும் சாதிக்கலை..

யாரையும் அழவைக்காம சிரிக்க வச்சி சிலரையாவது

சந்தோஷப்படுத்தலாமேனு தான் இப்படி திரியுறேன்..காதலி கிடைக்காம கடுப்பு ஆகுறதை விட..

எவளையாவது காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு 

காண்டு ஆகலாம்னு பார்த்தா எவளும் வர மாட்றாளே..

# எவளாவது வாங்கடி ப்ளீஸ்..

எனக்கு சம்ஸ்கிருதத்தில தெரிஞ்ச ஒரே மந்திரம் 

காயத்ரி மந்திரம் மட்டும் தாங்க..

பெண்களுடனான ஒவ்வொரு சந்திப்பும் ஆண்களின் 

திருப்புமுனை தான்..

பல பேரு பேலன்ஸ் இல்லாம சறுக்கிடுறாங்க..


நாம லவ் பண்ணா தியேட்டர்காரன்,ரெஸ்டாரன்ட்காரன்,

பெட்ரோல் ங்க் வச்சிருக்குறவன்,நகை,ஜவுளி வியாபாரிகள் 

லைப் தான் நல்லா இருக்கு..நம்மோடது..ம்ஹூம்..சிரிப்பு சந்தோஷங்களை மட்டுமே குறிக்கிறது இல்ல..

சில நேரங்களில் நம்மோட மன தைரியத்தையும் 

காட்டக்கூடியதா இருக்கு..# ஹா.ஹா..போடா..என்னோட இருப்பு யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது..

ஆனா நான் இல்லைனா ஏதோ  இழந்த உணர்வு இருக்கணும்..

இது தான் நான் ஆசைப்படுறது..நிலை இல்லாத இந்த வாழ்க்கையில  நிலையான 

காதலை எதிர்ப்பார்த்தா அது தப்பு தான்..

Monday, October 17, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 44


தேவைகள் என்பது தீர்ந்து போகும்வரை இருக்கணும் ..

சோர்ந்து போகும்வரை இருக்கக்கூடாது..# போர் அடிச்சுடும்..ஏதோ ஒரு காரணத்தினால நம்மை பிடிக்காதவங்களுக்கு நம்மை 

பிடிக்க செய்யும் அந்த கணம் நம் மீதே நமக்கு காதல் வருகிறது..


நீங்க தான் சிறந்தவன் னு முதல்ல நீங்க நம்பணும்..

இல்லனா வாழ்க்கை பூரா அடுத்தவங்களுக்கு 

உங்களை நிரூபிக்கிறதுக்குள்ள தாவு தீர்ந்துடும்..
எது செஞ்சாலும் இறுதியா இன்பமாக இருக்கணுமாம் -

கீதையில சொன்னது..

எந்த பிகரை பார்த்தாலும் இறுதியா வெம்பாம ( ஏங்காம ) 

இருக்கணும் - நான் போதையில சொன்னது..
காதல் ஒரு வெற்றிக்கோப்பையை  போல..

கஷ்டப்பட்டு விளையாடுறவன் ஒருத்தன்,ஒண்ணுமே பண்ணாம 

சுகமா சிரிச்சுக்கிட்டே போட்டோவுக்கு போஸ் 

கொடுக்குறது இன்னொருத்தன்.
ஆன்ட்டிகள் ஆண்டவனும் அங்கிளும் சேர்ந்து

தந்த அன்பளிப்பு.அலட்சியப்படுத்தி விடாதீர்கள்

பசங்களா..அழகான பெண்கள் அலட்சியப்படுத் தும்போது தான் 

ஆண்கள் ஆன்ட்டிகளிடம் அரவணைப்பைத் தேடி அலைகிறார்கள்..
முள்ளோடு இருந்தாலும் காயப்படாத கடிகாரம் போல,

ஆன்ட்டிகளோடு இருந்தாலும் அசிங்கப்படாம இருக்க கத்துக்கணும். 
வெட்டுபவனுக்கும் நிழலையே தரும் மரத்தை

போல,அடித்தாலும்,அவாய்ட் பண்ணாலும்,

ஆன்ட்டிகள் ஆறுதலையும்,அரவணைப்பையும் 

தர மறுப்பதில்லை..
காதல் மிகச்சிறந்த பொக்கிஷம்..அதை பிச்சையாக 

பெறுவதும் தவறு,மதிப்பை உணராதவர்களிடம் 

தருவதும் தவறு..
வழிகாட்ட மட்டுமே ஆசிரியர்களாலும்,

பெற்றோராலும் முடியும்.இறுதியில் வார்த்தெடுப்பது 

அவரவர் கையில்...

#ஊருக்குள்ள என்னைபோல வானரங்கள் நிறையஇருக்கு

Sunday, October 16, 2011

நீ..
உன்னை வருத்தமடைய செய்யும் ஒவ்வொரு நாளும் 

என் வாழ்வின் கருப்பு தினங்கள்…
உன் சோகங்களை நீ என்னிடம் பகிர்ந்துகொள்ள 

மறுக்கும் கணங்களே..

நம் உறவின் மரண நிமிடங்கள்..
காற்றிலே உன் குரல் கலந்து வருகையில் இந்த உலகமே 

எனக்கு ஏனோ ஊமையாய் தோணுதடி..
என் கண்ணீர் துளிகளுக்கும்,கவிதை வரிகளுக்கும் 

காரணம் நீ மட்டும் தானடி..

உன் கண்ணீர் துளிகளை துடைக்கும்போது தான் 

எனக்கு அழுகையே..
உன் மேல் நான் கோபம் கொள்ள எத்தனையோ 

காரணங்கள் இருப்பினும்,உன்னை விட்டு நான் 

விலகாதிருக்க ஒரே காரணம்..

நீ..


நீ என்னிடம் விளக்கம் கேட்கும் நாளே நீ 

என்னை விட்டு விலக ஆரம்பிக்கும் நாள்..எனக்கான உந்தன் கோபத்தில் தெரிகிறது 

என் மீதான உன் காதல்..


நீ என்னை விட்டு போ என்று தான் சொன்னாயே தவிர..

நீ  ஏன் என்னை விட்டு விலகி செல்லவில்லை..


உன்னைப்பார்த்த அந்த கணமே என் வாழ்வின் 

மிகப்பெரிய விபத்து..எனினும் எனக்கு அந்த காயங்கள் 

ஏனோ மிகவும் பிடிக்கிறது..

Saturday, October 15, 2011

ஜோக்கூ.. Part 52 ( RC ஸ்பெஷல் 13 )ஆராய்ச்சியில் ஈடுபடாமலே சொல்வேன்..

ஈர்ப்பு விசை இங்கு உண்டு..

RC யும்..ஆன்ட்டிகளும்..
என் ரத்தம் எந்த வகையை சேர்ந்தது என்று ஆராய்ந்தால்

அது RC வகையாம்..அதில் இருக்கும் அணுக்கள் 

எல்லாம் ஆன்ட்டி வகையாம்.. வாரம் முழுவதும் வாழ்கிறேன் நீ இல்லாமல்..

வாரக்கடைசியில் வீழ்கிறேன் நினைவில்லாமல்..

RC எனும் அற்புதம்..(ஆன்ட்டிகளுக்கும் பொருந்தும்..)


உண்மையான சரக்கு என்றால் குடிக்க கூட தேவை இல்லை..

வாசனையே போதை தரும்..

RC என்றால் REFRESH & CHANGE ஆ..உண்மையான பாசம் இருக்கையில் உன்னை அருந்த 

ஊறுகாய் கூட தேவை இல்லை எனக்கு..

RC .. அப்படியே சாப்பிடுவேன்..


வாடை வந்து வீட்டில் மாட்டிய என்னிடம் மன்னிப்பு கேட்டது 

ஏப்பமாய் வந்த என்பது ருபாய் பீர்..

இதுக்கு தான் அடிச்சா ஹாட் அடிங்க..

அதுவும் RC அடிங்கன்னு சொல்றது.. 

Friday, October 14, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்.Part 43அழகா இருக்குற ஆன்ட்டிகள் கிட்ட அன்பை 

காட்டுறதை விட..அரவணைப்பை காட்டுற ஆன்ட்டிகள் கிட்ட 

அன்பா இருக்குறது தான் சிறந்தது..
கல்யாணமான ஆண்கள் படும் அவஸ்தைகளை பார்த்தே 

பாடம் கற்றுக்கொள்பவனே சிறந்த பிரம்மச்சாரி..

# ச்ச..அடுத்தவனுக்கு புத்தி சொல்லலாம்னா 

எவளும் சிக்க மாட்றாளே..


நல்ல பிகர்கள் போனாலும் பார்க்காம இருக்குறது ஒரு வகை..

மொக்கை பிகர் போனாலும் வச்ச கண்ணு வாங்காம பார்க்குறது 

ஒரு வகை..முதல் வகையை விட ரெண்டாவது 

எவ்வளவோ பெட்டர்..உங்களை திரும்பி பார்க்கும் பிகர்களை எண்ணி 

திருப்தியடைந்து தேங்கிவிடாதீர்கள்..அப்புறம் சீன போடும் 

செப்பு சிலைகளை எப்போ செட்டப் செய்வது..திரும்பாத பிகரை தொங்குறதும் வேஸ்ட்..

சிரிக்கிற பிகரை சீண்டாம இருக்குறதும் வேஸ்ட்..உடலளவில் எவ்வளவு பலமானவர்களும் ஒரு 

பெண்ணினால் உணர்வளவில் நிச்சயம் பலகீனமாய் இருப்பார்கள்..பெண்களின் கோபப்பார்வையைக்கண்டு துவண்டுவிடாதீர்கள்..

பார்க்காம போறதுக்கு அது எவ்வளவோ பெட்டர்..

#பல பொண்ணுங்க கொஞ்சம் கூட கேர் பண்ண மாட்றாளுங்க..ஆண்கள் சிலிர்க்கும் தருணங்கள் பெரும்பாலும் பெண்கள் 

சிரிக்கும் கணங்களே..#சிரிக்கிறாடா..சிரிக்கிறாடா..

அப்படியே கண்ணு ரெண்டும் பாயுது மச்சி..
சிரிச்சுட்டு போன பிகர்களை விட..செருப்பை தூக்கி காட்டிய 

பிகர்களே நினைவை விட்டு நீங்க மறுக்கிறார்கள்..ஆன்ட்டிகளை மடக்க அழகு தேவையே இல்லை..அங்கிள் 

காட்ட மறந்த அரவணைப்பையும்,அன்பையும் 

கொடுக்கத்தெரிந்தாலே போதும்..

Thursday, October 13, 2011

தெய்வத்திருமகள்...புகைப்படங்களோட கவிதைகள் போட ஆசை..

ஆனா நேரமில்லை..அதனால இனி 

கவிதைகள் ( போல ) மட்டும்..மன்னிக்கவும்..


தனிமையில் உன்னை நினைக்கும் என்னைக் காட்டிலும்,

அத்தனை வேலைகள் இருந்தும் " சாப்பிட்டியா " டான்னு 

கேட்கும் நீ உண்மையிலேயே தெய்வத்திருமகள் தானடி..


என்னை பார்த்தவுடன் உன் உதடுகள் செய்யும் காட்டும் 

புன்னகையை விட..உன் கண்களில் வழியும் நீரே என்னை 

சிலிர்க்கச் செய்கிறது..
என் தவறுகளை சுட்டிக்காட்டிவதும் நீ..

நான் தடம் மாறிவிடக்கூடாது என துடிப்பதும் நீ..

உன்னிடம் நான் எப்படி நடிக்க..


என்னைப்பற்றி எவ்வளவோ எழுதினாலும்,

உயிரில் கலந்த உன்னைக்குறிப்பிடும் ஓரிரு 

வார்த்தைகளே உயிருள்ளவை..
நான் நானாகத்தான் இருப்பேன் என்ற என் எண்ணம் , 

எனக்காக நீ வருந்தியவுடன் எங்கு போனது 

என்றே தெரியவில்லை..


எங்கும் நிறைந்து இருப்பது இறைவன் மட்டுமல்ல..

என் ஏஞ்சல் நீயும் தான்..காணும் பெண்களிடமெல்லாம் 

உன் ஏதோவொரு அம்சம்..
காதல் மிருகத்தை என் மீது ஏவி விட்டாய்..

இப்போது பார் அதை உன்னாலும் கட்டுப்படுத்த

முடியாதவாறு கட்டவிழ்ந்து அலைகிறது..ஊடலில் இருந்த போதும் உன்னைப்பற்றி நானும்,

என்னைப்பற்றி நீயும் நினைக்க செய்ததே காதல்..
உன்னிடம் இல்லாததால் தான் என் இதயத்தை 

திருடி செல்கிறாயா கள்ளி..
நான் உன்னிடம் பொய் பேசமாட்டேன் என்ற உன் 

நம்பிக்கையே என்னை உன்னிடம் உண்மை 

மட்டுமே பேச வைக்கிறது..

Wednesday, October 12, 2011

புரிஞ்சவன் தான் பிஸ்தா..Part 21இப்போவெல்லாம் ஏனோ தெரியலை.. 

பணியாரம்,தேனடை,ஆப்பம்,கடப்பாரை,வேல்கம்பு,etc 

இதெல்லாம் கேட்டாலே தன்னால சிரிப்பு வருது..

# EFFECTS OF YELLOW BOOKS
என்ன தான் சோப்பு கலர் கலரா,வெவ்வேற அளவுகளில் 

இருந்தாலும் நுரை என்னமோ வெள்ளையாத்தான் வரும்..
ஆண்களுக்கு காக்காக்குளியல் என்பது கல்யாணத்திற்கு 

பிறகு தான்..பேச்சுலரா இருக்குறப்போ பசங்க 

குளிக்கப்போனா குறைஞ்சது அரை மணி நேரம் ஆகுது..எனக்கு ஏனோ நண்டை பார்க்கும்போதெல்லாம் நமட்டு சிரிப்பு 

தான் வருது..#  அதிகமா "அந்த" மாதிரி ஆங்கில படங்கள் 

பார்த்த எபெக்ட்.
எத்தனை பெரிய WHOLE SALE BUSINESS பண்றவனா இருந்தாலும்,

அந்த சின்ன HOLE SALE BUSINESS பண்றவங்க கிட்ட 

கவனமா இருக்கணும்..

Tuesday, October 11, 2011

நான் அழுத கணங்கள்
பேசி முடிக்கும் ஒவ்வொரு முறையும் " போனை வச்சிடவா " னு 

கேட்டபின்னும் ஏதேனும் பேசுவாயோ எனக் 

காத்திருப்பதே வாடிக்கையாகி போனது..எந்த செலவுமின்றி நீ தரும் ஒற்றைப்புன்னகை..

என்னுள் ஏகப்பட்ட எனர்ஜி தருவது ஏனோ..? 

# GIRLS ARE THE SECRET OF MY ENERGY


நீ அழுத கணங்களுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்..

ஆனால் நான் அழுத கணங்கள் அத்தனையும் 

நீ அழுத கணங்களே..


எனக்கான விருப்பங்களை என்னைவிடவும் நன்றாய் 

தெரிந்து வைத்திருப்பது நீ மட்டுமே..


பேசும் வார்த்தைகள் அத்தனையும் மன எண்ணங்களின் 

வெளிப்பாடே என்பது உண்மையானால்..

உன் பெயரை மட்டுமே நான் 

உச்சரித்துக்கொண்டிருக்க வேண்டுமா..?
விலகிச்செல்ல நினைக்கும் என்னை நீ வெறுக்காமல்

இருக்கும்போது தான் வேதனை அதிகமாகிறது..

Monday, October 10, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்.Part 42போதைமொழிகள் கீழே..அதுக்கு முன்னர் முரண் படம் பார்த்தேன்..

அதைப்பற்றி ஒரு சில வார்த்தைகள்..


முரண் படம் பார்த்தேன்..அப்போதான் வேலாயுதம் ட்ரையிலரும்

பார்த்தேன்..ஹா..ஹா..ஹா..ஐ யாம் வெரி ஹாப்பி..

ஸ்டார்ட் ம்யூசிக்..

 
பஞ்ச டையலாக்கா காட்டுவேன்..காட்டுவேன் னு பிட்டு 

படத்தில வர்றது போலவே சொல்றான்..எதைக் காட்ட 

போறான்னு தெரியலை.. வழக்கம் போல படம் பார்க்குற

நம்ம கழுத்து மேலே காட்டுவான்னு நினைக்கிறேன்..

அப்படினா இந்த தீபாவளியும் இப்படித்தானா..?அவ்வ்வ்வ்...


அணிலு தனியா வந்தாலே தாரை தப்பட்டை எல்லாம் 

அடிச்சி கிழிச்சி தொங்க விடுவானுங்க..இந்த தடவை

மயக்கம் என்ன,ஏழாம் அறிவு னு மினிமம் வாரண்டி

படங்களோட வருது..

கும்பல்ல குதறி எடுத்துடுவானுங்களே..


முரண்-ஒரு தடவைக்கு மேலேயே பார்க்கலாம்..

காப்பி அடிச்சாலும் நீட்டா அடிச்சி இருக்கானுங்க..

100 MPH வேகத்தில போற படத்துக்கு பாடல்கள்

மட்டுமே வேகத்தடைகள்..


தம் அடிக்கிறதை வேற விட்டுட்டதால வெளிய வந்து 

உலாத்திக்கிட்டு இருந்தேன்..கடைசி பாட்டு மட்டும்

ஓகே..ஹி..ஹி..அது ஏன் னு படம் பார்த்தா 

உங்களுக்கே புரியும்..
இனி போதைமொழிகள்..

ஆண்களுக்கு போதும்னு தோணாத ரெண்டு 

விஷயங்கள்..பொண்ணுங்களும்,போதையும்..

# சமாளிக்க முடியலைனா ரெண்டுமே டார்ச்சர் தான்.. 


மடிக்க முடியும்னு பிடிக்காத பொண்ணு பின்னால போறதை விட.. 

சில சங்கடங்கள் இருந்தாலும் சிக்னல் கொடுத்த 

பொண்ணுக்காக சமாளிக்கணும்..


பிகர் மட்டுமே எல்லாமும் இல்லை..ஆனா இந்த மாதிரி 

பினாத்துவதுக்கு முன்னாடி எவளையாவது உஷார் பண்ணி 

வச்சி இருக்கணும்..


அரவணைப்பை பற்றி விவரிக்க ஆயிரம் 

வார்த்தைகள் வேண்டாம்..ஆன்ட்டிகள் தரும் அந்த 

ஒற்றைப்பார்வை போதும்..
ஆறுதலை அளிக்க ஆறு,ஏழு சரக்குகள் வேண்டாம்..

RC ஒன்று மட்டும் போதும்..
அனைத்திலும் இல்லாத ஏதோ ஒரு தனித்துவம்

RC யிலும்,ஆன்ட்டியிலும்..
அடங்கி செல்லும் பெண்களை விட அதிகாரம் செய்யும் 

பெண்களையே அதிகம் பிடிக்கிறது..

# ஏதோ பிரச்சினை வரும்னு தோணுது..என்னனு தெரியல..


பத்து பேரோட சேர்ந்து பொய்யா சிரிக்கிறதுக்கு பதிலா 

தனிமையில உண்மையா அழுவது அசிங்கம் இல்ல..
மழையில் நடக்க பிடிக்கும்..கண்ணீர் தெரியாது-சாப்ளின்.

எனக்கு எல்லா நாட்களிலும் நடக்க பிடிக்கும்.

பெட்ரோல் விலை - 68 .50 - 3G 

பனியில நடக்கவும் பிடிக்கும்.தம்மடிக்கிறது தெரியாது.. 


உணர்ச்சிவசப்படுவது மனித இயல்பு..அது மற்றவர்கள் 

உணர்வை பாதிக்கா வண்ணம் இருக்குமாறு 

பார்த்துக்கொள்ளுங்கள் நண்பர்களே.

Sunday, October 9, 2011

ஏன் இப்படி ...Part 44என்னைப்போலவே இருக்குற சிலரை எல்லாருக்கும் பிடிக்குது… 

ஆனா என்னை மட்டும் அவங்களுக்கு பிடிக்க மாட்டுது..

# என்ன பண்ணுறதுனே புரியலையே..சம்திங் ராங்..
சில இடங்களுக்கு யாராவது நம்மை கூட்டிப்போகும்போது 

இப்படி இரு அப்படி பண்ணாதனு படுத்தி எடுக்குறானுங்க..

# நான் வரவே இல்லைடா..என்னை விட்டுடுங்க..
பிளாட்டினத்தோட தங்கம் சேர்க்கக்கூடாதாம்..அதனால உனக்கு 

தங்க நகை வேண்டாம்னு சொன்னா.. மனுஷங்களோட 

தேவதை சேரக்கூடாதாம்..பை னு சொல்றா..?உன்னை காதலிக்கும் முன்பே யோசித்திருந்தால்,இன்று 

இப்படி யோசிக்காமல் புலம்பல் கவிதைகளை எழுதிக்கொண்டு 

இருக்க மாட்டேன்..
ஒரு மணி நேரம் பேசினாலும் ஒண்ணுமே புரியாம 

பேசுறது மனைவியாலும்,மேனேஜராலும் மட்டுமே முடியும்.
நமக்கு புரியும்படி , இல்ல தனக்கு தெரியாது னு சொல்ல

மாட்டாங்க..ஆனா அதை நாம தப்பா செஞ்சு முடிச்சதும்..

நான் தான் அப்பவே சொன்னேன்ல..புரியலைனா 

கேக்கலாம்ல னு காண்டு ஆக்குவாங்க.
இப்போவெல்லாம் யாரையாவது ஏமாத்திட்டா நான் 

புத்திசாலின்னு நினைக்க தோணல.அவங்க என் மேல வச்ச 

நம்பிக்கைக்கு நான் தகுதியானவன் இல்லையோனு வருத்தமா இருக்கு.

.# என்ன பொழப்புடா இது .
மாசம் பூரா சீட்டை தேய்க்கிறது,சம்பள நாள் அன்னைக்கு 

ஒரு நாள் மட்டும்  ATM CARD தேய்க்கத்தானா..

# என்ன பொழப்புடா இது .
சென்னை எவ்வளவு மிஸ் பண்றேன்னு சண்டே சாயங்காலம் 

அண்ணா நகர் ரவுண்டானா போன பின்பே உரைத்தது.

#எத்தனை வண்ணங்கள்..

சவுக்கார்பேட்டையிலும் ஒரு டவர் கட்டணும்..
ஷட்டில் கார்க் விளையாடுவதை விட வேடிக்கை பார்ப்பதிலே

தான் என்ன ஒரு சுகம்..எல்லாருக்கும் விளையாடி வேர்த்துச்சுனா...

எனக்கு வேடிக்கை பார்த்ததுக்கே..