Saturday, July 28, 2012

ஜோக்கூ..62
உன்னை விட்டு விலக நினைக்கும் போதெல்லாம் 

நீயே என்னுள் நிறைந்து நிற்கிறாய்..

# RC.. போ நீ போ..ஓயாத கடல் அலைகளைப் போலவே..எனக்குள் 

தேயாமல் உன் நினைவுகள்..# நான் காயாம 

இருக்க CALL பண்ணுடி..
பிரிவின் வலி தெரிவது மீண்டும் சந்திக்கும் போது 

மட்டுமே..# 9 லார்ஜ்.. RC..I LOVE YOU..
உன்னைப் பிரிந்து மட்டுமே வாழ்கிறேன்..மறந்து அல்ல..

# அன்புள்ள RC..எனக்கு இப்போ மாசக்கடைசி..புல்லின் மீது பனித்துளி போல இருந்த உன்மீதான என் காதல்..

சூரியன் போல உன் அப்பனைக் கண்டதும் உடனே காணாமல் 

போய் விட்டதே..# கெடா மீசையைக் 

கண்டாலே டர் ஆகுது..விஷத்திற்கு விஷமே மருந்தாம்..உன் முத்தத்தால் 

மூர்ச்சையாகி போன என்னை மீண்டும் முத்தமிட்டு 

உயிர்ப்பிக்க செய்..#பல்லை தேயுடி  பன்னாடை..

Wednesday, July 25, 2012

ஏன் இப்படி ...66பாஸுக்கும்,காதலிக்கும் உள்
ஒற்றுமை..

நாம எவ்வளவு நேரம் அவங்க கூட இருந்தாலும் பத்தாது..

வேடிக்கைப் பார்த்துகிட்டு  வெட்டி நியாயம்

பேசிக்கிட்டே இருக்கணும்.. 


நான் பேசணும் நீ கேட்கணும்னு நினைக்கிறதே 

இந்த பாஸ்களுக்கும்,பொண்ணுங்களுக்கும் 

வேலையா போச்சு..டிஸ்கஷன் அப்படினா ரெண்டு 

பேரும் பேசுறது தானே..

 


WORKING DAYS லயே வேலை செய்யாதவன் எப்படிடா சண்டேல 

வேலை செய்வேன்..புரிஞ்சிக்க மாட்றானே இந்த 

புண்ணாக்கு ரங்கன்..


 

நாமளா மதிச்சு சொல்லும்போது மதிக்காம,சொல்ல 

மாட்டேன்னு அடம்பிடிக்கும்போது தான் அதைப்பத்தி 

மட்டுமே கேட்பாங்க..#ஏன் பாஸ்..ஏன் கேர்ள்ஸ்..

 


ஒண்ணுமே இல்லாத ஒரு விஷயத்துக்கு ஓவரா கவலைப்பட்டு 

தானும் டென்ஷனாகி நம்மையும் டென்ஷனாக்குவதே  

இந்த பொண்ணுங்களுக்கும்,பாஸ்களுக்கும் வேலையா போச்சு..

 

பார்த்தவுடனே மயக்கம் வந்து ஒரு வித ஏகாந்த நிலைக்கு 

போவது காதலிக்கு அப்புறம் கமலைப் பார்க்கும்போது தான்..

#கிறுட்டு கிறுட்டுனே வருது..
 


அது எப்படிடா கரெக்டா , சரக்கடிக்க காசில்லாம 

காண்டா இருக்கும்போது வந்து மச்சி..இன்னைக்கு சரக்கா னு 

கேட்டு வெறுப்பேத்துறீங்க..?

 


சனிக்கிழமை சாயங்காலம் நாலு பசங்க சேர்ந்து என்ன சாமி 

கும்பிடவா போறோம்..சரக்கடிக்கத் தான் போறோம்..

இதை கண்டுபிடிச்சிட்டேன் கூவுது ஒரு பக்கி..


அரசு , வேகத்தடைகளை டாஸ்மாக் பகுதிகளில் 


அதிகமாக்கினா நல்லது..மாடு,நாய் எல்லாம் ஒதுங்கி 

போகுது..இந்த மனுஷப் பயலுக நகர மாட்றானுங்களே..


 

சில நேரங்களில் ஏமாற்றம் தருபவரை விட ஆறுதல் 

சொல்ல வருபவர்கள் மீதே அதிகம் கோபம் வருது..

#பிகர் கிடைக்காத காண்டுல இருக்கும்போது புத்தி 

சொல்ல வருதாம் நாயி.

Saturday, July 21, 2012

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 60
குளிர் தெரியாம இருக்க கல்யாணமானவர்களுக்கு

மாது..பேச்சிலர்களுக்கு மது..சாமியார்களுக்கு மட்டும்

இரண்டும்...ஹ்ம்ம்.. இருங்கடா நானும் ஆதினம் ஆகுறேன்..


பணக்கஷ்டத்திற்காக ஆன்ட்டியை நாடிச்

செல்லாதே..மனக்கஷ்டதிற்காக செல்வதில் தவறில்லை..

#ஹர ஓ சாம்பா..


பணக்கார ஆன்ட்டியை தேடுவதை விட,பாசக்கார ஆன்ட்டியை 

நாடுவதே நல்லது..# ஹர ஓ சாம்பா..


சீசனுக்கு வந்து சீன் போடும் சிட்டுகளை விட,அப்போ 

அப்போ கிடைக்கும் ஆன்ட்டிகளின் ...களே அலாதியானது..

ஹர ஓ சாம்பா...
சரக்கடிச்சி வாந்தி எடுக்குறதும்..சண்டே ல ஆபிஸ் வருவதும் 

ஒண்ணு..# தலை பாரமா இருக்கு..


கன்னிகளும் காற்றும் ஒன்று தான்..

காதலிக்கும்போது தென்றலாக,கல்யாணத்துக்கு 

அப்புறம் சூறாவளியாக..
காதலுக்கும் கக்காவுக்கும் நேரம் காலமே கிடையாது..

சில பேருக்கு வரவே வராது..சில பேருக்கு அடிக்கடி வரும்..கலர்புல் வீக் எண்டு வாய்த்தவனுக்கு எப்போதான் 

பிகர்புல் வீக் எண்டு வாய்க்குமோ..#ஆனா பீஸ்புல் வீக் 

எண்டு அப்புறம் கேர்புல் வீக் எண்டு ஆயிடுமே..

Wednesday, July 18, 2012

மாத்தி யோசி .. 65


என்னை மத்தவங்களுக்கு பிடிக்காம போறதைப்பத்தி 

நான் கவலைப்படுறதில்லை..அவங்க வெறுக்காத 

அளவுக்கு நடந்துக்கவே முயற்சி பண்றேன்..

 


குழந்தைகளும்,குமரிகளும் சிரிக்கும்போதும்,அழும்போதும் 

நம்மால் அந்த இடத்தை விட்டு சுலபத்தில் நகர 

முடிவதில்லை... 

மத்தவங்க புரிஞ்சிக்க  மாற்றாங்களேனு  புலம்புவதை  

விட,நம்மோட அப்ரோச்சை  மாத்திப்  பார்க்கலாமே ..

 


அணில் பேசிக் கேட்பதை விட..பேசாமா இருந்தா 

தான் நல்லா இருக்குது...#நான் கார்ட்டூன் நெட்வொர்க்கை 

சொன்னேன்.

 


நல்லது எல்லாத்தையும் தாரை வார்த்துட்டு அடுத்தவன் 

கொடுக்குற பழசு பட்டையை நம்பி வாழ்வதே நமக்கு

வேலையா போச்சு..#அரசியல் இல்லைங்க..நான் 

ஹீரோயின்ஸ் பத்தி பேசுறேன்..


 

ஈஸியா கண்டுபிடிக்க முடிவது இடுப்பை பார்த்து 

ஸ்ரேயாவையும்... அப்புறம் மந்த்ராவையும்..

#இடுப்பு அல்ல..
 

காதலிக்கும் கிங் பிஷர் பீருக்கும் உள்ளே ஒற்றுமை..

பார்த்தவுடனே பரவசமாகி,தொட்டவுடனே சிலிர்க்குது..

ரெண்டுமே ஓவரா ஆச்சுனா அப்புறம் நாம மட்டை தான்..தனக்காகசேமிப்பதை விட,தன்னைநம்பி இருப்பவர்களுக்காக 

செலவழிப்பது எவ்வளவுசந்தோஷம்னு வெளியூரில்

வேலைசெய்யும் பேச்சுலர்சைக்கேட்டுப்பாருங்க


குழப்பம் எப்பவும் தனியா இருக்குறவனுக்கு மட்டும் தான்..

கூட்டத்தில் இருக்குறவனுக்கு இல்லை..


ஒதுக்கப்படுவதை விட ஒதுங்கி இருப்பதே நல்லது..

#நீங்க என்னடா என்னை ஆட்டத்தில் சேர்த்துக்காம

 இருக்குறது..நான் வரல போங்கடா..

Saturday, July 14, 2012

ஏன் இப்படி ...65மத்தவங்க சிரிக்கிறதைப் பார்த்து பொறாமை படுறவன்களைக்

காட்டிலும் மத்தவங்க அழுவதைப் பார்த்து 
 
சந்தோஷப்படுறவங்களை விட்டு விலகியே 

இருக்கணும்..#என்ன ஜென்மம்டா…
சந்தோஷத்தை மட்டும் உணர சில மணி நேரம் 

குழந்தைகளுடனும்,வயதானவர்களுடனும் 

செலவிடுங்கள்..வாழ்க்கையை முழுதாய் உணர பெண்களுடன் 

பேசிப் பழகி பாருங்கள்..அரை நாளில் அத்தனை 

அனுபவமும் கிடைக்கும்..#எதுக்கு சிரிக்கிறாளுங்க..

எதுக்கு கோபப்படுறாளுங்க..எதுக்கு அழுறாளுங்கனே 

புரியலையே...

விசு படத்துக்கு அப்புறம் விஜய் படத்தில தான் எல்லாரும் 

பேசிக்கிட்டே இருக்கானுங்க...ச்ச..காதுல ரத்தம் வராத 

குறைடா சாமி..


 


பிடிக்காத படத்தை பார்க்கிறதை விட கொடுமை... 

அதை ரசிக்கிறவன்களோட உட்காந்து பார்க்குறது...

விசில் எல்லாம் அடிக்கிறானுங்களே..அவனவன் செய்யும்போது கஷ்டமா தெரியும் வேலைகள்,

அடுத்தவன் தலையில அதை கட்டும்போது எப்படி தான் 

" ஈசி தான் முடிச்சுடுங்கனு " சொல்ல முடியுதோ...? 
நல்ல விஷயங்களை விட,கெட்ட விஷயங்களையே 

ஞாபகப்படுத்துறானுங்க..இந்த க்ளைமேட்டுக்கு சரக்கடிச்சா 

எப்படி இருக்கும்னு கேட்குது ஒரு பக்கி,..யோசிச்சுக்கிட்டு இருக்கும்போது வலிய வந்து 


மொக்கை போடுறானுங்க..போர் அடிக்குதேன்னு சும்மா 

இருந்தா ஏதோ யோசனையில இருக்குறதா 

அவனுங்களா நினைக்கிறாங்க..#ஏன்டா ஏன்..


 


செய்வன திருந்த செய்..இல்லைனா செஞ்சதை திரும்ப 

திரும்ப செய்யணும்..# சாவடிக்கிறானுங்களே.. 


இவங்க இப்படி தான் எதிர்பார்ப்பாங்கனு அனுபவத்தில் 

நாம தெரிஞ்சிக்கிட்டு அதை செஞ்சாலும்..புதுசு புதுசா 

எதிர்ப்பார்க்கிறதே இந்த பொண்ணுங்களுக்கும்,

பாஸ்களுக்கும் வேலையா போச்சு..#என்ன எழவுடா இது.. 


மேக்கப் போட்டா பிகரு போல தான் இருக்கும்..ஆனா அதுக்கு 

முன்னாடி பார்த்தா கிழவி போல இருக்கும்..இதுபோல தான்

பல பேரு பதில் சொல்றானுங்க.. 

Thursday, July 12, 2012

எதிர்பார்ப்பு

அத்தனை பெண்களிடமும் உண்மையை மறைத்த நான் 

உன்னிடம் மட்டும் உளறிக் கொட்டியதன் அர்த்தம் 

உனக்கு புரியாவிடில்..தவறு என் காதல் மீது தான் ஹனி..  நீ என்னை மட்டும் சந்தேகித்திருந்தால் அது தவறில்லை..

ஆனால் உன்னைக் காதலிக்கும் என்னை சந்தேகிப்பதே தவறு..  

என்னை நானே வெறுத்த நேரங்களை விட,நீ என்னை

வெறுக்கும் நேரங்கள் தான் அதிகம் வலிக்கிறது..

#ஹனி பெயர்ச்சி.. என்னைத் தவிர யாருக்கும் என்னை நான் நிரூபித்ததில்லை..

நீ என்னுள் கலந்தவள் என்பதினால் தான் உன்னிடம்

இத்தனை போராட்டம்..

 

மாறும் கையெழுத்தாய் என் காமம்..மற்ற பெண்களிடத்தில்.

மாறாத கைரேகையாய்..என் காதல் உன்னிடம் மட்டும்.. நான் செய்த தவறுகளை வேறு யாரும் அறிந்து என்னை 

வெறுத்துவிடக் கூடாதென துடிக்கும் உன்னிடம் நான் 

எப்படி உண்மையை மறைக்க முடியும்…?  எல்லோரிடமும் பரிவு காட்டும் உந்தன் குணம் என்னிடம் 

மட்டும் தனித்துவத்தோடு வெளிப்படுவதாய் தோன்றுவது 

உன் தவறல்ல..என் எதிர்பார்ப்பு..  நான் உன்னிடம் எதிர்பார்ப்பது கருணையை அல்ல..

காதலை மட்டுமே ஹனி.. பலரின் மகிழ்ச்சிக்கு காரணமாய் நான் இருப்பினும்,

என் மகிழ்ச்சிக்கு முழுக்காரணமும் நீ மட்டுமே ஹனி..
உன் GOOD MORNING எனும் குறுஞ்செய்தியில் ஆரம்பிக்கும் 

என் நாள் , இரவில் உன் குறும்புச் சிரிப்பினில் முடிகிறது..

Monday, July 9, 2012

மாத்தி யோசி .. 64


 

தோண்டறதுக்கு முன்னமே பூதம் இருக்குனு சொல்றானுங்க..

ஏன் புதையல் இருக்கலாமே.. பாஸிட்டிவ்வா யோசிச்சு 

பழகுங்கடா டேய்..


 


பொய் எப்பவுமே உண்மையை விட வேகமாகவும்,தடையில்லாமளும்,

சரளகவும் வரும்..
 

உங்க மேல நம்பிக்கை இருந்தா மட்டும் நம்பி கை வைங்க..

சத்தியமா இது டபுள் மீனிங் தான்…

 


ஒரு விஷயத்தை சொல்லாமல் மறைத்து பின் 

மாட்டுவதை விட,சொல்லி மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் 

ஆவது பரவாயில்லை..#ப்ராடுனு பேர் வராமலாவது இருக்கும்...
 


ஒருத்தருக்கொருத்தர் காதலை வித்துக்குற இந்த காலத்தில 

ஒருத்தியை உண்மையா காதலிக்கணும்னு 

நினைக்கிறது தப்பு தான்..

 

தவறுகள் செய்யாமல் வெள்ளை காகிதமாய் வீணாய்ப் 

போவதை விட,சில பிழைகளுடன் காதல் கடிதமாகவே 

வாழ்கிறேன் நான்..

 


கெட்டவனாவே இருப்பதில் ஒரே நன்மை யாருக்கும் 

விளக்கம் கொடுக்க தேவை இல்லை..

 


திருந்தி வாழ்வதில் உள்ளே ஒரே தீமை ஒவ்வொரு 

கணமும் நம்மை நிரூபிக்கிறது…
 


காதலிக்கிறதுக்கு காரணம் வேணுமா என்ன..?

 
 
சந்தோஷம் வருத்தமா மாற ஆகும் நேரத்தை விட ,
 
வருத்தம் சந்தோஷமா மாற ஆகும் நேரம் குறைவு ..
 
#தேடிப்பாருங்க மக்களே ..அத்தனையும் ஆனந்தம் தான் ..

Sunday, July 8, 2012

ஏன் இப்படி ... 64


கெட்டவனா இருந்து கொஞ்சம் திருந்தி வாழ்வது

ரொம்ப கஷ்டம்..விளக்கம் கொடுத்தே வாழ்க்கை

முடிஞ்சிடும் போல இருக்கே..


கெட்டவனா இருக்கும்போது எதிர்கொண்ட கேள்விகளைக் 


காட்டிலும் திருந்தியதுக்கு அப்புறம் தான் அதிகம்

கேள்விகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கு.. 


தப்பு செய்ய தானே காரணம் வேணும்..திருந்துவதற்கு நாம 

செய்யுறது தப்புன்னு உணர்ந்தாலே  போதுமே..இன்னொரு 

காரணமா வேணும்..?


 


வெறுத்து ஒதுக்கப்படுவதை விட,நம்பலாமா வேணாமானு 

யோசிச்சு பழகுறது தான் கொடுமையானது…

 


ப்ராங்கா இருந்தா ப்ராடுனு திட்டுறாங்கப்பா..சந்தோஷத்தில இருக்கும்போது சாதாரணமா தெரியுற 

பிரச்சினைகள் ,வருத்தத்தில் இருக்கும்போது விஸ்வரூபமா 

தெரியுது ..#என்ன எழவுடா இது ..


மற்ற நேரங்களைக் காட்டிலும் வருத்தத்தில இருக்கும்

போது நகைச்சுவை உணர்வு ஏனோ அதிகமா இருக்கு ..

ஹ்ம்ம்..கண்டிப்பா தேவையும் கூட .. 


ஆங்கிலத்தில் தவறாக பேசினால் கேவலமாக 

பார்க்கும் மக்கள்,தமிழைத் தப்புத்தப்பா பேசுவதை பத்தி

கவலைப் படவே மாட்றானுங்க.. 


தாய்மொழியை எழுதும்போது பிழை வந்தாலே அது அசிங்கம்..

இதுல பேசும்போதே "ஸ்பெல்லிங் மிஸ்டேக்" பண்றவனுங்களை 

ன்ன பண்ணுறது..?#பிழைனா என்னனு கேட்டுடப் போறானுங்க..


நாம வருத்தத்தில்  இருக்கும்  நேரங்களை  விட 

நமக்கு ரொம்ப பிடிச்சவங்க வருத்தத்தில் இருக்கும் 

போது தான் மனசு அதிகம் வலிக்குது . .