Wednesday, February 29, 2012

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 56

எல்லாம் சில காலம் என்று தெரிந்தும் மகிழ்ச்சியாக 

இருப்பது RC யிடமும்,ஆன்ட்டியிடமும் மட்டுமே..

மூளை ஒண்ணு நினைக்கும்..உதடுகள் ஒண்ணு பேசும்..

இது காதலில் மட்டும் இல்ல..போதையிலையும் தான்.. 

# ஹர ஓ சாம்பா..
எதுவும் சில காலம் தான்னு கீதை ல சொன்ன போது 

ஒருத்தனும் நம்பலை..போதையில சொல்லும்போது 

வழி மொழியுறானுங்க.. # ஹர ஓ சாம்பா..

வாந்தி என்பது நீ செய்த தவறுக்கு உனக்கு நீயே 

கொடுக்கும் தண்டனை..# பிராண்ட் மாத்தி அடிக்காதனு 

சொன்னா எவன் கேட்குறான்..


அடுத்தவன் பிகரை தட்டி பறிப்பதை விட,ஆதரவின்றி 

தவிக்கும் ஆன்ட்டிகளை அரவணைப்போம்..

காதலிக்காக காத்திருப்பதை விட , கட்டிங்குக்காக 

காத்திருப்பதே மிக கொடுமையானது..# சரக்கு வாங்க 

போனவனை ஆளைக்காணோம்..மட்டை ஆன மனிதனுக்கு,சரக்கு காட்டும் சினிமா தான் 

நினைவுகளின் நிஜங்கள்..

கண்களை பார்த்து காதலை கண்டுபிடிக்கிறாங்களோ 

இல்லையோ, சரக்கடிச்சதை கண்டு பிடிச்சுடுறாங்க..

# ஓவரா சிவந்துடுச்சோ

ஆல்கஹால் வாசத்தையும், ஆன்ட்டிகளின் பாசத்தையும் 

மறைக்கவே முடியாது..தாங்கவும் முடியாது..

தேவைப்படுவதை திருடுவதை விட,கேட்டு வாங்குவது 

கேவலமா என்ன..? # அந்த ஆன்ட்டியை இழுத்துக்கிட்டு 

தான் ஓடணும் போல..

Tuesday, February 28, 2012

ஜோக்கூ.. Part 60 ( RC ஸ்பெஷல் 16 )
போதை தெளிந்த பிறகும் குடலில் கிக் இருக்கும்..

நீ அடிச்சது RC என்றால்..போதை ஏறினால் வாந்தி தான் என்றால்.. 

நான் குடிக்காமலேயே இருக்கிறேன்..எத்தனை முறை கஷ்டப்பட்டாலும் என்னால் உன்னை 

விட்டு விலக முடியாது..காரணம் எனக்கு நடிக்கத்தெரியாது…

குடிக்க மட்டும் தான் தெரியும்..மாசக்கடைசியின் கடனும் சுகம் தான்..

அடிக்கப்போவது RC யாக இருந்தால்..உன்னைக் குடிக்காத குடல்கள் இல்லை ..

உன்னைக்குடிக்காவிடில் அது குடிகாரர்களின் 

குடல்களே இல்லை ..

Monday, February 27, 2012

மாத்தி யோசி .. 59SOLAR POWER போல MOON POWER , STAR POWER SYSTEM னு 

யாராவது கண்டு பிடிங்கப்பா..பயபுள்ளைங்க 14 மணி நேரம் 

பவர் கட் பண்ணுறானுங்க..# நாம இப்போ கற்காலத்துக்கே 

போறோம்..க ( ற் ) லிகாலம்.
எல்லாமே நல்லதாதான் தெரியும்..கம்பேர் பண்ணாம 

பிடிச்சத பிக்கப் பண்ணு..# சரக்கு,பிகர்,வேலைஎவன் கிட்டயும் பேசாம இருந்தா சிடுமூஞ்சினு

 சொல்லுவானுங்க..நல்லா சிரிச்சி பேசுனா 

இளிச்சவாயன்னு சொல்லுவானுங்க..# உஷாரு மாமே..


அதிகமா குடிச்சி மட்டை ஆகி மானங்கெட்டு போறவங்களுக்கு 

நான் சொல்றது ஒண்ணு தான்..# எனக்கு போன் 

பண்ணுங்கடா..நானும் வரேன்..
மெழுகுவர்த்தி வாங்கிய காசுக்கு GENERATOR வாங்கிடலாம் போல.. 

 எதை எதையோ இலவசமா கொடுத்ததுக்கு பதிலா வீட்டுக்கு 

ஒரு SOLAR POWER சிஸ்டம் தந்து இருக்கலாம்..

 
வானிலை அறிக்கை போல ஆயிடுச்சி கோவைல கரண்ட் 

வருவது வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

வந்தாலும் வரலாம்.வராமலும் போகலாம்.வந்து விட்டு 

உடனே போய் விடலாம்.
சரக்கை அளவா வை..சோடா கொஞ்சமா வை..

சைட் டிஷ்ஷை நிறைவா வை..
 
பில்லைக் கொண்டு போயி பக்கத்து டேபிள்ள வை..


காதல் வயப்படுவது நல்ல பழக்கமோ கெட்ட பழக்கமோ 

எனக்கு பழகிடுச்சு..வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் போல 

தெருவுக்கு ஒரு பிகர் மடிப்போம்னு திரியுறேன்..
காதலி வேணும்னு காலையிலேயே குளிச்சி 

மாகாளியம்மன் கோவிலுக்கு போயி மன்றாடிட்டு 

வந்து இருக்கேன்..ஆயிரம் கண்ணுடையாள் அரை 

கண்ணாவது திறக்கிறாளானு பார்ப்போம்..மொட்டை பசங்களுக்காக FEB 15 SAD BACHELORS DAY 

இல்லைனா SOUP BOYS DAY னு கொண்டாடலாமா..?

Sunday, February 26, 2012

ஏன் இப்படி ...58


நாம வருத்தத்தில இருக்கும்போது நமக்கு பிடிச்சவங்களை 

விட நம்மை பிடிச்சவங்க தான் முதலில் பதறி அடிச்சு 

வர்றாங்க..#ஏன் இப்படி.சில பசங்க சாதிக்கணும்,சம்பாதிக்கணும்,செட்டில் 

ஆகணும்னு நினைக்கிறாங்க.ஆனா அவனுங்களுக்கு 

தான் கரெக்ட் பண்ணனும்,கலெக்ட் பண்ணனும்,கழட்டி 

விடணும்னு நினைக்கிற பொண்ணுங்க மாட்டறாங்க..#கொடுமை.

வாழ்க்கை ஏன் இப்படி விஜய் படம் மாதிரி வகை தெரியாம 

மொக்கையா போகுது…ச்ச..என்னைக்காதலிங்கனு சொன்னாலும் எவளும் கேட்க மாட்றா..

சரி நான் காதலிக்கிறேன் னு சொன்னாலும் ஏத்துக்க

மாட்றாளுங்க..உங்களுக்கு என்னதான் பிரச்சினை 

பொண்ணுங்களா..?
யாரும் இல்லாம தனியா வாழவும் பழகிக்கணும்..

# எப்போ அத்துவிடுறாங்கனே தெரியல..நான் இன்னும் 

அம்மாஞ்சியாவே இருக்கேனோ..

ஒவ்வொரு கல்யாணத்திலும் என்னைக் கடுப்பேத்துற 

ஒரே கேள்வி..உனக்கு எப்போ கல்யாணம்..?# என்னமோ 

நான் இப்போ வேண்டாம்னு சொன்னமாதிரி..எவனும் 

பொண்ணு கொடுக்கமாட்றானுங்கடா 

புண்ணாக்கு ரங்கனுங்களா


 
பல நேரங்களில் பசுத்தோல் போர்த்திய புலிகளால்,

புலித்தோல் போர்த்திய பசுக்களுக்கு பிரச்சினை..

# வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து எடை 

போடாதீங்க பொண்ணுங்களா..


கூட சேர்ந்து கும்மி அடிச்சிட்டு,நாம தனியா 

மாட்டிக்கிட்டதுக்கு அப்புறம் கூட்டத்தில வச்சி 

அட்வைஸ் பண்ணுறவனுங்களை கொன்னா என்ன..?எல்லா உயிர்களிடமும் அன்போடு இருங்கள்னு சொல்றாங்க..

அப்புறம் ஏன் நான் எல்லா பொண்ணுங்களையும் 

காதலிச்சா மட்டும் காறித்துப்புறாங்க,,பவர் கட் நேரம் அறிவிச்சது போயி பவர் இருக்கும் நேரம் 

அறிவிப்பாங்க  போல..பக்கிங்க..15 மணி நேரம் 

கட் பண்ணுறானுங்க.

Saturday, February 25, 2012

எங்கடி போனீங்க நீங்க எல்லாம்.. Part 10121 சாக்ஷி ( வேதம் )  122 அர்பிதா ( தவம் ) 123 ஸ்வேதா ( ஒரு பொண்ணு ஒரு பையன் ) 


124 ரஞ்சனா ( லவ் மேரேஜ் ) 


125 ரோஷினி ( குணா ) 126 விது ( காலாட்படை )
127 சோனாலி குல்கர்னி ( மேமாதம் )  


128 நந்தனா ( ABCD ) 129 ராஷ்மி (கண்டேன் )  130 திவ்யா உன்னி ( சபாஷ்,பாளையத்து அம்மன் )
Monday, February 20, 2012

மாத்தி யோசி ..58
வாழ்க்கையில ஒருமுறை மட்டுமே உண்மையானக் 

காதல் வரும்..அப்படி இல்லாம அடுத்து அடுத்து 

வந்துக்கிட்டே இருந்தா.. வா மச்சி..நீ என் ஜாதி..
எந்த சூழ்நிலையிலும் சந்தோஷமா இருப்பவன் பல 

பேருக்கு பைத்தியக்காரனா தெரியலாம்.ஆனாபைத்தியம் 

பிடிக்காம இருக்க அது தான் வைத்தியம்னு பல 

பேருக்கு தெரியல.காதல் வருவதை யாராலும்,எதாலும் தடுக்க முடியாதுன்னு 

சொல்றவன் விளக்குமாறு அடியும்,பெல்ட் அடியும் 

வாங்காதவனா தான் இருப்பான்.MISS YOU னு சொல்லி நடுராத்திரியில போன்ல ஊளையிடுறதை 

விட , பசங்களோட மிக்சிங்கோட மலை ஏறுவது நல்லது

தானே.# செம காண்டுல இருக்கேன்.


ஆணாதிக்கம்,பெண்ணுரிமைன்னு சண்டை வந்தாலும்

பரவாயில்லை.#பொண்ணுங்க தண்ணிக்குடத்தை 

இடுப்பில் தூக்கிக்கிட்டு நடக்கும் போது அவ்வளவு அழகு.
பஸ்,பிரியாணி ரெண்டுலயும் பீஸை பார்த்ததுக்கு 

அப்புறம் தான் சந்தோஷமே வருது100 % கஷ்டப்பட்டு உழைச்சும் பலனில்லைன்னு 

புலம்புறானுங்க..அட பதறுகளா.. 50 % கவனமா 

உழைச்சாலே பிரச்சினை வராதே..பிரச்சினைகளுக்கு நடுவில நாம புழுங்கி கிடந்தாலும் , 

சிரிப்பை ஏன் சிறையில அடைத்து வைக்கணும்..

#சிரிங்க..எல்லாரும் சிரிங்க..இல்லைனா 

பூமா தேவி சிரிச்சிட போறா..
காதல் புனிதமானதுன்னு தான் சொல்லிக்கிட்டு

திரிவானுங்க..அவனவன் ஏமாறும் வரை..

# உஷாரய்யா உஷாரு..


எல்லாருக்கும் கெட்டவனா தெரிஞ்சாலும் யாரோ 

ஒருத்திக்கு நல்லவனா தெரிவேன்ற நம்பிக்கையில 

தான் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்..# நீ எங்க இருக்க ஹனி..

Sunday, February 19, 2012

ஏன் இப்படி ... 57
தான் விரும்புற பதில் கிடைக்கிற வரைக்கும் என்ன 

சொன்னாலும் ஒத்துக்க மாட்றானுங்க.அப்புறம் என்ன 

இதுக்கு டா எங்ககிட்ட கேள்வி கேட்குறீங்க பைத்தியம் 

பிடிச்ச நாயிங்களா.
நமக்கு பிடிச்சவங்களை மத்தவங்க கூட பார்க்குற 

வரைக்கும் அவங்களை நமக்கு எவ்வளவு பிடிச்சி இருக்குனு 

தெரிய மாட்டுது#பாப்பா போயிந்தே.
உன்னைப்பத்தி எனக்கு தெரியும்னு சொல்றவங்களை விட,

உன்னை நான் நல்லா புரிஞ்சிக்கிட்டேன்டானு சொல்றவங்க 

கிட்ட ஒரு ஈர்ப்பு வருது.
குடிச்சிட்டு வாந்தி எடுக்கும் ஒவ்வொரு முறையும் சொல்லுங்க..

நான் ஸ்டெடி தான்.சரக்கு சரி இல்லைன்னு.

#கான்பிடன்ஸ் பாஸ்.
தன்னோட கருத்தை கடைசி வரைக்கும் மாத்திக்காம,

சப்ஜெக்டுக்கு சம்பந்தமே இல்லாம பேசுற திறமை 

எங்க இருந்து தான் வருமோ#டேமேஜர்ஸ்.
நம்பிக்கையோடு என்னைப் புரிஞ்சிக்கிட்ட ஒரு பொண்ணு 

வேணும்னு காத்திருந்தா#வா மச்சி..நீயுமானு மொட்டைப் 

பசங்களா வந்து சேருறானுங்க.#கொடுமை.
ஒருத்தருக்காக தன்னை மாத்திக்கிட்டா பரவாயில்லை.

ஒவ்வொருத்தருக்காகவும் ஒவ்வொரு மாதிரி தன்னை

மாத்திக்கிறவனுங்க தொல்லை தாங்க முடியலை நாராயணா.


குளிர் தாங்க முடியாம ஒருத்தன் துணியால தலை,முகம் 

முழுக்க மூடிக்கிட்டு வண்டி ஓட்டுனான்.#அட பதரே 

ஹெல்மெட் போட்டா போதாதா..?
மனைவி/காதலி எப்படி இருக்கணும்னு நாம முதலில் 

முடிவு பண்ணனும்.இல்லைனா அவங்க எப்படி இருந்தாலும் 

ஏத்துக்குற மாதிரி நம்மை மாத்திடுறாங்க.#என்னா வில்லத்தனம்.உலகின் மிக முட்டாள்தனம் இரண்டு பெண்களின் 

பிரச்சினைக்கு பஞ்சாயத்து பண்ண போறது தான்.

#பொசுக்குனு சமாதானம் ஆகி நம்மை மொக்கை 

பண்ணிடுறாளுங்க

Tuesday, February 14, 2012

இத்தனை நாள் எங்கிருந்தாயடி..
காதலர் தினத்திற்காக என்னுடைய ஒரு காதல் கதை எழுதலாம்னு 

தான் இருந்தேன்.. அதான் எல்லாரும் காரி காரி துப்புறாங்களே.. 

சரி வேணாம்னு விட்டுட்டேன்..


ஆனா அரிப்பெடுத்த கை சும்மா இல்லாம கவிதை எழுதியே 

ஆகணும்னு அடம் பிடிக்குது..என்ன பண்ண..

உங்க தலை எழுத்து..


இந்த கவிதையை போன மாதம் பிறந்த நாள் கொண்டாடிய 

ஒரு தேவதைக்கு பிறந்த நாள் பரிசா கொடுக்கணும்னு நினைத்தேன்..

ஆனா தேவதை தரிசனம் கடைசி நேரத்தில தான் கிடைத்தது..

அந்த பரபரப்பில விட்டாச்சு..


சரி..காதலால் நிரம்பி இருக்குற இந்த பூமியில எல்லா நாளும் 

காதல் தினம் தானே.. பரிசை இன்னைக்கு கொடுத்துட்டேன்..என் கண்ணீர் துளிகள் உலர்ந்து போக தென்றல் காற்றாய்  

வந்தவளே.. இத்தனை நாள் எங்கிருந்தாயடி..

 
காயமுற்றுக் கிடந்த என் கற்பனைக் குதிரையை

கவிதைப்பிரதேசங்களை நோக்கி பயணிக்கச் 

செய்த பாவையே.. இத்தனை நாள் எங்கிருந்தாயடி..


அலை இன்றி அமைதியாய் இருந்த என் கடல்..

இன்று நீ வந்ததும் ஆரவாரமாய் ஆர்ப்பரிக்கின்றதே..


ஒளி இழந்து கிடந்த என் தனிமை உன்னைக் கண்டதும் 

சூரியனை விடவும் அதிகமாய் பிரகாசிக்கின்றதே..

இத்தனை நாள் எங்கிருந்தாயடி..


எனக்கென பிறந்த தேவதை நீ இருக்க நானோ இத்தனை 

நாளாய் ஊரெல்லாம் தேடித் திரிந்தேன்..

இத்தனை நாள் எங்கிருந்தாயடி..

 
மழைத்துளி போல நான்..எங்கோ சேற்றில் விழுந்து சகதியாய் 

மாற இருந்த என்னை உன் கைகளில் ஏந்தி கங்கைக்கு 

நிகரான புனிதத்தன்மை தந்தவளே..

இத்தனை நாள் எங்கிருந்தாயடி..

 
என்னை விரும்பும் ரோஜா நீ இருக்க நானே விரும்பி சில 

முட்களின் பின்னால் சென்று காயப்பட்டு இருக்கிறேன்..

இத்தனை நாள் எங்கிருந்தாயடி..


மேலே சென்ற பொருட்கள் எல்லாம் பூமியை வந்தடைவது 

அதன் புவி ஈர்ப்பு விசையால் எனில்..எங்கு சென்றாலும் நான் 

உன்னை வந்தடைவது உன் விழி ஈர்ப்பு விசையால்..


நீ என்னிடம் உதடுகளால் பேசியதை விட , உன் விழிகளால் 

பேசியதே அதிகம்..மவுன மொழியை எனக்குக் கற்றுத்தந்தவளே..

இத்தனை நாள் எங்கிருந்தாயடி..


உன்னுடன் உரையாடி முடிக்கும் ஒவ்வொரு முறையும் 

என் காது மடல்களில் கற்கண்டு சுவை..நீ தந்த 

செல்போன் முத்தத்தினால்..


உன்னைக் கண்டபின் என் நுரையீரல் காற்றை சுவாசிக்க வில்லை..

உன் காதலைத் தான் சுவாசிக்கிறது..


கவலைக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த என்னை உன் 

காதல் என்னும் கட்டுமரம் கொண்டு கரை சேர்த்தவளே..

இத்தனை நாள் எங்கிருந்தாயடி..

கண்ணாடியில் முகம் பார்த்தாலும் என் முகம் தெரிவதில்லை..

காதல் வழியும் உன் முகம் தானடி தெரிகிறது..


உன் விழி ஆயுதங்கள் மாறி மாறி தாக்குகிறது என்னை..

கலவரம் வரும் முன் தயவுசெய்து உன் இதழ்களின் ஈர 

முத்தத்தால் அடக்கி விடு..


உன் ஸ்பரிசத்தின் சுகம் உணர நானே மழையாய் மாறி 

வருவேன்..தயவு செய்து ஒதுங்கி விடாதே..


எனக்குள் இருந்த என்னைத் தேடிக்கண்டுபிடித்தவளே..

இத்தனை நாள் எங்கிருந்தாயடி..


என் உறக்கத்தைக் கெடுத்துவிட்டு நீ நிம்மதியாக

உறங்குகிறாய்..உறங்குவது நீ அல்ல..என் உலகம்..


நீ என்னுடன் இருக்கும் இரவில் மட்டும் என் வானில் 

இரண்டு நிலா..உன்னையும் சேர்த்து..
ஆயிரம் மலர்களின் மென்மையை உன் ஐந்தரை அடிக்குள் 

ஒளித்து வைத்துக்கொண்டவளே..

இத்தனை நாள் எங்கிருந்தாயடி..

ஒரு உடலினுள் இரு உயிர்கள் வாழ முடியுமா..? ஆம்..

தாயின் கருவில் இருக்கும் சிசு..எனக்குள் இருக்கும் நீ..


என் இதயத்தினுள் நீ நுழைந்தது என் இதயத்தை 

அலங்கரிக்கவா இல்லை அபகரிக்கவா..?


காற்றின் திசைக்கு ஏற்ப ஆடும் தீபம் போல..நானும் நீ 

இருக்கும் திசை நோக்கியே இருக்கிறேன்..

நான் சன் பிளவர் அல்ல.. உன் பிளவர்..

Monday, February 13, 2012

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 55உன்னை பார்க்குற பிகரை முதலில் மடக்க பழகு..

பிறகு நீ பார்க்கும் பிகரை..அப்புறம் உன்னை பார்க்காத 

பிகரை கூட மடக்கலாம்..எந்த சரக்கையும் வெறுத்துடாதீங்க..சில சரக்கு போதை 

தந்தால்,சில புத்தியைத் தரும்..# மட்டி சரக்கு 

போல.. ஒத்துக்கல..உன் தோழியை பார்த்ததும் உன் பக்கத்தில நெருக்கமா 

உட்கார்ந்தா அவ காதலி.உன் காதலியைப் பார்த்ததும் 

புன்னகையுடன் விலகி நடந்தா அவ தோழி.நீ யாரையுமே 

பார்க்காம நடந்தாலும் அங்கே என்ன பார்வைன்னு 

குமட்டில் குத்தினா அவ மனைவி..
ஓவரா குடிப்பேன்னு உதார் விட்டு மட்டை ஆகுறதை விட,

கொஞ்சம் கொஞ்சமா குடிச்சி குஜாலா இருக்குறது 

எவ்வளவோ பரவாயில்லை.குடிக்கும் வரை உளறாம இரு..குடிச்சதுக்கு அப்புறம் 

உளறிக்கிட்டே இரு..# இல்லைனா மத்தவனுங்க 

அனத்த ஆரம்பிச்சுடுவானுங்க..தாங்காது.
போதை ஆகுறது பெரிய விஷயம் இல்ல..அந்த போதையை 

தக்க வைப்பது தான் சவாலே.#வாந்தி எடுத்துடுறானுங்க 

சின்ன பசங்க.
அழுகையை யார் வேணும்னாலும் தர முடியும்..ஆனா 

ஆறுதலை RC யும், அரவணைப்பை ஆன்ட்டியும் 

மட்டுமே தர முடியும்..
காதல் தோல்வியை எண்ணி கவலைப்பட்டுக்கிட்டே 

இருப்பதை விட , ஆன்ட்டிகளின் அரவணைப்பில் அடைக்கலம் 

புகுவதே சிறந்தது.
பிரச்சினையை சமாளிக்க அடுத்தவனை போட்டுக்

குடுக்குறவனை விட,அமைதியா போயி போதையை 

போடுறவன் பரவாயில்லை..# ஹர ஓ சாம்பா..
ஞானி நிலையை அடைய பிறப்பின் ரகசியம் புரியணும்னு 

அவசியம் இல்ல..பிராந்தி அடிச்சாலே போதும்..

#ஹர ஓ சாம்பா..

Friday, February 3, 2012

செல்லமடி நீ எனக்கு..
ஆழ்கடல் போல நான்..யாரும் நெருங்க முடியாமல் இருந்த 

என்னுள்,சூரிய வெளிச்சம் போல எளிதாய் நீ நுழைந்ததால்..

செல்லமடி நீ எனக்கு..


எத்தனை தூரத்தில் இருந்தாலும் என்னைப்பற்றிய 

எல்லாமும் தெரிந்து,என் இன்னொரு உயிராய்,உருவமாய் 

நீ இருப்பதால்..செல்லமடி நீ எனக்கு..


வெளிப்படுத்தாத என் மனக்காயங்களையும்,என் கண்களைப் 

பார்த்தே கண்டறிந்து மருந்திடும் என் தாயுமானவளுமாய் 

நீ இருப்பதால்..செல்லமடி நீ எனக்கு..


முகத்தைப் பார்த்து வெறுத்தவர்கள் மத்தியில் என் 

அகத்தை பார்த்து நேசித்ததால்.. செல்லமடி நீ எனக்கு..

 
உண்ணும்போது ஊட்டிவிட சொல்லி,உறங்கும்போது 

என் தலைமுடிக் கலைத்து என் கோபப்பார்வையில் மருண்டு 

நின்று,பின் அழுகையுடன் என் மார்பில் சாய்ந்து என் 

குழந்தையாகவும் நீ இருப்பதால்.. செல்லமடி நீ எனக்கு.அனைவரையும் அலட்சியப்படுத்தியே பழக்கப்பட்ட என்னை , 

அன்பு என்னும் ஆயுதம் கொண்டு முழுமையாக 

ஆட்கொண்டதால்.. செல்லமடி நீ எனக்கு..படைப்புகளை விடுத்து படைத்தவனை நோக்கிச் செல்லும் 

ஞானியைப் போல பெண்களை விடுத்து தேவதையான உன்னை 

நோக்கி என்னை இழுப்பதால்..செல்லமடி நீ எனக்கு..உரிமை கொண்ட உறவுகள் பல இருக்கலாம் உனக்கு,

ஆனால் எனக்கென எல்லாமுமாய் நீ மட்டுமே இருப்பதால்.. 

செல்லமடி நீ எனக்கு..ஆண் அகலிகையாய் இருந்த எனக்கு பெண் ராமனாய் 

வந்து உன் விரல் தீண்டலில் தீட்சை தந்ததால்.. 

செல்லமடி நீ எனக்கு..நீ என்னை எத்தனைக் காயப்படுத்தினாலும் , என்னை விட்டு 

விலகியே இருந்தாலும் எப்போதுமே

செல்லமடி நீ எனக்கு..

Thursday, February 2, 2012

புரிஞ்சவன் தான் பிஸ்தா... 22ஒரு மாதத்தில்  எத்தனை முறை உடலுறவு வைத்துக்கொள்ள

ஆசைப்படுகிறீர்கள்னு  ஒரு சர்வே எடுத்தாங்களாம்..63 % பேரு 

10 க்கும் மேற்பட்ட  முறைன்னு சொன்னாங்களாம்..ரெண்டு 

வார்த்தையை சேர்த்தவுடன் அது அப்படியே 3 % ஆயிடுச்சாம்..

அது என்னனா அவரவர் மனைவியுடன்..ஒரு அம்மாவும் , 6 வயசு பையனும் SINGAPORE AIRLINES 

ப்ளேன்ல இருந்தாங்களாம்..
பையன் – அம்மா..எல்லாபபறவைக்கும் குட்டி இருக்கு..

ஆனா ஏரோப்ளேனுக்கு மட்டும் ஏன் மா குட்டி இல்ல..?
 
அம்மா – அதோ அந்த AIRHOSTESS ஆன்ட்டி யை கேளு..
பையனும் போயி கேட்டானாம்..
AirHostess  – ஒஹ்..என்னை  கேட்க சொன்னாங்களா.. 

சரி அது ஏன்னா SINAGPORE AIRLINES ALWAYS PULLS 

OUT ON TIME..இதுக்கு என்ன அர்த்தம் னு உங்க 

அம்மா கிட்ட கேளு..ஓகே..


பழக்கப்பட்ட பாதையா இருந்தா மெதுவா போனாலும் 
வெற்றி தான்..#கில்மா கீச்சு..
 
பாவாடையை கண்டால் பாம்பும் நடுங்கும்..# #கில்மா கீச்சு..
 
சும்மா பார்த்து சிரிச்சாலே கோபப்படுற  பொண்ணுங்களும் எமன் 
வந்து கூப்பிட்டா போய்த்தான் ஆகணும்..#புரிஞ்சவன் தான் பிஸ்தா

கல்யாணத்துக்கு பிறகு,ஆண்களுக்கு இடுப்புக்கு மேல 

முன் பக்கம் சதை போடுது..பெண்களுக்கு இது கீழ் எதிர்..