Wednesday, November 20, 2013

மாத்தி யோசி .. 71ஒரு காலத்தில நானும் யோகாசனம் பண்ணுனேன்..

சவாசனம் பண்ணும்போது எங்க அம்மா பார்த்துட்டு 

தூங்குறேன்னு தண்ணி ஊத்திட்டாங்க..


 

இனிமே பொறுமைக்கு எருமையை உதாரணம் 

சொல்லாம ஆடித்தள்ளுபடியில பெண்களோட துணிக்கடைக்கு 

போகும் ஆண்களை சொல்லலாம்..# அசராம இருக்காங்கப்பா..

எனக்கு இன்னும் பயிற்சி வேணும் போல..யா யா படம் பார்த்தேன்..சட்டியில இருந்தா தானே அகப்பையில் 
 
வரும் பழமொழிக்கு சிறந்த உதாரணம்..சிவாவின் 
 
சவ பெர்பார்மன்ஸ்..
என்ன தைரியத்துல இப்படி படம் எடுக்கிறானுங்க னு யோசிக்காம 
 
என்ன தைரியத்துல நீ தியேட்டருக்கு போனேன்னு எனக்கு 
 
நானே கேள்வி கேட்கும் நிலைமை.

 
 
கொலையும் கூலிங்க்ளாசும் இல்லனா  சரக்கும் சைடிஷ்ஷும் னு 
 
பெயர் வச்சாத்தானே அது மிஷ்கின் படமாகும்..என்னமோ போங்க..
 
 
 
ஐயையோ இவனுங்க கொடுக்குற அலப்பறையை பார்த்தா 
 
சற்குணம் தனுஷுக்காக சறுக்கிருப்பாரோ..? அடுத்த 
 
மர்ஷியல் குப்பையா இருக்கக்கூடாது ஆண்டவா..!!

 
நான் சொன்ன மாதிரியே சறுக்கிட்டார் சற்குணம். உங்க காசு 
 
தண்டமா போச்சேனு நமக்கும் தயாரிப்பாளருக்கும் 
 
நய்யாண்டி காமிச்சுட்டார்..
ரெண்டு நல்ல படம் கொடுத்து மூணாவதா கமர்சியல் படம் ,

பெரிய ஹீரோனு சுசீந்திரனுக்கு ராஜபாட்டை,

சற்குணத்துக்கு நய்யாண்டி.மாமா பௌ...

 

 
சிறுத்தைல ஆந்திரா வாடை ரொம்ப  அதிகமா இருந்துச்சே..
 
அஜித் படத்துக்கு "காரம்"னு  பேரு வச்சி இருக்கலாம்.

 
 

அஜித்தின் ஆரம்பம் பில்லா 2 போல "ஆ..ரம்பம்."னு  நம்மை 

அலற வச்சா அணில் குஞ்சுங்க அலப்பறை பண்ணி 

ஆகாசத்துல பறப்பானுங்களே..

Sunday, November 17, 2013

ஏன் இப்படி ...77


உங்களைத் தவிர நாங்க வேற யார்கிட்ட சிரிச்சு பேசினாலும் 
 
சூர காண்டு ஆகுரீங்களே..ஏன் பாஸ் / கேர்ள்ஸ்..?உங்களுக்கு மட்டும் எல்லாரும் நண்பர்களா இருக்கணும்..
 
நாங்க ம்!@#$%^ பிடிச்சி இழுத்து சண்டை போட்டுக்கணும்..
 
இது என்ன நோய் பாஸ் / கேர்ள்ஸ்..?
எங்களுக்கு ஏதாவது ஒரு முக்கியமான வேலை 
 
இருக்குனு சொல்லும்போது ஒரு மொக்கை காரணம் சொல்லி 
 
எங்களை உங்க கூட இருக்க வச்சி இம்சை பண்றீங்களே.. 
 
ஏன் பாஸ் / கேர்ள்ஸ்..?
பக்கத்தில இல்லைனாலும் நாங்க சந்தோஷமா இருக்கும்போது  

ஏதாவது ஒரு பிரச்சினையைக் கிளப்பி எங்க நிம்மதியைக் 

கெடுப்பதில் என்ன ஆசை பாஸ் / கேர்ள்ஸ்..?நாங்க சொல்ற எந்த கருத்தையும் ஒத்துக்காம ஏதாவது 

காரணம் சொல்லி தட்டிக்கழிக்குறீங்க..அப்புறம் ஏன் எங்க 

கிட்ட கேட்குறீங்க பாஸ் / கேர்ள்ஸ்..?
கொலைகாரனைக் கூட மன்னிச்சுடுவாங்க போல.. 

குடிக்கிறவன்னு சொன்னா கோரமா பார்க்குறாங்க..?


 எக்ஸாம் ஹாலில் அடுத்தவன் பேப்பரை 

பார்க்கிறதை விட,ஹோட்டலில் அடுத்தவன் என்ன 

சாப்பிடுறான்னு பார்க்கிறதில நம்ம மக்கள் கில்லாடிங்க..
குழப்பத்தில் எடுக்கும் தவறான முடிவுகள் பெரும்பாலும் 

கூட இருப்பவர்களின் குடைச்சலாலேயே எடுக்கப்படுகின்றன..

#கொலை பண்ணிடலாமா.?

 தன்னைப்பத்தி கேவலமா பேசுறதை சிரிச்சுக்கிட்டே 

ஏத்துக்குறவன் இன்னொருத்தனைப் பத்தி புகழ்ந்தா உடனே 

உர்ருன்னு ஆயிடுறானுங்க..#அட மானங்கெட்ட பதருகளா.. 


குழப்புவதில் தெளிவாகவும் , புரிந்துகொள்வதில் 

எப்போதும் குழப்பமாகவும் இருக்க பொண்ணுங்களாலும் , 

பாஸ்களாலும் மட்டும் தான் முடியும்..#ப்ப்பா... 

Thursday, November 14, 2013

என் வாழ்க்கை நீ


காதல் வழியும் உன் கண்களின் வெளிச்சம் பட்டு என் 

தேகமெல்லாம் நிறம் மாற , என்னை சூழ்ந்திருந்த கவலை 

மேகங்களும் நிறம் மாறுகின்றன..


காலம் முழுதும் நீ சேர்த்து வைத்த காதலை , என்னைப் பார்த்த 

அந்த நொடியில் உன் கண்களின் வழியே கண்டேன்..

 
எனக்காக காத்திருக்கையில் வெட்கம் பூசிய வெள்ளைத் 

தாமரையாய் உன் முகம்,ஆனால் தவிப்புடன் அலைபாயும் 

கண்கள் ..# ராட்சசி..லவ்யூடி..


 
உன் காதல் இன்றி இத்தனை நாள் எப்படி வாழ்ந்தேன் 

என தெரியாது.. ஆனால் இனி நீ மட்டுமே என் 

வாழ்க்கை என தெரியும் ..


அத்தனை உறுப்புகளின் வலியும் கண்களில் தெரிவது 

போல என் அத்தனை உறவுகளும் உன் காதலில் தெரிகிறது...


எத்தனையோ அழகிகள் கண்டபோதிலும் , உன்னைப்போல் 

ஒருத்தி இருப்பதை இன்னமும் நம்பமுடியவில்லை என்னால்..

# தேவதை ஸ்த்ரீயடி நீ..


உன் அழகைக் கண்டு அச்சப்பட்டு விலகுகிறேன் நான்..

கண்களில் காதலைக் காட்டி காந்தம் போல் ஈர்க்கிறாய் நீ..நம் நலன் குறித்து செய்வன அனைத்தையும் உன்னை 

ஆலோசித்தே செய்கிறேன்..என் நலன் குறித்து 

மட்டும் நீயே முடிவெடுப்பது ஏன் ஹனி..?

எனக்கு வலிகளைத் தர, நீ பேசும் வார்த்தைகளின் 


தொனியை மாற்றினாலே போதும்..

# துடிக்க வைக்காதே ஹனி.. ப்ளீஸ்..
எத்தனை முறை என்னை உயிர்ப்பிக்கிறாயோ, அத்தனை 


முறை என்னை மரிக்கவும் செய்கிறாயே ஏனடி..? 

# ஹனி பெயர்ச்சி..

Thursday, August 29, 2013

ஏன் இப்படி ...76தற்கொலை பண்ணிக்கிட்டவனுக்காக வருத்தப்படாம 

எங்கிட்டே சொல்லிட்டு செத்திருக்கலாம்னு சொல்றவனுங்க சங்கை 

கடிக்கணும் போல இருக்கு..!!!

 


நொந்து போயி இருக்கோம்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் ஆறுதல் 

சொல்லலைனாலும் பரவாயில்லை.. அட்வைஸ் பண்றேன்னு 

அழிச்சாட்டியம் பண்ணாதீங்கடா டேய்காலையில கண்விழித்ததும் தினமலர் பேப்பர் கண்ணுல 

பட்டது..தலையங்கம் "கைவிரிப்பு..."# வெளங்கிடும்.. பக்கத்து ரூம் 

பரதேசிகளை வெட்டினா சரியாயிடும்..

 சண்டை  போடுறவனுங்களை விட , சொம்பு அடிக்கிறவனுங்க 

தொல்லை ஓவரா இருக்கு..#என்னமா அடிக்குறானுங்க.

 எங்களுக்கு ஒரு விஷயம் பிடிக்கலைன்னு நாங்க சொல்லியும் அதையே 

பேசிப்பேசி காண்டாக்கிப் பார்க்கிறதுல உங்களுக்கு என்ன சந்தோசம் 

பாஸ் / கேர்ள்ஸ்..?
தப்பு பண்ணியதை மறைக்கிறவன் கூட பரவாயில்லை..அதை 

இன்னொருத்தன் மேல போடுறவனுங்களா.. உங்களைத் திட்ட 

வார்த்தையே இல்லைடா..!!!

 பதில் தெரியலைனா சொல்லமுடியாதுன்னு கெத்தா சொல்லிடுங்க.. 

கேள்விக் கேட்ட எங்களையே , அழும் அளவுக்கு குழப்பாதீங்கடா டேய்..

 நாங்க உங்களைக் கேள்விக் கேட்டா மட்டும்"உனக்கு மட்டும் ஏன் 
 
இப்படியெல்லாம் தோணுதுன்னு" கேட்டு 

எங்களைக் கொன்னு எடுப்பதை 

எப்போதான் நிறுத்துவீங்க பாஸ் / கேர்ள்ஸ்..?

 
நீங்க தப்பு பண்ணியதை நாங்க கண்டுபிடிச்சு கேள்விக் கேட்கும்போது
மட்டும் புரியாத மாதிரியே முகத்தை வச்சிக்குறீங்களே..? 
எப்படி பாஸ் / கேர்ள்ஸ்..?
 
காதலியிடமும் , பாஸிடமும் அடிக்கடி கரகாட்டக்காரன் செந்தில் 
ரியாக்ஷன் கொடுக்க வேண்டி இருக்கு..#ச்ச.. என்ன வாழ்க்கைடா இது..

Thursday, August 22, 2013

மாத்தி யோசி .. 70ரெண்டு பெரும் மாறி மாறி கொடுத்துக்கிட்டா தான் அது கைமாத்து.. 

எப்பவும் ஒருத்தனே கொடுத்தா அது ஏமாத்து..

(வாங்குனா கொடுக்கவே மாட்றானுங்க..)கூண்டுல மாட்டிக்கிட்ட அப்புறம் சிங்கமா இருந்தா என்ன..? 

சிறு முயலா இருந்தா என்ன..? தற்கொலை பண்ணிக்க 

காதலிச்சா என்ன..? கல்யாணம் பண்ணா என்ன...?

 


கொஞ்சநாளில் சரியாகிடும்னு  தனக்குத்தானே 

சமாதானம் சொல்லிக்கிறானுங்க..அது,சரி 

ஆகலைனா சலிச்சுக்குறானுங்க.. 

#இதுக்குதான் நான் ஆரம்பத்திலேயே 

அசால்டா இருக்குறது..அக்காங்..

நிறைய பேசினாலும் , இல்ல ரொம்ப நாள் பேசாம விட்டாலும் 

கருத்து வேறுபாடுகள் அதிகமாகுது.. #ஹ்ம்ம் .. எல்லா 

உறவுகளிலும் இடைவெளி அவசியமாகிறது..

 


கேள்விக் கேட்குறவனைக் காண்டாக்க ஒரே வழி..புரியாத மாதிரியே
 
நடிக்கிறது..#எவ்வளவு ஆடிட்டிங் பார்த்திருப்போம்..


 
ஆம் என்பது பெரும்பாலான நேரங்களில் புரியாமலையே 

சொல்லப்படுகிறது..# ஆமாங்கனு மொக்கை போடாதீங்க ப்ளீஸ்..

 


தேவைகளைப் பொறுத்தே இப்போதெல்லாம் தேவதைகள் 

தீர்மானிக்கப்படுகிறார்கள்..#ஹ்ம்ம்...
 


 
நல்லவன் என்பவன் யாரெனில் எனக்கு தீங்கு செய்யாதவன்..# நல்லா 

இருக்குடா உங்க லாஜிக்..!!! 
நேத்து நடந்த ஒரு நல்ல விஷயம் ஒருத்திக்கு புடவை 

எடுக்கப்போறேன்னு இன்னொருத்திக்கிட்டனு மாறி மாறி 

சொன்னேன்..#ரெண்டு பெரும் நம்பலை..# விஷயம் தெரிஞ்சா கூட நான் 

பொய் சொன்னேன்னு சொல்ல முடியாதுல.. 

Thursday, August 15, 2013

ஏன் இப்படி ...75பொய் சொல்ல விரும்பாதவனையும் அண்டப்புளுகனா மாற்றும் 

திறமை பாஸ்களுக்கும், பொண்ணுங்களுக்கும் மட்டுமே உண்டு..

# உண்மையை சொன்னா மதிக்க மாட்றீங்களே..நாங்க எவ்வளவு உண்மையா இருந்தாலும் நம்பாம,அடுத்தவங்க 

கிட்ட எங்களைப் பத்திக் கேட்பதை வழக்கமா வச்சி இருக்குறீங்களே 

ஏன் பாஸ்..? ஏன் பொண்ணுங்களா..?எங்களோட உண்மைத் தன்மையை ஒவ்வொரு முறையும் 

நிரூபிச்சுக்கிட்டே இருக்கணும்ன்ற உங்க எதிர்பார்ப்பை 

எப்போ தான்  மாத்திக்குவீங்க பாஸ் & கேர்ள்ஸ்…? 
மேனேஜர் ஆயீட்டாலே மல்டிபிள் பெர்சனாலிட்டி வந்துடுமோ..?  

அந்நியன்,அம்பி,அரைவேக்காடு ,அதிகப்பிரசங்கினு ஆறேழு இருப்பான் 

போல.. என்னமா பெர்பார்மன்ஸ் பண்றானுங்க..கேள்விக்கு பதிலா இன்னொரு கேள்வியை சொல்வதே 

இந்த பாஸ்களுக்கும் பொண்ணுகளுக்கும் பொழப்பா போச்சு.. ORKUT வந்த புதுசுல ஒவ்வொரு பொண்ணு பேரா தேடித்தேடி ப்ரெண்ட் 

ஆக்கிக்கிட்டேன்.. இப்போ மறுபடி அந்த நப்பாசை வந்து FACEBOOK ல 

தேடுனா.. அடச்ச ..ஒவ்வொரு பொண்ணு 

பேரு (பொண்ணானு  தெரியாதே ) ..

கூடவும்  ஒரு கும்பலே கடலை போடுது..அட போங்கடா 


நாங்களும் மனுஷங்க தான்.. மெஷின் இல்ல..எங்களுக்கும் பீலிங்க்ஸ் 

இருக்குனு எப்போதான் புரிஞ்சுக்குவீங்க பாஸ் / கேர்ள்ஸ்...?பாஸ்களும் பொண்ணுங்களும் ஒரு பதிலில் திருப்தி 

அடையவே மாட்டாங்களா…? நாக்குத் தள்ளுதுடா சாமி..குழப்புற புத்திசாலியை விட,தெளிவான முட்டாளிடம் வேலை 
 
பார்க்கிறது பரவாயில்லை..ஹ்ம்ம்.எனக்கு வாச்சது குழப்புற 
 
முட்டாள்..தினமும் மரணப்போராட்டம்..பைத்தியம் பிடிச்ச மொண்ணை 
 
நாயி..

 
 
அவமானப்படுத்தியவனை விட,அதை வேடிக்கை பார்த்தவங்க மேல 
 
காண்டு ஆவுறாங்க சில டோமருங்க என் ஆபிஸ்ல..#அட 
 
வெளக்கெண்ணை குப்பனுங்களா.?

Wednesday, August 14, 2013

தலைவா ஆஆஆஆஆஆசந்துல சத்தம் அதிகமா இருக்கு ..பொதுவா ரெண்டு  விஜய் 

படத்திலையும்  கதையே இருக்காதே..அப்புறம் ஏன் 

இந்த சண்டை..? # சமாதானமா போங்கப்பா.. படம் சென்னையில தியேட்டர்ல ரிலீஸ் ஆகல..

ஆனா CD ல ரிலீஸ் ஆயிடுச்சு..
தமிழ்படத்துக்கு அப்புறம் அதிகமான படங்களோட சாயல் 

இதுல தான்..நாயகன்,பாட்ஷா,ஏன் இந்திரா உட்பட..

 


தமிழ்படத்துல கலாய்ச்சு காமெடி பண்ணி இருந்தாங்க..

இவனுங்க காப்பி அடிச்சி காமெடி பண்ணி இருக்கானுங்க.. என்ன  எழவுடா இது.. படம் தான் ரிலீஸ்  லேட்டாகுதுன்னு 

பார்த்தா அதைப் பத்தி பேசவும் எத்தனை தடங்கல்கள் எங்க ஆபிஸ்ல .. தலைவா படம் பார்த்த நாளில் சன்  டிவி ல சுறா படம்  

போட்டு இருந்தாங்க..அதையே பார்த்து இருக்கலாமோன்னு தோணுச்சு  
சுறா , வேட்டைக்காரன் மாதிரி "காவியங்கள்" கூட நடிங்க பாஸ்..

ஆனா தலைவா மாதிரியான "சமூகப்படங்கள்" வேணாம்..

ரொம்ப வலிக்குது. இதுல அமலா பாலுக்கு வேற யூனிபார்ம் போட்டு 

விட்டு வெறுப்பேத்துறானுங்க.. 


ஒரு உயிர் போயிடுச்சி..கருத்து சொல்லாம இருக்கலாமுன்னு 

இருந்தா விட மாட்டானுங்க போல.. எத்தனையோ மொக்கை படங்கள் பார்த்துட்டு நடைபிணமா 

வாழுற மக்களை நினைத்து பாருங்க பா..படம் தமிழ்நாட்டுல ரிலீஸ் ஆனா கண்டிப்பா அரை மணி நேர 

படம் கட் ஆகும்..இல்லைனா நிறைய இடங்களில் 

வசனக்கட்டு உண்டு..


தே போல Y.G மகேந்திரன் அப்புறம் பாஸ் என்கிற பாஸ்கரன் 

படத்தில் ஆர்யா அண்ணனா வருவாரே அவங்க வீட்டுக்கு 

எல்லாம் கல்லடி கன்பார்ம். என்னா பில்டப்புவிஜய் வீடை கோயிலாவும் அண்ணனை தெய்வம்னு சொல்லி 

ஒரு வசனம். காதுகளை இறுக்கமா மூடிக்கிட்டேன்.. 

அப்புறம் எப்படிடா படம் ரிலீஸ் ஆகும்


3 மணி நேரம் தவமாய் தவமிருந்த சேரனே 2 மணி நேரமா 
 
சென்னையில் ஒரு நாள்னு வந்துட்டாரு..இவனுங்க 3 மணி 

நேரம் மொக்கை போடுறானுங்க.ப்ளாக் பஸ்டர் ஆகும்னு பார்த்தா கடைசியில 

பிளாஸ்டிக் பக்கெட் ஆயிடுச்சே..தலைவா  படத்தில ஒரே ஆறுதல் டூயட் சாங் இல்ல.

அதனால தலையில கலர்கலரா நூடுல்ஸ் எல்லாம் 

கவுத்துட்டு எல்லாம் வரல..மொத்தத்தில மாஸ் ஹீரோ னு சொல்லிட்டு இருந்த விஜயை 

தமாஸ் ஹீரோவா ஆக்கி விட்டுஇருக்கானுங்க..

Thursday, August 8, 2013

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 63முரண்டு பிடிக்கும் பெண்களையும்,மிரண்டு நிற்கும் பெண்களையும் 

சமாளிப்பது சுலபம்..கண்களில் நீருடன் மருண்டு நிற்கும் 

பெண்களை சமாளிப்பதே கடினம்..
 
எத்தனை கவனமாய் இருப்பினும் காதல் கொண்ட மனதும்,

கள்ளம் செய்த மனதும் கண்களில் தெரிந்து விடுகிறது..

 

சம்சாரியா ஆகப்போறேன்னு சொன்னா பசங்க 

பயப்படுறாங்க..சாமியாரா ஆகப்போறேன்னு சொன்னா 

பொண்ணுங்க பயப்படுறாங்க..

 


ஆண்களால் காயப்பட்ட பெண்களைக் காட்டிலும்,

பெண்களால் காயப்பட்ட ஆண்களை தேற்றுவதே மிகக் கடினம்..
 


ஆனந்தத்தில் வரும் கண்ணீர் அற்புதமானது..

விரக்தியில் தோன்றும் சிரிப்பு வேதனையானது..
 

வார்த்தைகளில் வசமாக்க முடியாத கவிதைகளில் ஒன்று , 

குழந்தைகளின் முத்தம்..

 


அவள் மேல் உள்ள சந்தேகத்தில் குடிப்பவனை விட , 

தன் பலகீனங்களைக் கண்டு பயந்து குடிப்பவனே அதிகம்..
 


தன்னுடல் பற்றி அறிந்ததை விடவும் பெண்ணுடல் பற்றி 

அறிந்தவன் பிரகாசிக்கிறான் படுக்கையில்..ஹ்ம்ம்..

Tuesday, May 7, 2013

உதயம் - NH 4வணக்கம் நண்பர்களே..

மிக நீண்டதொரு இடைவெளி.. இதுபோல் ஒரு பெரிய பதிவு எழுதி.. 


தலைப்பைப் பார்த்ததும் திரைப்பட விமர்சனம்னு நினைக்காதீங்க..

இது ஒரு சங்கத்தின் உதயம்.. NH 4- Not Happy 4 வருஷம்னு 


அர்த்தம்... தலைவர் , செயலாளர் உட்பட அனைத்து பதவிகளுக்கும்

ஆட்கள் தேவை..என் உடம்பு அடிவாங்குற உடம்பு இல்லைங்க.. 


அதனால ஆக்கம் மற்றும் ஊக்கம் மட்டும் மட்டும் நான்..


அட ஆமாங்க.. இது ஒவ்வொரு ஆபிஸ்லயும் வருஷாவருஷம் 


நடக்கும் கொடுமையைப் பத்தி.. அதுதான் அப்ரைசல் அவலங்கள் ..

எல்லாருக்கும் ஏப்ரல் 1ந்  தேதி முட்டாள்கள் தினம்னா எங்க 


கம்பெனியில அது மே  7 ந் தேதி..பெரும்பாலான ப்ரைவேட்

கம்பெனியில இது தான் விதி..

ஏமாத்துறானுங்கனு தெரிஞ்சும் பல்வேறு பிரச்சினை
களால 


வேற கம்பெனி மாற முடியாம ஏமாந்துக்கிட்டே இருக்கோம்..

அழுகிற குழந்தையை எதையாவது சொல்லி ஏமாத்தி சமாதானப்படுத்தும்


அன்னையைப் போல,அடுத்த வருஷ அப்ரைசல் வரும்போது

நீயே ஆச்சர்யப்படுவ பாருன்னு சொல்லியே 


அசால்டா அல்வா கொடுப்பானுங்க..

நாமும் கர்நாடகா அரசு கண்டிப்பா காவிரியை திறந்து 

விடும்னு வாயப் பொளந்துக்கிட்டு பார்க்கிற மாதிரி பார்ப்போம்..

இப்படியே  ஓவர் பில்டப் தந்து , கடைசியில 


மிஷ்கினோட முகமூடி போல மொத்தமா கிழிஞ்சிடும்.. நாமும் அடுத்த மூணு மாசத்துக்கு நம்ம தமிழக 

அரசியல்வாதிகள் மக்களுக்கு நல்லது செய்கிற மாதிரி நடிச்சி

ஒண்ணுமே செய்யாதது போல வேலை செய்கிற மாதிரி 


நடிச்சி வேலை செய்யாம இருப்போம்..


ஆனா கொஞ்ச நாளிலேயே தமிழக மக்கள் அடுத்த 

தேர்தலில் பார்த்துக்கிறோம்டா  உங்களைனு

சொல்லிட்டு சொரணையே இல்லாம ஓட்டு போடுற 


மாதிரி தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டு ,

சென்னை சூப்பர் கிங்க்ஸ் கடைசி அஞ்சு  ஓவர்ல அடிச்சி 


ஜெயிக்கிற மாதிரி உயிரைக்கொடுத்து வேலைகளை

எல்லாம் செஞ்சு முடிப்போம்..ஆனா.....

எக்ஸ்ட்ரா இன்னின்க்ஸ்ல வர்ற ரப்பர் வாயனுங்க போல , நமக்கு மேல 

இருக்குறவனுங்க இதை நீங்க அப்படி செய்து இருக்கலாம் இப்படி

செய்து இருக்கலாம். தேவை இல்லாம உங்களால எங்க எல்லாருக்கும் 


டென்ஷன் னு  வாணலியும் இல்லாம வனஸ்பதியும்

இல்லாம வாயிலேயே வடை சுட்டு நம்மை சூர 


காண்டாக்குவானுங்க..இதைக்  கேட்குற  நமக்கு வெயில்ல

வெந்நீரைக் குடிச்சிட்டு விஜய் படம் பார்க்கிற மாதிரி வெறி ஏறும்...
அப்ரைசல் போடுற முதல் மாசம் வரைக்கும் எவனுமே HR department டில் 

இருக்குறவனுங்களைக் கண்டுக்க மாட்டோம். அதை எல்லாம்

மனசுல வச்சிக்கிட்டு இந்த ஏப்ரல் மாசம் இவனுங்க போடுற ஆட்டம் 


இருக்கே..ஐயயயயாவ்... முமைத் கானையே மிஞ்சிடுவானுங்க..

 


தனியா உட்காந்து இருக்க பயந்துக்கிட்டு வாசக்கதவை தொறந்து 

வச்சிக்கிட்டு எவனாவது வரமாட்டானானு பார்த்த

ஆலி வாயனுங்க எல்லாம் , இந்த ஒரு மாசம் மாட்டும் 


இவனுங்க என்னமோ அனுஷ்கா , அமலா பால் கூட பேசிக்கிட்டு

இருக்குற மாதிரியும் அதை நாம தொந்தரவு செய்ய வந்த 


மாதிரியும் சீன போடுவானுங்க.. ஏதாவது வேலை விஷயமா

இவனுங்களைப் பார்க்க போனா , EXCEL ல ஒரு 


DATA கூட எடிட் பண்ண தெரியாதவெனெல்லாம் என்னமோ

ROCKET SCIENCE வேலை செய்ற விஞ்ஞானி 


போல மானிடரையே வெறிக்க வெறிக்க

பார்த்து நம்மை வெறுப்பேத்துவானுங்க..


இந்த கூத்து ஒருபக்கம் இருந்தா , ரொம்ப நாளா போன் ல 

கூட பேசாம நக்சலைட்டுகள் போல தொடர்பு எல்லைக்கு

வெளிய இருந்த நாயெல்லாம் மிஸ்டு கால் கொடுக்கும்..


என்னமோ ஏதோனு நாம பதறி அடிச்சி போன் பண்ணினா...

எப்படி இருக்கேனு கேட்காம, அப்புறம் மச்சி.. எப்போடா ட்ரீட்னு

கேட்பானுங்க.. நாமளும் அரசியல்வாதிகளின் தேர்தல் 


அறிக்கை படிச்சது போல ஒண்ணுமே புரியாம முழிப்போம்...

அப்புறம் சொல்வானுங்க பாருங்க...

அப்ரைசல் எப்படியும் பல்கா போட்டு இருப்பானுங்க.. 


இப்போ எவ்வளவு மச்சான் சம்பளம் வாங்குற..? னு

என்னமோ பொண்ணு கொடுக்கப்போறவனுங்க மாதிரியே 


கேட்பானுங்க... நாம பெத்தவங்க கிட்டேயே  

உண்மையான சம்பளத்தை சொல்லி

இருக்க மாட்டோம்... இல்லைடா இந்த வருஷமும்


ஏமாத்திட்டானுங்கடானு நாம சொல்லி முடிச்சதும் 

அந்த பக்கம் புயல் அடிக்கிற மாதிரி ஒரு

பெருமூச்சு வரும்.. அப்போ நமக்கு வரும் 


பீலிங்கின் பெயர் தான் " கொலைவெறி..."..

வேற கம்பெனி மாறலாம்னு இருக்கேன்டானு  சொன்னதும் , 

சரளாவின் சாகசங்கள் , மாமியின் மன்மத லீலை 

படிச்சவனெல்லாம் நம்ம பீல்ட் இப்போ கொஞ்சம்

டல்லா இருக்குடா.. நம்ம பொருளாதாரத்தைப்

பத்தி அதுல அப்படி போட்டு இருக்கு , இதுல இப்படி 


போட்டு இருக்குனு சொல்வானுங்க பாருங்க..

பனங்கள்ளு குடிச்சிட்டு  பச்சை மிளகாய் கடிச்ச மாதிரி 


நமக்கு சுர்ருன்னு மண்டைக்கு ஏறும்..இப்படி பேசிப் பேசியே நம்மை


கிட்டத்தட்ட தற்கொலைக்கு தூண்டி 

விட்டுட்டு , சும்மா இருந்த நம்மை 

சரக்கைத் தேடி ஓட வைப்பானுங்க. 

அதோட அந்த நாயெல்லாம் 

அடுத்த அப்ரைசலுக்குத் தான் இனி மிஸ்டு கால் கொடுக்கும்..


இதுக்கு இடையில கம்பெனிக்குள்ள வாய் உதார் விட்டு 


திரியுமே சில மானகெட்ட கேரக்டர்ஸ் ,

அதுங்க கொடுக்குற அலப்பறை இருக்கே..அப்ப்ப்ப்ப்பா..

WORLD CUP மேட்ச் வரும்போதெல்லாம்  திடீர் , திடீர்னு தினுசு


தினுசா முளைக்கிற  ஆக்டோபஸ் ஜோசியம் ,  அணில் ஜோசியம் ,

ஆட்டுப் புழுக்கை ஜோசியம் போல , அல்லைக்கைகள் எல்லாம் ஒண்ணு 


சேர்ந்துக்கிட்டு எனக்கு தெரியும் இவ்ளோ தான் இன்க்ரிமெண்ட்டு..

யார் யாருக்கு எவ்ளோன்னு எனக்குத் தெரியும்.. 


ஆனா சொல்லாமாட்டேன்னு பெனாத்துவானுங்க.. 

அப்பவும் நாலு பிக்காலிகள் இவனுங்க

பின்னாலேயே அமலா பால்கிட்ட ஆட்டோகிராப் வாங்க 


போறது போல சுத்தி , கரப்பான்பூச்சிகளை எல்லாம்

காட்ஸில்லா வாக்கி விட்டுவானுங்க..

அதுங்க இதே நெனப்புல நம்மகிட்ட வந்து சீன போட்டு செருப்படி 


வாங்கி செத்துடுங்க.. இந்த பாவம் வேற சேர்ந்துக்கும்.. அட ச்ச...ஹ்ம்ம்ம்ம்.... இது எல்லாம் தெரிஞ்சு இருந்தும் சூப்பர் ஸ்டார் 

படத்துக்கு வர்றது போல ஒரு நல்ல

ஓப்பனிங் காக காத்துக்கிட்டு இருக்கோம்...

பாரதிராஜா பட பர்ஸ்ட் சீன போல.. பார்.....ப்....போம்....

பரதேசிBILL FORGE  பெருமையுடன் வழங்கும்  பரதேசி..

APRIL 1 APRIL 15


MAY 7 பெரும்பாலான பிரைவேட்    கம்பெனியில 

இதான் நடக்குது ...ஹ்ம்ம்ம் ..

Tuesday, February 26, 2013

ஏன் இப்படி ...74


கொடுக்குற சம்பளம் வேலை செய்யுறதுக்கு தான்,

பேசுறதுக்கு இல்லைன்னு எப்போ தான் புரிஞ்சிப்பானுங்களோ

# ஆபிஸ் அவலங்கள்..

 தலைமைக்குக் கட்டுப்படணும்ன்ற ஒரே காரணத்துக்காக..

கண்டவனும் நம்மை கலாய்க்கிற அளவுக்கு நடப்பது 

இருக்கே..#வெறியில விஜய் படம் பார்க்கலாம்னு கூட தோணுது..


 


ஒரு கேள்விக் கேட்டா , தேவையான பதிலை சொல்லாம,

சம்பந்தமே இல்லாத பத்து பதில்களைத் தர்றானுங்க..

# கொல்லாதீங்கடா டேய்..

 ஒரு வேலையை வேகமா முடிச்சி நல்ல பேரு 

வாங்கணும்னு நினைத்து,அதை தப்புத்தப்பா செய்து 

உயிரை வாங்குறவனுங்களை என்ன பண்ணலாம்…?

வேட்கையாய்  ஆரம்பிக்கும் வேட்டை வேதனையில் முடிவது 
ஏனோ..? JOB SEARCH / FIGURE PICK UP

பயனில்லைன்னு தெரிஞ்சதும் எப்படி தான் ஞானி போல 
பற்றற்று எனக்கு வேண்டாம்னு சொல்றானுங்களோ? 

பொய் பேசுறவன் எல்லாம் ஒண்ணு சேர்ந்து உண்மையை 
பேசுறவனை மாட்டிவிட்டு ஓரங்கட்டுவது அதிகமா 
அலுவலகங்களில் மட்டுமே நடக்குது.மோட்டல்களில் கொள்ளை அடிப்பானுங்க தெரியும்..

அதுக்காக BOOMER ரெண்டு  ரூபாய் எல்லாம் ஓவர்டா டேய்..

 


வயசு வித்தியாசம் பார்க்காம நிறைய பேருக்கு ஐஸ்க்ரீமும் 

சாக்லேட்டும் பிடிக்குது.

சான்ட்விச் நடுவுல இருக்கும் ஸ்டப் கணக்கா 
மேனேஜ்மென்ட் , எம்ப்ளாயீஸ் இடையில ஸ்டாப்ஸ் 
மாட்டிக்கிட்டு முழிக்கிறோம்.

Saturday, February 23, 2013

சமாதான முத்தம்

 
 
 
காதல் ததும்பும் உன் கடைக்கண் பார்வை என் மீது படும் 
 
சில கணங்கள் , பலமணி நேரம் என்னுள் இருக்கும்..
 
 
 
கண்களை மூடினால் நீ மறைந்து விடுவாயோ என் அஞ்சியே 
 
இமைக்க மறுத்து வெறித்து பார்க்கிறேன்... 
 
# தேவதை ஸ்த்ரீயடி நீ..(காஞ்சு போயி இருக்கேனும் சொல்லலாம்..)
 
 
 
உன்னிடம் மட்டுமே எனக்கு தெரிந்த மூன்று மொழியிலும் 
 
மவுனம் சாதிக்கிறேன்..ஆனால் என் கண்களில் ஒளித்த 
 
காதலைக்கண்டு புன்னகைக்கிறாய் நீ..#லவ்யூடி பம்ப்ளிமாஸ்..
 
 
 
தன்னைத்தானே இயக்கும் சக்தி மிக அரிது..நீயோ 
 
சுலபமாய் செய்கிறாய்..ஆம்..என் உலகத்தை 
 
இயக்குபவள் நீ தானே..
 
 
 
கடற்கரை இரவில் ,மிக அழகாக உள்ளதென 
 
நிலவை சுட்டிக்காட்டுகிறாய். நானும் ஆம் என்கிறேன்..
 
உன் விரல் நுனியைப் பார்த்தபடி..
 
 
 
 
இதயத்தை இடம் மாற்றிக்கொள்வோம்..
 
இரக்கமின்றி இறுக்கி அணையேன் ஹனி...
 
 
 
 
உன் கண்களின் கள்ளச்சிரிப்பின் வழியே கண்டு கொண்டேன்.. 
 
காதல் கொண்ட உன் மனதை..ராட்சசி.. 
 
லவ்யூடி பம்ப்ளிமாஸ்..
 
 
 
 
சிரிக்கும்போதும்,சிலிர்க்கும்போதும் அழகாய் இருப்பது 
 
பெண்கள் மட்டுமே...ஹ்ம்ம்ம் 

 உன் ஒரே ஒரு சமாதான முத்தம் பெற வேண்டி 

சண்டையிட்டு,எண்ணிலடங்கா சமாதான முத்தங்களை 

உனக்கு அளிக்கிறேன் நான்..


 


உன் அத்தனை வலிகளையும் மறைக்க முயல்கிறாய்..

உன்னை கண்ணீர் சிந்த விடக்கூடாது என நினைக்கும் நான் 

கலங்காமல் இருக்க..லவ்யூடி ஹனி..

Monday, February 18, 2013

ஏன் இப்படி ...73

LICKING ,SUCKING னு சொன்னா ஒண்ணும் சொல்லாதவங்க..


அதையே தமிழ்ல சொன்னா டேப்பரா பார்க்குறானுங்க..

#ஏன்டா ஏன்..? தேனை LICK பண்றேன்.. குச்சி மிட்டாயை 

SUCK பண்றேன்னு சொன்னா நல்லாவா இருக்கு…?
 


இப்போவெல்லாம் செல்போனை பேசுவதற்காக உபயோகிப்பது 

ரொம்ப கம்மியாயிடுச்சு போல..(கடலை தவிர்த்து) தகவல் 

சொல்ல பயன்படும்னு சொன்னாங்க.. பொழுதுபோக்கு 

கருவியா மாத்திட்டோம்..
 பொறைக்கே வக்கு இல்லாதவனைப் பார்த்து பிட்சா 

சாப்பிடலையானு கேட்குறது போல.. எனக்கு காதலிக்கவே 

பொண்ணு கிடைக்கலை..இதுல எப்போ கல்யாணம்னு கேட்டு 

காண்டு ஆக்குறானுங்க எசமான்...

 
பிரெண்டுக்கு போன் பண்ணேன்..மச்சி FB ல பிசியா இருக்கேன்.. 

FB ல சாட் பண்ணலாம்  வாடா னு சொல்றான்..வெளங்கிடும்…

 இப்போவெல்லாம் சத்தியமா சொல்றேன்னு சொன்னா யாரும் 

நம்ப மாட்றாங்க..ஆனா ப்ராமிஸ் பண்ணா நம்புறாங்க..

#என்னடா நடக்குது இங்க..

 வாதம் பண்ணும்போது ஒரு எழவும் தோண மாட்டுது..

ஆனா வேடிக்கை பார்க்கும்போது என்ன என்னமோ தோணுதே..

 புதிதாய் ஆங்கில வார்த்தைகளை அறிந்து கொள்ள ஆர்வம் 

காட்டும் மக்கள்,தினத்தோறும் பயன்படுத்தும் 

பிறமொழி வார்த்தைகளுக்கு தமிழ் பதம் தெரிஞ்சிக்க 

ஆர்வம் காட்ட மாட்றாங்க..

 
சில பெண்களின் சமையலைக் கூட சகிச்சிக்கிட்டு சாப்பிடலாம்..

ஆனா அவங்க அதை செய்ததை ஏதோ சாகசம் பண்ண மாதிரி 

சீன் போடுவாங்க பாருங்க..அவ்வ்வ்... 


சில பேரு பேசும்போது அவங்களைக் கொன்னுடலாம்னு தோணும்..

சில பேரு பேசுறதைக் கேட்கும்போது தற்கொலை 

பண்ணிக்கலாம்னு தோணுது..

 "இது உன்வேலைடா ..நீயே செய்னு மேலதிகாரி கிட்ட 

ஏத்து வாங்கியதைக் கூட,எல்லாப் பொறுப்பையும் எங்கிட்ட 

தான் கொடுக்குறாங்கனு என்ன அழகா மாத்துறானுங்க..

#எப்படிடா..?

Wednesday, February 13, 2013

கண்களின் மொழிநீ வித்தியாசமானவள் தான் ஹனி. நீ இருக்கும் இடத்தில் 

அழகு மட்டுமே தெறித்து சிதறுகிறது..

 

பேசாமல் அருகில் அமர்ந்து இருக்கையில் உன்னில் 

இருந்து வெளிப்படும் வாசனை கூட என்னிடம் 

காதலையே சொல்கிறது.

 உன்னுடைய சந்தோஷம் தான் நான்...ஆனால் 

என்னுடைய எல்லாமுமே  நீ மட்டுமே ஹனி..

# புரிஞ்சிக்கோ பம்ப்ளிமாஸ் 

 


சூழ்நிலைகளால் எதிரில் இருக்கும் அனைவரும் "மனிதர்களாகவும்" 

தோன்ற,நீ மட்டும் சிறகுகள் இல்லாத தேவதையாய் 

தோன்றுகிறாய்  எனக்கு..ஆசிர்வதித்து அணைத்துக்கொள் 

ஹனி..ப்ளீஸ்

 

பசி தீர உண்ணும் என்னைக்காட்டிலும் , நான் பசியாறுவதைப்

 பார்த்துப் பூரிக்கும் உன் கண்களிலே தான் தேவ திருப்தி 

# லவ்யூடி ஹனி..

 


காதல் வழிய நீ பேசும் தருணங்களில் என் காதுகள் 

அதைக் கேட்பதேயில்லை..என் கண்களிரண்டுமே 

பார்க்கவும் , கேட்கவும் செய்கின்றன...

#அவ்வளவு அழகு ஹனி நீ.. 


எனக்கு என்ன தேவை என்பது நான் சொல்லாமலே உனக்கு 

தெரிவது ஆச்சர்யம் இல்லை அது எனக்கு தேவையான 

நேரத்தில் கிடைக்கும்படி செய்கிறாயே அது தான்  ஆச்சர்யம் ..

#தேவதை ஸ்த்ரீயடி நீ..

 


பிரிவுக்கு பின் வரும் சந்திப்பில் , கண்களில் நீருடன் துடிக்கும் 

உன் உதடுகளின் துடிப்பிலே தானடி என் உயிர் 

இன்னும் துடித்துக்கொண்டு இருக்கிறது..கட்டி 

அணைத்துக்கொள் ஹனி.
கோபத்தின் மிகுதியில் போடி என்கிறேன்..கண்களில் நீருடன் 

நீயும் வாடா என்கிறாய்..#அதிரப்பள்ளி கூட்டிப்போயி 

தள்ளி விட்டுடுவா போலேயே..அவசரப்பட்டுடனோ..?அவ்வ்வ்வ்…. 
 
ஏதோ ஒரு நாட்டில் , ஏதோ ஒரு மொழி பேசித் திரிந்த 
 
என்னை , கண்களின் மொழி பேசி காதல் தேசத்தில் 
 
அலைய வைத்தாய்..# ஐயாம் லவ்விங் பெங்காலி பிகர்..

Saturday, February 9, 2013

ஏன் இப்படி ...72 ( BOSS & GIRLS )ஒரே விஷயத்தை பல கேள்விகளா கேட்க இந்த பாஸ்களாலும் 


பொண்ணுங்களாலும் மட்டும் தான் முடியும்…#ஸ்ஸ்சப்பா..எத்தனை…?

 


கொஞ்சமா பேசணும்..நிறைய கேட்கணும்னு சொல்லிட்டு நம்மை 

பேச விடாம அவங்க மட்டும் பேசிக்கிட்டே இருக்காங்க..

ஏன் பாஸ்…? ஏன் கேர்ள்ஸ்…?

 நாம செய்யக்கூடாதுன்னு இருந்தாலும்,நம்மகிட்ட எப்படி 

வேலை வாங்கணும்னு இந்த பாஸ்களுக்கும்,பொண்ணுங்களுக்கு 

நல்லாவே தெரியுது..எத்தனை பசப்பு வார்த்தைகள்..

என்னா திறமைடா சாமி..

 இவங்ககிட்ட அவ்வளவு சீக்கிரம் நமக்கு கோபம் வராது..

மீறி கோபப்பட்டா, உடனே பம்மி பச்சைக்குழந்தை போல 

ரியாக்ஷன் கொடுக்குறாங்க..? எப்படி பாஸ்..? எப்படி பொண்ணுங்களா..?

 
பாசத்துக்கு கட்டுப்படுறோமோ இல்லையோ,கட்டுப்பட்டா 

மாதிரி இவங்ககிட்ட வேஷம் போட்டே ஆகணும்..

# இல்லைனா விட மாட்டாங்க..பாஸ் & கேர்ள்ஸ்..

 சிரிச்சுகிட்டே பேசி , கேட்குறவனை வெறி ஏத்தி காண்டாக்க 

இவங்களால மட்டும் தான் முடியும்..#காதுல ரத்தம் வந்தாலும் 

கர்ச்சிப் தருவாங்களே தவிர,பேச்சை நிறுத்த மாட்டாங்க..

 நாம கேட்குறோம்ன்ற ஒரே காரணத்துக்காக என்ன வேணும்னாலும் 

பேச இவங்களால எப்படி தான் முடியுதோ…? உங்களுக்கு 

மனசாட்சியே இல்லையா..?

 நாம ஒரு தப்பு செஞ்சா வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிற 

இவங்க தப்பு செஞ்சி அதை நாம கண்டுபிடிச்சிட்டா ஒரு

 ரியாக்ஷன் கொடுப்பாங்க பாருங்க..அத்தனை 

ஆஸ்கரும் கொடுக்கலாம்..

 நம்மோட தாமதத்துக்கு காரணம் சொன்னா ஏத்துக்காதவங்க, 

இவங்க தாமதமா வந்த காரணத்தை நாம கேட்க 

விரும்பலைனாலும் அதை சொல்லி சித்ரவதை 

பண்ணாம விட மாட்டாங்க..

 தப்பை அவங்க செய்துட்டு நம்மை மன்னிப்பு கேட்க வைக்கிற 

திறமை பொண்ணுங்களுக்கும்,பாஸ்களுக்கும் மட்டுமே உண்டு..

Wednesday, February 6, 2013

ஹனி
என்னை உணராத உன் கோபங்களைக் காட்டிலும்,என் நலனுக்காக 

நீ என்னை விட்டு விலகுவதே அதிகம் வலிக்குதடி..# ஹனி பெயர்ச்சி..

 


சுற்றியுள்ள பிரச்சினைகளுக்காக என்னை விட்டு விலகும் நீ, 

நீ விலகுவதால் நமக்குள் ஏற்படும் மனப்போராட்டங்கள் 

குறித்து சிந்திக்க மறந்தது ஏனோ..? பைத்தியக்காரி..

 # ஹனி பெயர்ச்சி..

 


எதுவாயினும், அதை எனக்கு முதலில் நீயே தரவேண்டுமென 

ஆசைப்படுவாய்..அதற்காக மரணவலியையும் நீயே 

தரவேண்டுமா..?# ஹனி பெயர்ச்சி..

 நீ என்னைப் பிரிந்து போய்விடுவாய் என நான் என்றுமே 

பயப்பட்டதில்லை..ஆனால் என்னைப் பிரிந்து நீ எப்படி 

இருப்பாய் என்றே அஞ்சுகிறேன்..# ஹனி பெயர்ச்சி..

 


"என்னை விட்டுப் போடா" என்றே சொல்கிறாய் நீ..பைத்தியக்காரி.. 

என் மீதான உந்தன் காதல் மீது எனக்கு நம்பிக்கையும்,உனக்கு 

பயமும் இருப்பதே அதற்கு காரணம் என்று தெரிந்தும் நான் 

எப்படி உன்னைப் பிரிய….?

 என் மீது நீ கொண்ட அதிகப்படியான காதலின் சுமை தாங்காமல், 

என்னைப்பிரிகிறேன் என்று சொல்வது என்ன நியாயம் ஹனி..? 

# ஹனி பெயர்ச்சி..

 


"நான் உனக்கு வேண்டாம்டா" என்றே சொல்லும் நீ..ஒருமுறை 

கூட "நீ எனக்கு வேண்டாம்டா" என சொன்னதே இல்லை..

உன்னை விட்டு நான் எங்கேடி செல்ல..? பைத்தியக்காரி..

# ஹனி பெயர்ச்சி..

 "என்னை மறந்து விடு" என சொல்லத் துணிந்த நீ,அதை என் 

கண்களை பார்த்துக் கூற மறுப்பது ஏன் என புரிந்தும் நான் 

உன்னை விட்டு எப்படி விலக பம்ப்ளிமாஸ்..? # ஹனி பெயர்ச்சி..

 நீ இல்லாத என் வாழ்க்கை எப்படி இருக்குமோ என்று 

நினைப்பதை விட…ஏன் இருக்க வேண்டும் என்று 

நினைக்க ஆரம்பித்துவிட்டேன்..என்னைக் காப்பாத்து 

ஹனி..ப்ளீஸ்..

 எனக்குள் இருந்த என் காதலை நீயே கண்டெடுத்து விட்டு,

இப்போது அதை நீயே தொலைக்கவும் போகிறாயா..? 

சொல்லுடி பம்ப்ளிமாஸ்..

Sunday, February 3, 2013

ஏன் இப்படி ...71 ( BOSS & GIRLS )கடைக்கண் பார்வை கிடைக்காதான்னு நம்மை ஏங்க வைத்து 

கொஞ்ச நாளில் அவங்க கண்ணுல படாம தலைமறைவா ஓடி 

ஒளிய வைக்கிறத்திறமை பொண்ணுங்களுக்கும் , பாஸ்களுக்கும்  

எங்கே இருந்து தான் வருமோ..?  நாங்க எந்த மூடுல இருக்கோம்னு கவலைப்படாம உங்க 

மூடுக்கு ஏத்தமாதிரி நாங்க மாறணும்னு நினைப்பதை 

எப்போ மாத்திக்குவீங்க பாஸ் / கேர்ள்ஸ் ..?

 நமக்கு ரொம்ப பிடிச்ச ஒரு விஷயத்தையோ / பொருளையோ , 

நாமே வெறுக்குற அளவுக்கு மாத்துற திறமை

பொண்ணுங்களுக்கும்,பாஸ்களுக்கும்  மட்டுமே உண்டு..

 


நாங்க ஆர்வமா சொல்லும் விஷயத்தை அலட்சியமா கேட்குறீங்க..

ஆனா சப்பை மேட்டரை நீங்க சொன்னாலும் நாங்க எக்ஸ்ட்ராவா 

ரியாக்ஷன் கொடுக்கணும்னு எதிர்பார்க்கிறங்களே..

ஏன் பாஸ் / கேர்ள்ஸ்..?
 நாங்க சொல்ல வருவதையே நீங்க காதுல வாங்கிக்க மாட்றீங்க..?

ஆனா நீங்க சொல்லாததையும் நாங்க புரிஞ்சி நடக்கணும்னு 

எதிர்பார்க்கிறீங்க.. முடியல பாஸ் / கேர்ள்ஸ்..

 


கூட்டமா விவாதம் பண்ணும்போது உங்க கருத்தில் இருந்து 

சுவிட்ச் போட்ட மாதிரி உடனே அந்தர் பல்டி அடிச்சி கூட 

இருக்க எங்களை கோர்த்து விடுறீங்களே..

ஏன் பாஸ் / கேர்ள்ஸ்..?
 


கூடவே இருந்து என்கரேஜ் பண்ணுவது போல ஏத்திவிட்டு 

நாங்க வெளிவரமுடியாத அளவுக்கு பிரச்சினையில போட்டு 

விடுறீங்களே..?ஏன் பாஸ் / கேர்ள்ஸ்..?

 நீங்க பண்ற தப்பை எல்லாம் உடனே மறக்கறீங்க..ஆனா நாங்க 

பண்ண தப்பை மட்டும் மறக்காம அப்போ அப்போ 

மணி அடிக்கிறீங்களே..? எப்படி பாஸ் / கேர்ள்ஸ்..?

 அது எப்படி உங்களுக்கு வேணும்னா பாசிட்டிவாவும் , வேணாம்னா 

நெகட்டிவாவும் மட்டுமே யோசிக்க முடியுது உங்களால..?

டாக் மீ பாஸ்/ கேர்ள்ஸ்...?
 சந்தோஷமா பேசிக்கிட்டு இருக்கும்போது திடீருன்னு கோபப்பட்டு 

கத்த பொண்ணுங்களாலும்,பாஸ்களாலும் மட்டுமே முடியுது..