அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
சந்துல சத்தம் அதிகமா இருக்கு ..பொதுவா ரெண்டு விஜய்
படத்திலையும் கதையே இருக்காதே..அப்புறம் ஏன்
இந்த சண்டை..? # சமாதானமா போங்கப்பா..
படம் சென்னையில தியேட்டர்ல ரிலீஸ் ஆகல..
ஆனா CD ல ரிலீஸ் ஆயிடுச்சு..
தமிழ்படத்துக்கு அப்புறம் அதிகமான படங்களோட சாயல்
இதுல தான்..நாயகன்,பாட்ஷா,ஏன் இந்திரா உட்பட..
தமிழ்படத்துல கலாய்ச்சு காமெடி பண்ணி இருந்தாங்க..
இவனுங்க காப்பி அடிச்சி காமெடி பண்ணி இருக்கானுங்க..
என்ன எழவுடா இது.. படம் தான் ரிலீஸ் லேட்டாகுதுன்னு
பார்த்தா அதைப் பத்தி பேசவும் எத்தனை தடங்கல்கள் எங்க ஆபிஸ்ல ..
தலைவா படம் பார்த்த நாளில் சன் டிவி ல சுறா படம்
போட்டு இருந்தாங்க..அதையே பார்த்து இருக்கலாமோன்னு தோணுச்சு
சுறா , வேட்டைக்காரன் மாதிரி "காவியங்கள்" கூட நடிங்க பாஸ்..
ஆனா தலைவா மாதிரியான "சமூகப்படங்கள்" வேணாம்..
ரொம்ப வலிக்குது.
இதுல அமலா பாலுக்கு வேற யூனிபார்ம் போட்டு
விட்டு வெறுப்பேத்துறானுங்க..
ஒரு உயிர் போயிடுச்சி..கருத்து சொல்லாம இருக்கலாமுன்னு
இருந்தா விட மாட்டானுங்க போல..
எத்தனையோ மொக்கை படங்கள் பார்த்துட்டு நடைபிணமா
வாழுற மக்களை நினைத்து பாருங்க பா..
படம் தமிழ்நாட்டுல ரிலீஸ் ஆனா கண்டிப்பா அரை மணி நேர
படம் கட் ஆகும்..இல்லைனா நிறைய இடங்களில்
வசனக்கட்டு உண்டு..
அதே போல Y.G மகேந்திரன் அப்புறம் பாஸ் என்கிற பாஸ்கரன்
படத்தில் ஆர்யா அண்ணனா வருவாரே அவங்க வீட்டுக்கு
எல்லாம் கல்லடி கன்பார்ம். என்னா பில்டப்பு
விஜய் வீடை கோயிலாவும் அண்ணனை தெய்வம்னு சொல்லி
ஒரு வசனம். காதுகளை இறுக்கமா மூடிக்கிட்டேன்..
அப்புறம் எப்படிடா படம் ரிலீஸ் ஆகும்
3 மணி நேரம் தவமாய் தவமிருந்த சேரனே 2 மணி நேரமா
சென்னையில் ஒரு நாள்னு வந்துட்டாரு..இவனுங்க 3 மணி
நேரம் மொக்கை போடுறானுங்க.
ப்ளாக் பஸ்டர் ஆகும்னு பார்த்தா கடைசியில
பிளாஸ்டிக் பக்கெட் ஆயிடுச்சே..
தலைவா படத்தில ஒரே ஆறுதல் டூயட் சாங் இல்ல.
அதனால தலையில கலர்கலரா நூடுல்ஸ் எல்லாம்
கவுத்துட்டு எல்லாம் வரல..
மொத்தத்தில மாஸ் ஹீரோ னு சொல்லிட்டு இருந்த விஜயை
தமாஸ் ஹீரோவா ஆக்கி விட்டுஇருக்கானுங்க..
No comments:
Post a Comment