Friday, February 4, 2011

3G யின் வாழ்க்கையில் இதுவரை வந்த தேவதை ஸ்திரீகள்…

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

 

சுய சரிதை எழுதுற அளவுக்கு நான் இது 

வரைக்கும் ஒண்ணுமே பண்ணலை…

இனிமேலும் பண்றதா ஐடியா இல்லை…

அது தான் எனக்கும் நல்லது…நாட்டுக்கும் நல்லது… 

நான் சும்மா இருக்கலாம்னு பார்த்தாலும்…

இப்ப இருக்குற நான் அப்ப இருந்த என்னை 

நக்கல் அடிக்க தோணுது…

அந்த கமெண்ட் எல்லாம் பிராக்கெட்ல…

அம்மா , பாட்டினு உறவுமுறைகளை பத்தி

சொல்லணும்னா ஒவ்வொருத்தருக்கும் ரெண்டு 

ரெண்டு பதிவு போடணும்..

அதனால நான் மத்த பெண்களை பத்தி 

மட்டும் சொல்றேன்..

எப்படியும் இதை முழுசா படிக்கிற அளவுக்கு 

உங்களுக்கு பொறுமை இருக்கான்னு தெரியலை…

வச்சி வச்சி படிங்க… 

( இது  என்ன சரோஜா தேவி யா வச்சி படிக்கிறதுக்கு…)


எழுதி முடிச்சி பார்த்தா எனக்கே பயமா இருக்கு…

அதனால என்னோட முதல் ரெண்டு காதல்களை

பத்தி மட்டும் இங்க சொல்றேன்…

( அப்போ மிச்சமெல்லாம்…?!@#$% ) 

மத்ததெல்லாம் பாகம் பாகமா வரும்… 

( டே..உன்னை விட மாட்டேண்டா நான்…)

ரெண்டு  காதல் சொன்னாலும் அது அத்தனையும்

ரெண்டு வருடத்திற்குள்ள  நடந்ததுங்க..

நான் மூணாவது ஆரம்பத்துல இருந்து நாலாவது 

முடிக்கிற வரைக்கும்.. 

( கெட்ட வார்த்தையில திட்ட வேணாம்னு பார்க்கிறேன்…)

நான் என்ன பண்றது … ஐயே…

இருந்தாலும் இதுநாள் வரை என் வாழ்கையில

கடந்து போன பெண்களை பத்தி நினைக்கும் போது 

அப்படியே ஜில்லுனு ஆயிடுது…மனசு.. 

( நான் பேன்ட்டூனு நெனச்சேன்..) 

என்னங்க பண்றது.. கிரிக்கெட் , பெண்கள் இந்த 

ரெண்டு மட்டுமே என் நாடி , நரம்பு 

எல்லாத்திலையும் ஊறி இருக்கு. 

வேற எந்த விஷயமுமே ஞாபகம் வரலையே…

சரி வாங்க நாம இப்ப கொசுவர்த்தி சுத்துவோம்….

நான் சின்ன வயசுல ரொம்ப சிவப்பா

அழகா இருப்பேனாம்…( அட ராமா..)

யோவ்..நான் தான் சின்ன வயசுன்னு

சொல்றேன்ல..( அப்படினா சரி.. மேல..)

 நம்பலைனா மூணு வயசுல எடுத்த 

போட்டோ இது பாருங்க..


அப்பவே கேப்டன் போல யாரைப்பார்த்தாலும்

நீ பாகிஸ்தான் தீவிரவாதின்னு சொல்லிட்டு 

கடிச்சி வச்சிருவேணாம்… எங்க அம்மா சொன்னாங்க.. 

கொஞ்சம் தலுக் மொழுக்குன்னு இருந்ததால

தெருவுல இருக்குற all ladies க்கு நான் தான் செல்லமாம்… 

நெறைய முத்தமெல்லாம் குடுத்தாங்களாம்…

( ஹ்ம்ம்ம்… நானும் ஒரு காலத்தில் 

நல்லா தான் வாழ்ந்து இருக்கேன்…

இப்ப தான் கொடுப்பினை இல்ல..)

இப்படி குழந்தையிலேயே கூட்டம் கூட்டமா

பெண்களோட கும்மாளமும்,குதூகலமுமா இருந்ததால

தான் நான் இன்னமும் இப்படியே 

இருக்கேன்னு நினைக்கிறேன்.

அப்போ எனக்கு ஒரு ஏழு வயசு இருக்கும்…

அப்ப நான் மூணாங் கிளாஸ் படிச்சிக்கிட்டு இருந்தேன்..

அதுக்கு முன்னமே அந்த பொண்ணை 

பார்த்து இருந்தாலும்... அப்ப தான் எனக்கு 

காதல்னா என்னனு தெரிய ஆரம்பிச்சது…

 ( ஏழு வயசுலேயே..எப்பூடி நம்ம வளர்ச்சி ) 

washing powder நிர்மானு ஒரு விளம்பரம் வருமே.. 


அதுல வர்ற அந்த பொண்ணு மாதிரியே இவளும்

பாவாடையை சுத்தி விட்டு விளையாடிகிட்டு இருந்தா.

அப்ப தான் நான் என் மனசை பறி கொடுத்தேன்..

( கருமம் புடிச்சவனே.. உனக்கு விவஸ்தையே  இல்லையா..)

ஹலோ..யாரும் தப்பா நெனச்சிக்காதீங்க… 

நான் இப்போ ஏழு வயசு பையனோட 

மன நிலையில் இருக்கேன் …

நீங்களும் என்னோடவே அந்த பருவத்துக்கு வந்து

பாருங்க…ஆபாசமும் இருக்காது…அருவருப்பும் இருக்காது…

அந்த தேவதையோட 

பேரு அமுதா…


என் முதல் காதல்… நினைவு தெரிஞ்சி..

 அதுக்கு முன்னமே ஆரம்பிச்சிட்டேன்… 

எப்ப பாரு பொண்ணுங்களை எதாவது செஞ்சு

விட்டுடுவேணாம்..அம்மா அடிப்பாங்களாம்.. 

கொஞ்ச நாள் பழைய ஹீரோ முரளி 

ஸ்டைல் லயே போச்சு.. கொடுமை என்னனா …

சின்னி ஜெயந்த் போல எனக்கு அப்பவே சங்கர் னு 

ஒரு பிரெண்ட் ஹெல்ப் பண்ணான்..… ( வெளங்கிடும் ..)

அதுவரைக்கும் வெள்ளை சட்டையை வேணும்னே 

அழுக்கு பண்ணி போட்டுக்கிட்டு இருந்த நான்…

தினமும் குளிச்சு…திருநீர் எல்லாம் வச்சி செம

காமெடியா இருந்து இருக்கேன்..

( தினமும் குளிக்கிறதும் , திருநீர் வைக்கிறதும் 

காமெடியா..??) 

யோவ்..ஏழு வயசுல எவன்யா தினம் 

தினம் குளிக்கிறது…. தினம் பல்லு விளக்கிறதே

பெரிய வேலையா இருந்தது…மேரி கோல்ட் 

பிஸ்கட்டுக்காக தான் நான் பொறுத்துகிட்டேன்... 

நீ கதைய கேளுயா..

கொஞ்ச நாள் அந்த அக்காவை 

( என்னது.. அக்கா வா…? )

ஹி..ஹி..ஆமாங்க..அவங்க எனக்கு சீனியர் ..

நாலாவது படிச்சிக்கிட்டு இருந்தாங்க… இந்த உண்மையை

அவங்க பின்னாடி டாபர் மேன் மாதிரி சுத்தனதுல

தான் தெரிஞ்சிகிட்டேன்.. இன்னொரு அதிர்ச்சியான 

விஷயமும்..

( அது என்ன கருமமோ…)

அந்த அக்காவும்…ஹரி னு ஒரு அண்ணனும் 

ரொம்ப  சின்சியரா  லவ்  பண்ணுறாங்க  

அப்படிங்கற விஷயமும்..

( டே…என்ன எழவு டா இது… நாலாவது படிக்கும் போது

சின்சியர் லவ் வா. இப்ப வெல்லாம் 24 வயசுகுல்லையே

ஏழு எட்டு பேர மாத்திடுராளுங்க…)


அப்புறம் என்ன என் முதல் காதலே 

மொக்கையா முடிஞ்சுது… 

ஒரு வருஷம் முன்னாடி வரைக்கும் நான் 

குடி இருந்த அதே தெருவில் தான் அந்த அக்காவும்

குடி இருந்தாங்க…அவங்களுக்கு என்னை 

அடையாளம் தெரியல… ஆனா எனக்கு அவங்க 

முகம் மறக்கலை… எப்படி முடியும்..

என்னோட முதல் காதலி ஆச்சே..


( டே..டே..போதும்டா உன் பீலிங்க்சு.. 

அட்டு பிகரை பார்த்தாலே நீ ஆயுசு முழுக்க 

மறக்க மாட்டே.. அவங்க வேற நல்லா இருப்பாங்கனு

சொல்றே.. நீ எப்படி மறப்பே... டாய்.. 

நீ யாருன்னு எனக்கு தெரியும்…

நான் யாருன்னு உனக்கு தெரியும்… 

நாம ரெண்டு பேரும் யாருன்னு இந்த ஊருக்கே

தெரியும்…போதும்டா)

 இன்னமும் அதே அழகோட.. சான்ஸ்சே இல்ல… 

அவங்களுக்கு ரெண்டு குழந்தைங்க.. 

அவங்க புருஷன் பேரு ஹரி இல்லைன்னு

மட்டும்  பசங்க சொன்னாங்க… 

சூரியனின் எல்லா கதிர்களும்

சுடத்தானே செய்யும்…

( இதுக்கு  அர்த்தம்.. சிகப்பு ரோஜாக்கள் வசனம்…)

இப்போ திரும்ப கதைக்கு...

இவங்க நினைப்புலையே எனக்கு அந்த 

வருஷம் முழுக்க ஓடிடுச்சி… அடுத்த வருஷம்…

ஆறாத மனக்காயத்தோட…( என்ன காயம்…? ) 

அதான் ப்பா.. காதல் தோல்வி இல்ல.. போனேன்…

ஒரு வாரத்தில எனக்கு ஊட்டச்சத்து தூத்துக்குடியில

இருந்து வரும்னு நான் எதிர் பார்க்கவே இல்லை.. 

( ஓஹோஹோ..உனக்கு பொண்ணுங்க தான் 

அப்ப இருந்து இப்ப வரைக்கு 

ENERGY DRINK இல்லையா...?) 

( உண்மையை சொல்லு நாயே..

அப்ப தூத்துக்குடி எங்க இருந்துச்சுனு 

உனக்கு தெரியுமா…?)

அவ பேரு கிறிஸ்டியன் பிரபா…

பேரே அதாங்க.. அவ ஒரு கிறிஸ்டியன்…

( பையனுக்கு என்னா அறிவு..)

எனக்கும் கிறிஸ்துவ மதத்துக்கும் உண்டான

முதல் பாலம் அவள்... அது இன்று வரை

தொடர்கிறது..ஆனால் அவளுடன் அல்ல…

அந்த பொண்ணு நல்ல உயரம்…அனுஷ்கா மாதிரி... 

ஸ்கூல் லயே அவ தாங்க ஹைட்டு.

பொண்ணு ரொம்ப சிகப்பு இல்லை… 

ஆசிர்வாத் ஆட்டா நிறத்தில இருப்பா.. 

ஆனா நல்ல களையான முகம்…( என்ன தவக்களையா…)

அந்த பொண்ணு ஊருக்கு புதுசுனாலே யார் கிட்டயும் 

அவ்வளவா பேசலை. எங்க கிளாஸ்ல நான் , ராஜ் குமார் ,

பிரகாஷ் னு மூணு பேரு மட்டும் தான் மாறி மாறி 

முதல் மூணு ரேங்க் எடுப்போம்…

இதுல ராஜ் குமார் ஒரு அப்பிராணி…

இப்ப வரைக்கும்… நான் 210… பிரகாஷ் 420…

நாங்களும் இப்ப வரைக்கும்…

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் இல்லையா…?

பிரகாஷ் கிறிஸ்டியன்...அதனால அவன் ஈஸி யா 

போயி பேசிட்டான்… அவனை சாக்கா வச்சி நானும்

போயி பேச ஆரம்பிச்சேன்.. பிகர் முன்னால பிரெண்ட் 

எப்படி எல்லாம்  கட் பண்ணி விடலாம்னு அவன் 

எனக்கு செய்முறை விளக்கம் செஞ்சு காட்டினான்… 

ஒவ்வொரு முறையும் என்னை கழட்டி விட்டான் சார்...

நான் செம காண்டு ஆயிட்டேன்… 

நான் கொஞ்சம் லூசுத்தனமா சிரிக்க சிரிக்க பேசுவேனா..

அதனால அவளா வந்து என்கிட்டே பேச ஆரம்பிச்சா..

இத பார்த்து பையனுக்கு என் மேல காண்டு…

அப்புறம் நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிறதே இல்ல.. 

( எட்டு வயசுலேயே ஒரு பொண்ணால 

பிரச்சினை வருது பாருப்பா…) 


அப்புறம் அந்த பொண்ணுக்கு ஒரு அத்தை 

பையன் இருக்குறதாகவும்…அவன் வீட்டுல இவ இப்ப 

தங்கி இருக்குறதாகவும்… என்னோட உளவுப்படை 

எனக்கு தகவல் சொல்லுச்சு.. 


( டே…இந்த விவேக் வேலைய 

அப்பவே ஆரம்பிச்சிடீங்களாடா..)


அவனோட உளவுப்படையும்  இதையே 

உறுதிபடித்தியதால..நாங்க ரெண்டு பேரும் ஒரு

ஜென்டில் மேன் அக்ரீமென்ட் போட்டோம்… 

அதன்படி ஒண்ணு அவ எனக்கு இல்ல உனக்கு…

வேற யாருக்கும் அவளை விட்டு தரக்கூடாது.. 

இது தான் அதில் முக்கிய கொள்கை…

( What a Terror Characters )

நாளொரு சிரிப்பும் , பொழுதொரு பேச்சுமா 

என் காதல் வளர்ந்தது..அந்த நாயோடதும் தான்…

அவ கன்னத்துல எப்பவும் கருப்பு மையாலே ஒரு பொட்டு 

வச்சிக்கிட்டு வருவா பாருங்க… அது பொட்டு இல்லைங்க…


இந்த உலகத்தில் உள்ள அழகு எல்லாம் அவளோடு 

முடிஞ்சிடுச்சின்னு சொல்ற முற்றுப்புள்ளி…



I’ll love you For Ever Praba…

இப்படியே அவ எங்க ரெண்டு பேருகிட்டயுமே

சிரிச்சி சிரிச்சி பேசி எங்கள பைத்தியம் ஆக்கிட்டா..

எங்க ரெண்டு காதல் கதைகள் எங்க பசங்க 

எல்லாருக்கும் தெரிஞ்சிபோச்சு..

அப்பவே நாங்க பாலசந்தர் படம் போல புரட்சி 

பண்ணி இருக்கோம்ல… 


( இதே மாதிரி கருவை வைத்து மிட்டாய்னு

ஒரு படம் ரிலீஸ் ஆகப்போகுதுடா டேய்..)

முழு ஆண்டு தேர்வு நெருங்குற சமயம்…

எங்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி… 

அவ அடுத்த வருஷம் அவங்க சொந்த ஊருக்கே

போயி படிக்க போறான்னு…

மனசொடஞ்சி போயிட்டோம் சார்…

( இருக்காதே பின்னே…ரெண்டாவது 

காதலும் ஊத்திகிச்சுல.. பாவம்…)


அப்பவெல்லாம் எங்களுக்கு 12.30 – 2.00 தான் லஞ்ச் டைம்..

மதியம் சாப்பிடாம நானும் அவனும் நடந்தே 

அவ வீட்டுக்கு போனோம்… ஒரு ரெண்டு கிலோ 

மீட்டர் இருக்கும்… அங்கே போன உடனே முதல்ல 

நான் ரோடுலயே நின்னுகிட்டேன்…

அவன் தான் அவ வீட்டுக்குள்ளயே  போயி அவங்க 

அப்பா அம்மா கிட்ட எல்லாம் பேசிட்டு வந்தான்… 

அதுக்கு அப்புறம் நான் போனேன்.. 

அவளை வெளியில் வர சொன்னேன்… 

நான் உள்ள போகலை… பிரகாஷ் கண் கலங்கிகிட்டே

பக்கத்துக்கு தெருவுல நிக்கிறேன் வாடானு சொன்னான்…

அவளை பார்த்ததும் நான் கேட்ட முதல் கேள்வி… 

நீ ஏன் இந்த ஊருக்கு வந்தே… அவ அதை எதிர் பார்க்கலை..

நான் வந்தது உனக்கு பிடிக்கலையாடானு  கேட்க.. 

லூசு மாதிரி பேசாத..நான் ரொம்ப சந்தோஷமா இருந்ததே

உன்கூட படிச்ச இந்த ஒரு வருஷம் தான் னு நான் உருக…

( என்னது.. படிச்சதுலையா.. அட ச்ச.. என்ன மாதிரி

ஒரு ரொமான்ஸ் பண்ண வேண்டிய இடம்..

இப்ப மட்டும் அந்த வாய்ப்பு வந்த எப்படி பேசி இருக்கலாம்…

இப்படி சொதப்பி இருக்கியேடா … எட்டு வயசுல 

உனக்கு சந்தோஷம்னா என்னனு தெரியுமா குரங்கே..)

அவளும் அழுதுட்டா.. கொஞ்ச நேரம் பேசுனோம்… 

என்ன பேசுனோம்னு எனக்கு தெரியலை… 

நான் மறக்கலை..எனக்கு உண்மையிலேயே தெரியலை.. 

அவளோட அந்த கீச்சுக்குரல்  மட்டும் இன்னமும்

என் காதுக்குள்ள ஒலிக்குது… வார்த்தைகள் இல்ல… 

அப்புறம் என் நெற்றியிலையும்…

என் கன்னத்திலையும் முத்தம் கொடுத்தா…

அந்த ஈரம் இன்னமும் என் நினைவுகளில்… 

அவள் என்கிட்ட கடைசியா சொன்னது…

நீ நல்லா படிக்கணும்டா.. 

நீ என்னை லவ் பண்ணேன்னு எனக்கு தெரியும்… 

ஆனா நீ அதை எல்லாம் மறக்கனும்டா...

 என்னை ஞாபகம் வச்சிக்கோ…

எனக்கும் உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும்டா… 

( கடைசி வரைக்கும் சொல்லவே இல்ல..

அவ உன்னை லவ் பண்ணாளா இல்லையாடா…)

அவளோட காதலை நான் முழுமையா உணர்ந்தேன்...

சொன்னாதான் காதலா என்ன...?

பிரபா… நீ சொன்னதுல முதலாவதை 

நான் ஓரளவுக்கு கடைபிடிச்சேன்…

ஆனா ரெண்டாவதும்…

மூணாவதும் முற்றிலும் முரண்பாடா

இருக்கே பிரபா…


என்னை உயிர் வாழ ( ஞாபகம் வச்சிக்க )

சொல்லிட்டு…

மூச்சு விடாதேன்னா ( காதலிக்காதே னா )

 எப்படி பிரபா…??????

No comments: