Friday, February 11, 2011

3G யின் வாழ்க்கையில் இதுவரை வந்த தேவதை ஸ்திரீகள்…Part 2

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

என்னோட ரெண்டு காதல்களும் ஊத்திகிட்டதால…

நான் ரொம்ப நாள் சோகமா இருந்தேன்… 

அதாவது சுமார் 3 மாசம்… மறுபடியும் எனக்குள்ள

காதல் துளிர் விட்டது… 

அந்த பொண்ணு பேரு ராணி…
 
( அதான பார்த்தேன்…புண்ணு வந்தவன் 

கை சும்மாவே இருக்காதே..)
 
அவ தான் பொண்ணுங்க சைடு ல நல்லா படிக்கிறவ…

நான் அந்த பொண்ணுக்கு நூல் விடுறது தெரிஞ்சதும்

பிரகாஷும் போட்டிக்கு வந்துட்டான்… ராணி ஏழ்மையான 

குடும்பத்தை சேர்ந்த பொண்ணு… அதனால அவ எங்களை

கண்டுக்கவே இல்லை… படிப்பு தான் முக்கியம்னு இருந்தா…
 
( வழக்கமான பொண்ணுங்க போல தான்..)
 
நாங்களும் விடா முயற்சியோடு போராடுனோம்…

பலன் இல்லை…
 
( இதே ஆர்வத்தை படிப்புல காட்டி இருந்தா 

நல்ல வேலைக்கு போயி இருக்கலாம்…)
 
இது வேலைக்கு ஆகாதுன்னு நான் அடுத்த பொண்ணு தேட..

அப்போது அகப்பட்ட அந்த வெள்ளை 

தேவதையின் பெயர்.…பவானி…
 
உண்மையிலேயே சொல்றேங்க… இப்ப வரைக்கும் அவ

முகம் என் கண்ணுக்குள்ளயே இருக்கு…பொண்ணு நல்லா

வெள்ளையா பிள்ளையார் சதுர்த்திக்கு பிடிக்கிற கொழுக்கட்டை

போல தலுக் மொழுக்குன்னு இருப்பா…


( அட கிராதகா… ஒரு பொண்ணை வர்ணிக்க இப்படியா…)


 பிரகாஷுக்கு ஏனோ பவானி மேல் பெரிய அளவுல ஈர்ப்பு 

இல்ல…அவனும் அழகா இருப்பான்..அவளும் அழகா இருப்பா… 

EGO பிரச்சினை போல..

( பெரிய குஷி பிரச்சினை.. )


இடையில புகுந்து நான் பொங்கல் வச்சிட்டேன்ல…


( இதுல பெருமை வேற..)


இப்படியே நானும் அவளும் கொஞ்ச நாள் ஜாலியா

ஜில்லிப்பு தட்டிகிட்டே இருந்தோம்…யார் கண்ணு 

பட்டதோ தெரியலை…எங்க ரெண்டு பேருக்குள்ளையும் 

சண்டை…என்ன சண்டைனு சரியா நினைவில்லை…
 
இதற்கு இடையில என்னை ஒரு பொண்ணு காதலிச்சாள்.. 

அது கொஞ்சம் சுமாரான பிகர் தாங்க.. 

அவ பேரு வளர்மதி…

நானும் கிறிஸ்டியன் பிரபா வும் காதலிச்சப்போ எங்களுக்கு

இடையே தூது போனவள்… அவ என்னை லவ் பண்றான்னு

தெரிஞ்சதும் எனக்கு தூக்கி வாரி போட்டுச்சு…
 
சுமாரான பிகர்… படிப்பிலும் சுமார்… இவ நமக்கு

சரிப்பட்டு வரமாட்டான்னு 
 
“ இல்ல வளர்மதி…என்னால இன்னும் கிறிஸ்டியன் 

பிரபா வை மறக்க முடியலை.. அவ ஞாபகமாவே இருக்குனு

பீலிங் பிளைட் ஓட்டுனேன்…

அப்புறம் ஏன்டா நீ ராணி கிட்டயும் அவ முடியாதுன்னு

சொன்னதுக்கு அப்புறம் , பவானி கிட்டயும் போயி வழிஞ்செனு

அவ கேள்வியாலையே என்னை கிளீன் போல்ட் 

ஆக்கிட்டா அந்த வாழைக்காய்.… 

( ஏன்டா டே .. இந்த பொண்ணுங்களுக்கு தெரியாம 

ஒரு விஷயாமாவது இருக்க முடியுமா…? 

சரியான மொக்கை டா நீ…)

ச்ச…உன்னை மாதிரி ஒரு பொம்பளை பொறுக்கி கூட

பேசுனாலே பாவம்னு அந்த பொண்ணு அசிங்கப்படுத்திட்டு 

போயிட்டா சார்… 

ஏன்டி…நான் உன் எல்லை கோட்டை தொடவே 

இல்லையேடி எனக்கு நானே புலம்புனேன்… 

( அடடாடா…என்ன பையன் சார் இவன்… ஒன்பது

வயசுலேயே பொம்பளை பொறுக்கினு ஒரு 

பட்டம்…தம்பி…ராஜா..வாழ்க்கையில நீ ரொம்ப

பெரிய ஆளா வருவப்பா…)


எனக்கும் பவானிக்கும் ஊடலா இருந்த சமயம்…

அவளுக்கு அடுத்து எங்க கிளாஸ்ல 

அழகா இருந்த சிவகாமி 

பக்கம் திரும்புச்சு என்னோட காதல் பார்வை… 

( அந்த கண்ணுல குச்சி வச்சி குத்தனும்டா…) 

அந்த பொண்ணு கொஞ்சம் வாயாடி…அவ அண்ணன் எங்க

சீனியர்…அதனால கொஞ்சம் அடக்கி தான் வாசிச்சேன்… 

அவ கிட்ட ஏதாவது  போயி பேசுனா போதும்…யாரோ ஒரு

எட்டப்பன் போயி அவ அண்ணன்காரன் கிட்ட போட்டு

குடுத்துடுவான்… அவன் என்னை ஆளுங்களை கூட்டிகிட்டு

வந்து மிரட்டுவான்…

( டே..நாயே.. ஆரம்ப பள்ளியிலேயே ரவுடியிசமா…)

கொஞ்ச நாளில்… இந்த வம்பே வேணாம்னு நான் சும்மா 

இருந்தேன்…அந்த பொண்ணு என் கிட்ட வந்து ஏன் என் கூட

பேச மாட்றேனு கேட்டு சண்டை போட்டா… 

அட போடி இவளே… பேசுனா அவன் அடிப்பான்…

பேசலைனா நீ சினுங்குறே… நல்ல குடும்பம்…
 
இப்படியாக மூணாவதுல ஒரு காதல்…நாலாவதுல

ஒரு காதல்னு போன நான்… அஞ்சாவதுல 
 
ராணி , பவானி , சிவகாமி , வளர்மதினு நாலு காதல்களை 

நாலு கால் பாய்ச்சலில் கடந்து வந்தேன்…

இதே  காலகட்டத்தில எங்க வீட்டுக்கிட்ட இருந்த

ரெண்டு பொண்ணுங்களையும் ரூட் விட்டேன்… 

அது எல்லாம் அடுத்து வரும் பதிவுகளில்…
 
இனி…இந்த பொண்ணுங்களோட இன்றைய நிலை 

என்னனு பார்ப்போம்…


வளர்மதியை நான் விரும்பலை என்பதால் அவளை 

பத்தி அதுக்கு அப்புறம் கண்டுக்கவே இல்ல…
 
அப்புறமா ஒரு ஆறு ஏழு வருஷம் கழிச்சி அவளை

எதேச்சையா எங்க ஏரியாவில் பார்த்தேன்… 

அவளுக்கு நான் தானா னு ஒரு சந்தேகம்…

திரும்பி திரும்பி பார்த்துகிட்டே போயிட்டா…

அதுக்கு அப்புறம் நான் அவளை பார்க்கலை…


சிவகாமி…இவளை பத்தி என்னோட நண்பன் நெட்டை 

உளுவை சந்தோஷ் சொன்னான்… அவனும் இவளும் 

ஒரு தெருவில் தான் குடிஇருந்தாங்க…அதனால் அவனுக்கு 

இவளை நல்லா தெரியும்… சமீபத்தில் பார்த்து இருக்கான்…

ரெண்டு குழந்தைக்கு அம்மாவாக… 

கொஞ்சம் குண்டாயிட்டாளாம்… ஆனா இப்பவும் அதே

வாயாடி யாதான் இருக்காளாம்…

யார் கண்ணு பட்டதோ தெரியலை…என்னை 6 வதில் இருந்து

ஆண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு அனுப்பி வச்சிட்டாங்க…


 ( ஆமாண்டா…அஞ்சாவது படிச்சு முடிக்கிறதுக்குள்ள 

ஆறு காதல் பண்ண உன்னை ஆப்பிரிக்கா காட்டுக்கு

தாண்டா அனுப்பி வச்சி இருக்கணும்…)


பவானி.. அவளை பிரிஞ்ச அந்த நாளில் இருந்து 

நான் இன்னைக்கு வரைக்கும் அவளை பார்க்கமுடியல…

( பார்க்க முடியலைன்னு தான் வருத்தமா…இல்ல…)

காலேஜ் ல first year  படிக்கும் போது ஒரு நாள் திடீருன்னு 

அவள் ஞாபகம்… காலேஜ் கட் அடிச்சிட்டு அவ ஏரியாவில ஒரு

நாள் முழுக்க சுத்துனேன்… 

( நாயே…காலேஜ் கட் அடிக்க அவ ஒரு சாக்கா…)
 
கண்ட கண்ட நாய்கள்… அதான் என் ஸ்கூல்ல படிச்சவனுங்க..  

எல்லாம் என்னை பார்த்துச்சு… என்னடா இந்த பக்கம்னு கேட்க…

ஒவ்வொருத்தன் கிட்டயும் உன்னை தாண்டா பார்க்க வந்தேன்…

வீடு தெரியாம சுத்திகிட்டு இருக்கேன்டா னு கொஞ்சம் கூட

கூச்சமே இல்லாம ரீல் சுத்துனேன்..
 
( அப்ப…நீயும் நாயா அலைஞ்சியா …அது சரி…

பொண்ணு அப்பவே கும்முன்னு இருந்தான்னு சொல்ற… 

ஆறு ஏழு வருஷத்தில அட்டகாசமா இருப்பான்னு

தானே அலைஞ்சே.…)
 
அன்னைக்கு பூரா அவஸ்தை பட்டது தான் மிச்சம்…
 
ரெண்டு வருஷம் முன்னாடி ஒரு நாள் நானும் அதே நெட்டை 

சந்தோஷும் பேசிகிட்டு இருக்கும் போது…சும்மான்காச்சுக்கும்

பேச்சு வாக்கில் அவளை பத்தி கேட்டேன்… ஆச்சரியப்படும் 

விதமாக..அவனுக்கு அவளை பத்தின விஷயம் எல்லாம்

தெரிஞ்சி இருந்தது…ஆர்வமாக கேட்டேன்… 

அப்புறம் தான் அது ஆப்புனு தெரிஞ்சது…
 
அவளுக்கும் கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைகள் 

இருக்காம்…பழக்கடை வச்சி நடத்திகிட்டு வராங்களாம்…

( உனக்கு மட்டும் ஏன் இப்படி…)
 
ச்சீ ..ச்சீ…இந்த பழம் புளிக்கும்னு விட்டுட்டேன்… 

( வேற என்ன பண்ண முடியும்…)


ராணி… ஒரு மூணு மாசம் முன்னாடி… பிரகாஷ் கிட்ட

வேற ஒரு பொண்ணை பத்தி கேட்கலாம்னு அவனுக்கு

போன் பண்ணேன்…அவளும் என் கூட படிச்சவ தான்...

( அந்த பொண்ணு யாருடா…அது என்ன அடுத்த பதிவில் வருமா…)
 
      அந்த பொண்ணை பத்தி அப்புறமா சொல்றேன்…
     பிரகாஷ் இருந்தது ராணிக்கு பக்கத்து ஏரியா தான்..
      அவ காலேஜ்  முடிச்சி கல்யாணம் ஆன வரை அவனுக்கு 

     தெரிஞ்சி இருந்தது…

     ஆனா அவ புருஷன் அவளை விட்டு கொஞ்ச நாளில்

      வேற ஒரு பொண்ணு கூட ஓடி போயிட்டானும்… 
       அதனால அவளுக்கு மனநிலை சரியில்லை னும்

      சொன்னான்….
        ஹ்ம்ம்…எப்படி எல்லாமோ தப்பு பண்ணிக்கிட்டு 

        இருக்குற எத்தனையோ

        பேரு இந்த உலகத்தில் நல்லா வாழும்போது….
        எதுவுமே தெரியாத அந்த அப்பாவி பொண்ணுக்கு

        இந்த நிலைமை…

 இறைவா…உனக்கு இரக்கமே இல்லையா….

No comments: