Friday, January 21, 2011

மாத்தி யோசி..Part 13

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
1. பெண்ணை நினைப்பவர்கள் 

எல்லாம் தோற்பது இல்லை.

ஒரே ஒரு பெண்ணை நினைப்பவர்கள்

மட்டுமே தோற்கிறார்கள்.

# நாகுரதினா.திரனனா.திரனா..

என் அப்டேட்ஸ்.




2. காதலுக்கு கற்பனைகள் அழகு.

ஆனா காதல் கற்பனையில்

மட்டுமே அழகு..

# அடி கொஞ்சம் அதிகம் 

அதனால தான் இப்படி.








3. பெண்களை கலர்ஸ் என்று 

அழைப்பதன் காரணம்..

கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட

தேவதைகளான பெண்கள் தங்கள்

பிறந்த வீட்டை தங்கள் இருப்பினால்

மகிழ்ச்சி நிறைந்து மிகவும் 

வண்ணமயமானதாக மாற்றிவிட்டு 

புகுந்த வீட்டிற்கு சென்று அங்கும் 

வண்ணமயமாக மாற்றுவதால் 

அவர்களுக்கு COLOURS என்று பெயர்..

# எப்படியோ சமாளிச்சுட்டேன் 

சாமியோவ்..





4.ஆம்புலன்ஸ் ஏன் வெள்ளையா 

இருக்கு தெரியுமா..??

ஆம்புலன்ஸ் ல ஆக்சிஜன் 

சிலிண்டர் இருக்கும். 

ஆக்சிஜன்  ஒரு வாயு (GAS ).

GAS நாம உணவுகளை சமைக்க 

பயன்படுத்துறோம்.

உணவுகளில் விட்டமின் இருக்கின்றது.

நாம் விட்டமினை சூரியக்கதிர்களில்

இருந்தும் பெறலாம்.

சூரியன் ஒளியை தருகிறது. 

ஒளி யானது விளக்குகளில்

இருந்து வருகிறது.

சிறிய விளக்குகளை கொண்டு

நாம் கிறிஸ்துமஸ் மரங்களை

அலங்கரிக்கலாம்.

கிறிஸ்துமஸ் என்றாலே நம்

நினைவுக்கு வருவது..

பரிசுப்பொருட்கள் தான்.

அந்த பரிசுப்பொருட்களை

கிறிஸ்துமஸ் தாத்தா என்று அன்போடு

அழைக்கப்படும் சாண்டா கிளாஸ்

தான் தருவார்.

சாண்டா கிளாஸ் பூமியின் 

வட துருவத்தில் வசிக்கிறார்.

வடதுருவத்தில் வட துருவ கரடி 

என்று அறியப்படும் போலார்

கரடிகள் வாழ்கின்றன.

போலார் கரடிகள் வெள்ளை 

நிறத்தில் இருக்கும்.

எனவே தான்  ஆம்புலன்ஸ் 

வெள்ளை நிறத்தில் உள்ளது.

இப்ப தெரியுதா நான் எப்படி 

பள்ளிக்கூடத்தில் இருந்து 

கல்லூரி வரைக்கும் 

பாஸ் ஆனேன்னு..

No comments: