Tuesday, January 11, 2011

மாதச்சம்பளக்காரனும் …மதுவும் ...மாசக்கடைசியும்…

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
வணக்கம் மக்களே.. சில உள்குத்து

காரணமாக சரிவர பதிவுகள் போட

முடியாம எல்லாமே ட்ராப்ட் ல 

தான் இருக்கு..இருந்தும் இந்த பதிவ 

எப்படியும்  போட்டே ஆகணும்னு 

எனக்கு ஆசை.

(யார் படிக்கிறீங்களோ இல்லையோ 

எனக்கு கவலை இல்ல..வழக்கம் 

போல கிருஷ்ணர் சொன்னது தான்..

கடமையை செய்…)
அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்..

தலைப்பை பார்த்துட்டு நான் நடுத்தர

வர்க்க குடும்பங்களை பத்தி சொல்ல 

போறேன்னு நினைக்க வேண்டாம்..

எனக்கு இன்னும் கல்யாணம் ஆகாததால

அது பத்தி எனக்கு முழுமையா தெரியாது..

ஒரு விஷயம் பத்தி தெரியாம அதை செய்ய 

நான் என்ன டாக்டர்.விஜய் யா..

( எது பேசுனாலும் ஏன் அவன்கிட்டே

போயி முடிக்கிறேன்னு எனக்கு 

தெரியலை..) இந்த பதிவுல

பிரம்மச்சாரிகள் படும் பாட்டை

பத்தி தான் சொல்ல போறேன்..
நீங்க கவனிச்சி இருந்தீங்கன்னா தெரியும்…


ஸ்க்ரீன்ல அமலா பாலை பார்த்த 


ஆடியன்ஸ் மாதிரி சம்பளத்துக்கு 


ரெண்டு நாள் முன்னாடி 


நம்ம பசங்க


முகம் அப்படியே பிரகாசமா இருக்கும்..சம்பளம் போடுற அன்னைக்கு நம்ம

பசங்களோட தவிப்பை பார்க்கணுமே..

வித் அவுட் ல போகும்போது செக்கிங்

இன்ஸ்பெக்டர் வருவானா 

மாட்டானானு

தவிப்பமே அதே போல..


அப்புறம் சம்பளம் கிரெடிட் ஆச்சுனா

அவ்வளவுதான்..இல்லாத வயித்து

வலி தலைவலி எல்லாம் வந்து

சாயங்காலம் பெர்மிஷன் போட்டுட்டு
மலை ஏற ஆயத்தமா ஆயிடுவோம்..


நம்ம பசங்க சரக்கடிக்கிற அழகே

அழகு தான்..சாயங்காலம் குளிச்சிட்டு

தான் பூஜையில உக்காருவோம்..எப்படியும் ராத்திரி வாந்தி எடுத்து 

வாசனையா ஆயிடுவோம் ல..

அதுக்கு தான் ஒரு முன்னேற்பாடு…


அன்னைக்கு மட்டும் நம்ம 

பசங்களுக்குள்ள அப்படி ஒரு

ஒற்றுமை இருக்கும்..நாலு பேரு 

சரக்கு வாங்க போனா,மூணு பேரு

சிக்கன் எடுக்க..சைடு டிஷ் வாங்கனு

வேலைகளை பகிர்ந்துக்குவோம் 

பாருங்க..விக்ரமன் படம் 

போலவே இருக்கும்..அது ஏன்னு மட்டும் புரியல.. 

நமக்கு வேண்டாதவங்களும் , 

இந்த நேரத்தில பேசுனா பிரச்னை

ஆயிடும்னு நினைக்கிறவங்களும் 

எப்படி தான்

சரியா சீயர்ஸ்  சொல்லி 

சரக்கடிச்சிகிட்டு இருக்கும்போது

போன் பண்ணுறாங்களோ..


சரக்கை முழுங்கவும் முடியாம..

துப்பவும் முடியாம..நாங்க படும்

அவஸ்தை இருக்கே…

ஐயயயயாவ்..

கொஞ்ச நேரம் கழிச்சி பேசினா..

போன் பண்ணும்போது ஏன் எடுக்கல..

எங்க போயி இருந்தனு..நச நசனு

கேள்வி கேட்டு நச்சரிப்பாங்க..

நச்சரிப்புக்கு பயந்தே பேச 

வேண்டி இருக்கும்…சட்டுன்னு பேசி வைப்பாங்களானா …

அதுவும் கெடையாது..அவங்க 

வீட்டு நாய்.. குட்டி போட்டதுல இருந்து…

நாய்டு ஹால்ல_____ வாங்குன 

வரைக்கும் பேசுவாளுங்க…

(இது மட்டும் என்னோட 

அனுபவம் இல்ல..)


அதுக்குள்ளே நம்ம மத்த பசங்க 

நாலாவது ரவுண்டு போயிகிட்டு

இருப்பானுங்க…முதல் ரௌண்டுக்கு

மட்டும் தான் சீயர்ஸ் கருமம் எல்லாம்…
 
அப்புறம் ஒருத்தன ஒருத்தன்

ஓவர் டேக்  பண்ணி போறதிலேயே

குறியா இருப்போம்ல..

சரக்கடிச்சா மட்டும் நம்ம 

பசங்களுக்கு பாசம் பொங்கும்..

பாட்டில் தொறக்குற வரைக்கும்

நான் எப்பவாவது தான் குடிப்பேன்னு

சொல்லுவானுங்க..இவனுங்கள 

நம்பி உக்காந்தா நம்ம விரல் 

சூப்ப விட்டுடுறானுங்க..

அப்புறம் எல்லா குரூப் ளையும் 

ஒரு அம்மாஞ்சி இருக்கும்..அதோட

வேலை என்னன்னா..எல்லாருக்கும் 

சரக்கு ஊத்தி குடுக்குறது தான்..


அப்புறம் சைடு டிஷ் காலி 

பண்றதுக்காகவே சில டோமருங்க 

வரும்..இருந்தாலும் அவனுங்களுக்கும்

சேர்த்து வாங்குவோம்..

சரக்கடிச்சிட்டு இவனுங்க சலம்புற 

சலம்பல் இருக்கே…யப்பப்பபா .. 

ஆறு மாசம் முன்னாடி அவ 

என்னை அடிசிட்டாடா..னு அது 

வரைக்கும்

பாதுகாத்து வச்சி இருந்த ரகசியம் 

எல்லாம் வெளி வரும்..கொஞ்ச 

போதையில இருந்தாலோ..இல்ல 

குடிக்காம இருந்தாலோ 

இந்த கருமத்தை எல்லாம்

தாங்கிக்கவே முடியாது..குடிச்சிட்டு வாந்தி எடுத்ததுக்கு 

அப்புறம் சொல்றதுக்குனே சில

டயலாக்குகள் இருக்கு…


1.சாரி  மச்சி..சரக்கு மாத்தி 

அடிச்சிட்டேன் ல அதான்..

2.சைடு டிஷ் சரி இல்ல மச்சி..

3.மதியத்தில் இருந்து வயிறு 

சரி இல்லடா அதான்..

இந்த மாதிரி…


கொஞ்சம் போதை ஏறினா உடனே..

தனக்கு ஊத்தாம..எவன் கொஞ்சம் 

ஸ்டெடி யா இருக்கானோ அவனுக்கு

ஊத்தி கொடுத்து அவனையும் 

மட்டை ஆக்குவானுங்க..

டே..மச்சி..நம்ம மாமா வுக்கு 

ஊத்து..ஊத்துடா..னு இவனுங்க

குடுக்குற செண்டிமெண்ட் சீன் ல 

விக்ரமன் , v.சேகர் எல்லாம் ஒரு 

பத்து அடி தள்ளி நிக்கணும்..

அப்படி பொங்குவானுங்க பாசத்துல…


ஆனா..ஒண்ணு எவ்வளவு 

போதைல இருந்தாலும்..

(நிக்கவே முடியாது..)

மச்சி..நீ புல் மப்புல இருக்க..

நான் ரூம்ல வந்து விடட்டுமாடா

இல்லேன்னா  இங்கயே படுத்துக்கோ

மச்சி..ரிஸ்க் எடுக்காதனு சொல்லுவாங்க

பாருங்க..அப்படியே கேக்குற நமக்கு 

கண்ணுல தண்ணி முட்டிண்டு நிக்கும்…அப்புறம் முக்கியமா ஒரு விஷயம்…

நாள் பூரா கண்ட நாய் கிட்ட எல்லாம் 

ஏத்து வாங்கிட்டு ராத்திரி பதினோரு 

மணிக்கு மேல தூங்குறவன எல்லாம்..

போன் பண்ணி நான் தண்ணி 

அடிச்சிருக்கேன்னு காட்டுவோம் 

பாருங்க…

காண்டு ஆன அவனுங்க 

எல்லாம்  காலையில மறுபடியும் 

போன் பண்ணி..வாயிலேயே 

வயலின் வாசிப்பானுங்க..

அப்ப தான்.. நேத்து கொஞ்சம்

ஓவரா போயிட்டோமொனு 

வருத்தப்படுவோம்…

இந்த கூத்து எல்லாம் சம்பளம் 

வாங்குன முதல் வாரம் மட்டும் தான்…

ரெண்டாவது வாரம் சரக்கு

எல்லாம் பீரா மாறும்..

மூணாவது வாரம் பீர் வாங்கவே

ஷேரா மாறும்...

நாலாவது வாரம் நாக்கை 

தொங்கபோட்டுகிட்டு…எதாவது

ஆடு மாட்டுமான்னு ஆசையோடு

காத்து இருப்போம்…இனிமே பட்ஜெட் போட்டு தான்

தண்ணி அடிக்கணும் போல..

ஏன்..பேச்சிலர் லைப் ல சரக்கு

ஒண்ணு மட்டும் தான் பிரச்சனையா..

வேற எதுவும் இல்லையா..னு 

நீங்க நெனசீங்கன்னா.. .

உங்களுக்கு என்னோட பதில்…


அதை எல்லாம் சொல்ல முடியாம

தானே நானே சரக்கடிச்சு மனசை

சாந்தப்படுத்திகிட்டு இருக்கேன்…

மேயுற மாடை நக்குற மாடு 

கெடுத்த மாதிரி…

சும்மா இருக்குற என்னை 

சொறிஞ்சிவிட்டுடாதீன்கோஊவ் …

2 comments:

royal ranger said...

ஐயோ பாஸ் பின்றிங்க ....................

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

நன்றி..நன்றி..இத்தனை நாள் கழிச்சா..ஹா..ஹா..ஹா..