Thursday, January 13, 2011

அன்பு ஆத்மாக்கள் அறிமுகமும்..AARVEE BAR RC யும் ஆனந்தமும்..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

இந்த புத்தாண்டு சில புதிய

நண்பர்களின் அறிமுகத்தோடும்..

கை கால் முட்டிகளில் காயத்தோடும் 

இனிதே ஆரம்பித்து இருக்கிறது..

என்ன பண்றது எல்லாம் நன்மைக்கே..

நண்பர்கள் கெடச்சது ok..

வண்டில போயி ஒரு நாய் மேல

ஏத்தி கீழ விழுந்து காயமானது எப்படி

நன்மையில முடியும்னு யோசிச்சு பார்த்தா..
 
அதனால தானே இந்துமதி டாக்டரின்

அறிமுகம்ன்னு ஆனந்த பட்டுகிட

வேண்டியதுதான்..
என்னோட 5S பதிவை ( Post ) 

என் வலைப்பூவில ( blog ) படிச்சிட்டு

நண்பர் ஒருத்தர் பின்னோட்டம் ( comment )

போட்டிருந்தார்.அடைப்புக்குறிக்குள்ள 

போட்டது சில matriculation  

மாணவர்களுக்காக..
ப்ரீயா இருந்த வா மச்சி..

சரக்கடிக்க சேர்ந்தே போகலாம்னு.

ரொம்ப நாள் பிளான் பண்ணுனோம்..


இருந்தாலும் நான் என் கம்பெனி லயே

ஒரு முக்கியமான தூண் 

அப்படின்கிறதுனாளையும்..

அவர் கம்பெனில அவர் ஜெனரல் 

மேனேஜர் னு ஏதோ  ஒரு சின்ன போஸ்ட்ல

இருக்குறதாலையும்..நேரமே கிடைக்கலை.

இருந்தாலும் இத இப்படியே 

விடக்கூடாதுன்னு

முடிவு பண்ணி..


T-20 ல இந்தியா ஜெயிக்கிறமாதிரி 

இருந்த நேரம் போன்ல பேசி 

முகூர்த்தத்துக்கு தேதியும் நேரமும்

குறிச்சிட்டோம்…அதன்படியே..

இந்த வாரத்தில் ஒரு நாள்.. 


கடமை கம்பி கட்டி இழுத்த ஒரு

மாலை நேரம்..அந்த கம்பியை கஷ்டப்பட்டு 

கட் பண்ணி விட்டுட்டு 

ஓடி போயிட்டேன்.

நானும் வலிக்காத மாதிரியே 

எவ்வளவு நேரம் தான் நடிக்கிறது..

எனக்காக இரண்டு நண்பர்கள்

காத்திருப்பாங்கனு அவர் சொல்ல..
நானும் யூனிபார்ம்லயே  போயி 

இறங்கிட்டேன்..என் கடமை உணர்ச்சிக்கு 

தான் ஒரு அளவே இல்லையே..
அங்கே போயி பார்த்தா அவங்களும்

 யூனிபார்ம்லயே  தான்.அப்ப தான் 

எனக்குள்ள ஒரு திருப்தி..

ச்ச..நாம

மட்டும் மாட்டிக்கலை.நம்மள மாதிரி 

பல பேரு ஊருக்குள்ள ஒண்ணுமே 

பேசாம தான் சுத்திகிட்டு இருக்கானுங்கனு..

கொஞ்ச நேரத்துகெல்லாம் அந்த நண்பர்

கார்ல வந்துட்டார்.அப்புறம் நாலு பேரும் 

அங்கே இருந்து கெளம்பி..AARVEE 

அப்படிங்கற சொர்க்கத்துக்கு போனோம்.. 

நான் கொஞ்சம் அதிகமா பேசுவேன்..

இருந்தாலும் முதல் அறிமுகம்ங்கறதால 

நீங்க கேள்வி கேளுங்க நான் பதில்

சொல்லிக்கிட்டு வர்றேன்னு சொன்னேன்.

எனக்கு Interview , Auditing , அப்புறம் 

பொண்ணுங்க இவங்க கேள்வி கேட்டா 

மட்டும் தான் எனக்கு கோபம் கோபமா 

வரும்..கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் 

ஆத்திரத்தை அடக்க முடியாம அழுதுடுவேன்..
 
முதல் ரெண்டை விடவும்..மூணாவதா

இருக்குறவங்க கேட்குற கேள்வி இருக்கே..

நமக்கு மயக்கமே வந்துடும்..

அந்த அளவுக்கு கேள்வி கேட்பாளுங்க..

சரி விடுங்க..அதை பத்தி இன்னொரு 

பதிவில்  சொல்றேன்…
அவங்களை கேள்வி கேட்க சொன்னா..

உங்க அளவுக்கு எங்களுக்கு பேச 

தெரியாதுங்க னு வஞ்சப்புகழ்ச்சி 

அணியில புகழ்ந்துட்டாங்க..
(வஞ்சப்புகழ்ச்சி அணி = எதிர்ல 

இருக்குறவனை மொக்கை பண்றோம்னு

அவனுக்கு தெரியாதா வகையில் 

அவனை உயர்வா பேசுறது..)
நான் பத்தாவதுல தப்பி தவறி தமிழ்ல

95 மார்க் எடுத்ததால இத பத்தி

எல்லாம் ஓரளவுக்கு தெரிஞ்சுது.

(இந்த எடத்துல எதுக்கு என் பத்தாவது 

மார்க்கு னு யோசிக்கிறீங்களா…

வேற யாரும் என்னை பத்தி சொல்ல

போறதில்லை.என்னை பத்தி 

நானே சொல்லிக்கிறேன்..

எல்லாரும் பார்த்துக்குங்க..

நானும் ஒரு காலத்தில் நல்லவன் தான்..)
அப்புறம் எல்லாரும் கார்ல இறந்து

இறங்கி ஏற போனோம்.. 


அதாவது படிக்கட்டுல ஏறி..

மலை ஏற..
அங்கே போனா…

எப்பவுமே கூட்டமா இருக்குது 

அந்த பார்.. 

ஊருக்குள்ள வாழ்க்கையை 

நொந்தவன் எவ்வளவு பேரு னு 

தெரிஞ்சிக்க ஆசைப்பட்டா ஆறு மணிக்கு

மேல பச்சை போர்டு கடை வாசலை

பார்த்தா போதும்..

நாங்க வாழ்க்கையின் ஆரம்பக்கட்டத்தில

இருக்குறதால ( ஹி.ஹி..இன்னும் 

கல்யாணம் ஆகலை..) 

அந்த பாருக்கு போயி இருந்தோம்…

ஆனா ஒண்ணுங்க…சரக்கடிக்க 

ஆரம்பிக்கும் போது எது எது எல்லாம் 

பத்தி நாம பேச வேணாம்னு 

நினைக்கிறமோ..அதை பத்தி மட்டும் 

தான் முழுக்க பேசுவோம்…
நாங்க மட்டும் என்ன விதி விலக்கா..

ஆபீஸ் பத்தி பேச வேண்டாம்னுட்டு… 

Production , Quality னு போயி..Monthly Target ,

Customer Satisfaction வழியா…6 Sigmaa வை 

கொஞ்சம் எட்டி பார்த்துட்டு..monthly turnover..

Boss expectation னு போயி…

எதுல முடிச்சோம்னா… 

இட்லி தின்னு முடிக்கிற வரைக்கும்...
இன்னும் ரெண்டு லார்ஜ் அடிச்சிருந்தா

பார் காரனே கால்ல விழுந்து 

கும்புட்டு இருப்பான்..

இவ்வளவு பெரிய பிசினஸ் மேதைகள்

இங்க வந்து இருக்காங்களான்னு..
என்னமோ ..போ..


அப்புறம் அவங்களே

வந்து வீடு வரைக்கும்

விட்டுட்டு போனாங்க..
இந்த ஊருக்கு வந்து இன்னும் 

சில இதயங்களை களவாண்டதுல...


எனக்கு இப்ப..
சந்தோஷம் பொங்குதே..

சந்தோஷம் பொங்குதே..
சந்தோஷம் பொங்கி வழியுதே…  

3 comments:

TERROR-PANDIYAN(VAS) said...

பதிவு எல்லாம் நல்லா எழுதறிங்க. ஆனா கடையில கூட்டம் இல்லை!!!! தேவையில்லாம நிறைய Widgets போட்டு இருக்கிங்க. அதனால ப்ளாக் ரொம்ப மெதுவா வருது. இந்த Word Verification எடுங்க பாஸ் கடுப்பா இருக்கு. நீங்க சொன்ன அந்த சின்ன போஸ்ட்ல இருக்க ஜெனரல் மேனேஜர் பையன் தான் உங்க கடைக்கு வழி சொன்னாரு... :))

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

நன்றிங்க..அப்படியே செஞ்சிடலாம்...Word verification னா என்னான்னு கொஞ்சம் விளக்கமா சொன்னா பரவா இல்லை..எனக்கு தெரியல..

TERROR-PANDIYAN(VAS) said...

//Word verification னா என்னான்னு கொஞ்சம் விளக்கமா சொன்னா பரவா இல்லை..//

கமெண்ட் போடற சமயத்துல ”Type the characters you see in the picture above” அப்படினு ஒரு Box இருக்கே அது. அப்புறம் கமெண்ட் மாட்ரேஷன் எடுத்துடுங்க. நிறையபேருக்கு அது பிடிச்கிறது இல்லை. உதவி தேவைபட்டா மெயில் பண்ணுங்க. நன்றி!