அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
நீ வந்து பேசுகையில்..
பூக்களுக்கு வருத்தம் தான்..
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பிவிடுகின்றனவாம்..தேனீக்கள்..
என்னை ஏதோ செய்துவிட்டாள்.
ஆர்க்கிமிடிஸ் தத்துவம்
பொய் ஆனதடி..
நீ என்னுள் நுழைந்ததும் என்
இதயத்தின் எடை கூடுகிறதே..
#அமலா பால் ஒரு
அறிவியல் அதிசயம்..
நீ அமர்ந்து இருக்கும் அந்த
பூங்காவை விட்டு வெளியே வா..
எந்த பூவில் உட்காருவதென நீண்ட
நேரமாய் குழம்புகிறது ஒரு வண்டு..
உன்னை சுற்றி வரும் வண்ணத்து
பூச்சிக்கு எப்படி புரிய வைப்பேன்..
நீ பூ அல்ல என்று..
இவ்வளவு பெரிய இந்தியாவில்
ஒரு அதிசயம் பத்தாது என்று
உன்னை படைத்தானோ பிரம்மன்...
No comments:
Post a Comment