Monday, December 26, 2011

செப்பு சிலையை சைட் அடிச்சி சைபர் க்ரைம்ல சிக்குன சோக ஸ்டோரி.. 1

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



ஆண்கள் பெண்களையும் , பெண்கள் ஆண்களையும்

காதலிக்கிறது இயல்பு.. 

ஆனா நான் அந்த காதலையே காதலிக்கிறேன்..




என் வாழ்க்கை வரலாறை யாராவது மதிக்கலைன்னு

தெரியுது..இருந்தாலும் நான் தொடர்ந்து எழுதுறேன்..

( ஆமா ராசா..நீ நாட்டு விடுதலைக்காக செக்கிழுத்ததையும்

சிறைக்கு போனதையும் பத்தி எழுதுற..நாயே நீ ஜொள்ளு

விட்டதையும் , சைட் அடிச்சி செருப்படி வாங்குனதையும்

எழுதிட்டு வேற என்னடா எதிர் பார்க்குற..)



நான் இந்த புது ஏரியா வுக்கு வந்து நல்லா 

பழகினவங்கள் ல தேவி அக்காவும் ஒருத்தவங்க.. 

அவங்களோட தம்பி ரமேஷ்..என் வயசு தான்.. 

அதனால அடிக்கடி அவன் வீட்டில தான் இருப்பேன்.. 

அவ தான் கடைசி.. ரேவதி.. என் வீட்டுல இருந்து 

ரெண்டு வீடு தள்ளி தான் அவ வீடு.. 




எனக்கு அப்போ 13 வயசு..அவளுக்கு 11.. 

( பிஞ்சில பழுத்த பாவி..) அப்போவெல்லாம் அவ 

என்னை பேர் சொல்லி கூப்பிடுவா.. அவ கூட சண்டை

போட்டு இருக்கேன்..என்னை அண்ணா னு தான்

கூப்பிடனும்..பேர் சொல்லி கூப்பிடக்கூடாதுன்னு..

( எங்க..இப்ப சொல்லேன் பார்ப்போம்..) ஆரம்பத்தில 

எல்லாம் அவ மேல எனக்கு அந்த அளவுக்கு ஈடுபாடு 

இல்ல.. அப்படியே ஸ்கூல் முடிஞ்சு , காலேஜ் 

சேர்ந்ததுக்கு அப்புறம் அனிதா , அமுதா , பாத்திமா னு

ட்ராக் மாறி போனதுல இவளை கண்டுக்கவே இல்ல..




ஸ்கூல் படிக்கும்போது எல்லாம் அவ வீட்டில தான் நாங்க 

4 பேரும் SHUTTLE CORK விளையாடுவோம்.. அப்போ கூட அவ

என் டீம் வந்தா சண்டைதான்.. ( நீயும் ஊடலில் தொடங்கும்

காதல் னு ஆரம்பிப்பியோ..) அப்புறம் அவ பெரிய 

பொண்ணா ஆனதும் அவங்க வீட்டுக்கு போறதை 

நான் குறைச்சுகிட்டேன்.. ( நீயா போகலையா.. இல்ல 

உன் வீட்டிலையும் , அவ வீட்டுலையும் போக 

கூடாதுன்னு பின்னி எடுத்தாங்களா..) கொஞ்ச நாள் 

அவ வேற அவங்க சொந்தக்காரங்க வீட்டில 

தங்கி படிச்சா..அதனால அவ நினைவே இல்ல.. 




இப்படி இருக்கையில,பழைய ஹவுஸ் ஓனர் வீட்டை 

வித்ததால நாங்க அவ வீட்டுக்கு குடிபோனோம்..

அதுவரைக்கும் 4 மாசத்துக்கு ஒருமுறை வீட்டுக்கு 

வந்து போன நான் 2 மாசத்துக்கு ஒருமுறை வந்து 

போக ஆரம்பிச்சேன்.. ( அதான்..பிகர் பக்கத்தில 

இருக்கே..எப்படி உனக்கு அங்க இருப்பு கொள்ளும்..) 

அவ அப்போ தான் எஞ்சினியரிங் சேர்ந்து இருந்தா.. 

ஒரு தடவை எனக்கு அம்மை போட்டு இருந்தது..

நான் கிளம்பி இங்க வந்துட்டேன்.. முழுசா ஒரு 

மாசம் லீவ் போட்டேன்..ஆனாலும் என்னை வேலைக்கு

எடுத்தவங்க ரொம்ப நல்லவனுங்க..என்னை ஒண்ணுமே 

சொல்லலை.. அப்போ தான் அவளுக்கும் செமஸ்டர் 

லீவ்..போதாதா.. நல்லா டெவலப் ஆச்சு.. 

( என்னது..அம்மையா..? ) அட எங்களுக்குள்ள 

இருந்த பிணைப்பு..



ஒரு தடவை நான் பெங்களூர்க்கு ஒரு வெண்டார் 

விசிட் வந்துட்டு அப்படியே சென்னை வந்தேன்..

இன்பார்ம் பண்ணலை.. வீட்டுக்கு வந்து பார்த்தா 

எல்லாரும் கிளம்பி பாட்டி வீட்டுக்கு 

போயிட்டாங்களாம்..ரெண்டு நாளில் வந்துடுவோம்..

நீ கிளம்பி வர வேண்டாம்..அங்கேயே இருன்னு

சொன்னாங்க..எனக்கும் சென்னை ல வெண்டார்ஸ் 

இருந்ததால ஆபிஸ்ல சொல்லிட்டு இன்னும் ஒரு 

வாரம் extend பண்ணிட்டேன்.. ( வெண்டார் விசிட் 

பண்ணுறதே அதுக்கு தானே டா.. ) அந்த ரெண்டு 

நாளும் அவ வீட்டில தான் சாப்பாடு.. அடுத்த நாள் 

அவங்க வீட்டில யாரும் இல்ல.. இவ மட்டும் தான் 

இருந்தா.. டிபன் சாப்பிட வாடான்னு சொல்ல வந்தா.. 

இவ வருவான்னு தெரிஞ்சே தான் நான் ஏற்கனவே 

எழுதி வச்சி இருந்த கவிதையைக் கையில வச்சி 

படிச்சிக்கிட்டு இருந்தேன்.. டே..வாடா..சாப்பிடலாம் 

னு சொன்னவ அது என்னடா கையில பேப்பர்னு 

கேட்க.. நான் எழுதுன கவிதை ரேவதி னு சொன்னேன்..

ஓஹ...அப்படியா யார நினைத்து டா எழுதுனனு

கேட்டா..ஏன்..யாரைன்னு உனக்கு தெரியாதான்னு நான்

பிட்டைப்போட.. ( அதானே பார்த்தேன்..இன்னும் 

பையன் பார்முக்கு வரலையேன்னு..) சரி..சரி..அதை 

வச்சிட்டு வா..இட்லி ஆறிடப் போகுதுன்னு சொன்னா.. 

கொஞ்சம் கூட மதிக்கவே இல்ல.. செம காண்டு 

ஆயிடுச்சு.. ( சத்திய சோதனை.. ) சரி..என்ன பண்ணித்

தொலையுறது னு நீ போ..நான் பிரஷ் பண்ணிட்டு 

வர்றேன்னு சொன்னேன்..



கொஞ்ச நேரம் கழிச்சி போனேன்..எல்லாத்தையும் 

எடுத்து ரெடியா வச்சி இருந்தா..வந்து உட்காருடா..

எனக்கும் பசிக்குது..சேர்ந்து சாப்பிடலாம்னு சொன்னா.. 

எனக்கு உடனே ஒருத்தருக்கொருத்தர் ஊட்டி விட்டுக்குற 

மாதிரி ஒரு கனவு.. ( பக்கத்து வீட்டுல வாங்கித் திங்குற

நாயிக்கு நினைப்பை பாரு.. ) சரின்னு போயி உட்காந்தேன்..

கிராதகி..எனக்கு பரிமாறிட்டு,அவளும் ஒரு தட்டை 

எடுத்துட்டு போயி சேர்ல உட்காந்துக்கிட்டு டிவி 

பார்க்க ஆரம்பிச்சுட்டா… என்ன எழவு டா இது..

காலையிலேயே கண்ணாடியை பார்த்துட்டனா..

( ஒருவேளை இருக்குமோ..? ) எல்லாம் இப்படி 

மொக்கையா போகுதேன்னு நெனச்சுகிட்டே 

சாப்பிட்டேன்.. அப்போ அப்போ வந்து பரிமாறியதோட

சரி.. பேசக்கூட இல்லைங்க.. எனக்கா..வாங்கின பல்பு

ஏகத்துக்கும் எரியுது.. நான் ரெண்டு தடவை பேச ட்ரை

பண்ணேன்..ஒரு வார்த்தையில பதில் சொல்லி முடிச்சா.. 

போடின்னு எனக்கு கோபம்.. ( பொண்ணுங்க கிட்ட நீ 

கோபப்பட மாட்டியே ராசா.. )



கொஞ்ச நேரத்தில அவங்க அம்மா வந்துட்டாங்க..

அதுக்கு அப்புறம் மதியம் சாப்பிட போனா ஆளே

மாறிட்டா..அவங்க அம்மா பரிமாற்ற வந்தாங்க..நீ போம்மா..

நான் போடுறேன் னு சொல்லி பக்கத்தில உட்காந்துட்டா..

சாப்பிடுடா..சாப்பிடுடானு ஒரு பாச மழை வேற.. நான் 

அப்படியே ஷாக் ஆயிட்டேன்..என்னடி நடக்குது 

இங்க..காலையில கண்டுக்கவே இல்ல.. மதிய நேரத்தில

மானாவாரியா மயக்குறாளே னு  ..( இவளுங்க எப்பவுமே

இப்படித்தான் மச்சி.. ) வழக்கம் போலவே ஞே னு 

முழிச்சேன்..என்னோட குழப்பத்தை புரிஞ்சிகிட்ட அவ 

கையில கிள்ளிட்டு,கண்ணடிச்சா..எனக்கு புரை ஏறிடுச்சு..



சிரிக்க ஆரம்பிச்சுட்டா..அதுக்குள்ளே அவ அம்மா வந்து 

என்னடி ஆச்சு னு கேட்க.. இவனை பாரும்மா..ஏதோ 

தெரியாதவங்க வீட்டில சாப்பிடுற மாதிரி சங்கோஜத்தோட

சாப்பிடுறான்னு சொன்னா..உடனே அவங்க ஏன்ப்பா..நாங்க

என்ன வேத்து மனுஷங்களானு மொக்கை போட

ஆரம்பிச்சாங்க.. எனக்கு சரியான காண்டு..அப்படி 

எல்லாம் ஒண்ணுமில்ல அத்தை..அவ சும்மா 

சொல்றா னு சமாளிக்க..நீயே பாரும்மா..அவன் தட்டுல

வச்சது எல்லாம் வச்ச படியே இருக்குனு போட்டு 

கொடுக்க..நீ பக்கத்திலேயே இருடி அவன் திருப்தியா 

சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும்னு சொல்லிட்டு 

அவங்க கிட்சன் குள்ள போயிட்டாங்க.. 

உடனே அவ 
ஏன்டா..இப்படி முழிக்கிற..
என்ன விளையாடுறியா..?காலையில ஏனோ தானோ னு 

சாப்பாடு போட்ட..இப்போ என்னடான்னா இப்படி வந்து 

இளிக்கிற..என்ன நெனச்சுகிட்டு இருக்க நீ..?
அதுவா..அதை அப்புறம் சொல்றேன்..இப்போ நல்லா 

சாப்பிடுன்னு தலையிலேயே கொட்டினா.. நானும் 

சாப்பிட்டு குழப்பத்தோடையே எழுந்துட்டேன்..



அப்புறம் சாயங்கலாம் ஒரு 6 மணிக்கு மொட்டை மாடி

வந்தா..நான் அங்க இருந்து பாத்திமாவை பார்த்துகிட்டு

இருந்தேன்..( அவ யாருன்னு தெரியாதவங்க பேருக்கு 

மேல் க்ளிக் பண்ணுங்க.. ) என்னதான் பாத்திமா 

அப்படின்னு தெரிஞ்சாலும் அழகா இருந்தா சார்..

அதான்.. ( நீ பார்க்கலைனா தான் அது அதிசயம்..

நீ சொல்லு.. ) மேல வந்த அவ..



என்னடா தூங்கி எழுந்துட்டியா..
ஆமா..நீ இன்னைக்கு பண்ணிய வேலைக்கு 

தூக்கம் வருமா என்ன..
அதுக்கில்ல டா காலையில நீயும்,நானும் 

தனியா இருந்தோம்..நான் உன்கிட்ட ஏதாவது 

சிரிச்சி பேசி நீ அதை அட்வாண்டேஜா எடுத்துகிட்டனா..?

அதான் அப்படி பண்ணேன்.. 

( பொண்ணு செம உஷாரு போல.. )
அட்வாண்டேஜா..அப்படினா.. 
ஆமாண்டா..உனக்கு ஒண்ணுமே தெரியாது..

நீ பாப்பா பாரு..
எனக்கு புரியலை..ஒருவேளை உன்கிட்ட தப்பா 

நடந்துக்குவேனோ நெனச்சியோ..பசியில இருக்கும்போது

அப்படி எல்லாம் தோணாது டி..அதுவும் இல்லாம நான்

ஏன் உன்கிட்ட தப்பா நடக்கணும்..நமக்குள்ள 

என்ன இருக்கு.. ( அடிச்சான் பாரு சிக்சர்.. )



உடனே அவ கண் லேசா கலங்கிடுச்சு..



ஆமாண்டா..நமக்குள்ளதான் ஒண்ணுமே இல்லைல..

நான் தான் தேவை இல்லாம பயந்துட்டேன்..அப்புறம் 

எத்தனை நாள் லீவ்ல டா வந்து இருக்கனு சட்டுன்னு 

பேச்சை மாத்தி சரளமா பேச ஆரம்பிச்சுட்டா.. 

( இப்போ வாங்கின இந்த பல்ப் இன்னும் 

பிரகாசமா எரியுது டா.. )



ஒரு ரெண்டு நாள் கழிச்சு,திடீருன்னு ஓடி வந்தா..

டே..இங்க பாருடா..அண்ணன் ( கசின் ) மொபைல் வாங்கி

கொடுத்திருக்காருன்னு காட்டினா..நான் வாங்கி அதுல 

இருக்குற அப்ப்ளிகேஷன் லாம் எப்படி யூஸ் 

பண்ணுறதுன்னு சொல்லிக்கொடுத்துட்டு..ரேவதி 

இதுல இருந்து என் நம்பருக்கு ஒரு கால் பண்ணி உன் 

நம்பரை சேவ் பண்ணிக்குறேன் னு சொன்னேன்.. 

இல்லைடா அதெல்லாம் வேணாம்..நாம போன் ல 

எல்லாம் பேசிக்க வேண்டாம் னு சொன்னவுடன் எனக்கு 

ஒரு மாதிரி ஆகி போச்சு..சரின்னு அவகிட்டயே

கொடுத்துட்டேன்.. ( ஹா..ஹா..ஹா..கேவலப்பட்டான் 

கணேஷ்.. ) அப்புறம் அவ அண்ணன் கிட்டே நம்பர் 

வாங்கி அவளுக்கு மெசேஜ் பண்னுனேன்..யார்னு 

கேட்டா நான் தான் னு சொன்னேன்..ஆனா பேசிக்கலை..

வெறும் மெசேஜ் மட்டும் தான்..நானோ ஒரே பீலிங்க்ஸா 

மெசேஜ் அனுப்பிக்கிட்டு இருந்தேன்..ஆனா ஒரு ரிப்ளை 

கூட வராது..சுத்தமா மதிக்கவே இல்ல..இருந்தாலும் 

நான் சளைக்காம அனுப்பிக்கிட்டு இருந்தேன்..

ஔரங்காபாத் போயும்..(முயற்சியில் மனம் 

தளராத விக்ரமாதித்தன்..)



அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சி அது தலைவரோட சிவாஜி 

படம் ரிலீஸ் ஆகியிருந்த சமயம்.. நான் ஊருக்கு வந்து

இருந்தேன்.. அப்போ ரோமிங் ல இருந்தேன்..சாயங்கால 

நேரம் ஒரு போன் வந்துச்சு..யார்னு கேட்டேன்.. நீங்க 

எனக்கு ரொம்ப நாளா மெசேஜ் பண்றீங்க..யாருங்க 

நீங்கன்னு கேட்டாங்க.. சாரிங்க..இந்த நம்பருக்கு 

நான் இதுவரைக்கும் மெசேஜ் அனுப்பவே இல்ல..

ராங் நம்பர்னு நினைக்கிறேன்னு சொல்லிட்டு

வச்சிட்டேன்..மறுபடியும் போன்..ஏன்டா..பேசிக்கிட்டே

இருக்கும்போது கட் பண்ணுறனு கேட்கவும் நான் 

சூடாயிட்டேன்.. அட அறிவுகெட்டவனே..போன் ல 

எப்படி பேசணும்னு உனக்கு தெரியாதா..நான் ராங் 

நம்பர்னு சொல்றேன்..வாடா போடா னு பேசுறியே னு 

நான் எகிற..அவன் எகிற..திட்டிட்டு வச்சிட்டேன்.. 

மறுபடியும் போன் வந்துச்சு..அட்டென்ட் பண்ணிட்டு 

டிவி பக்கத்தில வச்சிட்டேன்..4,5 தடவை அப்படி 

பண்ணவும் வெறுத்துட்டான்.. கொஞ்ச நேரத்தில 

இன்னொரு நம்பர் ல இருந்து போன் கால்.. 
 
நீ ரேவதி னு ஒரு பொண்ணுக்கு மெசேஜ் அனுப்புறியே..

நீ யாரு..?
 
நான் ஏழெட்டு ரேவதிக்கு அனுப்புறேன்..அதெல்லாம் 

உனக்கு எதுக்கு..நீ யாருய்யா…?
 
நான் நீலாங்கரை போலிஸ் ஸ்டேஷன்ல இருந்து

பேசுறேன்..உன் அட்ரஸ் கண்டுபிடிச்சி வந்து அடிச்சி 

இழுத்துட்டு போவேன்..ஒழுங்கா பேசுடா..
 
அப்படியா ஆபிசர்..சந்தோசம்..ஏன் டா இப்படி 

சாயங்கால நேரத்தில மொக்கை போடுறீங்க..

போயி ஏதாவது புதுசா யோசிங்கடா டே னு 

சொல்லிட்டு கட் பண்ணிட்டேன்..
 
இவ காலேஜ் ல அவங்க பிரெண்ட்சை வச்சி 

கலாய்க்கிறானு   நெனச்சேன்.. அடுத்த போன் 

அவ நம்பர்ல இருந்தே வந்தது..
 
ஹலோ..நீங்க யாருங்க..?
 
ஹே..ரேவதி..நான் தான் கணேஷ்..
 
எந்த கணேஷ்..?
 
அடிப்பாவி..உங்க வீட்டுல இருக்க கணேஷ்..

அவுரங்காபாத்ல வேலை செய்யுற கணேஷ்..இது

உன் நம்பரா..நான் ரமேஷ் நம்பர் னு ல நெனச்சேன்..
 
ஐயையோ..நீயா..சரிடா போனை வை..
 
அவ்ளோ தான்..பேசிட்டு வச்சிட்டா..
 
மறுபடியும் அந்த ரெண்டாவது போன் வந்த நம்பர்ல 

இருந்து கால்..
 
ஏன்டா..டே..உன் பேரு கோபிநாத் தானே..கோயம்பேடு 

சின்மயா நகர்ல தானே இருக்கே.. இன்பார்ம் பண்ணிட்டேன்

இன்னும் 5 நிமிஷத்தில வந்து அள்ளிட்டு போறோம்

இருடான்னு சொல்ல..



எனக்கோ செம டர் ஆயிடுச்சு..ஏன்னா என்னோட சிம் 

கார்ட் என் பிரெண்டோட அண்ணன் ப்ரூப் கொடுத்து 

தான் வாங்கி இருந்தேன்..அவங்க வீட்டு அட்ரசை 

கரெக்டா சொல்றாங்கனா அப்போ இது போலீஸ் 

தானா..அவ்வ்வ்வ்…



சார்..சாரி சார்..அவ என்னோட பிரெண்டு தான்..என் 

நம்பர் மாத்தினது அவளுக்கு தெரியும்னு நெனச்சேன் 

சார்..ஐ யாம் சாரி சார்..னு தத்தக்கா  பித்தக்கானு 

உளறி கொட்டினேன்..



என்னடா பம்முற னு கேட்டவரு , அதுக்குள்ளே 

இன்னொரு கால் வரவும் கட் பண்ணிட்டாரு..



அதுக்குள்ளே அவ அண்ணன் கிட்ட இவ சொல்லி 

இருப்பா போல..அந்தாளு ஸ்டேஷன்ல தான் இருந்து 

இருக்கான்..அந்த 5 நிமிஷமும் நான் டன் டானா டர் 

னா ஆகி இருந்தேன்..
 
கொஞ்ச நேரத்தில திருப்பி கூப்பிட்டவரு..
 
ஏன் பா..தம்பி..பிரெண்ட்ஸ் குள்ள நம்பர் 

மாத்திட்டீங்கன்னா சொல்ல மாட்டீங்களா.. நீ பேசுன 

பேச்சுக்கு உன்னை தூக்க உன் தெரு முனையில 

தான் நிக்குறாங்க னு சொன்னதும்..ஐயையோ சார்..

இந்த சிம் கார்டு என் பிரெண்டோட அண்ணா பேரு ல 

இருக்கு சார்..அவர் தான் கோபிநாத்..அப்படி எல்லாம் 

எதுவும் பண்ணிடாதீங்கனு சொல்லவும்..
 
என்ன பசங்கப்பா நீங்க..கொஞ்சம் கூட பொறுப்பில்லாம ..

இப்படி எல்லாம் இனிமே பண்ணாத என்னனு சொல்ல..
 
நான் உடனே சரி சார்..சாரி சார் னு சொல்லி வச்சேன்.. 

எல்லாம் சரி..அது என்ன காலை அட்டென்ட் பண்ணி டிவி

பக்கத்தில வைக்குற..இது என்னயா புது விதமான

கொடுமையா இருக்கு னு சொல்லி சிரிக்க..

நான் பே, பே னு சிரிச்சேன்.. 

( அட..ச்ச..ஜஸ்ட் எஸ்கேப்பா.. )



என்னடா நடந்துச்சுன்னு ரெண்டு நாள் கழிச்சி விசாரிச்சா , 

அது ஏதோ டூயல் சிம் மாம்..ஒரு நம்பருக்கு 

அனுப்பினது,பேசினது எல்லாம் இன்னொரு நம்பருக்கும்

தெரியுமாம்.. அந்த பிக்காலி கசின்,இவ கிட்ட யாரும் 

தப்பா நடக்கக்கூடாதுன்னு இப்படி எல்லாம் பண்ணி

இருக்கான்..இந்த எழவு எல்லாம் எனக்கு எப்படி

தெரியும்..மாட்டிக்கிட்டேன்.. சைபர் கிரைம் ல 

மாட்டின அன்னைக்கே அவ கிட்ட 

சொன்னேன்..அடியே..இதெல்லாம் வீட்டில 

சொல்லிக்கிட்டு இருக்காதா..சங்கடமா போயிடும்னு..

அவளும் சரி சரின்னு சொல்லிட்டு..அவங்க வீட்டுல 

வந்து போட்டு விட்டுட்டா போல.. ( ஏன்டா..இவ கிட்ட 

மட்டும் இவ்வளவு பல்ப் வாங்கி இருக்க.. ? ) அதுக்கு 

அப்புறம் என்னை அவ அம்மா,அக்கா,அண்ணன் னு 

எல்லாரும் ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்க.. அவங்க 

அப்பா கிட்ட சொல்லலை..எங்க வீட்டுலையும் 

சொல்லலை.. அவ அப்பன் மேல அவளுக்கு 

கொஞ்சம் பயம் அதிகம்.


இவ கிட்ட வாங்கிய பல்பு ஏராளம்..மூணு வருஷம் 

கழிச்சி மறுபடியும் நான் மானங்கெட்டு போனதை 

சீக்கிரமே பதிவிடுறேன்..

1 comment:

அக்கப்போரு said...

கணேஷ் - கலக்கல் பதிவுகள். இன்று 3G பற்றி கூகிளில் தேடிய பொது உங்கள் ப்ளாக் கிடைத்தது. ரொம்ப நேரமா இங்க மரண சிரிப்பு ஒரு டீமே ..... கலக்கல் .....