Friday, December 30, 2011

அர்த்தம் தெரியுமா.. 12

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




சைக்யாட்ரிஸ்ட் - நம்மை பத்தி எல்லாரும் தினமும் 

என்ன சொல்றாங்களோ  ( பொறணி பேசுறது ) அதையே 

சொல்லிட்டு அதிகமா பீஸ் வாங்குறவன்..



நிம்மதியான வாழ்க்கை – செஞ்சுரி போல.. இலக்கை 

எட்டுவதற்கு நிறையவே கஷ்டப்படணும்..



பிரச்சினைகள் – யார்க்கர் போல..சமாளிக்கணும்..

இல்லைனா அவுட் தான்..



தோல்விகள் – பவுன்சர் போல.. பயப்படமா விட்டுடனும்..

நம்ம ட்ராவிட் போல..



அதிர்ஷ்டம் – புல் டாஸ் பால் போல.. எப்போதாவது 

அதுவா வரும்..



ஆனா..வாய்ப்புகள் – FREE HIT போல.. 

வீணாக்காம பயன்படுத்திக்கணும்..






கட்டுப்பாடு - சரக்கையும்,பெண்களையும் தேடி போகாம 

ஒண்ணுமே பண்ணாம இருக்குறது இல்ல..ரெண்டுமே 

எதிரில் இருந்தாலும் ஒண்ணுமே பண்ணாம இருக்குறது 

தான்..(நமக்கு எதுக்கு சார் அந்த கருமம் பிடிச்ச 

கட்டுப்பாடு..சியர்ஸ்..)




மவுனம் - பிரச்சினைகளில் இருந்து விலகி இருக்க சிறந்த வழி..

புன்னகை - பிரச்சினைகளை எதிர்கொள்ள மிகச்சிறந்த வழி..



வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத அழுத்தம் மிகுந்த 

அன்பின் வெளிப்பாடே முத்தம்னு நான் நினைக்கிறேன் 

- சமீபத்தில் நான் ஜொள்ளியது.. 

No comments: