Wednesday, April 27, 2011

நீதிக்கதைகள்..Part 13

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
ஒரு புருஷனும் பொண்டாட்டியும் படுக்கையில் 

பேசாம படுத்துகிட்டு இருக்காங்களாம்..

மனைவி : இவர் ஏன் என் கூட பேச மாட்றாரு..

ஒரு வேலை வேற எதாவது பொண்ணு கூட தொடர்பு

இருக்குமோ , இல்லை அவர் கண்ணுக்கு இப்போவெல்லாம் 

நான் அழகா இல்லையா , உடம்புல தேவை இல்லாத இடத்தில் 

எல்லாம் சதை போட்டு குண்டாயிட்டேனா , அவர் என்னை 

வெறுக்குறாரா , என் மேல வேற எதாவது கோபமா , 

இல்லை வரதட்சணை இன்னும் வேணும்னு கேட்பாரோ , 

ஏன் இவரு என் கிட்ட பேசாம இருக்குறாரு..?

கணவன் : இப்போவெல்லாம் RC டாஸ்மாக் ல ஏன்

கிடைக்க மாட்டுது..?



நீதி : இப்படிதாங்க நாம ஒன்னு நினைப்போம்..

அவளுங்க வேற எதாவது கற்பனை பண்ணிக்கிட்டு 

நம்மளை பிரிச்சி மேயுறாளுங்க..



பக்கத்து பக்கத்து வீட்டுல ரெண்டு நாய்கள் இருந்துச்சாம்..

ஒன்னு பேரு பிரபு , இன்னொன்னு பேரு தாரா. அந்த ரெண்டு 

நாயும் ரொம்ப தீவிரமா காதலிச்சுதாம். ஒரு நாள் 

ரெண்டும் கொல்லைப்புறத்தில் சந்திச்சு ஜில்லிப்பு தட்டும்போது 

ரெண்டு வீட்டுகாரங்களும் பார்த்துட்டாங்களாம்.உடனே அந்த 

ரெண்டு நாய்களையும் பிரிச்சி தனித்தனியா 

கூட்டிகிட்டு போயிட்டாங்களாம்.



நீதி : மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல..







ஒரு கம்பெனியில புதுசா ஒரு லேடி மேனேஜர் வந்தாங்களாம்.. 

நம்ம பையனை கூப்பிட்டாங்களாம்..

மேனேஜர் – உன் பேரு என்னப்பா..?

பையன் – ஜான்..

மேனேஜர் – உன்னோட SURNAME என்ன.. 

நான் எல்லாரையும் அவங்க SURNAME வச்சி தான் கூப்பிடுவேன்..

பையன் – டார்லிங்.. ஜான் டார்லிங் மேடம்..

மேனேஜர் – ஓகே ஜான்.. நீ போயி உன் வேலையை பார்க்கலாம்..



நீதி – எப்பவுமே மேனேஜர்கள் அவங்க சொல்றதை தான் 

செய்வாங்கன்னு நம்பக்கூடாது..

அது ஆம்பளையானாலும் சரி பொம்பளை ஆனாலும் சரி..







பையன் – கடவுளே..எனக்கு இந்தியாவிலேயே மிக சிறந்த 

“ தண்ணி “யும் சிறந்த பொண்ணும் வேணும்..

கடவுள் – அப்படியே ஆகட்டும் மகனே.. இந்தா நீ கேட்ட 

சிறந்த தண்ணி “ சிறுவாணி “ தண்ணி மற்றும் சிறந்த 

பெண் அன்னை தெரசா..



நீதி – Investments matters are subject to market risks..

 

1 comment:

Manion said...

//நீதி – எப்பவுமே மேனேஜர்கள் அவங்க சொல்றதை தான்

செய்வாங்கன்னு நம்பக்கூடாது..

அது ஆம்பளையானாலும் சரி பொம்பளை ஆனாலும் சரி..//

ச்சம நச்சி!