Friday, March 18, 2011

அன்புள்ள முதல்வருக்கு , ஆப்பு ஒண்ணு காத்திருக்கு..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
அன்புள்ள முதல்வர் அய்யாவுக்கு , 

அடங்காத ஆர்வக்கோளாறு எழுதுவது..



நம் நாட்டில் பெட்ரோலின் விலை என்ன ?

நாதாரிகள் சேர்ந்து சுருட்டிய ஸ்பெக்ட்ரம் 

ஊழலின் நிலை என்ன ? 





அத்தனையும் கூட்டா முழுங்கிட்டு நீங்க 

கோர்த்துவிட்ட அந்த 

ஆடு ஆ.ராசா வின் கதி என்ன ?

கண்ணாளனை இழந்து தவிக்கும் காதலி 

கனியின் கதை என்ன ? 





சாம்பார் வைக்க முடியாம சங்கடப்படுத்தும் 

வெங்காயத்தின் விலை என்ன ?

கொஞ்சம் கூட சொரணையே இல்லாம சீட்டுக்கு

சண்டை போடும் உங்க கூட்டணியின் நிலை என்ன ?





அப்படி இப்படின்னு மூணு சீட்டுல முடிஞ்சதா உங்க சண்டை ?

எல்லாத்தையும் பார்த்துகிட்டு உங்களுக்கு 

ஓட்டு போட்டா நாங்க தாங்க கேனை ____ .





கையோட சூரியன் சேர்ந்து தவிப்பதை விட..

இலையோட சேர்ந்து ஆட்சி அமைச்சா 

நாடே சொல்லும் அட..




ஏற்காட்டின் எகத்தாளமும் , கொடநாட்டின் 

கொழுப்பும் சேர்த்து வந்தா..

தமிழ்நாட்டு மக்களோட நிலைமை கோ விந்தா…




அரசியலில் யாரு உன்னை போல ராஜ தந்திரி..?

எங்க தாலி அறுத்தது போதும் முதல்வர் 

நாற்காலியை விட்டு முதலில் எந்திரி..



நீ பெற்றால் மட்டும் மட்டும் தான் அது பிள்ளையா..?

உங்க ஆட்சியில மக்களுக்கு எப்பவுமே

தீராத தொல்லை யா..





தேர்தல் நேரத்தில் மட்டுமே உமக்கு 

தமிழ்ப்பற்று வருமா..?

மேடையில் முழக்கமிட்டு கூட்டணியில்

மானங்கெட்டு நிற்பார் சிறுத்தை திருமா..





ஆறாவது முறை முதல்வராக ஆசைப்படும் தாத்தா..

இந்த அகிலமே அழும் தமிழ்நாட்டு மக்கள் 

நிலைமையை பாத்தா..




வழக்கம் போல வைத்திருப்பாயே ஜெயிக்க

பல ரூட்டு..

மக்களை விட நீ அதிகம் நம்புவது காந்தி

தாத்தா நோட்டு..





இந்த தேர்தலில் உன் துருப்புசீட்டு இலவசம்..

அதற்கு மயங்காதவர் போவர் இலை வசம்..

உங்க ரெண்டு பேரிடமும் மாட்டிகொண்டு 

தமிழ்நாட்டில் வாழ்வதை விட போகலாம் 

ஆழியின் அலை வசம்..



வயதானால் அனுபவம் கூடி அன்பும் கூடுமாம்..

உனக்கு மட்டும் ஏனோ ஆசை கூடி எங்களுக்கு

அவஸ்தை கூடுது..


 
மறக்காதீர்கள் தலைவரே..

நாங்களும் ஒரே உயிரே..



அன்புள்ள முதல்வருக்கு , ஆப்பு ஒண்ணு காத்திருக்கு..


1 comment:

ராஜ நடராஜன் said...

எதுகை மோனை நல்லாயிருக்கு:)