Saturday, March 12, 2011

கடகடா பேருந்தும்..கல்லூரி சாலையும்..கானக்குயிலும்.

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
என்னோட அனுபவங்கள் ரொம்ப காமெடியா இருக்குதுன்னு

படிக்கிறவங்க சொல்றாங்க..அட பாவிங்களா.. 

என் வாழ்க்கை உங்களுக்கு சிரிப்பா இருக்கு..போயி தொலைங்க..

பொய் பேசி என்ன ஆகப்போகுதுன்னு தான் மானங்கெட்டாலும்

பரவா இல்லைன்னு நான் மொக்கை வாங்கியதை

எல்லாம் பதிவேத்துறேன்..இந்த பதிவு..மொக்கை வாங்கியது இல்ல..

ஜாலியா ஜில்லிப்பு தட்டினது..நான் இருந்த ஏரியா

கலெக்டர் நகர் ( அண்ணா நகர் மேற்கு)..நான் படிச்சது தரமணி..

( அண்ணா யூனிவெர்சிட்டி அடுத்து )..என் காலேஜுக்கு 

போகணும்னா கிண்டி வழியா போனா தான் சீக்கிரமா போகலாம்..

ஒரு மணி நேரம் ஆகும்.. ஆனா அது 100 அடி ரோடா போனதால

  காலை நேர எரிச்சல்..ஒரு வருஷம் கொஞ்சம் காண்டா 

தான் இருந்தது...அதுக்கு அப்புறம் மாத்திட்டேன் என் ரூட்டை..

அது சொர்க்க பாதை.. நரகத்துக்கு போக..

( காலேஜுக்கு தான்...)

அது தான் கலெக்டர் நகர் டூ காலேஜ் ரோடு..

 காலேஜ் ரோடு டூ கருமாந்திரம் பிடிச்ச காலேஜ்.. 

காதல் தேசம் படத்தில் வர்ற மாதிரி ஹை டெக்கா எல்லாம்

இருக்காது ஒரிஜினல் காலேஜ் ரோடு.. 

ஆனா பிகர் விஷயத்தில அள்ளிக்கும்.. ஏன்னா..

 காலேஜ் ரோடு வழியா தான் கிறிஸ்டியன் காலேஜ் , 

எத்திராஜ் , காயிதே மில்லத் , ஸ்டெல்லா மேரிஸ் , S .I .E .T ,  

குயின் மேரிஸ் னு  சிட்டி யோட பாதி மகளிர் 

கல்லூரிகளுக்கு போயி ஆகணும்..

எங்க ஏரியா வில இருந்து நிறைய பொண்ணுங்க அப்படி

தான் போவாளுங்க..ஆனா என்ன இந்த வழியா என் காலேஜுக்கு

போனா கிட்டத்தட்ட 40 நிமிஷம் அதிகம் ஆகும்..

அதை பத்தி எவன் கவலை பட்டான்..எனக்கு தேவை

ஜாலிலோ ஜிம்கானா.. அதனால 9 .30 மணி காலேஜுக்கு 7 

மணிக்கே வீட்டில இருந்து கிளம்பிடுவேன்.. 

அந்த மாதிரி அவசர அவசரமா கிளம்பி வந்த காலத்தில்

தான் என் தெருவில இருந்த ஒரு முஸ்லிம் வீட்டு முயலுக்கு

ரூட் போட்டேன்..அது எல்லாம் தேவதை ஸ்திரிகள் 

பதிவுகளில் பார்த்துகோங்க..ஒரு நாள் கூட நான் முதல் பீரியடுக்கு சரியான நேரத்தில்

போனது இல்லைங்க..ஒண்ணு லேட்டா போவேன்..இல்லை

கட்டு தான்..  எப்படி சரியான நேரத்துக்கு போக முடியும்..

எங்க ஏரியா வில இருந்து போற அத்தனை பிகர்களையும் அவ

அவ காலேஜுக்கு போயி பத்திரமா இறக்கி விட்டுட்டு நான்

போறதுக்குள்ள லேட்டாயிடுத்து.. நான் தொடர்ந்து லேட்டா 

வர்றதை பார்த்துட்டு..எங்க பசங்களுக்கு சந்தேகம் வந்துடுச்சு..

ரொம்ப நாள் கேட்டானுங்க..அப்புறம் ஒரு வழியா போனா 

போகட்டும் அவனுங்களுக்கும் காரணத்தை சொல்ல 

உடனே அவனுங்களும் ரூட்டை மாத்திட்டானுங்க..

எல்லா உயிரும் இன்புற்றிருப்பதை அன்றி வேறொன்றும் 

அறியேன் பராபரமே..பொதுவா காலேஜ் படிக்கிற பசங்களுக்கு புட் போர்டு அடிச்சி

சீன் போட்டு  சிட்டுகளை கவர் பண்ண தான் தெரியும்..

ஆனா எனக்கு பிகர் மடிக்கிறதை விட ( அதாவது காதல் பண்றது )

ஜில்லிப்பு தட்ட தான் தோணுச்சு..அதாவது முதல் நாளே

அரிசியை ஊறவச்சி , அடுத்த நாள் ஆட்டி , தோசை சுட்டு

சாப்பிடாம..வேணும்போதெல்லாம் கடைக்கு போயி கமுக்கமா 

சுட சுட சாப்பிட தான் நான் விருப்ப பட்டேன்..

ஏதாவது வெளங்குதா.. இன்னும் எளிமையா சொன்னா.. 

காதலிக்கிறவனுக்கு ஒரு பிகர்..

பிக்காளிகளுக்கு பல பிகர்..அந்த ரூட்ல போகும்போது தான் எங்க தெரு 

பொண்ணுங்களுக்கு நான் எப்படி பட்டவன்னு தெரிஞ்சது..

தெருவுக்குள்ள போயிட்டா நான் ரொம்ப அமைதியாடுவேன்..

குனிஞ்ச தலை நிமிராம எந்த பொண்ணையும் பார்க்காம 

அப்படியே ஆப் ஆயிடுவேன்.. பச்சையப்பாஸ் , லயோலா காலேஜ் 

பசங்க எல்லாம் கானா பாடுவானுங்க..ஆனா அவனுங்க பாடுறது 

எல்லாம் கொஞ்சம் ஆபாசமா தான் இருக்கும்.. அப்போப்போ

ஒருத்தனை ஒருத்தன் கலாய்ச்சி அடிச்சிப்பானுங்க..

இந்த மாதிரி நேரத்தில தான் என் வாய் தான் சும்மா இருக்காதே..

ஒரு நாள் கானா பாடுறவன் வராததால வெறுமனே தாளம் 

மட்டும் தட்டிகிட்டு இருந்தானுங்க..எங்க தெருவில விஜி னு 

ஒரு அண்ணன்  இருந்தாரு..பச்சையப்பாஸ்.. நான் சுமாரா 

பாடுவேன்னு அவருக்கு தெரியும்..டே..கணேஷ்..ஏதாவது சினிமா

பாட்டு பாடுடானு அவர் சொல்ல.. அண்ணா..நானும் உங்க பசங்க 

மாதிரி கானா பாடவானு கேட்க..டே..நீயெல்லாம் என்னாடா 

கானா பாடுவனு அவர் செட்டு பசங்க என்னை கலாய்க்க...

நான் ஒண்ணும் அசிங்கமா பாடி அடி வாங்க மாட்டேன்னு 

சொன்னதும் காண்டு ஆயிட்டானுக..மவனே இப்ப நீ பாடி

தான் ஆகணும்..மொக்கை பண்ண மண்டை மேலயே 

கொட்டு விழும்னு மிரட்ட..  சரின்னு அதுவரைக்கும் 

எழுதி வச்சி இருந்த இந்த கானா பாட்டை எடுத்து விட்டேன்...

இந்த பாட்டில ஒரு 20 பொண்ணுங்க பேரை வச்சி நாலு 

வரியில வெண்பா போல பாட...( சரி..சரி..கண்டு ஆவாதீங்க...)

பொண்ணுங்களை பத்தி பாடினதில பசங்களுக்கு ஏக சந்தோசம்..

அவன் அவன் ஆளு பேரு வந்து இருக்கும் போல.. 

அப்புறம் அப்படியே பசங்களுக்கு அட்வைஸ் பண்ற மாதிரி 

போயி முடியும்..இதனால லவ் பெய்லியர் ஆனவங்களுக்கும்

சந்தோசம்.. பாராட்டி எடுத்துட்டானுங்க.. 

யாரையும் காயப்படுத்தாம பாடியதால என்கிட்டே சில

பெண்களும் வந்து பேசினாங்க.. அதுல ஒருத்தி தான்

அனிதா.. அவளை பத்தி தான் அடுத்த தேவதை ஸ்திரிகள்

பதிவு...படிச்சி தெரிஞ்சிகோங்க..பசங்க பொதுவா படிக்கட்டுல நின்னு பயணம்

பண்ணும்போது நான் மட்டும் உள்ளே ஏறிடுவேன்.. 

உள்ளே போயி மேல ஏறத்தான்..( இப்பவும் புரியுதா...?)

நான் எப்பவுமே நடுவுல போயி நிக்க மாட்டேன்.. சிட்டி 

பஸ் ல பார்த்தீங்கன்னா டிரைவரோட இடது பக்கத்தில முன் 

படிக்கட்டில் இருந்து பின்படிக்கட்டு வரை மட்டும் தான் 

பெண்கள் சீட்..  அந்த கடைசி ல இருக்கும் ஏழு பேரு 

சீட்டையும் சேர்த்து.. நான் போயி அந்த பின்னாடி படிக்கட்டு 

வழியா ஏறி சரியா அந்த கடைசி சீட்டுக்கு முன்னால இருக்குற 

ஆண்கள் சீட் கிட்ட படிக்கட்டை பார்த்த மாதிரி நிப்பேன்..

பின் படிக்கட்டு வழியா ஏறும் பொண்ணுங்க எல்லாம் உடனே

வலது பக்கம் திரும்பி அந்த கடைசி சீட்டுக்கு தான் 

வருவாளுங்க..எனக்கு ரொம்ப வசதியா இருக்கும்..ஏன்டா நீ படிக்கட்டுல தொங்கறது இல்லைன்னு என்னை

கேட்ட பசங்க எல்லாம் நான் உள்ள நிக்கிற பொசிஷனை

பார்த்துட்டு அவனுங்களும் உள்ளே ஏற ஆரம்பிச்சிட்டானுங்க..

அந்த அனுபவத்தை வார்த்தையில் விவரிக்க முடியாது..ஹ்ம்ம்...பஸ் ஏறும் முன்னாடி என் சட்டையை பார்த்தீங்கன்னா அங்க

அங்க சுருக்கமா இருக்கும்.. பஸ்சை விட்டு இறங்கும்போது

பார்த்தீங்கன்னா...நீட்டா அயர்ன் பண்ண மாதிரி இருக்கும்.. 

(புரியலையா...?)  எல்லாம் பொண்ணுங்க மேல உரசி தான்.. 

தப்பா நினைக்காதீங்க.. அப்ப பண்ணும் போது அது தப்பா 

தோணலை.. ஆனா ஒரு முறை பர்ஸ்ட் இயர் படிக்கிற ஒரு

பொண்ணை அப்படி தான் நான் உரசி கிட்டே போக.. 

அவ எவ்வளவோ ஒதுங்கி போனா.. நான் தேடி தேடி போயி 

அவளை உரச..அந்த பொண்ணு என்னை எதுவும் பண்ண முடியாம

என் காலேஜுக்கு முன்னாடியே அதாவது வள்ளுவர் கோட்டத்தில்

இருந்து T .நகர் போற வழியிலேயே அழுதுகிட்டே இறங்கிட்டா.. 

எனக்கு ஒரு மாதிரி ஆகிபோச்சு.. நானும் இறங்கிட்டேன்.. 
இறங்குனவ ஒரு ஓரமா போயி உட்காந்துட்டு அழுதுகிட்டே

இருந்தா..அந்த ஏரியா வில நல்ல நேரத்திலேயே ஆள்

நடமாட்டம் இருக்காது.. அது வேற காலையில 10 மணி.. 


நான் தயங்கி தயங்கி அவ கிட்ட போயி என்ன மன்னிச்சுடு..

நான் பண்ணது ரொம்ப கேவலமான விஷயம் தான்.. 

வேணும்னா என்னை ரெண்டு அடி கூட அடிச்சுக்கோ..

வா காலேஜுக்கு போகலாம் னு கூப்பிட்டதும்..அவ என்னை ஒரு 

பார்வை பார்த்தா பாருங்க.. எனக்கு அப்படியே போயி 

நெருப்புல விழலாம்னு தோணுச்சு..அவ கண்ணுல கோபம்

இல்லை..இயலாமை தான் தெரிஞ்சது.. நான் வீட்டில இருந்து விலகி இருக்க வேண்டிய நாட்கள் இது..

இருந்தாலும் அந்த கஷ்டத்தை பார்க்காம காலேஜுக்கு வர்றேன்.. 

ஆனா இப்படி ஏன் எங்களை ஒவ்வொரு நிமிஷமும் கொல்றீங்கன்னு

அவ மறுபடியும் அழ.. அந்த பக்கம் போன ஒரு 

போலிஸ் எங்களை பார்த்துட்டு கிட்ட வந்தான்.என்னடா..ஏன்டா அந்த பொண்ணு அழுவுது...யார்டா நீ னு கேட்க..

நான் இவ பிரெண்டு..இவ பஸ் காலேஜ் னு உளற.. 

அவ எழுந்திரிக்க முடியாம எழுந்திரிச்சி இல்ல சார்..

இவன் என் பிரெண்டு தான் சார்.. பஸ் ல வரும்போது வயித்து

வலி தாங்கலை சார்..அதான் இறங்கிட்டேன்..னு சொல்ல.. 

சரி சரி பார்த்து போம்மானுட்டு போயிட்டான்.. நான் அவளை 

பார்க்க தைரியம் இல்லாம நின்னேன்..அவ உடனே எனக்கு

பாத்ரூம் போகணும்.. கொஞ்சம் கூட்டிகிட்டு போறியான்னு 

கேட்டா.. நான் உடனே ஓடிபோயி அங்க இருந்த ஒரு 

வீட்ல " என் கூட வந்த பொண்ணுக்கு திடீருன்னு வயித்து வலி

வந்துடுச்சு..கொஞ்சம் துணி மாத்திக்கணும்..ஹெல்ப் பண்ணுங்கனு"

சொன்னதும் அவங்களுக்கு புரிஞ்சி போச்சு..

கூட்டிகிட்டு வாப்பா னு சொல்ல.. நான் அவளை கூட்டிகிட்டு 

போயி விட்டேன்.. 

கொஞ்ச நேரம் கழிச்சி வந்தவளுக்கு வெந்தய கஷாயம்னு

நினைக்கிறேன்..அதை கொடுத்தாங்க அந்த அம்மா.. 

ஒரு 10 நிமிஷம் படிப்பை பத்தி விசாரிச்சிட்டு அவளுக்கு 

அட்வைஸ் பண்ணி அனுப்பி வச்சாங்க.. என் கஷ்ட காலம் 

அவளை ஆட்டோ வில கூட கூட்டிகிட்டு முடியலை. 

பீர் அடிக்க மட்டும் காசு எங்க இருந்து தான் வருமோ தெரியலை.. 

அவளை கூட்டிகிட்டு அதுக்கு அப்புறம் பஸ் ல தான் போனேன்.. 

ரொம்ப நன்றி னு சொன்னா.. ஆனா அவ முகத்தை பார்க்குற சக்தி

எனக்கு இல்லை.. 

அவளை பத்தியும் தேவதை ஸ்திரிகளில் சொல்றேன்..

அன்னைக்கு விட்டவன்தாங்க பொண்ணுங்களை உரசுவதை.. 

அதுக்கு அப்புறம் பஸ் ல எவனாவது உரசுற மாதிரி தெரிஞ்சா

போதும்..அந்த பொண்ணுக்கும் அவனுக்கும் இடையில

போயி நின்னுகிட்டு அவன் உரசாதபடி நிப்பேன்.. 

பண்ணிய பாவத்திற்கு பிராயச்சித்தம்..

2 comments:

கார்த்திக் கவி said...

நீ கொஞ்சம் நல்ல பையன் தானா

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

தெரியலையே மச்சி..ஒரு குவார்ட்டர் சொல்லேன்..