Thursday, March 31, 2011

இது கவிதையா..?

நீ சாலையில் வீசி சென்ற பயணச்சீட்டும் 

வருத்தப்பட்டதடி… 

உன்னுடன் பயணம் செய்யும்

நேரம் முடிந்தது என்று…






சாப்பிடும் போது புரை ஏறினால் இதயத்தை

தட்டுகிறேன்… நிச்சயம் நினைத்தது நீ யாகத்தான்

இருப்பாய் என்று…





என் இதயம் இரும்பானாலும் 

உன் கண்கள் காந்தமாகிறதே…
 
நீ விழிகளால் பேசி என் மொழியை

மவுனமாக்குகிறாயே…








உன்னை மறக்க வேண்டுமென துடிக்கிறேன்…

என்று எனக்கு நானே நடிக்கிறேன்… 







உன் பார்வை பட்டதாலோ என்னவோ
 
இன்னும் மயக்கத்தில் இருந்து விடுபடவில்லை..

அது கண்களா இல்லை க்ளோரோ பார்மா..


Wednesday, March 30, 2011

மாத்தி யோசி..Part 23



மத்தவங்க என்னை தப்பா நினைக்கிறதை பத்தி நான் 

என்னைக்குமே கவலை படமாட்டேன்..

ஏன்னா நான் இந்த பூமியில பிறந்தது எல்லாரையும்

impress பண்ண இல்லை.#தெனாவட்டு 

 
கண்ணீர் வரும்போது இதயம் வலித்தால் அது கவலை.

இதயம் வலிக்கும்போது கண்ணீர் வந்தால் அது காதல் 

இல்லை.நெஞ்சு வலி.

உடனே ஆஸ்பத்திரிக்கு ஓடு.









உன்னை குறை கூறும் பலருக்கு நீ நல்லவன்

என்று நிரூபிப்பதை விட..

உன்னை நம்பும் சிலருக்கு நல்லவனாக

இரு..போதும்# நான் இப்படிதான்.









கண்களை உறுத்தும் 3 முக்கிய தொல்லைகள்..
 
1.       அலுவகத்திற்கு வரும் வழியில் காற்றில்

கலந்து வரும் தூசி..
 
2.       ஆடிட்டிங் வர்றவன் கொண்டு வரும் செக் சீட்..
 
3.       என் கம்பெனி யில வேலை செய்யுற லேடீஸ்.. 

 
தாங்க முடியலைடா சாமி..



நான் ரொம்ப நல்லவன் இல்லைன்னு என்னை 

முழுசா புரிஞ்சிகிட்ட ஒரு பொண்ணு தான் என் 

வாழ்க்கை முழுக்க என் கூட வரணும்னு நினைக்கிறேன்..

யாராவது இருக்கீங்களா பொண்ணுங்களா..?





சந்தோஷத்தில பசங்களோட சரக்கும் கூட 

இருக்கணும்..இல்லைனா அது ப்ளூ பிலிமை 

ரேடியோ வில கேட்குற மாதிரி தான் இருக்கும்..


ஜோக்கூ..Part 29

நதியிடம் இருந்து நீரை பெறுகிறோம்…

அதை பற்றி நதி என்றும் கவலைப்படாது.. 

என்னிடமும் ஏராளமான காதல் நிரம்பி வழிகிறது… 

யார் வேண்டுமானாலும் வந்து எடுத்துக்குங்கடி…

ஐயோ எவளாவது வாங்கடி…






கொதிக்கும் மணலில் நிழலை தேடுவதுபோல.

கூட்டத்தில் இருந்தாலும் உன்னை மட்டுமே தேடுகிறேன்.

நீ முழிக்கும் போதே நினச்சேன்.என் பர்சை காணோம்..









காதலிக்கும் போது என்னை மாமா என்று 

அன்போடு அழைத்தவள்..

இன்று அவள் குழந்தைக்கு சோறு ஊட்டுகிறாள்..

என்னை காட்டி..மாமா பாரு மாமா பாரு என்று..

அப்போ நான் என்ன சும்மாவா…







பீட்டர் இங்கிலீஷ் பேசுற பொண்ணை நம்பாதே.. 

பிகரை பிலிமுக்கு கூட்டி போயும் , பன்னாடைக்கு 

போன் பில் கட்டியும் போண்டியாகிடுவ..









என்னை நீ உண்மையாக வெறுத்தாலும் பரவா இல்லை..

ஆனால் பொய்யாக நேசிக்காதே..

நான் வேற பிகரை தேடிக்கிறேன்..

அமுதா இல்லைனா அனிதா..







காதலிக்கும் வரை மட்டுமே உன்னை 

தேவதை என்பேன்..

கல்யாணம் ஆகிவிட்டால் வேறு வழி காலில்

விழுவேன்,கதறி அழுவேன்,காளி என்பேன்..




Monday, March 28, 2011

ஏன் இப்படி ... Part 12

பெண்களே…

நாங்க தப்பு செஞ்சா நீங்க திட்றீங்க…

நாங்க உங்க கிட்ட மன்னிப்பு கேட்குறோம்…

நீங்க தப்பு செஞ்சா நாங்க திட்றோம்…உடனே நீங்க அழுவுறீங்க…

அப்பவும் நாங்க தான் மன்னிப்பு கேட்குறோம்… 

என்ன எழவு இது…

உங்க போதைக்கு நாங்க தான் ஊறுகாயா…?





அம்மா : ஹிட்லர் யாரு…?

பையன் : தெரியாது…
அம்மா : படிப்புல கொஞ்சமாவது கவனமா இருக்கணும்…

பையன் : ப்ரியா ஆன்டி யாரு…?

அம்மா : தெரியலையே டா…

பையன் : இதுக்கு தான் அப்பா மேல கொஞ்சம் கவனமா இருக்கணும்…








ஒரு பொண்ணு தன முகத்தை துப்பட்டாவால மூடிகிட்டு

பஸ் ஸ்டாப்பில் நிற்கிறா..

45 + பெருசு – ஹலோ..பியூட்டி..

நான் வேணும்னா lift கொடுக்கவா..

பொண்ணு – இது என்ன கொடுமை..அப்பா..

நான் உன் பொண்ணு பா..







நேத்து ஒரு பொண்ணுக்கு கொஞ்சம் சுத்தி வளச்சி

" நான் உன்னை காதலிக்கிறேன்" னு messege அனுப்பினேன்.. 

அந்த அரை லூசு அதை forward message னு நெனச்சி 

எல்லாருக்கும் அனுப்பிட்டா.. 

எதையுமே முழுசா படிக்காம இப்படி எழவு கொட்டும்

இவளுங்களை என்ன பண்றதுனே தெரியலையே ஈஸ்வரா..









வாத்தி : நீ படிச்சி முடிச்சதும் என்னாவா ஆகப்போற..?

நானு : நான் M.B.B.S முடிச்சி S.I ஆகி நல்ல MNC சாப்ட்வேர்

கம்பனி யில வக்கீலா வேலை பார்க்க போறேன்.. 

எத்தனை நாள் எங்களுக்கு புரியாம பாடம் நடத்தினீங்க… 

இப்ப சாவுங்க..





நம்ம ஊரு அரசியல்வாதிகள் எல்லாம் கோடிகளை 

முதலிலேயே கொள்ளை அடிச்சிட்டு அப்புறமா CBI 

கேட்குற கேள்விகளுக்கெல்லாம்  பதில் சொல்றாங்களே..

ஒரு வேளை KBC யை REVERSE ல விளையாடுறாங்களோ..?# டவுட்டு









உன் கண்களை மூடிக்கொண்டு பிரிந்து போன உன்னுடைய 

காதலியை பற்றி நினைத்து பார். 

உன் உதடுகளில் ஒரு புன்னகை வந்து தானாக 

ஒட்டி கொண்டு முணுமுணுக்கும்.

நல்லவேளை தப்பிச்சிட்டேன்டா சாமி.








நம்ம தேசத்தை நாசமாக்குன ஒரு வார்த்தை - ஊழல்.. 

மக்களை சோம்பேறிகளாகவும் சொரணை 

இல்லாதவர்களாகவும் ஆக்கிய ஒரு வார்த்தை - இலவசம்.




சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 13

போதை தராத சரக்கு எல்லாம் கெட்ட சரக்கும் அல்ல… 

போதை தருபவை எல்லாம் நல்ல சரக்கும் அல்ல… 

போதை சரக்கடிப்பவர்களை பொறுத்தே இருக்கும்… 

சரக்கை பொறுத்து அல்ல…



கூட்டமாய் இருந்து சரக்கடிக்கும் போது ஒரு கேஸ் 

புல் லும் கொஞ்சமாகத்தான் தோன்றும்… 

தனியாய் இருந்தால் ஹாப் பே அதிகமாகத்தான் தோன்றும்…

மனதை பொறுத்து தான் அளவும்…





அதிகமாய் குடித்திருப்பவனும் , அந்த கூட்டத்தில் 

குடிக்காமல் இருப்பவனும் பர்சுக்குள் பணத்தை 

பதுக்கி வைத்திருப்பான்…





குடிகாரர்களின் மனசு ஒரு தினுசு..

குடிக்கும் முன்பு தான் மட்டும் குடிச்சா போதும்னு 

நினைப்பான்..குடிச்ச பிறகு எல்லாருக்கும் ஊத்து னு

குடைச்சல் கொடுப்பான்..





பஞ்ச பூதங்கள் போல சரக்கடிப்பது என்பது

சந்தோசம் , துக்கம் , கோபம் , எரிச்சல் , அன்பு 

என 5 நிலைகளில் அரங்கேறும்…


உன்னை மட்டை ஆக்க எந்த சரக்கும் இல்லை

என்று எண்ணாதே… எந்த சரக்காலும் என்னை மட்டை

ஆக்க முடியாது என்று கர்வம் கொள்… 

குடிகாரனுக்குனு ஒரு கொழுப்பு இருக்கணும்…





எப்படி குடிப்பது என்று யோசித்து மலைக்காதே…

எப்படி எல்லாம் குடிக்கலாம் என்று யோசி… 

வித விதமா ரக ரகமா…





பிராந்தி குடித்தே போதை ஏறவில்லை 

என்றால் நீங்கள் எல்லாம் பீர் குடித்து என்ன பயன்…?



சரக்கடிப்பது என்பது மூன்று விஷயங்களை 
 
உள்ளடக்கியது… 1.வெற்றி 2. தோல்வி 3. பகிர்தல்…
 
. கவலையை வெற்றி கொள்வது…
 
. போதையிடம் தோற்று போவது…
 
.சங்கடங்களையும் , சைடு டிஷ்களையும் 
 
பகிர்ந்து கொள்வது…





வாந்தி எடுத்தவன் காரணம் சொல்லாமல்

இருப்பதில்லை…வாந்தி எடுக்காதவன் 

சலம்பாமல் இருந்ததில்லை…

Saturday, March 26, 2011

அர்த்தம் தெரியுமா...part 5

கல்யாணம் - என்றோ ஒரு நாள் கிடைக்கும் 

பாயசத்துக்கு ஆசைப்பட்டு எப்போதும் 

பாய்சனோடு வாழ்வது..







காதல்  - காயின் பூத்தை போல..

யாராவது போடுவாங்க..

நாம சும்மா பேசிகிட்டு இருப்போம்..

( இதுல எந்த டபுள் மீனிங்கும் இல்ல..)










கவிதை – காதலித்து கொண்டு இருப்பவன் 

அந்த கழிசடையின் மேல் கனவுகள் கொண்டு

கப்பி தனமாக உளறுவது..







கருத்து – கல்யாணம் பண்ணி கொண்டவன் 

கட்டியவள் மேல் கண்ட மேனிக்கு கடுப்பாகி

காண்டில் கூறுவது..






ஆன்டிகளை  உஷார் பண்ணுவது - எப்பவோ வர 

ஆடிட்டிங் காக தினம் தினம் வேலை செய்யுறது..

இந்திய புலிகள் வேட்டை ஆடிய ஆஸ்திரேலிய கங்காருகளின் கதறல்கள்..