Tuesday, November 8, 2011

மாத்தி யோசி ..48

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க





நேத்து நைட்டுல இருந்து அவ பேசவே இல்ல..

காலையில பூரா எனக்கு வேலையே ஓடலை..

இப்போ பேசிட்டா..இனிமே வேலையே ஓடாது..






ஐயா கொடுத்த இலவச டிவில அம்மா கொடுக்கிற 

கேபிள் கனெக்ஷன்..# குட் காம்பினேஷன்..





இந்தியாவோட CAPITAL லை இனி SWISS BANKS னு 

மாத்த சொல்லணும்..மொத்தமும் அங்கே தானே இருக்கு



உண்மையான பெண்கள் சம உரிமை என்பது அவர்கள் 

பெண்கள் என்று ஆண்களுக்கு தோணாமல் இருக்கும் தருணமே.



அடுத்தவங்க வாழ்க்கையில இருந்து நான் கத்துக்கிட்டேன் னு 

சொல்ற யாரும் அவங்க அவங்க வாழ்க்கையை 

ஒழுங்கா கவனிக்கலைன்னு அர்த்தம்.

நமக்குள்ளயே ஏகப்பட்ட நல்லது,கெட்டது இருக்கு சார்.




வெறும் வார்த்தைகளில் விவரிப்பதை விட வாழ்ந்து 

காட்டுவதே அன்பை வெளிப்படுத்தும் சிறந்த வழி..




பெண்களின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளிக்கணும்னு 

அவசியம் இல்ல..கேள்விகளை புரிஞ்சுக்கிட்டாலே போதும்..

# இல்லைனா மாட்டிக்கணும்,



காதல் தோல்வி என்பது ஒரு அனுபவம்..வாழ்க்கை என்பதே 

அனுபவம் தானே..அலட்டிக்காம ஆனந்தமா அலைவோம்.

அனுபவம் பெறுவோம்.




பெண்களிடம் நாம் பேசும் வார்த்தைகளே உறவுக்கான முதலீடு..


மங்காத்தா படத்தில எல்லாரும் கெட்டவங்க..

விஜய் படத்தில துக்கு  அவன் மட்டும் தான் வில்லன்..

No comments: