Tuesday, September 13, 2011

மாத்தி யோசி ..Part 40

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




பெண்களை சார்ந்து இருக்கும் ஆண்களின் வாழ்க்கையே 

முழுமை அடைகிறது..




சங்கடங்களை சரக்கடித்து மறப்பது ஒருவகை எனில்,

சாந்தமாக இருப்பது இன்னொரு வகை.

சலம்புறதும்,சைலன்ட்டா இருக்குறதும் உங்க இஷ்டம்.




ம்மால முடியாதுன்னு நெனச்ச எவனும் இதுவரை 

குறிக்கோளை அடைஞ்சதா சரித்திரமே இல்ல..

அதனால கண்ணாடியை பார்க்காம காதலிங்க..

# keep trying ,,keep on trying ..



மகிழ்ச்சியோ,வருத்தமோ யாருக்கு கொடுத்தாலும் உங்ககிட்ட

அது இருக்கணும்..சந்தன வாசமா இல்லை சாக்கடை

நாத்தமா னு நீங்க தான் முடிவு பண்ணனும்..




ஈகோ வால் இழப்பதை விட..கேட்டுப்பெறுவதில் எந்த 

கேவலமும் இல்லைன்னு நினைக்கிறேன்..




எது இல்லைனா வாழ்க்கையே இல்லைன்னு நினைத்தேனோ,

அது இல்லாமலும் வாழ முடியும்போது உண்மையில காயங்களை 

காலம் ஆற்றும்னு புரியுது..


னக்கான தேவதை தானாக வருவாள் என்று 

காத்திருப்பதை விட..நானாக தேடி 

அலைந்தால் பூசுனதோ,பூசாததோ,ஈயமோ.பித்தாளையோ 

ஏதாவது கிடைக்கும்ல




இனிக்க,இனிக்க பேசுவது மட்டும் காதல் அல்ல..

எங்கடா போயி தொலஞ்சனு நீ திட்டுவதும் காதல் தான்..

# LOVE YOU HONEY



உருகி உருகி காதலித்தாலும் கண்டுக்காத பெண்கள்,

உரக்க பேசி காண்டானா உடனே வழிக்கு வந்து விடுகிறார்கள்...




வாழ்க்கையில குறிக்கோள் வச்சிக்காம இருப்பதில் 

ஒரு பயன்...போதும்னு எங்கியுமே 

தேங்கிப்போயிட மாட்டோம்..

2 comments:

"ராஜா" said...

//எனக்கான தேவதை தானாக வருவாள் என்று

காத்திருப்பதை விட..நானாக தேடி

அலைந்தால் பூசுனதோ,பூசாததோ,ஈயமோ.பித்தாளையோ

ஏதாவது கிடைக்கும்ல



இட்டு போன தகர டப்பாக்களுக்குதான் தங்க சிலை கிடைக்குது பாஸ் ...

தங்கமான பசங்களுக்கு தகர டப்பாகூட கிடைக்கமாட்டேங்கிது...

என்ன வாழ்க்கைடா இது?

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

ஹ்ம்ம்..விதி வலியது பாஸ்..