Tuesday, September 6, 2011

மாத்தி யோசி ..Part 37

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



இன்னைக்கு சந்தோஷமா இருக்கணும்னு நாங்க நாலஞ்சு 

பெண்களுக்கு நூல் விடுவதில்லை..எதிர்காலத்தில் 

ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதை ஈடுகட்டவே..



நேசிக்க வைத்த பெண்ணிற்காக சில நூறு கவிதைகள் 

எழுதும் அன்பர்களே..சுவாசிக்க காற்று வேண்டும்..

ஒன்றிரண்டு மரங்களையாவது வளருங்கள்..




தற்காலிக காதல் தோல்வியால் மரணமெனும் நிரந்தர 

முடிவை எடுக்காதீர்கள்..ஆன்ட்டிகள் எனும் அவசரகால 

அற்புதங்கள் இருக்கும்வரை..




தப்பு செய்யுறதுன்னு முடிவெடுத்த பிறகு அதை 

முழுசா செய்ங்க..அரைகுறையா செய்து ஆபத்தில மாட்டிக்காதீங்க..

என்ன மாமா..சரிதானே..




அழகா இருக்குற பொண்ணுங்க ரோஜாப்பூ போல..

ஆன்ட்டிகள் அவைகளுக்கு அழகு தரும் இலைகள் போல..

அழகா இருக்குறவங்க கிடைக்கலைனா அழகை 

கொடுக்குறவங்களை ஏத்துக்குங்க.


கல்யாணமாகி பூரிக்கட்டைல அடி வாங்குறதை விட,

காதலிச்சு கழட்டி விடும்போது கெட்ட வார்த்தையால திட்டு 

வாங்குறது எவ்வளவோ பரவாயில்லை.


பாரும் வாஷிங் மெஷின் போல தான்..உருண்டு,புரண்டு,

ஆடினாலும் அடுத்த நாள் காலையில பளிச்சுன்னு 

பிரகாசம் ஆயிடுறோம்.


ஒரு லுக்கு ஒரு சிரிப்பை தரலாம்.ஒரு சிரிப்பு சில 

வார்த்தைகளை வரவழைக்கலாம்.சிலவார்த்தைகள் 

மொத்த சோலியையும் முடித்துவிடலாம்.EG - I LOVE YOU


கோச்சுக்கிட்டு போனவளை தூக்கி குப்பையில போடு..

ஓட்டிக்கிட்டு இருக்குறவளை வொர்கிங் டேபிள்ல வை..

கட்டம் கட்டியவளை கண்ணுக்கெதிரா ஒட்டி வை.


வெற்றி பெற்ற காதலை விட,தோல்வி அடையும் காதலுக்கே 

மதிப்பு அதிகம்# அவளையே கல்யாணம் பண்ணிக்கிட்டு 

எவன் அடி வாங்குறது..

1 comment:

வெளங்காதவன்™ said...

அருமை நண்பா!

பாலோவர் விட்ஜ் எனக்குத் தெரியவில்லை....

அதனால் பாலோ பண்ணவில்லை...

மன்னிக்கவும்...