Friday, September 2, 2011

மாத்தி யோசி ..Part 35

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



எதுவுமே நம்மிடம் நிரந்தரமாக இருக்கப்போவதில்லைன்னு

புரிஞ்சிக்கிட்டாலே ஏமாற்றங்களில் இருந்து எளிதில் 

எஸ்கேப் ஆயிடலாம்..

#போதையில கீதை படிச்சா இப்படித்தான்..




பெண்களிடம் அடி வாங்குவதற்கும்,அரவணைப்பு பெறவும் 

ஆண்களின் பேச்சே காரணம்..என்ன சொல்றோம்னு 

முக்கியம் இல்ல..அதை எப்படி சொல்றோம்னு தான் முக்கியம்..




பெண்களின் கொலுசொலி ஜல் ஜல்னு கேட்டா நீ நார்மல்..

ஜொள் ஜொள்னு கேட்டா நீ புல் பார்மில்..

செல் செல்னு கேட்டா அவ அண்ணன்,அப்பாவால நிலைமை

அப்நார்மல்...# கோபாலா..பிச்சிக்கோ..




எல்லா பிகரும் பிகரல்ல ஆண்களுக்கு 

அரவணைக்கும் ஆன்ட்டியே சிறப்பு.





விதண்டாவாதம் செய்து ஜெயிப்பதைக்காட்டிலும் வாதம் 

செய்து தோற்றுப்போவது சிறந்தது..உள்குத்து இல்லைங்க..

உளமார உணர்ந்து சொல்றேன்..


ஒரு தடவை ட்ரை பண்ணி பார்க்கலாம்னு ஆரம்பிச்சு,

இப்போ எவ்வளவு ட்ரை பண்ணலும் விட

முடியலை..சிகரெட்டும்,பெண்களும் ஒண்ணா..?


காதலிச்ச பொண்ணுங்க எங்களை கழட்டி விட்ட உடனே நாங்க 

" சோகத்தில மட்டும் " குடிக்கிறது  இல்ல..சில நேரங்களில் 

தப்பிச்ச சந்தோஷத்தையும் நாங்க சரக்கடிச்சி 

தான் கொண்டாடுவோம்..சியர்ஸ்..


கொண்டாட யாரும் இல்லாத போது வெற்றி 

பெற்றுவதை விட..தோற்றுப்போனாலும் ஓட்டி எடுக்கும்

நண்பர்கள் இருப்பது நல்லது..


பிகர்களுக்கு ஓயாம லுக்கு விடுவது விதைகளை விதைப்பது 

போல தான்..பிகர் மடிஞ்சா மரம்..மாட்டலைனா 

அடுத்ததா வரும் பிகர்களுக்கு உரம்..


மனவருத்தங்களோட சில புத்திசாலித்தனமான 

முடிவுகள் எடுப்பதற்கு..திருப்தியளிக்கும் சில முட்டாள் 

தனமான முடிவுகள் தவறில்லையே..

No comments: