Friday, September 30, 2011

மாத்தி யோசி...Part 42



பழைய நண்பர்களிடம் பேசும்போது தான் நான் எவ்வளவு 

மாறி இருக்கேன்னு தெரியுது..

#ஒவ்வொரு ப்ரெண்டும் தேவை மச்சான்..



பெண்கள் பொதுவாகவே அழகு தான்..

என்ன நமக்கு பிடிச்ச பெண்கள் மட்டும் எக்ஸ்ட்ரா 

அழகா தெரியுறாங்க..#தேவதை ஸ்திரீகள்..ஹ்ம்ம்..




ஐஸ்கிரீம் போல அழகா இருக்கும் பெண்கள் , 

வெட்கப்படும்போது செர்ரியோ,இல்ல ஸ்ட்ராபெர்ரியோ வச்ச 

ஐஸ்கிரீம் போல இன்னும் அழகா ஆயிடுறாங்க..




ஆண்கள் வாய்களில் செய்யும் அனைத்தையும் பெண்கள் 

தங்கள் கண்களிலேயே செய்து விடுகிறார்கள்..

பேச,சிரிக்க,கோபப்பட..முத்தமும்,உணவும் மட்டுமே 

பொதுவானது போல.. 


காதலி கிடைக்காத எனக்கு மட்டும் இல்ல,புதுசா கல்யாணம் 

ஆன அத்தனை ஆண்களுக்கும் ஆடி மாத 

சனிக்கிழமைகள் தனிக்கிழமைகள் தான்..


அடுத்தவங்க நமக்கு கொடுக்கும் அன்பை விட அதிகமா 

எதிர்பார்த்தா நம்மை வெறுக்க அதுவே காரணம் ஆயிடுது..

# ஓவர் ஆக்ட் பண்ணாதீங்க பசங்களா..




எல்லாப்பிரச்சினைக்கும் தீர்வு உண்டு..ஏன்னா 

பிரச்சினைகளை உருவாக்குறதே நாம தான..




என்னைப்பற்றி கவலைபடாதவங்களை எண்ணி நான் 

வருந்துவதே இல்லை.என் மதிப்பு தெரியாத அவர்களை 

எண்ணி என்ன பயன்..?




எப்படி பிகர் மடிக்கலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தா..

10 பைசாவுக்கு பிரயோஜனமில்லை..எப்படி எல்லாம் இருந்தா பிகர் 

மதிக்க மாட்டுதுனு கண்டுபிடிச்சா..அப்புறம் ஜல புல ஜக் தான்..




அட..அடுத்தவங்களை வெற்றிபெற வைக்கும்போது நாம 

தானா ஜெயிக்கிறோம்.பிகரை சைட் அடிச்சா அது நம்மை 

திரும்பி பார்க்கும்ல அது போல.

Thursday, September 29, 2011

ஏன் இப்படி ...Part 41





அதை செய்யமுடியலைன்னு காண்டுல இருக்கும்போது,

ஏன் மச்சி காண்டா இருந்தா அதை செய்ய வேண்டியது 

தானேனு வெறுப்பேத்துறுவனுங்களை என்ன செய்யலாம்.




உன்னை பிடிச்சிருக்கு சொல்றவங்களை எப்படி மறக்காம 

இருக்கமோ அதே போல உன்னை பிடிக்கலைன்னு 

சொன்னவங்களையும் மறக்க முடியல..




சின்ன வயசுல இருந்து பூஜைகளில் கேட்ட சம்ஸ்கிருத 

மந்திரங்கள் தெரிய மாட்டுது...

லேகா கொய்யா,உசுமலாரிசே எல்லாம் நல்லா மனப்பாடம் ஆகுது..




கழிவுகளையும்,காதலையும் அடக்கி வச்சி இருக்குறவங்க

பக்கத்தில் , நாம இருப்பது ரொம்ப டேஞ்சர்..

# முடியலைடா சாமி..




ஜலதோஷம் பிடிச்சி இருக்குறவன் பக்கத்தில வந்தா ஏன்டா 

இப்படி காணாததை கண்டது போல  பதறி ஓடுறீங்க..

உங்களுக்கும் ஒரு நாள் வரும்டா..




போதையில உளறுவதை கூட தாங்கிக்கலாம்..ஆனா மத்த 

நேரத்தில சொன்னா மொத்திடுவோம்னு , நல்லா தெரிஞ்ச 

மொக்கை விஷயங்களை சொல்வானுங்க பாருங்க..

அதான் அதிகம் வலிக்குது..




எல்லா நல்ல விஷயங்களிலும் எனக்கு ஒரு கெட்ட விஷயம் 

ஞாபகம் வந்து தொலைக்குது...ராம்லீலா - ராஸ லீலா..

# நான் திருந்த வாய்ப்பே இல்லையா..? 


பசங்க கொஞ்சுவதை விட..கெஞ்சுவது தான் 

பொண்ணுங்களுக்கு பிடிக்கும் போல..

#எப்பப்பாரு தொங்க விடுறாளுங்க..




அன்புக்கும்,அரவணைப்புக்கும்,ஆசைக்கும் 

அடிமையாவதை விட...ஆல்கஹாலுக்கே அடிமை ஆகலாம் போல..

என்ன வாழ்க்கை டா இது..




அழகான பிகர்களை மடக்க போயி நான் சொதப்பினதை விட,

கஷ்டப்பட்டு மடக்கின சுமார் மூஞ்சியை வேற 

எவனாவது கொத்திக்கிட்டு போகும்போது தான் 

அதிகம் வலிக்குது..

Wednesday, September 28, 2011

ஜோக்கூ... Part 51





விலகிப்போனால் விரும்பி வரும்னு சொன்னது பெண்கள் 

விஷயத்தில்  இல்லை.. கொஞ்சம் சீன போட்டா 

போடா ம!@#$ னு போன் கூட பண்ண மாட்ராளுங்க..






ஊரே என்னைத் துரத்தினாலும் ஒரு போதும் ஓட மாட்டேன்..

ஒரு வாரமா முட்டிவலி.


காதலித்தபோது நீ மவுனமாக இருந்தாய் வலித்தது..
 
கல்யாணமான பின்பு பேசிக்கொண்டே இருந்தாய்..

அதிகம் வலிக்குது..
 
பவள வாயா இல்லை பண்பலை வானொலியா.



மரங்களின் அனுமதி இன்றி அவற்றை கற்பழிக்கும் 

காற்றைப்போல என்னை அறியாமலேயே ஆன்ட்டிகள் 

என்னை அலைக்கழிக்கிறார்கள்..

பின் ஆட்கொள்ளுகிறார்கள்.




அழகான பெண்களை பார்த்ததும் என் உமிழ்நீருக்கும் உற்சாகம்..

உடனே வெளிவந்து விடுகிறது..வாய் வழியாக..

# ஜொள்ளு ன்னும் சொல்லலாம்..

Tuesday, September 27, 2011

ஏன் இப்படி ...Part 40




ஆன்ட்டி கையை புடிச்சி இழுத்து அடிபட்டு ஆஸ்பத்திரியில 

அட்மிட் ஆகி இருக்குறதை கூட ஆல்பமா அப்டேட் 

பண்ணுறவனுங்களை என்ன பண்ணலாம்..



பெண்களை பிக்கப் செய்வது எப்படி என்று எனக்கு ஓரளவு தெரியும்..

ஆனா அவளுங்க கூட எப்படி வாழுறதுன்னு தான் 

புரியவே மாட்டுது..

விதவிதமா கொல்றாளுங்க பாஸ்.



நாள் பூரா வேலை செய்யாம நாலரை மணிக்கு மேல வேலை 

செஞ்சிட்டு ஹார்டுவொர்க் பண்ணுறேன்னு அலப்பறை

கொடுக்குறவனுங்களை வெயில் நேரத்தில 

அண்ணாசாலையில அம்மணமா ஓடவிடணும்னு வெறி ஆகுது..  



கொடுக்குற கூலிக்கு வேலை செய்யுங்கடான்னா

கூட்டிக்கொடுக்கப்போகிற கூலிக்கு வேலை

செய்யுறானுங்க..

அப்ரெய்சலுக்காக ஆக்ட் பண்ணுறானுங்கன்னு சொல்ல வந்தேன்..



அதிகப்படியான அன்பும்,அரவணைப்பும் கூட 

தொல்லையாய் முடியும்..ஆனா பணமும்,புகழும் ஏற ஏற 

வேணும்னு தான் துடிக்குது..


MORE மென்த்தாலை பத்த வச்சி ஸ்டைலா நின்னுகிட்டு 

இருந்தா,அடப்பாவமே..பீடி பிடிக்கிற நிலைக்கு போயிட்டியேடானு 

கேட்குறானுங்க..#எந்த பீடி இவ்வளவு நீளமா இருக்கு..

கலரை மாத்துங்கடா டே..


சரக்கடிச்சுட்டு புலம்புறவனை கூட சகிச்சுக்கலாம் போல...

அட்வைஸ் பண்ணுறவனுங்க கொடுக்குற அலும்பு இருக்கே..

அப்படியே அவன் மூஞ்சி மேல ஆப்பாயில் போடலாம்னு தோணுது..


புத்தி சொல்ற நாயிங்க பிரச்சினை இருக்கும்போது

சொல்லுங்கடானா..எல்லாம் முடிஞ்ச அப்புறம் 

போதையிலேயே பிறாண்டுதுங்க..


ஒண்ணுமே இல்லாத பர்ஸை ஓயாம ஓபன் பண்ணி ஓவர் ஆக்ட் 

பண்ணும் நாய்களை ஒரு வாரத்துக்கு வெறுமனே ஒக்கார 

வச்சி வேடிக்கை பார்க்க சொல்லி வெறுப்பேத்தலாமா..?


பழி போடுறதுக்காவது எல்லா பொண்ணுங்களுக்கும் பாய் 

பிரெண்ட் தேவைப்படுது.வாழ்க்கையில ஏதாவது தப்பா 

நடக்கும்போது கடவுளையோ,கவர்ன்மென்ட்டையோ 

குறை கூற முடியாதுல்ல.

Saturday, September 24, 2011

3G யின் வாழ்க்கையில் இதுவரை வந்த தேவதை ஸ்திரீகள்…Part 8



சில மாதங்களாவே பதிவுகள் சரிவர எழுத முடியலை..

நேரமின்மையே காரணம்.. அதை சமாளிக்கும்விதமா தான் 

ட்விட்டர் ல போடுறதை தொகுத்து பதிவுகளா போட்டுக்கிட்டு இருக்கேன்..

சில நாட்களுக்கு முன் எங்கேயும் எப்போதும் படம் பார்த்தேன்..

அதுல இருந்து இந்த தேவதையைப் பத்தி சொல்லியே 

ஆகணும்னு தோணுச்சு..

அதனால தான் இப்போ இந்த பதிவு..



என்னைக் கவனிக்கவே நேரமில்லாமல்

இருந்த என்னை..

முற்றிலும் உன்னைப்பற்றி மட்டுமே


சிந்திக்க செய்தது காதல்…




நான் இந்த பதிவுல ஏற்கனவே சொன்ன அந்த பொண்ணு


செண்பகப்பிரியா.. எனக்கு மட்டும் ஷெபி.. அது ஏனோ 

பொதுவாகவே ப்ரியா னு பேரு வச்ச பொண்ணுங்க எல்லாம் 

ரொம்ப அழகாவே இருப்பாங்க.. 

அவ பேரழகி மட்டும் இல்லைங்க..பெயரழகியும் கூட..

(ஆஹா..ஆரம்பத்திலேயே வா..?)




அந்த பஸ் சம்பவம் நடந்து ஒரு வாரம் இருக்கும்.. 

( அது என்னனு தெரிஞ்சிக்க பஸ் சம்பவத்தைக் க்ளிக் பண்ணுங்க.. )
 
அவளை மறுபடியும் நான் காலேஜ் ல இருந்து வீட்டுக்கு 

போகும்போது பார்த்தேன்.. அவ கூட ரெண்டு பொண்ணுங்க.. 

அதுவரை எல்லாரையும் கலாய்ச்சி ஓட்டிகிட்டு வந்த நான் 

அவளை பார்த்ததும் அமைதி ஆயிட்டேன்.. 

அவளும் என்னை அடிக்கடி திரும்பி பார்த்தா..

அப்படியே என்னை முழுங்கிடுற மாதிரி.. 

உன் விழிகளால் தான் என்னை முழுதாய்

விழுங்கி தொலையேன்..உனக்குள் சென்று உயிரில் கலந்து 

விடுகிறேன் னு கத்தணும் போல இருந்துச்சு..


(ஏன் ராஜா நீ கத்த மாட்டே..ஏன் 

கத்த மாட்டே..?)




அவளுக்கு என் மேல கோபம் இருக்காதுன்னு நிச்சயமாய் தெரியும்..

ஆனா வருத்தம் இருக்குமோனு சந்தேகம்..(அட மவனே..அப்புறம்..)

அவ ஓரப்பார்வை பார்த்துகிட்டே சிரிச்சா பாருங்க.. அந்த நொடி, 


விஜய் படத்துக்கு போயிட்டு வெளிய வரும்போது ஒரு 

இனம்புரியாத துக்கமும்,ஆழ்ந்த நிம்மதியும் வரும் பாருங்க 

அது போல இருந்தது.. 
 
( இப்ப ஏண்டா அணிலை இழுக்குற..? ) நான் ஒரு மாதிரி 

சங்கடப்படுறதை புரிஞ்சுகிட்டு சைகைலையே எனக்கு உன்

மேல எந்த வருத்தமும் இல்ல னு சொன்னா..



அப்புறம் ரெண்டு பெரும் ஒரே பஸ் ல தான் வீட்டுக்கு போனோம்..

போகும் வழி எல்லாம் சிங்காரச்சென்னை போர்டு வச்சி 

இருந்தாங்க.. அவ சென்னைல இருக்குறது அரசாங்கத்துக்கு

தெரியாது போல.தெரிஞ்சிருந்தா சிங்காரி சென்னை னு 

மாத்தி இருப்பாங்க.. அழகுக்கு அளவுகோல் னா அது 

அவ தான்.. ( நாசமாப்போக..
 
உனக்கு எல்லாம் மனசாட்சியே கிடையாதா டா..? ) 


இப்படியே சில நாட்கள் போச்சு..நாங்க பேசிக்கவே இல்ல.. அது

ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட வெள்ளிக்கிழமை.. வழக்கம் போல நான்

ஒவ்வொரு லேடீஸ் காலேஜா போயி எல்லா பொண்ணுங்களையும்
 
அனுப்பிட்டு அவசர அவசரமா காலேஜுக்கு வந்துகிட்டு இருந்தேன்..

( கடமை தானே முக்கியம்..நீ செய் தம்பி.. ) 30 நிமிஷம் லேட்டா தான்..

மத்திய கைலாஷ் ஸ்டாப்ல இறங்கி கொஞ்ச தூரம் நடக்கணும்..

இவ பஸ் ஸ்டாப்ல தனியா நின்னுகிட்டு இருந்தா..இவ ஏன் இங்க

நிக்குறானு நினைச்சுகிட்டு நான் போயி என்ன ப்ரியா நீங்க இங்க


நிக்குறீங்க..கிளாஸுக்கு போகலையான்னு கேட்டேன்..

( நீ அப்படி தாண்டா ஆரம்பிப்ப..) கொஞ்சம் லேட் ஆயிடுச்சு..

அதான் அடுத்த பீரியட் போயிக்கலாம்னு நிக்கிறேன்..ஆமா

நீங்க எப்பவுமே இப்படி தான் லேட்டா வருவீங்களான்னு அவ

கேட்க..இல்லைங்க..எப்படியும் வாரத்தில் ஒரு ரெண்டு , மூணு நாள்

இப்படி ஆயிடும்னு சொன்னேன்.. ஆஹா..5 நாள் கிளாஸ் ல மூணு

நாள் லேட்டா வந்துட்டு இதுக்கு இப்படி ஒரு விளக்கமானு ஓட்ட

ஆரம்பிச்சுட்டா..( நீ உடனே மொக்கை படம் நடிச்சுட்டு வெக்கமே

இல்லாம பேட்டி கொடுக்குற விஜய் மாதிரி  சிரிச்சி
 
இருந்திரிப்பியே..அட..ச்ச..நானும் அணிலை 

இழுக்க ஆரம்பிச்சுட்டேன்..)
 
அப்படியே பேசிக்கிட்டே நடந்தோம்..





அப்போ தான் திடீருன்னு ஐயையோ..அடுத்த பீரியட் ப்ராக்டிகல்

இருக்கே..நான் அப்சர்வேஷன் முடிக்கவே இல்லையே..எப்படி

போகுறதுன்னு ஆரம்பிச்ச..அப்படினா கட் அடிச்சிட வேண்டியது 

தான்னு அவளே சொல்லிக்கிட்டா…

ஒரு அழகான பொண்ணை தனியே விட்டுட்டு 

போக நான் என்ன லூசா.. ( அதானே.. பிகரை தனியா விட்டுட்டு 

போக நீ என்ன பியூஸ் போன பல்பா..? ) நானும் பர்ஸ்ட் ஹாப் 

புல்லா கட் அடிச்சிட்டேன்.. நீங்க கிளாஸுக்கு போகலையான்னு 

அவ கேட்டதுக்கு.. ஏன் உங்களுக்கு மட்டும் ப்ராக்டிகல் இருக்குமா..

எனக்கு இருக்காதான்னு ஜொள்ளினேன்.. 

( அதென்னவோ உண்மை தானே நாயே..நீ என்னைக்கு

ஒழுங்கா அதை எல்லாம் எழுதி இருக்க.. ) அப்புறம் என்ன..

அத்தனை ஏக்கரில் எதுக்கு காலேஜ் கட்டி வச்சி இருக்கானுங்க..  

( ஆமாண்டா..நீங்க பயிர் பண்ணத்தான் அந்த புண்ணியவான் 

கட்டி விட்டு போயிருக்கான்..) 


ஒரு மணி நேரம் பேசிக்கிட்டு நடந்தோம்..அப்புறம் உட்காந்துகிட்டு

பேசினோம்.. காலையில 10 மணிக்கு ஆரம்பிச்சு மதியம் 2 மணி

வரைக்கும் அப்படியே 4 மணி நேரமும் ஜில்லிப்பு தட்டிக்கிட்டே

போயிடுச்சு.. இந்த நாலு மணி நேரத்தில்ல நீங்க போயி நீ

ஆயிருந்தது..ப்ரியா போயி ஷெபி ஆயிடுச்சு.. என்னைப்பத்தி
 
எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டா..ஆனா அவ ஏரியா வைத் தவிர 

என்னால ஒண்ணுமே தெரிஞ்சிக்க முடியல..  

( நீ வாயப்பொளந்துகிட்டு ஜொள்ளு
 
விட்டுட்டு இருந்திருப்பே..)





சரி.. பக்கத்து பக்கத்து ஏரியா தானே…பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்..

அவ டைமிங்ல நான் வருவேன்னு ஒரு வாரம் பார்த்திருக்கா போல..

நான் போகலை..அவ என் டைம் க்கு வர ஆரம்பிச்சுட்டா.. 

( நீ தெளிவாத்தாண்டா  ப்ளான் பண்ணி இருப்ப.. ) 

இதுல என்ன கொடுமைனா

அனிதா ஏரியா வுக்கு அடுத்த ஏரியா தான் இவ.. 

ரெண்டு பேரையும் ஓட்டணும்..சந்தேகம் வராம ஓட்டணும்.


(எல்லாருக்கும் என்ன கவலை..உனக்கு என்னடா கவலை..? 

நீ அசந்து இருக்க மாட்டியே..? )


சமாளிச்சுட்டேன்னு வைங்க.. ( நான் சொல்லல..) வழக்கம் போல

பஸ் ல என்னோட கானா,குறும்பு,சேட்டை,கோமாளித்தனம்

எல்லாத்தையும் அவளும் ரசிக்க ஆரம்பிச்சா.. 

அவ பார்க்காத போது இவளை,இவ 

பார்க்காத போது அவளைனு அப்படியே நூல் விட்டு போயிக்கிட்டு


இருந்தேன்.. பொதுவாகவே நான் பொண்ணுங்க கிட்ட அவ்வளவா 

பேச மாட்டேன்..அதுவும் போது இடங்களில்..இது 

அவளுங்க எல்லாருக்கும் தெரியும்.. ( டாய்..நீ எப்படி டைப்

டைப்பா முழியை மாத்துவேன்னு எனக்கு


தெரியும்..இதெல்லாம் நம்மகிட்ட வேணாம் மவனே.. )  

ஆனா தனிமையில் நிறைய பேசுவேன்..அது அவ அவளுக்கு 

மட்டும் தான் தெரியும்..  

( என்னடா..இந்த டர் வேலை இன்னும் 

காணோமேனு நெனச்சேன்..)




நாங்க பசங்க எப்பவும் கட் அடிச்சுட்டு மவுன்ட் ரோட்ல ஓரமா 

இருக்குற தேவி தியேட்டர் தான் போவோம்..

அது எங்க பேவரிட் ஸ்பாட்.. அப்படி

மன்மதன் படம் 3 வது தடவையா பார்க்க போறப்போ அவளும் 

அவ பிரெண்ட்ஸ்சோட வந்து இருந்தா.. நான் பார்த்துட்டேன்..

ஆனா கண்டுக்கலை..(ஏகப்பட்ட ஜில் வந்து இருக்கும்..

நீ அந்த பக்கம் ஜொள்ளி இருப்பே..) அவ பார்த்ததுக்கு 

அப்புறம் என் கூட பசங்க இருந்ததால

சைகையிலேயே என்னமோ சொன்னா..ஒரு எழவும் வெளங்கல..

சும்மா சிரிச்சி வச்சேன்..அப்புறம் தான் தெரிஞ்சது.. 

அவ சொன்னதுக்கு கொஞ்ச நேரம் கழிச்சி வெளியில வா னு 

அர்த்தம் னு.. எங்களுக்கு பின்னாடி ரெண்டு ரோ தள்ளி அவ 

உட்காந்து இருந்தா..பாப் கார்னை தூக்கி என் மேல 

போட்டுகிட்டே இருந்தா.. நான் திரும்பி பார்க்கவும்

வெளியில வானு சொன்னா..( ஏன் தம்பி..பாப் கார்னை தூக்கி 

போட்டு கடலையா..? ) வெளியில போனா என்னடா நீ 

ஓவரா கட் அடிக்கிற..

ஊர் சுத்துறன்னு ஒரே திட்டு..நீ மட்டும் என்ன 

பண்ணிக்கிட்டு இருக்கணு கேட்டதுக்கு நாங்க 

எப்போவாவது தானேடா வர்றோம்..

ஆனா நீ..? னு ஒரே அட்வைஸ்.. 

( ஆரம்பிச்சுட்டாளுங்களா…? ) அவ பிரெண்ட்ஸ் கிட்ட 

சொல்லி இருப்பா போல.. அந்த நாலு ஜங் கும் 

கேனத்தனமா சிரிச்சுதுங்க..( அப்படி என்னத்த

தான் பார்த்து சிரிப்பாளுங்களோ.. துணி இல்லாமயா இருக்கோம்..? )

நான் அடிக்கடி வெளிய போகவும் பசங்க கண்டுக்கிட்டானுங்க.. 

ஆனா பரதேசி நாயிங்க..ஒண்ணுமே கேட்கலை.. இண்டர்வல் 

அப்போ கழுத்து பிடிச்சிகிட்ட மாதிரி ஒரே பக்கம் பார்த்து 

நான் நிற்கவும்.. ஓட்ட ஆரம்பிச்சுட்டானுங்க..

யார் மச்சி அது.. கூட வேற 4 சுமார்

மூஞ்சிகள்னு.. அவனுங்க கிட்ட எல்லாத்தையும் 

சொல்லாம கொஞ்சமா சொல்லி எஸ் ஆனேன்..






அப்போ தான் எனக்கு செல் போன் அறிமுகம் ஆனா புதுசு..

அப்பா வோடது.. அப்புறம் நான் ஒரு ஏர்செல் சிம் பசங்க கிட்ட

இருந்து வாங்கி வச்சிக்கிட்டு அவ வீட்டு செல்லுக்கு SMS ல 

விளையாட ஆரம்பிச்சேன்.. 

( நான் எதுவும் சொல்ல வேண்டாம்..எல்லாருக்கும்

தெரியும்.. பொதுவா என்ன என்ன அலும்பல்கள் பண்ணி 

இருப்பீங்கனு..எல்லா நாயும் பண்ணுறது தானே..) 

நேர்ல பார்த்து பேசுறதுக்க்காகவே அடிக்கடி கட் 

அடிக்க ஆரம்பிச்சோம்..

அப்படியே வள்ளுவர் கோட்டம்,கிண்டி பார்க் னு திரிஞ்சோம்..

பீச்சுக்குஅவ வரமாட்டேன்னு சொல்லிட்டா..
 

ஒண்ணாவே திரிஞ்சாலும் அவ

மேல என் விரல் கூட பட்டது இல்லை..

அவளும் பட விட்டது இல்லை.

( அட..அட..அட..வார்த்தை விளையாட்டை பாருங்க சார்.. )





செமஸ்டர் லீவ் முடிஞ்சி வந்து அவளை பார்த்த முதல்

நாளே செமஅழுகை.. அவ ஏன் அழறானே புரியலை..?  

கொஞ்ச நேரம் கழிச்சி,என் கையை பிடிச்சிகிட்டா..

எனக்கோ MC யை ராவா அடிச்சா மாதிரி சுர்ருன்னு
 
இருந்துச்சு.. ( வேற எதுவுமே உனக்கு தோணாதா..? அது என்ன MC..

ஓ..அது ஆரம்ப சரக்கோ..இப்போவா இருந்தா RC னு சொல்லி இருப்ப…)

உன் கூட இருக்கும்போது சந்தோஷமா இருந்தது..

அதுக்காக தான் நான் எப்பவும் உன் கூடவே 

இருக்கணும்னு ஆசைப்பட்டேன்.. ஆனா 

இந்த கொஞ்ச நாள் உன்னை பார்க்காம இருந்த போது 

தான் உன் மேல இருக்குறது காதல்னு புரிஞ்சதுன்னு 

ஏதோ சினிமா வுல வர்றது போல
 
சொல்லிக்கிட்டு இருந்தா.. 

நான் வழக்கம்போலவே ஞே னு 

முழிச்சிகிட்டு இருந்தேன்..  

( நீ முழிக்கிறது சகஜம் தானே..)





நீ இப்போ ரொம்ப எமோஷனலா இருக்க..எதுவா இருந்தாலும் 

நாளைக்கு பேசிக்கலாம் னு சொன்னேன்..இல்லை டா..

எனக்கு நிச்சயம் தெரியும்.. 

நான் நல்லா யோசிச்சு தான் சொல்றேன்.. நீ தான் எனக்கு

பொருத்தமானவன்..என்னை விட்டு எப்பவுமே 

விலகிப்போயிடாதடானு மறுபடியும் அழ ஆரம்பிச்சா..


( பொண்ணுக்கு சனி உச்சத்தில் இருந்து 

இருக்கு..என்ன பண்ண முடியும்..? ) பொதுவா பொண்ணுங்க 

அழுதாலே எனக்கு மனசு தாங்காது..அதுவும் எனக்கு 

பிடிச்ச ஒரு அழகான பொண்ணு அழுதா..? 

அப்படியே நான் கரைஞ்சு போயிட்டேன்.. 

( யம்மா..யம்மா..யம்மா..பச்ச புள்ள போல 

பேசுறான் சார்..) 


இப்போ உனக்கு என்ன.. நான் உன்னை விட்டு போகக்கூடாது..

அவ்வளவு தானே..சரி..போக மாட்டேன்.. இப்போ கிளாஸ்க்கு

போ..சாயங்காலம் பேசுவோம் னு சொல்லி அனுப்பி வச்சேன்..

( ஆஹா..அண்ணனுக்கு எவ்வளவு பெரிய மனசு..)



சாயங்காலம் போகும்போது வள்ளுவர் கோட்டத்தில 

இறங்கிட்டோம்.. என் முகம் கொஞ்சம் டல் லா 

இருந்ததை அவ கண்டுபிடிச்சிட்டா..

(ஆமா..மத்த நேரத்தில அப்படியே 1000 வாட்ஸ்


பிரகாசம்..ஏண்டா புளுகுற..) ஏன் ஒரு மாதிரி 

இருக்கேன்னு அவ கேட்க.. இல்ல..
 
ஷெபி.. சொன்னா நீ எப்படி எடுத்துப்பனு தெரியலை..

அதான் யோசிக்குறேன் னு சொல்லிட்டு..

என்னால இப்போதைக்கு யாரையும் காதலிக்க முடியாது..

எனக்கு உன் மேல காதல் இல்ல னு சொன்னேன்..

ஏண்டா..நானே உன் கிட்ட வந்து ப்ரபோஸ் பண்ணதால 

என்னை ச்சீப்பா நினைச்சுட்டியா னு

அவ கேட்டா..லூசு போல பேசாத.. நீ யார்னு உன்னை 

விட எனக்கு நல்லாத் தெரியும்.. உன் காதலுக்கு நான் 

தகுதியானவன் இல்ல னு கொஞ்சம் கோபமா 

ஆரம்பிச்சு சோகமா முடிச்சேன்.. அவ சிரிச்சுகிட்டே.. 

இதனால தான் டா உன்னை எனக்கு பிடிச்சது.. 

உனக்கு எப்படி என்னை பத்தி என்னை விட 

நல்லாத் தெரியுமோ..அதே போல தான் எனக்கு

உன்னைப்பத்தியும்.. 

அதனால சும்மா உளறாதேனு சொன்னா.. 

( விதி வலியது..)




இல்ல..உனக்கு எப்படி சொல்றதுனே தெரியலை.. எனக்கு

இப்போ காதலிக்கிற எண்ணம் எல்லாம் இல்லை..  

(நாயே..திருத்தி சொல்லு..ஒரு பொண்ணை மட்டும் 

காதலிக்கிற எண்ணம் இல்லைன்னு.. )
 
தெரியும் டா நீ ஒரு சரியான ஜொள்ளு பார்ட்டினு.. 


( எப்படி புரிஞ்சி வச்சி இருக்கா பாரு..கில்லாடி டா அவ..) 

நீ பயப்படாத.. நீ எவளை வேணும்னாலும் சைட் 

அடிக்கலாம்..நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்.. 

ஆனா வேற எவளையாவது காதலோ , கல்யாணமோ இல்லை 

வேற ஏதாவது பண்ணினனு நான் கேள்விப்பட்டேன்..

உன்னை கொன்னுட்டு நானும் தற்கொலை பண்ணிக்குவேன் 

னு சிரிச்சு கிட்டே சொன்னா..எனக்கா..  

அர்த்த ராத்திரியில அணிலோட அழகிய தமிழ்

மகன் படம் பார்த்தா மாதிரி வேர்த்து கொட்டி மயக்கமே

வர ஆரம்பிச்சுடுச்சு.. ( இருக்கணுமே..) 

நான் பே னு நிக்கிறதை 
 
பார்த்ததும்.. இன்னும் சிரிக்க ஆரம்பிச்சிட்டா.. 

ஹ்ம்ம்.. அவ மவுனமா இருந்தாலே மொட்டு போல 

அழகா இருப்பா..

இப்போ சிரிச்சு பேசும்போது புதுசா பூத்த பூ போல 

அவ்வளவு அழகா இருந்தா..  

( டே..எதை பத்தி பேசிக்கிட்டு இருக்கீங்க..

இப்போ இந்த நேரத்தில இது அவசியம் தானா..? ) 

சரிடா..நீ இப்போ ஒண்ணும் சொல்ல வேணாம்..  

ஒரு வாரம் டைம் எடுத்துக்கோ..
 
பொறுமையா யோசிச்சு அப்புறம் சொல்லு..

I love you னு மட்டும் சொல்லு..ஓகே..வா..னு 

அவ கேட்க..என்ன எழவுடா இது..
 
பசங்க சொல்றதை எல்லாம் இவ சொல்றாளேன்னு 

குழப்பத்தோட நின்னேன்.. சரி வா..போகலாம் னு  

கையை பிடிச்சிகிட்டு நடந்தா..

நான் ஹட்ச் நாய்க்குட்டி போல போயிக்கிட்டு இருந்தேன்..
 
( கல்யாணத்துக்கு அப்புறம் பல பேரு அப்படி தான் இருக்காங்க.

நீ அதை அப்பவே ஆரம்பிச்சுட்டே..அவ்வளவு தான்..)




வீட்டுக்கு போனதும் ஒரு சின்னத் திருப்தி.. அப்பாடா..

பரவாஇல்லை..பொண்ணு கொஞ்சம் தெளிவாத் தான் இருக்கா..

புரிய வச்சிடலாம்னு தோணுச்சு..( இப்போ என்னாத்தெளிவை

கண்டுட்ட நீ..? ) அதுக்கு அப்புறம் என்னை பார்க்கிற அவ முகத்தில

ஒரு பூரிப்பு,சந்தோஷம்,திருப்தி எல்லாம் இருக்க..என் முகத்திலையோ

பீதி,குழப்பம் னு கலவையா இருக்க..அவ எப்பவும் போல பேசினா..

நான் மட்டும் என்னவோ போல பேசினேன்..
 
( தமிழ் என்ன பாடு படுது பாருங்க..நீ செய் ராசா.. )

கெடு முடியுற நாள் ல வந்து அப்புறம் எப்போ டா ட்ரீட் தரப்போறனு

கேட்டா..நான் எதுக்கு ட்ரீட் னு கேட்க..அதான் லவ் பண்ண 

ஆரம்பிச்சுட்ட இல்ல..அதுக்கு தான்.. னு அவ சொல்ல..நான்

யாரையும் லவ் பண்ணலையே னு சொல்லவும்..சட்டுன்னு கண்

கலங்கிட்டா.. இனிமே விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாத..

எனக்கு தெரியும்..நீ என்னை லவ் பண்றது னு சன்னமா சிணுங்க

ஆரம்பிச்சுட்டா.. இது என்னடா வம்பா இருக்கே னு இங்க பாரு

ஷெபி..நான் அன்னைக்கே சொன்னேன்..நீ தான் நம்பலை..

எனக்கு என்ன பண்ணுறதுனே தெரியலை னு 

நான் கொஞ்சம் கோவமாக.. 

( பண்ணுறதை எல்லாம் பண்ணிட்டு என்ன டா கோவம் வேற..)

சரி டா..நீ என்னை லவ் பண்ண வேண்டாம்..நான் உன்னை 

லவ் பண்ணிக்கலாம் ல..அதனால் உனக்கு ஒண்ணும் 

பிரச்சினை இல்லையே னு அவ கேட்க..

அப்போதைக்கு வேற எதுவும் சொல்லத் தோணலை.

அமைதியா இருந்துட்டேன்.. ( அதானே..பெயிலாப்

போனா கூட நீ கவலைப்பட மாட்ட..ஆனா பிகர் 

போயிட்டா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவியே..? )  

கொஞ்ச நேரம் வேற எதோ பேசினா..
 
ஆனா எனக்கு எதுவுமே கேட்கலை..அவளைக் 

காயப்படுதிட்டோமே னு கவலையா இருந்தது..

ஆனா காட்டிக்கலை.. கிளம்பும் போது 
 
சந்தோஷம் ஷெபி..எங்க நீ புரிஞ்சிக்காம மறுபடியும் 

அழ ஆரம்பிச்சுடுவியோனு பயந்தேன்..


ஏன்.. நான் அழுதா எல்லாரும் உன்னைத்

தப்பா நினைப்பாங்கன்னா..
 
எவன் என்ன நினச்சா எனக்கென்ன..? 

ஆனா நீ அழக்கூடாது..

அதான் ஏன்..
ஏன் னு லாம் சொல்லத்தெரியலை..அழக்கூடாது..

அவ்வளவு தான்..
 
ஹா..ஹா..ஹா..நீ ஒரு இம்சையான லூசு டா..
 
அது உனக்கு இப்போ தான் தெரியுமா..?
 
போடா..சரி..இனி நான் அழ மாட்டேன்.. பார்க்குறேன்..

இன்னும் எத்தனை நாள் தான் நீ நடிக்கிறேன் னு.. 

சொல்லிட்டு போயிட்டா..


நான் மறுபடியும் ஞே தான்..



எல்லாரும் காதலிக்க ஆரம்பிச்ச அப்புறம் தான்

வெளியில் சுத்துவாங்க..
 
எங்க விஷயத்தில் அது அப்படியே உல்டா.. அதுக்கு 

அப்புறம் நாங்க அவ்வளவா பேசிக்கவே இல்ல.. 

திடீருன்னு பேசணும்னு சொல்லுவா..பேசுவோம்..

போயிடுவா..அவளுக்கு அவ காதல் மேல்


அவ்வளவு உறுதியான நம்பிக்கை.. எனக்கு திடீர் 

ஞானோதயம் வந்து நான் திருந்த ஆரம்பிச்ச நேரம்.. 

கேள்விப்பட்டு இருக்கா..அது அவளை

லவ் பண்ணுறதால தான்னு நினைத்து அவ திருப்தி 

பட்டுகிட்டா.. ரெண்டு,மூணு தடவை என்னை அவ 

வீட்டுக்கு கூட்டி போயி இருக்கா..

வீட்டில அவளோட காதலை சொல்லிட்டா போல.. 

என்னை யாருன்னு அவங்க யாருமே கேட்கலை..

அவங்க அண்ணி மட்டும் என்னை ஓவரா

ஓட்டி எடுத்தாங்க.. உடனே அவ..அண்ணி..இப்பவே 

ஓவரா ஓட்டி பயமுறுத்தாதீங்க..அப்புறம் 

ஓடிடப்போறான்.. னு சொல்ல..அவங்க

என்னடி நீ அவன் இவன் சொல்றனு கேட்க..அப்புறமா பாருங்க 

அவனை என்ன செய்யப்போறேன் னு என்னை வச்சி 

அவங்க தமாஸ் பண்ணிக்கிட்டு இருந்தாங்க..  

நான் வழக்கம்போல பல்ப் வாங்கிகிட்டு

இருந்தேன்.. ( பொண்ணுங்க கொடுத்தா தான் நீ எது 

வேணும்னாலும் வாங்குவியே..)




அடுத்து கொஞ்ச நாள் லையே நான் கேம்பஸ் ல செலக்ட்

ஆனேன்.. ஔரங்காபாத் போறேன்னு சொன்னதும் 

அழுகையை ரொம்ப கன்ட்ரோல்

பண்ணிக்கிட்டு கங்கிராட்ஸ் டா..பத்திரமா போ.. 

ஊர் சுத்தாதே..ஒழுங்கா இரு..நல்லா சாப்பிடு.. 

அடிக்கடி ஊருக்கு வா.. போன் வாங்கியதும்
 
மறக்காம சொல்லு.. னு ஏகப்பட்ட அட்வைஸ்.. 

இது எல்லாத்தையும் நான் கிளம்பின அன்னைக்கு

எங்க அம்மாவும் சொல்லும்போது தான்
 
அவ ஞாபகம் வந்துச்சு.. உண்மையிலேயே அழுதுட்டேன்.. 

எங்க வீட்டிலையோ பையனுக்கு பாசம் அதிகம் னு

உருகுறாங்க.. நானோ.. அவ ஏன் என் மேல இவ்வளவு 

அக்கறையோட இருக்கானு யோசிச்சுகிட்டே கிளம்பினேன்.. 

அன்னைக்கு அவ ரயில்வே ஸ்டேஷன் வரை வந்து 

என்னைப்பார்த்து இருக்கா..எனக்கு தெரியலை..


அங்க போன அப்புறம் கொஞ்ச நாளில் மொபைல் வாங்கிட்டேன்..

ஆனா அவளுக்கு நம்பர் தரல..ஆனா ரெண்டே நாள் ல என் நம்பர்

கண்டுபிடிச்சி என்னை வறுத்து எடுத்துட்டா.. அவ எப்படி என் நம்பர்

வாங்கினா னு இன்னைக்கு வரைக்கும் எனக்கு தெரியலை..

அப்போ தான் சொன்னா அன்னைக்கு அவ ரயில்வே

ஸ்டேஷன் வந்ததையும்,நான்

என்னமோ போல கிளம்பி போனதையும்.. அப்போ ஏனோ

உன்னைப்பார்க்கணும் போல இருந்துச்சு டின்னு அவளை 

முதல் முறையாடி போட்டு பேசினேன்.. அப்படியே 

சந்தோஷத்தில துள்ள ஆரம்பிச்சிட்டா..

எத்தனை தடவை நான் கேட்டிருப்பேன்..அப்போவெல்லாம் டி 

போட்டு பேசாம இப்போ என்னடா திடீருன்னு டி 

போட்டு பேசுற.. அவ சொன்னதுக்கு அப்புறம் தான் 

எனக்கே ஸ்ட்ரைக் ஆச்சு.. ஏன் டி மறைஞ்சு

இருந்து பார்த்த..வந்து பேச வேண்டியது தானேனு நான்

கேட்கவும்..இல்லைடா அப்போ மட்டும் உன் முன்னால 

நின்னு இருந்தா கண்டிப்பா என்னால அழுகையை 

அடக்க முடியாது..அப்புறம் பிரச்சினை

ஆகி இருக்கும் டா அதான் னு சொன்னா..

ஏனோ தெரியலை..அதுக்கு அப்புறம் அவ ஞாபகமாவே இருந்துச்சு..

ஆனா அது நிச்சயமா காதல் இல்ல.. ( என்ன தான்டா சொல்ல வர்ற..)

ஊருக்கு வரும்போது அமுதா,அனிதா அப்புறம் அவளையும் பார்க்க

போவேன்.. ( ட்யூட்டி போட்டு லூட்டி அடிச்சி இருக்க ப்ளடி ராஸ்கல்..)

அப்பவும் அதே காதலோட தான் இருந்தா..என் மேல அப்படி ஒரு

நம்பிக்கை.. இப்படியே ஒரு 4,5 தடவை வந்து பார்த்துட்டு போனேன்..




ஜூலை 2006 , 5 ந் தேதி , புதன்கிழமை அதே போல அனிதா,

அமுதாவை பார்த்துட்டு அவளை பார்க்கலாம்னு 

போயிக்கிட்டு இருந்தேன்.. 

வீட்டுக்கு போன உடனே அவங்க அண்ணி மட்டும் 

தான் இருந்தாங்க.. என்னக்கா,நல்லா இருக்கீங்களான்னு

கேட்டுட்டு,ஷெபி போன் என்ன  ஆச்சுக்கா.. 

எப்போ பாரு நாட் ரீச்சபிள்னு வருது..வீட்டு போனுக்கு

கூப்பிட்டாலும் நீங்க ஒரு தடவை கூட எடுக்கவே இல்லை..

அவ எங்க இப்போ னு கேட்டேன்..

அழ ஆரம்பிச்சிட்டாங்க.. எனக்கோ பயமாயிடுச்சு.

அழாதீங்கக்கா..என்ன ஆச்சு..சொல்லுங்க னு கேட்டேன்..




ஷெபி நம்மை விட்டு ஒரேயடியா போயிட்டாப்பா தம்பி னு

சொன்னதும்..எனக்கு ஒண்ணுமே புரியலை..

மயக்கம் போட்டு விழுந்துட்டேன்.. கொஞ்ச நேரம் 

கழிச்சி எழுந்த என்னால அதை நம்பவே 

முடியலை..அழுது கிட்டே என்னக்கா சொல்றீங்க..

எப்போ , எப்படி னு அரற்ற ஆரம்பிச்சுட்டேன்..  

ஸ்கூட்டியில போகும்போது எதிர வந்த சிட்டி

பஸ் ல மோதிட்டாளாம்..

ஒரு வாரம் ICU ல இருந்து அப்புறமா..


என் கிட்ட ஏன் சொல்லலை னு நான் கேட்க..

அவ தான்ப்பா சொல்ல வேணாம்னு சொல்லிட்டா.. 

”அண்ணி..அவன்கிட்ட இதை சொல்ல 

வேணாம்..இதை கேள்விப்பட்டா அவன் தாங்க 

மாட்டான்..உடனே இங்க வந்துடுவான்.. 

அவனைப்பார்த்தா எனக்கு வாழணும்னு ஆசை
 
வந்துடும்..வேணாம் அண்ணி..ப்ளீஸ்.. ஆபரேஷன் 

முடிஞ்சி நான் பொழச்சா பார்க்கலாம்..” னு 

சொன்னதா சொன்னாங்க.. 

ஆனா ஆபரேஷன் பெயிலியர்..


அதுக்கு அப்புறம் 6 மாசம் பைத்தியம் பிடிச்ச 

மாதிரி அலைஞ்சேன்.. எங்க திரும்பினாலும் அவ முகமும்,

சிரிப்பும்.. நான் முழுக்க முழுக்க கஞ்சாவுக்கு அடிமை 

ஆனது அந்த காலக்கட்டத்தில் தான்.. நான்
அவளைக் காதலிக்கலை.. ஆனா அவ என்னை 

முழுசாக் காதலிச்சா..
 
அவளோட காதல் எனக்குள்ள அவ்வளவு பாதிப்பை

ஏற்படுத்திச்சி..நல்லவேளை நானும் அவளைக் 

காதலிச்சு,அதை வெளிப்படுத்த பயந்ததாகவே 

அவ நினைச்சிருந்தா.. நான் மட்டும் காதலிக்கலைன்னு

அவளுக்கு தெரிஞ்சி இருந்தா..? 

நினைக்கவே கஷ்டமா இருக்கு..


ஷெபி.. உன் காதல் உண்மையிலேயே புனிதமானது தான்.. 

எனக்குதான் அதை புரிஞ்சிக்கத் தெரியலை.. 

நான் ஒரு முட்டாள் ஷெபி.. 

ஆனா ஒரு நாள் கூட உன்னை வெறுத்தது இல்லைடி..
 
மரணப்படுக்கையிலும் என்னைப்பத்தியே சிந்திக்க உன்னால 

மட்டும் எப்படி முடிஞ்சது.. கடைசியா உன் முகத்தை 

கூட பார்க்க முடியலையேனு நான் வருத்தப்பட 

மாட்டேன்.. உன்னை அந்த நிலைமையில
 
பார்க்கக்கூடிய சக்தி  சத்தியமா எனக்கு இருந்து

இருக்காது.. இப்பவும் கண்ணை மூடினா 

சிரிச்சுகிட்டு இருக்குற என் ஷெபியோட முகம்
 
எனக்கு போதும்.. ஆனா உனக்கு னு நான் எந்த 

சந்தோஷத்தையுமே தரலை.. நான் 

உன்னைக்காதலிக்கிறேன் னு ஒரு தடவை சொல்லி
 
இருந்தேன் னா அது தான் உனக்கு உச்சபட்ச 

சந்தோஷமா இருந்திருக்கும்ல டி.. 

அதைக்கூட உனக்கு தரமுடியலைடி.. இப்பவும்
 
ப்ரியா னு பேரு வச்சு இருக்குற எந்த குழந்தையை,

பெண்களைப் பார்த்தாலும் நீ தாண்டி தெரியுற.. 

உடனே என் உதட்டில் ஒரு புன்னகையும்,

கண்களில் கண்ணீரும் தானா வந்துடுது.. 

என்னை மன்னிச்சுடுடி ஷெபி.. நான் என்ன தப்பு 

பண்ணேன் னு எனக்கு தெரியலை..
 
ஆனா எதோ ஒரு பெரிய தப்பு பண்ணி 

இருக்கேன் னு மட்டும் தோணுது…


நம்ம உயிரை எடுக்கவே நமக்கு உரிமை இல்லை..

அது ஒரு குற்றம்னு அரசாங்கம் சொல்லுது..

( தற்கொலை முயற்சி..)
 
இப்படி இருக்கும்போது எதிர்ல வர்ற மற்ற உயிர்களோட

நாம விளையாடலாமா..? நீங்க வீட்டில இருக்கும்போது 

எப்படி வேணும்னாலும் இருங்க..ஆனா ரோட்டுக்கு 

வந்துட்டீங்கன்னா தயவு செய்து அரசாங்க

விதிகளை பின்பற்றுங்க.. உங்க உயிர் உங்களுக்கு 

சாதாரணமானதா இருக்கலாம்..ஆனா 

எல்லாருக்கும் அப்படியே னு நினைக்காதீங்க..




நீங்களும் பாதுகாப்பா இருங்க..
 

மத்தவங்களையும் இருக்க விடுங்க..

ப்ளீஸ்..




PLEASE BE SAFE ON ROADS 

AND LET OTHERS TOO..

பார்த்தால் சிணுங்கி..





நீ மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும்போது உன்னை அள்ளி அணைக்க 

மனது துடித்தாலும்,நீ கண்ணீர் விடும் தருணம் உன் அருகில் 

இல்லாததே மனதை கனக்க செய்கிறது..




நான் பார்க்கும்போது மட்டும் அதிகமாய் சிணுங்குகிறாயே..

நீ என்ன பார்த்தால் சிணுங்கியா..

# இது என்ன எழவு CATEGORY னே தெரியல..





வளரும் விதைகள் என்றும் சத்தமிடுவதில்லை..

வெட்டப்படும் மரமே அதிக சத்தமிடுகிறது..

உன் மீதான என் காதல் வளர்ந்தபோது மவுனமாய் இருந்த நான்..

நீ எனை பிரியும்போதே பெருங்குரலெடுத்து அழுகிறேன்..


 

நித்தம் உன்னுடன் உரையாடிவிட்டு யுத்தத்திற்கு பின்னான 

அமைதியாய் உன் ஒரு நாள் மவுனம் என்னைக்கொல்லுதடி..





சாப்பிட மறுத்து அடம்பிடிக்கும் குழந்தைக்கு உணவளிக்க 

போராடும் தாயை போல,என் காதலை உனக்கு ஊட்ட 

நான் போராடுகிறேன்..#அடம்பிடிக்காத ப்ளீஸ்..

Friday, September 23, 2011

ஏன் இப்படி ...Part 39



சண்டை போட்டுட்டு உன் கூட பேச மாட்டேன்னு போயிட்டு 

கொஞ்ச நேரம் கழிச்சி போன் பண்ணி நான் உன் மேல 

கோவமா இருக்கேன்னு சொல்லும் குழந்தைத்தனம் 

பெண்களின் அழகு..



மனசுக்குள்ள இருக்குற காயங்களை நாம விரும்புறவங்க 

கிட்ட புன்னகையாகவும்,நம்மை விரும்புறவங்க கிட்ட 

கண்ணீராகவும் மட்டுமே காட்ட முடியும்..




கடவுளை சப்போர்டிங்கா மட்டுமே பாருங்கடா..

நம்பிக்கையை உங்கமேல வையுங்கடான்னு சொன்னா 

என்னை நாத்திகன்னு சொல்றானுங்க நான்சன்சுங்க
FACEBOOK ல பழைய பிரெண்டுகளை தேடலாம்..

ட்விட்டர் ல ஏண்டா வெட்டியா மொக்கை போடுறீங்கன்னு 

மொண்ணை நாயிங்க மொக்கை போடுதுங்களே ராமா..

தான் செய்வது மட்டுமே உபயோகமானது..

தனக்கு தெரியாதது எல்லாம் வீணானதுன்னு 

வாக்குவாதம் பண்ணுறவனுங்களை என்ன பண்ணுறது..

 
அது இல்லைன்னு உனக்கும் தெரியும்..எனக்கும் தெரியும்..

அப்புறம் ஏன்டா மேலதிகாரி முதலை வாயன்கள் இருக்கும்போது

கேட்டு குடையுறீங்க..




முயலை பிடிச்சி அதுக்கு மூணு காலுன்னு சொல்றதை விட..

மூஞ்சூரை பிடிச்சி வச்சிட்டு இது முயல்னு சொல்ற 

சமாளிப்பு இருக்கே..குவாலிட்டி எஞ்சினியர்களுக்கே 

உண்டான திறமை அது..




ஆடிட்டிங் வேலையை விட எங்கே என்னை விட்டுட்டு 

கச்சேரியை ஆரம்பிச்சுடுவானுங்களோனு நினைக்கும் போது

தான் மனம் பதறுது..#டே..இருங்கடா..நானும் வர்றேன்..



ஆடிட்டிங் முடிஞ்சி ஆறுதல் சொல்றேன்னு FINAL PRESENTATION 

கொடுப்பானுங்க பாருங்க..அப்போ தான் உண்மையான 

ஆப்பே..#யப்பே..என்னை விட்டுடுங்கடா..




உங்க மொபைல்ல பேலன்ஸ் இருக்கானு செக் பண்ணுறதுக்காக 

எல்லாம் ஏன் பொண்ணுங்களா எங்களுக்கு மிஸ்டு 

கால் தர்றீங்க..பதறுதுல..

Thursday, September 22, 2011

மோக தருணம்...



உன் வார்த்தைகளால் வாழ்ந்த நான் நிச்சயமாய் உன் 

மவுனத்தால் மரித்துப்போவேன்..



நீ நாணத்தில் சிணுங்குவதை விட..என்னை மோகத்தில்

மிரள செய்வதே நான் விரும்பும் தருணம்.


ஓயாமல் பேசும் ஒருவர் கூட என் கவனம் கலைக்கவில்லை..

உன் மருண்ட மான்விழிகளில் கண்ணீரோடு நீ மவுனமாய் 

இருப்பது மலையாய் அழுத்துதடி..





உன்னுடன் பேசுகையில் மட்டும் என் பேலன்ஸ் குறைவதே

இல்லை..நீ தான் அடிக்கடி சிரித்து ரீ சார்ஜ் 

செய்கிறாயே..




உண்மையாக இல்லாதவர்களே உரிமை எடுத்துக்கொள்ளும்போது...

என் உயிராய் இருப்பவளே உனக்கில்லாத உரிமையா..

தயக்கம் ஏன்..?