Sunday, October 9, 2011

ஏன் இப்படி ...Part 44

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


என்னைப்போலவே இருக்குற சிலரை எல்லாருக்கும் பிடிக்குது… 

ஆனா என்னை மட்டும் அவங்களுக்கு பிடிக்க மாட்டுது..

# என்ன பண்ணுறதுனே புரியலையே..சம்திங் ராங்..




சில இடங்களுக்கு யாராவது நம்மை கூட்டிப்போகும்போது 

இப்படி இரு அப்படி பண்ணாதனு படுத்தி எடுக்குறானுங்க..

# நான் வரவே இல்லைடா..என்னை விட்டுடுங்க..




பிளாட்டினத்தோட தங்கம் சேர்க்கக்கூடாதாம்..அதனால உனக்கு 

தங்க நகை வேண்டாம்னு சொன்னா.. மனுஷங்களோட 

தேவதை சேரக்கூடாதாம்..பை னு சொல்றா..?



உன்னை காதலிக்கும் முன்பே யோசித்திருந்தால்,இன்று 

இப்படி யோசிக்காமல் புலம்பல் கவிதைகளை எழுதிக்கொண்டு 

இருக்க மாட்டேன்..




ஒரு மணி நேரம் பேசினாலும் ஒண்ணுமே புரியாம 

பேசுறது மனைவியாலும்,மேனேஜராலும் மட்டுமே முடியும்.




நமக்கு புரியும்படி , இல்ல தனக்கு தெரியாது னு சொல்ல

மாட்டாங்க..ஆனா அதை நாம தப்பா செஞ்சு முடிச்சதும்..

நான் தான் அப்பவே சொன்னேன்ல..புரியலைனா 

கேக்கலாம்ல னு காண்டு ஆக்குவாங்க.




இப்போவெல்லாம் யாரையாவது ஏமாத்திட்டா நான் 

புத்திசாலின்னு நினைக்க தோணல.அவங்க என் மேல வச்ச 

நம்பிக்கைக்கு நான் தகுதியானவன் இல்லையோனு வருத்தமா இருக்கு.

.# என்ன பொழப்புடா இது .




மாசம் பூரா சீட்டை தேய்க்கிறது,சம்பள நாள் அன்னைக்கு 

ஒரு நாள் மட்டும்  ATM CARD தேய்க்கத்தானா..

# என்ன பொழப்புடா இது .




சென்னை எவ்வளவு மிஸ் பண்றேன்னு சண்டே சாயங்காலம் 

அண்ணா நகர் ரவுண்டானா போன பின்பே உரைத்தது.

#எத்தனை வண்ணங்கள்..

சவுக்கார்பேட்டையிலும் ஒரு டவர் கட்டணும்..




ஷட்டில் கார்க் விளையாடுவதை விட வேடிக்கை பார்ப்பதிலே

தான் என்ன ஒரு சுகம்..எல்லாருக்கும் விளையாடி வேர்த்துச்சுனா...

எனக்கு வேடிக்கை பார்த்ததுக்கே..

1 comment:

மயில் றெக்க said...

இப்போவெல்லாம் யாரையாவது ஏமாத்திட்டா நான்

புத்திசாலின்னு நினைக்க தோணல.அவங்க என் மேல வச்ச

நம்பிக்கைக்கு நான் தகுதியானவன் இல்லையோனு வருத்தமா இருக்கு.

நிதர்சனம் மச்சி