அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
மார்கழின்னு வந்தாலே..மனசுக்கு அப்படி ஒரு சந்தோஷம்..
எங்க தெருவுல
அக்காக்களும்..ஆண்டிகளும்..
அழகான பெண்களும் காலையிலேயே
சுமார் மூணு , நாலு மணிக்கே
எழுந்து கோலம் போட
ஆரம்பிச்சுருவாங்க...
( இது எல்லாம் ஆறு , ஏழு வருஷம்
முன்னாடி.. இப்போ இருக்குற
வெளங்காத மூஞ்சிகள் எல்லாம்
முதல் நாள் ராத்திரியே
( சரியாக படிக்கவும்..)
போட்டு வச்சிருதுங்க..
( மீண்டும் ஒருமுறை முழுதும்
படித்த பிறகு அர்த்தம் கொள்ளவும்..)
கோலத்தை..)
அந்த ஒரு மாசம் மட்டும்
அலாரம் வச்சி எழுந்து
( பரீட்சை நேரத்துல கூட
அலாரம் வைக்கிறது இல்ல..)
வாசல்ல வந்து நின்னுடுவேன்..
அத்தனை பேரும் என்கிட்டே
தான் கருத்து கேட்பாங்க..
(மார்கழி குளிர்ல
எவன் எழுந்து வருவான்..
ஆனா எங்க தெரு பசங்க
என்கிட்டே போட்டு வாங்கி
அவனுங்களும் அதுக்கு அப்புறம்
எழுந்திரிக்க ஆரம்பிச்சிட்டானுங்க..)
அப்படி ஒரு மார்கழி
பின் இரவில் தான்..
மார்கழி மாத ஒரு பனி
நிறைந்த பின் இரவு..
அதிகாலையில் என்னை
எழுப்பிடும் உன் நினைவு...
வாட்டுகிறதடி தினமும் என்னை..
வந்து நீ ஒருமுறை
அணைப்பாயோ பெண்ணே..
கோலமிட வாசலுக்கு
வருகிறாய் நீ..
உனக்காக காத்திருக்கும் நான்..
நம் கண்கள் சந்தித்ததும்
மலரும் உன் முகம்..
என் பார்வையின் வெப்பம்
தாளாமல் தலை குனிகிறாய் நீ..
உன் நாணம் கண்டு
செயலிழந்து நிற்கிறேன் நான்...
என்னை பார்த்துக்கொண்டே
புள்ளிகளை தவறாக வைத்துவிட்டு
குழம்பி நிற்கிறாய் நீ..
நானோ ஒற்றை புள்ளியில்
ஒரு அழகிய கோலம் கண்டேன்
உன் நெற்றிபொட்டின் வழியே..
இது என்ன புது வண்ணத்தில்
ஒரு வானவில்லென வண்ணத்து
பூச்சி உன்னை வட்டமிட..
தன்னை விட பிரகாசமாய் ஒருத்தியா
என ஆர்வமுடம் ஓடி வரும்
அந்த சிவப்பு சூரியன்..
அந்த காலை வெயிலின்
கதிர்கள் வழியே
மஞ்சள் பூசி குளித்து
வந்த உன்னை பார்ப்பது..
வெள்ளி சிலைக்கு தங்க
முலாம் பூசியது போல...
அந்த நேரத்தில் என்னிடம்
தேசியக்கொடியின் நிறம்
என்ன என்று கேட்டால்..
மஞ்சள் , சிவப்பு,கருப்பு என்று
உன் உடைகளின் நிறத்தை
கூறியிருக்க கூடும்..
நீ என்னை பெயர் சொல்லி
அழைப்பதை போலவே
எனக்கு இனிக்கிறது..
உன் அண்ணன் வா..மச்சான்
என்று என்னை அழைக்கும் போது..
மயில் கோலம் வரைய
முற்பட்டு குழம்பி நிற்கிறாய் நீ..
உன் பாத சுவடுகளை விடவா
அது அழகாய் இருக்க
போகிறதென நான்..
அந்த கணம் நீ சிரித்த போது
தான் உணர்ந்தேன்..
இன்பமும்..இறப்பும் சொல்லி
விட்டு வருவதில்லை என..
நீ போட்ட கோலத்தில்
புள்ளிகள் மட்டுமல்ல
நானும் சிக்கிகொண்டேனடி..
தினம் உன் விரல் தீண்டி
இறக்கும் பாக்கியம் பூக்களுக்கு
மட்டும் தானா..
என்னையும் தீண்டேன்..
உன் ஸ்பரிசத்தில்
சொர்க்கம் போகிறேன்..
பேச்சுக்களை விட விழி
வீச்சுக்களுக்கு அர்த்தம் அதிகம்
என உன்னை பார்த்தே உணர்ந்தேன்..
என் வருடத்தில் மட்டும்
ஏனோ இலையுதிர்
காலமே இல்லை..
மனம் உதிர்
காலம் தான்..
கண்களால் காதலை
வளர்ப்பதை விட..
வாய் திறந்து
ஒருமுறை சொல்..
என் வானம்
விடியலை பார்க்க..
இது கவிதையான்னு கேட்காதீங்க..
விஜயையே நடிகன்னு
ஒத்துகிட்ட நம்ம நாட்டுல
இது கவிதை தான்..
நம்புங்கப்பா..என் மாமியார்
அது ஒரு காலம்..
காதல் வந்த காலம்..
இது தான் இப்போ நமக்கு..
2 comments:
இது கவிதையான்னு கேட்காதீங்க..
விஜயையே நடிகன்னு
ஒத்துகிட்ட நம்ம நாட்டுல
இது கவிதை தான்..
nalla iruku...
இது கவிதையான்னு கேட்காதீங்க..
விஜயையே நடிகன்னு
ஒத்துகிட்ட நம்ம நாட்டுல
இது கவிதை தான்..
ithaan ithula nalla iruku...
Post a Comment