Tuesday, December 28, 2010

நீதிக்கதைகள்...Part 7

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
ஒரு பையன் தன்னோட 

காதலிகிட்ட இருந்து வந்த

அதிகப்படியான மொக்கை

மெசேஜ்களால் செம காண்டுல

இருந்தானாம்.. ஒரு நாள் ராத்திரி 

பதினோரு மணிக்கு அவ கிட்ட

இருந்து ஒரு மெசேஜ் வந்துச்சாம்.. 

இவன் சரி காலையில 

பார்த்துக்கலாம்னு விட்டுட்டானாம்..


அடுத்த நாள் காலையில அந்த 

பொண்ணோட அம்மா அவனுக்கு

போன் பண்ணி.. அந்த பொண்ணு 

நேத்து ராத்திரி ஆக்சிடென்ட்

ஆகி செத்து போச்சுன்னு

சொன்னாங்களாம்..

இவன் உடனே ஷாக் ஆகி.. 

அவனுக்கு வந்த மெசேஜ் 

ஓபன் பண்ணி பார்த்தானாம்.. 

அது என்னன்னா.. 

" அன்பே.. என் மேல ஆட்டோ 

மோதி நான் உன் வீட்டு 

வாசல்ல அடிபட்டு கிடக்குறேன்.

கடைசியாக ஒருமுறை 

வெளியே வா..உன்னை 

பார்த்துவிட்டு நான் சாகிறேன்.."


நீதி : சனியன் புடிச்சவளுங்க..


சாவற நிலைமைல கூட 


போன் பண்ண மாட்டாளுங்க...








காலேஜ் படிக்கும் போது

ஒரு நாள்.. கிளாஸ்ரூம்ல இருந்த

ஒரு சுமாரான பொண்ணுக்கு 

I LOVE YOU .. DO YOU LOVE ME

அப்படின்னு ஒரு லெட்டர் 

எழுதி கொடுத்தேன்..உடனே 

அவ NO னு எழுதி கொடுத்தா..

அசரு வேனா  நான்.. 

உடனே NO வை அடிச்சிட்டு 

மறுபடியும் இன்னொரு 

பொண்ணுக்கு கொடுத்தேன்...


நீதி : சத்தியமா.. நீங்க நினைக்கிற

மாதிரி எல்லாம் இல்ல..

இது பேப்பர் மறுசுழற்சி..
 
மரங்களை காப்பீர்...








நானும் மெடிக்கல் காலேஜ்

படிக்கிற என் நண்பனும் 

பேசிக்கிட்டு இருந்தோம்..

அப்போ அவன் சொன்னான்.. 

மச்சி HARRYPOTTER படமா 

பார்க்கிறதை விட.. புக் தாண்டா

இன்னும் சுவாரசியமா 

இருக்கும்னு சொன்னான்.. 

நீ படிச்சிரிக்கியானு கேட்டான்.. 

நான் இல்லைன்னு சொன்னேன்..

ஓகே நான் தர்றேன்னு சொன்னான்... 

யாரு மச்சி AUTHOR னு கேட்டேன்.. 

யாரோ J.K ரௌலிங் னு சொன்னான்.. 

லோக்கல் AUTHOR யாரும்


இல்லையாடானு கேட்டதுக்கு


காறி துப்பிட்டு போயிட்டான்.. 


நான் கேட்டது எதுவும்


தப்பா என்ன..??



நீதி : நாங்கள் பொறியாளர்கள்..

No comments: