Thursday, December 9, 2010

புத்திக்கெட்ட ராஜாவும் புண்ணாக்கு மந்திரியும்..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


டகுல் பாச்சா என்ற ஒரு சிறு நாட்டை புத்திக்கெட்ட ராஜா என்னும்

மன்னன்


மிகவும் கேவலமான முறையில் ஆட்சி செய்து

வந்தார்.. அவரது ஆட்சியில் சோப்ளாங்கிக்கு 


சொம்பு தூக்குகிறவன் போல 

ஒரு புண்ணாக்கு மந்திரியும்


வேலை செய்து வந்தான்..

அந்த இரண்டு பேரும் அடிக்கும் கூத்துகள்

இனி வரும் இடுகைகளில்..


இந்த டகுல் பாச்சா போலவே

பல நாடுகளை

சிலபல உருப்படாத  உதவாக்கரை

ராஜாக்களை ( சில  ராணிகளையும் )

வைத்துக்கொண்டு  பெரியண்ணன் 

ஆண்டு வந்தார்.. 

(ராணிகளை வைத்துக்கொண்டு என்றால்

வேறு ஏதும் இரட்டை அர்த்தம் அல்ல..)
 

பெரியண்ணனுக்கு பின்னால் இருந்து

கொண்டு அவரை ஒரு வெளிநாட்டு

சக்தி ஆட்டி வைப்பதாக

நாட்டுக்குள் ஒரு பேச்சு.. 

புத்திக்கெட்ட ராஜா : என்ன.. மந்திரியாரே.. 

நாட்டில் மும்மாரி பொழிகிறதா..


புண்ணாக்கு மந்திரி : அது ஏன் மன்னா.. 

எல்லா ராஜாவும் இதே கேள்வியவே கேட்குறீங்க.. 

நீங்க என்ன வெளி நாட்டிலா இருக்கீங்க.. அந்தபுரத்துல

அந்த ஆன்ட்டிகள் கூட மஜா செஞ்சுகிட்டு தானே இருக்கீங்க..

மழை பேயலன்னு சொன்னா.. உடனே குச்சி எடுத்துட்டு 

போயி குத்தி விடவா போகிறீர்..??
பு.ரா.: குத்தி விட அது என்ன சாக்கடையா..??

சரி..சரி..ப்ரீயா விடு.. ஆமாம்.. நாட்டில் என்னை

பற்றி மக்கள் என்ன பேசிகொள்கிறார்கள்  ...


பு.ம : அதுவா.. நகர்வலம் போறேன் பேர்வழி னு..

நீங்க பண்ண நாதாரி தனம் எல்லாம் தெரிஞ்சி

செம காண்டுல இருக்கானுங்க..


பு.ரா.: சத்தம் போட்டு பேசாத..

மகாராணி காதுல விழ போகுது..பு.ம :(ஆமா.. விழுந்துட்டாலும்.. 

நீ அந்த பக்கம்

போன அப்புறம் அந்தபுரத்துகுள்ள

எவன் எவனோ போறான்..)

மன்னா நமது சபைக்கு ஒரு புது வழக்கு வந்து இருக்கிறது..பு.ரா.:என்ன வழக்கு...??


பு.ம :  2G வழக்கு தான் மன்னா..


பு.ரா.:அப்படினா..??


பு.ம :வெளங்கிடும்.. அதான் மன்னா..GOLD GOOJA .. 


காலையில வெளிக்கு 

போறவங்களுக்கு கழுவறதுக்கு

தங்க கூஜா தர்றதா 

நாம வாக்கு கொடுத்தோம்ல.. 


பு.ரா.: என்ன வாக்கு...??


பு.ம : ஆஹ்.. பேஷன்  டிவில  

வர்ற கேட் வாக்கு  ..

 


ஏன் மன்னா சாவடிக்கிற.. சொல்றதை கேளும்..

அந்த திட்டம் சம்பந்தமா  ஏலம் விடாம முதல்ல வந்த

அந்த ராரா காரங்களுக்கு தந்தோம்ல..


பு.ரா.:ஆமாம்.. அவனுங்க நம்மை தனியா 

கவனிச்சதுனாலே தானே அவங்களுக்கு தந்தோம்..

அதுக்கென்ன இப்ப...??


பு.ம : அதுல மொத்தம் 1700 கிலோ தங்கம் நாம 

அடிச்சி ( அபேஸ் பண்ணி  )  இருக்கிறதா  எவனோ

மக்கள் மத்தியில கொளுத்தி போட்டுட்டான்..


பு.ரா.: என்னது.. 1700 கிலோ வா..எனக்கு சொன்னது

வெறும் 700 கிலோ தானே..அப்போ மிச்சமெல்லாம் எங்க..??


பு.ம :சும்மா இருங்க மன்னா.. விஷயம் நம்ம 

பெரியண்ணன்ணுக்கு தெரிஞ்சி..

அதுக்கு பொறுப்பா விட்டு இருந்தோமே 

நம்ம ரா.ஆசா.

அவரை உடனே விசாரிக்கணும்னு

சொல்லிட்டாங்க..
பு.ரா.:விசாரணை தானே யா.. நாம தான் 

வெத்தலைய வச்சி பித்தளை எடுக்குறவனுங்க

லாச்சே..ஏன் பயப்படுற..


பு.ம : அது சரி.. ஏன் மன்னா.. அது எப்படி என்ன 

நடந்தாலும் எதுவுமே நடக்காதது மாதிரியே

அசால்டா இருக்கீங்க..


பு.ரா.: நாலு திரைப்படத்துக்கு கதை 

வசனம் எழுது ,

லெட்டர் எழுதி புறா மூலமா  

பெரியண்ணன்ணுக்கு அனுப்பு..


பு.ம :ஐயோ..சாமி..ஆளை விடுங்க.. 

அதெல்லாம் உங்க ஒருத்தருக்கு தான் வரும்..சேவகன் : மன்னா.. மன்னா..

காணவில்லை..காணவில்லை..
பு.ரா.: மதி கெட்டவனே.. எதுவா இருந்தாலும்

ஆராய்ச்சி மணியை அடித்து விட்டு உள்ள 

வரவேண்டும் என்று உனக்கு தெரியாதா...???


சேவகன் : அந்த  ஆராய்ச்சி மணியை தான் 

காணவில்லை மன்னா..
பு.ரா.: என்ன...?? மந்திரியாரே.. என்ன இது..


பு.ம : மன்னிக்க வேண்டும் மன்னா.. 

நமது இளவரசர் தான் நமது ஊரில் ஓடும் 

பாவம் ஆறை புண்ணிய ஆறாக மாற்ற வேண்டிசப்பை மூக்கு தீவுக்கு செல்ல காசு கேட்டார்.. 
கஜானா காலி என்று கூறினேன்.. 

அவர் தான் லவட்டி கொண்டு போயிருப்பார்

என்று நினைக்கிறேன்..பு.ரா.: என்ன எழவு டா இது.. 

கஜானா காலி யா..?? சரி உடனே

மக்களுக்கு ஏதாவது வரி போடு..


பு.ம :ஜனவரி , பிப்ரவரி , மார்ச்சுவரி ,

டெலிவரி தவிர அனைத்து வரியும்

போட்டு ஆகி விட்டது அரசே..


அதற்குள் அரசவைக்கு வெளங்கா மூஞ்சி

இளவரசி வருகிறாள்..
வெ.மூ.இ : டாடி..டாடி.. குளிக்க போகும்

போது கழட்டி வைத்த என் கால்

கொலுசை காணவில்லை..பு.ரா.: என்ன..?? நம்ப முடியலையே..வெ.மூ.இ : உண்மை தான் டாடி..  

கால் கொலுசை காணலை..


பு.ம : அவர் அதை சொல்லல.. 

நீ குளிக்க போகும்போதுன்னு 

சொன்னியே..

அதை தான் நம்ப முடியலைன்னு சொல்றாரு..
பு.ரா.: ஹ்ம்ம்.. அமைச்சரே..

சரி விடும்மா.. கால் கொலுசு தானே 

காணவில்லை.. மீதி முக்கால்

கொலுசு இருக்கிறதல்லவா..பு.ம : ( அட புத்திகெட்ட ராஜா..) மன்னா..

அவள் கூறுவது ஒரு கால் கொலுசை

காணவில்லை என்று..


பு.ரா.:அப்படியா.. மகளே அந்த இன்னொரு

கொலுசையும் அங்கயே விட்டு விடு.. 

பாவம் அந்த திருடன் ஒரு கால் கொலுசை

வைத்து கொண்டு என்ன செய்வான்..


பு.ம : ( அதானே பார்த்தேன்.. 

அவன் தான் திருடன் ஆச்சே..

உங்க இனப்பற்றை

இதுல மட்டும் காட்டுங்க..)

- வருவார்கள்...

No comments: