Wednesday, December 8, 2010

சனிக்கிழமை சாயங்கால சரக்கும் , சில சங்கடங்களும்...

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


கொஞ்ச நாளுக்கு முன்னமே

இந்த பதிவை போடணும்னு

நினைச்சேன்..

முடியல..( சில உள்காரணங்கள் இருக்கு.. 

அது போக போக உங்களுக்கே தெரியும்...)



அது.. 


ஒரு அழகான மாலை நேரம்..


( ஏன்னா சாயங்காலம் 5 மணிக்கு

ஆபிஸ்  முடியும்..)


எல்லாரும் பர பரப்பா வீட்டுக்கு

கிளம்ப தயாரா இருந்தோம்.. 

அப்போதான் எங்க Metrology in charge 

சந்துரு வந்து என் பாஸ் கிட்ட

" சார்.. ELECTRO THERM தங்களோட

PRODUCT DEMO கொடுக்குறாங்க..

ஒரு invitation வந்து இருக்கு.. 

போலாமான்னு" கேட்டான்..

அவர் உடனே இல்லைங்க..

நான் வரலைனு சொல்ல.. 


உடனே நாங்க ஒரு பிளான்

பண்ணுனோம்.. 


அது வேற மாச கடைசி..


THE RESIDENCY HOTEL ல 

தான் SEMINAR கு ஏற்பாடு 

பண்ணி இருந்தானுங்க..








 சரக்கு இருக்குனு போட்டு 

இருந்தான்.. வேற காரணம் 

வேணுமா என்ன..??



( அது ஒரு INDUCTION FURNACE .. 

ஏற்கனவே எங்க கிட்ட MEGA THERM 

கம்பெனியோட ஒரு FURNACE இருக்குது...

நாங்க சத்தியமா வாங்கணும்ங்கற

எண்ணத்தோட போகலை..) 

ஆனா கணக்கு பண்ணி பார்த்தா

நாங்க 5 பேரு ஆயிட்டோம்..


ஒரு INVITATION கு அத்தனை 

பேர் போனா அசிங்கமா இருக்குமேன்னு

யாரை கழட்டி விடலாம்னு 

தயக்கம்.. 




உடனே எங்க MR அந்த

ELECTROTHERM காரனுங்களுக்கு

போன் பண்ணி..

எங்க TECHNICAL TEAM ல 

நாங்க 5 பேரு இருக்கோம்.. 

பரவா இல்லையான்னு கேட்க...




( ஆமா... இதுல TECHNICAL டீம்

வேற..அத்தனை பேரும் 

அன்னைக்கு குடிக்கிற மூடுல 

இருந்தோம்..  ஏன் சார்...)




அவனோ எத்தனை பேர் 

வேணும்னாலும் வாங்க சார்.. 

ஒரு பிரச்னையும் இல்லைன்னு

சொல்லிட்டான்..



அப்புறம் என்ன... 

அத்தனை பேரும் மறக்காம

VISITING கார்டு எடுத்துகிட்டு

UNIFORM லயே கிளம்பி போனோம்..



மணி ஒரு ஏழு இருக்கும்..

வாசல்லையே கும்முன்னு ,

சூப்பரா , அழகா , அம்சமா , 

இன்னும் எப்படி எப்படி எல்லாமோ..

ரெண்டு பொண்ணுங்க சேலை
கட்டி நின்னுகிட்டு... 

வர்றவங்களை எல்லாம் WELCOME 

பண்ணிக்கிட்டு இருந்தாளுங்க... 

ஹ்மம்ம்ம்மம்ம்ம்ம்..



அங்கேயே நான் அவுட்டு  சார்...




எல்லாருக்கும் பூங்கொத்து 

கொடுத்தவளுங்க எனக்கு மட்டும் 

கொடுக்கவே இல்லை...


( மாமனுக்கு தனியா வந்து 

முத்தமா .. இது மொத்தமா 

கொடுக்கலாம்னு நெனச்சி 

இருப்பாளுங்க போல..

கிறுக்கு சிறுக்கிங்க...) 


அப்புறம் ஒரு LAP TOP BAG  

கொடுத்தானுங்க.. 




அதுவே எப்படியும் ஒரு

எண்ணூறு ரூபாய் இருக்கும்..


அடடா.. சரக்கு கிடைக்கும்னு வந்தா.. 

சரமாரியா சந்தோசங்கள் குவியுதே

சொக்கநாதாணு உள்ள போனோம்..




உள்ள போனா.. HOUSE FULL .. 

என்னடா சினிமா theatre மாதிரி 

சொல்றானேன்னு பார்க்குறீங்களா.. 

உண்மை தாங்க.. அவ்ளோ பேரு.. 




( அவனுங்களும் இது மாச கடைசி

தானே... எங்களை மாதிரியே சரக்குக்கு

தான் அத்தனை பேரும் வந்து 

இருப்பானுங்கன்னு 

அப்பவே சந்தேகப்பட்டேன்...)




கொஞ்ச நேரத்துல ஆரம்பிச்சானுங்க..

நாங்களும் நோட்ஸ் எடுத்தோம்.. 

அதெல்லாம் முதல் இருபது

நிமிடங்களுக்கு தான்.. அதுக்கு 

அப்புறமும் நான் மட்டும் 

WRITING PAD பூரா எழுதினேன்.. 

அது என்னன்னா...


* என்னடா..இவனுங்க

பேசிக்கிட்டே இருக்கானுங்க..


* சீக்கிரம் முடிடா சொட்டை பயலே..


*மச்சி.. INVITATION போட்டு 

இருந்ததிலே இப்போ தான்

முதல் பாயிண்டையே 

முடிச்சி இருக்கான்..

It 's already an hour gone yaar ..


* சரக்குக்கு ஆசைப்பட்டு வந்து

சங்கடத்திலே மாட்டிக்கிட்டனே..


* மாதையன் பீர் கேக்குறாருப்பா  ..


* பாவம் சந்துரு .. அவனுக்கு

ஸ்க்ரீன் தெரியவே இல்லை..

எம்பி..எம்பி பாக்குறான்..


* ஏன் மச்சி.. இந்த LCD DISPLAY 

என்ன விலை இருக்கும்..


* ஐயையோ.. இவன் முடிக்க 

மாட்டான் போல இருக்கே..


* மாமா.. bag திருப்பி  

குடுத்துட்டு ஓடி போயிடலாமா..
  

* அப்பாடா.. ஒரு வழியா முடிச்சிட்டான்.. 

அட சனியனே.. ஒரு மணி நேரம்

ஆகி போச்சா..


* இன்னும் மூணு பாயிண்ட்ஸ் இருக்கே..

யார்ரா இவன் கொரங்குக்கு 

கோட் போட்ட மாதிரி..


* பேசாம டாய்லேட்ல

போயி ஒளிஞ்சுக்கலாமா..


* மூச்சு திணற திணற 

அடிக்கிறானுங்களே..


* ஆமா இதுல கேள்வி வேற 

கேக்குறான் மங்கூஸ் மண்டையன்..

டே நாயே.. புரிஞ்சா தானே 

டா பதில் சொல்றதுக்கு..


* இவனுங்க முடிக்க மாட்டானுங்க

போல இருக்கே.. 


* டே.. முன்னாடி ரோ ல 

ரெண்டு பேரு தூங்குறானுங்கடா  .. 


* வந்து இருக்குற மூஞ்சியில 

ஒண்ணு கூட வாங்குற 

மாதிரி தெரியல..


* பைத்தியம் புடிச்ச நாய் மாதிரி

NON STOP பா " பேசிக்கிட்டு " இருக்கானே ..


* லோனா..?? அதை வாங்குறவனுங்க

கிட்ட சொல்லுங்கடா டே.. பாரு

எல்லார் மூஞ்சியும் எந்திரன் 

படத்துக்கு டிக்கெட் வாங்க க்யூவுல

நிக்கிற மாதிரி ஏக 

எதிர்பார்ப்போட இருக்கு..


* மாஸ்டர்.. பின்னாடி சரக்கு

எடுத்து வைக்க ஆரம்பிச்சிட்டானுங்க....


* ஏழு மணிக்கு ஆரம்பிக்கிறோம்னு

சொன்னானுங்க.. எத்தனை மணிக்கு

முடிப்பானுங்கனு கேட்க மறந்துட்டனே..


* பேசாம வாசல்லையே அந்த 

பொண்ணுங்களை வேடிக்கை 

பார்த்துகிட்டு இருந்து இருக்கலாம்..


* ரெண்டு மணி நேரம் ஆகியும்

பேச்சு நிக்கலையே..


* யாரு பெத்த புள்ளைங்களோ..

நான் குடிக்கிறதுக்கு எல்லாம்

மொய் வைக்குதுங்க...


* எல்லாரும் எவ்வளோ சிம்பாலிக்கா

இருமி , கொட்டாவி விட்டு , 

பக்கத்துல பேசிக்கிட்டு 

சிக்னல் குடுக்குறோம்..

புரிஞ்சிக்க மாட்றானுன்களே  

புண்ணாக்கு ரங்கனுங்க..


ஒரு  வழியா  ரெண்டரை மணி நேரத்துக்கு

அப்புறம் முடிசிட்டானுங்க..


அப்புறம் எல்லாரும் 

சரக்கடிக்க போயிட்டோம்..
 
டாஸ்மாக் ல இருக்குற
 
கூட்டத்தை விட இங்க 
அதிகமா இருந்துது...



மூத்த குடிமக்கள் எல்லாம் 

அடுத்த தலைமுறைக்கு 

வழிவிடனும்னு எண்ணமே

இல்லாம மேசையை விட்டு 


நகரவே இல்லை...






உண்மையா சொல்லணும்னா...

பெருமாள் கோவில் உண்டகட்டிக்கு

அடிச்சிகிட்ட மாதிரி இருந்துது...






இது வேலைக்கு ஆகாதுன்னு.. 

நானும் ஒரு கிளாஸ் பீர் 

எடுத்து அடிக்க ஆரம்பிச்சுட்டேன்...




அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சி.. 

மக்கள் எல்லாம்.. 

பப்பே கு போக..






நான் அப்புறமா அங்கே போயி 

RC GOLD மூணு லார்ஜ் திவ்ய

தீர்த்தத்தை என் தொண்டை

குழி வழியா இறக்கி குடலை 

குஷிப்படுத்தி  சாந்தபடுத்தினேன்...








ரொம்ப நீநீநீநீளளளமாஆ 

போயிகிட்டு இருக்கு..



மொத்ததில...

நல்லா சாப்பாடு போட்டானுங்க..

NON VEG ஜோட.. 

அப்புறம் ICE CREAM ,

SWEET BEEDA etc .




அதுக்கு அடுத்த  வாரத்தில

தாங்க ஆடிட்டிங் இருந்துச்சு... 

அந்த நேரத்தில இந்த பதிவ

போட முடியுமா...சொல்லுங்க...

3 comments:

மாலுமி said...

மாப்ள, நீ எங்க இருக்குற?
நானும் கோயம்புத்தூர் ல சரக்கு சாப்புடுறேன்
எனக்கு மெயில் பண்ணு
malumi.cbe@gmail.com

kaattuvaasi said...

அப்படி போடு மச்சி...

எப்பவாச்சும் இப்படி சான்ஸ் மாட்டும்... விட்ருவோமா....

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

அதானே..வாய்ப்புகளை வீணடிக்க நான் என்ன வேலைக்காவாதவனா...? சியர்ஸ்..