Wednesday, October 13, 2010

நீதிக்கதைகள்...பார்ட் 3

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

நீதிக்கதைகள் : பார்ட் 2 பார்க்க இங்க கிளிக் பண்ணுங்க... 

 
வாத்தி  : பெரியவனா  ஆனதும் என்ன பண்ணுவ...

நானு : யாரையாவது கல்யாணம் பண்ணுவேன்...

வாத்தி  : அது இல்ல டா.. என்னவா வருவா..

நானு : மாப்பிள்ளையா  வருவேன்..

வாத்தி  : அடடா..வளர்ந்ததும் என்ன 

எதிர்பார்ப்பனு கேட்டேன்...

நானு : அழகா ஒரு பொண்டாட்டி 

வேணும்னு எதிர்பார்ப்பேன்...

வாத்தி  : டே.. ராஸ்கல்...உன்ன பெத்தவங்களுக்கு 

எந்த விதத்துலடா  சந்தோஷத்த  கொடுப்ப...

நானு : அவங்களுக்கு ஒரு நல்ல மருமகள 

கொண்டு வந்து தான் சார்...

வாத்தி  : அறிவு  கெட்டவனே.. உங்க அப்ப அம்மா

உன்கிட்ட இருந்து என்னடா எதிர் பார்ப்பாங்க...

நானு : ஒரு பேரனோ , இல்ல பேத்தியோ 

எதிர் பார்ப்பாங்க சார்...

வாத்தி  : அட கடவுளே... வாழ்கையில உனக்குன்னு

ஒரு கொள்கை , லட்சியம் கிடையாதாடா  ...

நானு : ஏன் சார் இல்லை.. என் கொள்கை , 

லட்சியம் ரெண்டுமே ஒண்ணு தான் சார்...

வாத்தி  : என்னனு சொல்லி தொலை...

நானு : நாம் இருவர்... நமக்கு இருவர்...

வாத்தி  : சனியனே... உனக்கு வேற நெனைப்பே

கெடையாதா... ஒழிஞ்சி போயிடு..



நீதி : நான் மூணாவது படிக்கும் போதே 

எனக்கு சீனியரா  இருந்த  

பொண்ண லவ் பண்ணவன்...



பொண்ணு : நான் செத்து போயிட்டா நீ 

என்னடா பண்ணுவ..

பையன் : ரொம்ப சந்தோஷம் படுவேன்டி  ...

அடுத்த நாள் அந்த பையனுக்கு 

ஒரு நியூஸ் வருது...

அந்த பொண்ணு தற்கொலை பண்ணிகிட்டானு..

அவ கடைசியா அவனுக்கு ஒரு 

மின்னஞ்சல் அனுப்பி இருந்தா...

 " நீ சந்தோசமா இருக்க நான் என்

உயிரையும் கொடுப்பேன்..."


நீதி : அந்த மாதிரி பொண்ணுங்க எல்லாம் 

இப்ப எங்க இருக்காங்க... 

பண்டோரா கிரகத்துலையா...




வாத்தின் வாழ்க்கை :


எனக்கு வாத்து பிடிக்கும்.. அது தண்ணீரில் வாழும்.. 

சமயங்களில் நானும் வாழ்வேன்.. 

டாஸ்மாக் தண்ணி உடம்புக்கு கேடு.. 

காந்திஜி இதை பற்றி சொல்லி இருக்கிறார்... 

அவர் மிகவும் நல்லவர்.. கையில் கைத்தடி வைத்து

இருப்பார்.. கைத்தடி தண்ணீரில் போட்டால் மிதக்கும்.. 

வாத்தும் தண்ணீரில் மிதக்கும்.. நானும் தண்ணீரில் 

மிதப்பேன்... நான் பத்து நிமிடங்களில் குளித்து

விடுவேன்.. வாத்து நாள் முழுவதும் குளிக்கும்.. 

அதனால் தான் அது வெள்ளையாக உள்ளது.. 

எனக்கு வாத்து மிகவும் பிடிக்கும்...


நீதி : இது என்னோட வலைப்பூ... 

நான் இப்படி தான் எழுதுவேன்...

அடுத்த வாரம் மீனோட வாழ்க்கை...




ஒரு பையன் தன் காதலியோட 

டேட்டிங்    போயிட்டு...

வீட்டுக்கு ரொம்ப லேட்டா வர்றான்...

அப்பா : எங்கடா போன இவ்வளவு நேரம்...

பையன் : பிரெண்டு வீட்டுக்கு...

அந்த அப்பா என்ன பண்ணாரு தெரியுமா... 

பையனோட நண்பர்கள் பத்து பேரு 

வீட்டுக்கு போன் பண்ணாரு...

அதுல அஞ்சு பேரு சொன்னாங்க... 

" ஆமா... அங்கிள்... இங்கதான் 

வந்து இருந்தான்..."

மூணு பேரு சொன்னாங்க.. 

" இப்போ தான் கெளம்புனான் அங்கிள்..."

ரெண்டு பேரு சொன்னாங்க... 

" இங்க தான் அங்கிள் இருக்கான்... 

நாங்க குரூப் ஸ்டடி  பண்ணிக்கிட்டு இருக்கோம்... 

அவன்கிட்ட போன் கொடுக்கட்டுமா அங்கிள்..."


நீதி : நண்பேன்  டா...



காதலை பற்றி பிரபலங்கள் கூறியவை...

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கடைசி வரை 

நண்பர்களாக மட்டுமே இருக்க முடியாது...

ஷேக்ஸ்பியர்...

நட்பு தான் காதலின் முதல் படி...

ஆபிரகாம் லிங்கன்  ...


ஒரு ஆணிடமோ அல்லது பெண்ணிடமோ 

சென்று என்னை  நண்பியாக / நண்பனாக ஏற்றுகொள் 

என்பது....

நான் உன்னை காதலிக்கிறேன் 

என்பதன் மறைமுக வடிவம்..


வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்...




காதல் என்பது முடிவில்லாத நட்பு...

ஜாக்கி சான்...



உனக்கு நெருங்கிய நண்பனாக / நண்பியாக இருப்பவர்...

நிச்சயம்  ஒரு நல்ல வாழ்க்கை துணையாக இருப்பார்...

மைக்கேல் ஜாக்சன்... 

நீதி : " ஆணியே புடுங்க வேணாம்...." 

- உங்கள்  3 G ...



ஒருத்தர் ஷேக்ஸ்பியர் கிட்ட கேட்டாராம்..

வயதுக்கு மீறிய காதல் சரியா..?

அதுக்கு  ஷேக்ஸ்பியர்.. 

அவர் கிட்ட ஒரு காலேண்டர் கொடுத்து...

வாரத்தின் ஏழு நாட்கள்ல எது சின்னது

எது பெரியதுனு உங்களால சொல்ல 

முடியுமான்னு கேட்டாராம்...

காதல் இதயத்தில் இருந்து வருவது... 

அதுக்கு வயது கிடையாதுன்னு சொன்னாராம்...

நீதி : சீனியர் பிகர்களை சைட் அடிச்சா

தப்பே இல்லை...

நான் கூட மூணாவது 

படிக்கும் போதே 

நாலாவது படிச்சா அமுதாவை

காதலிச்சு இருக்கேன்...

முதலாளி : நான் உன்கூட ஒரு தடவை சந்தோசமா

இருக்க ஆசை படுறேன்.. அதுக்கு நான் உனக்கு 5000 ரூபாய் 

தர்றேன்... அத நான் தரையில் வீசுவேன்... 

நீ அத எடுக்குற நேரத்துக்குள்ள நான் 

என் வேலையை முடிச்சுக்குறேன்...

உடனே அந்த பொண்ணு யோசிச்சு.. 

தன்னோட காதலனுக்கு போன் பண்ணி 

விஷயத்த சொன்னாளாம்.. அவனும் சரி..சரி.. 

ஒரு தடவை  தானே.. பரவா இல்ல..

சீக்கிரம் கீழ இருக்குற பணத்த எடுத்துடு.. 

ஆனா 10000 ருபாய் வாங்கிக்கோன்னு  

சொன்னானாம்...

ஒரு மணி நேரம் கழிச்சி அவளுக்கு 

போன் பண்ணான் காதலன் ...

காதலன் : என்ன.. முடிஞ்சுதா..

காதலி : இன்னும் ரெண்டு நாள் ஆகும்... 

அந்த ............. எல்லா பணத்தையும் சில்லறையா 

மாத்தி கொண்டு வந்து இருக்கான்.. 




நீதி : INVESTMENTS ARE 

SUBJECTED TO MARKET RISKS...

PLEASE READ THE OFFER 

DOCUMENTS CAREFULLY 

BEFORE INVESTING...