தந்தையை பற்றிய தனயனின் எண்ணங்கள்... At 4 Years
என் அப்பா தான் உலகத்திலேயே சிறந்தவர்...
At 6 Years
என் அப்பாவுக்கு எல்லாமும் தெரியும்..
எல்லாரையும் தெரியும்...
At 10 Years
அடிக்கடி கோபப்பட்டாலும் என்
அப்பா ரொம்ப நல்லவர்...
At 12 Years
நான் சின்ன பையனா இருக்குற வரைக்கும்
அவர் என் மேல ரொம்ப அன்பா இருந்தார்....
At 16 Years
அப்பாவுக்கு இப்ப இருக்குற விஷயங்கள் தெரியல...
இன்னும் அந்த கால நெனைப்புலையே இருக்காரு...
At 20 Years
ச்ச.. இவர் கூட எப்படி தான் இத்தனை நாள்
அம்மா காலம் தள்ளுனாங்களோ தெரியல...
At 25 Years
இவரு எப்பவுமே இப்படி தான் ...
எதையுமே ஒத்துக்க மாட்டாரு...
நான் பிடிச்ச முயலுக்கு மூணு
கால்னு சொல்லிக்கிட்டு....
At 30 Years
என்னால என் பையன சமாளிக்கவே முடியலையே...
எப்படி தான் என் அப்பா என்னை
சின்ன வயசுல சமாளிச்சாரோ...
At 40 Years
எனக்கு ஒழுக்கம்னா என்னனு சொல்லி
தந்தது என் அப்பா தான்...
நானும் என் பையனுக்கு
அதையே சொல்லி தரனும்...
At 50 Years
எங்க அப்பா எங்கள வளர்க்க
எவ்வளோ கஷ்டப்பட்டாருன்னு
இப்ப தான் புரியுது...
என்னால என் ஒரே பையனையே
சமாளிக்க முடியலையே...
At 55 Years
எங்களுக்காக என் அப்பா
நெறைய செய்ஞ்சு இருக்காரு... At 60 Years
என் அப்பா தான்
உலகத்துலேயே சிறந்தவர்....
அப்பா சிறந்தவர்னு 56 வருஷம் கழிச்சு
தான் நமக்கு மறுபடியும் தெரியுது...
அதனால இப்ப இருந்தாவது அவங்களுக்கு
சந்தோஷத்தையும் , நிம்மதியையும் தருவோம்...
|
No comments:
Post a Comment