இதெயெல்லாம் மறுபடியும்
நினைத்து பார்க்கும்போது..
கொஞ்சம் ஜில்லுனு
தாங்க இருக்கு...
வருஷா வருஷம் என்னோட
அத்தை ஊருல
( மயிலாடுதுறை பக்கத்துல..)
அய்யனார் கோவில் தீமிதி நடக்கும்..
சில வருஷம் முன்னாடி
வரைக்கும் தவறாம போயிடுவேன்..
அந்த காவிரி கரை ஓரம் பொண்ணுங்க
குளிச்சி வர்ற அழகே தனி..
எனக்கு கொஞ்சம் வாய் கொழுப்பு
அதிகம்ங்றதால கொஞ்ச நேரம்
பேசினாலே சீக்கிரம் பொண்ணுங்களுக்கு
என்னை பிடிச்சி போயிடும்..
(ஆனா எவளுமே வந்து பேச மாட்றா..
என் மூஞ்சி அப்படி..நெத்தியிலேயே
இவன் சரியான தப்பானவன்னு
( அயோக்கியன் ) எழுதி
இருக்கும் போல..)
இருந்தாலும்..தனது முயற்சியில்
சற்றும் மனம் தளராத
மானங்கெட்டவன் ( நான் தான் )
பெண்களின் பின்னால் செல்வதை
தொடர்ந்து கொண்டு இருந்தான்..
தீமிதி அன்னைக்கு முதல் வாரம்..
ஊர் பசங்க எல்லாம் ஒண்ணு கூடி..
தோரணம் கட்றது..
போடுறது ( சில பேரு மட்டும் பந்தல் )
னு கொஞ்சம் பிசியா இருந்தோம்..
அப்போ... ஆரஞ்சு நிற தாவணி
போட்டு..அந்த பொண்ணு..அவளை
அப்போ தான் முதல் முறையா
நான் பார்க்குறேன்..அவளும் என்னை
போலவே யாராவது சொந்தகாரங்க
வீட்டுக்கு வந்து இருப்பாள்னு..
பசங்க கிட்ட "மச்சி..யார்ரா
அது னு கேட்டா"..அவனுங்க உடனே
ஓவரா ஓட்ட ஆரம்பிச்சிட்டானுங்க..
அப்புறம் ஒருவழியா.. அந்த பொண்ணோட
ஊரு மட்டும் சொன்னானுங்க.. முதல்
பார்வையிலேயே மனசு முழுக்க
அவ வந்து உக்காந்துட்டா...
அப்புறம் அன்னைக்கு நைட்டு
பூரா அவ தெருவுல
தானே இருந்தேன்...
அவ கிட்ட பேரு என்னனு
கேட்க போனா..
அவங்க அப்பன்னு நெனைக்கிறேன்..
அந்த ஆளு யாரோ திருடன்னு ..
கம்ப தூக்கிகிட்டு வந்துட்டான்..
( ராத்திரி ஒண்ணே கால் மணிக்கு
அவங்க வீட்டு கொல்லைபுறம்
பக்கம் போனா..அப்படி தான்
நினைப்பாங்களோ..) அந்த ஆளு
கிட்ட மாட்டாம எஸ் ஆகி பசங்க
கூட்டத்துல கலக்குறதுக்குள்ள..
நாலு விஜய் படம் தொடர்ந்து
பார்த்தா மாதிரி நாக்கு தள்ளிருச்சு...
அதுக்கு அப்புறம் ரெண்டு நாள்ல
அவளும் என்னை பார்க்க ஆரம்பிச்சிட்டா..
( வேற வழி..யார்ரா இவன்..
வில்லன்னுங்களை கண்ட விஜய்
மாதிரி இவ்வளவு வெறியோட
பார்க்குறான்னு நெனச்சி இருப்பா போல..)
அதுக்கு பிறகு நடந்தது எல்லாம்..
(நாட்டுப்புற பாட்டு மாதிரி
மூணு வருஷம் முன்னாடி
முயற்சி பண்ணியது..)
கழி எடுக்க போகையில நான்
கன்னி பொண்ணு ஒண்ணை கண்டேனே..
காவல் வேலி ஓரம் நின்னு அந்த
கன்னி பொண்ணு பேரை கேட்டேனே..
அந்த பக்கம் வந்த அவ அப்பன்
எங்க ரெண்டு பேரையும் பார்த்தானே ..
தொரட்டி கம்பை எடுத்துகிட்டு
என்னை தொரத்தி தொரத்தி வந்தானே...
சனிக்கிழமை சந்தையில என்
தேவதையை நான் கண்டேனே..
என்னை பார்த்ததுமே அவ வெட்கப்பட்டு
மாயமா மறைஞ்சி போனாளே..
வளையல் மணி கடையினிலே
வஞ்சி அவளை கண்டேனே..
ஆசைப்பட்டு நானும் வாங்கி
தந்தேன்..அதை
வாங்க மறுத்து போனாளே...
மனசு வலிச்சி நின்னு இருந்தேன்..
அந்த மயிலு அப்போ வந்தாளே..
சந்தையில என் அக்கா இருந்தா..
என்னை மன்னிச்சுக்குங்கனு சொன்னாளே..
நான் வாங்கி தந்த..
வளையல் மணி போட்டுக்கிட்டு ..
அவ திருவிழாக்கும் வந்தாளே..
அந்த வளையல் மணி ஓசையிலே
என் மனசு குலுங்க கண்டேனே..
பாவாடை தாவணியில் ஒரு
பட்டாம் பூச்சியை பார்த்தேனே..
அவ இமைகள் ரெண்டும் படபடக்க..
அவ பார்வையில் நான் துடி துடிக்க..
ஊரு கூடி தேரிழுக்கும் போதும்
பதுமை அவளை பார்த்தேனே..
தேர் இழுக்கும் போதே அவ என்
மனசை சேர்த்து இழுத்தாளே..
பார்வைகளிலேயே பேசிகிட்டோம்...
நாங்க காதல் பாடம் கத்துகிட்டோம்..
சாதி சனம் எல்லாம் சுத்தி நிக்க...
நானோ அவ அழகுல
சொக்கி நின்னேன்...
அய்யனாரு கோவிலுக்கு அவ
பொங்கல் வைக்க வந்தாளே...
கோவிலுக்குள்ளே ஒளிஞ்சிருந்து
நானும் அவளை பார்த்து ரசிச்சேனே ..
ஒரு மறைவில் என்னை பார்த்துப்புட்டா..
என்னை பார்த்தஉடன் மேனி வேர்த்துபுட்டா..
என் பார்வைகளால் அவ வெட்கப்பட்டா..
அவ நாணத்தில் நானும் புத்திகெட்டேன் ..
ஆத்தங்கரைக்கு என்னை வர சொல்லி...
சேதி சொன்னா என் தேவக்கன்னி...
ஆத்தங்கரையிலே காத்து இருந்தேன்..
அவ வருகையை எதிர் பார்த்திருந்தேன்...
அப்போ சுடிதாரில் வந்தா.. சூரியனா..
இவ பகலில் ஜொலிக்கும் விண்மீனா..?
இனிக்க இனிக்க பேசினா..
மோகப்பார்வைகள் வீசினா..
இவ வானத்தில் இருந்து வந்த பெண்ணா...??
எங்க ரெண்டு உசுருமே ஆச்சு ஒண்ணா...
இவளுக்கு ஒப்பிடலாம் அந்த வான வில்லை...
இனி இவ இல்லாம நானும் இல்லை..
இனி இவ இல்லாம நானும் இல்லை..
இனி இவ இல்லாம நானும் இல்லை..
மார்கழி குளிரா இல்ல வேற
ஏதாவது எழவா னு தெரியலை..
பொண்ணுங்களை தவிர வேற
எதையுமே என்னால யோசிக்க முடியல..
அதனால தான் இப்படி பழசை
எல்லாம் தூசி தட்டி
எழுத வேண்டி இருக்கு...
எல்லாம் ஒரு கணக்கு தான்...
( யாராவது பொண்ணுங்க இத
எல்லாம் படிச்சிட்டு......
ஹ்ம்ம்...)