Saturday, November 6, 2010

வ..குவார்ட்டர் கட்டிங்.. விமர்சனம்...

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
  
என்ன மக்களே...


இந்த தீபாவளிக்கும் வழக்கம்

போல சரவெடி , குருவிவெடி , லட்சுமி

வெடி , யானை வெடி , புஸ்வானம் , 

சங்கு சக்கரம் னு வெடிச்சு

சந்தோசமா கொண்டாடுணீங்களா...



என்னங்க நீங்க... 



ஒரு  குடிசை , கம்ப்யூட்டர் மானிட்டர் , 


டீஸல் டேங்க் , பெட்ரோல் பங்க் ,


மோட்டார் சைக்கிள் இப்படி


ஏதாவது வித்தியாசமா வெடிச்சு


ஊரையே கொளுத்திப்போட்டு  


குதூகலமா கொண்டாடி


இருக்கவேண்டியது தானே...


சரி... பரவா இல்ல..


அடுத்த தீபாவளிக்கு


பார்த்துக்கலாம்...


காலையிலேயே செஞ்சு வச்சி

இருந்த பலகாரங்களை எல்லாம்

கபளீகரம் செஞ்சுட்டு மதியத்துக்கு

மேல படம் பார்க்கலாம்னு

நான் , என் தம்பி , என் மச்சான்

மூணு பேரும் கெளம்புனோம் ...


உத்தம புத்திரன் படத்துக்கு

ரொம்ப கூட்டமா இருந்ததால

என்னோட விருப்பத்திற்கிணங்க

குவார்ட்டர் கட்டிங்

படத்துக்கு போனோம்...

அங்கே நடந்தவைகளும் ,

படத்தை பற்றிய எனது

கருத்துகளும் படத்தோட

ட்ரைலர்  ஸ்டைல்லயே 

இதோ...






தியேட்டர்ல நேத்து...


கூட்டத்தை பார்த்து..


முடிவு பண்ணோம்...


க்யூவுல நின்னோம்...


எனக்கு முன்னே...

ஏகப்பட்ட வெண்ணை...

இதயம் வேகமா அடிக்க...

நான் டிக்கெட்

கிடைக்குமானு துடிக்க...



கவுண்டர்ல கையை விட்டேன்..


டிக்கெட்ட கேட்டேன்...


கெடச்சது பால்கனி...


ஏதோ ஒன்ன குடுப்பா நீ..



ஆர்வமா உள்ள போனா...


எழவு அது தியேட்டர் தானா..


செம காண்டுல நாங்க..


இருந்தாலும் படம் பார்க்க ஏங்க...



10 நிமிஷத்துல படத்தை போட்டான்...


அந்த ஆபரேட்டர் எடக்கு நாட்டான்...


விஜய் படம் எல்லாம்


ஹிட்னு சொன்னா...


இந்த படம் சூப்பர்


ஹிட்டுங்கண்ணா...



எண்டர்டைன்மெண்டுக்கு வாரண்டி...

காமெடிக்கு நான் கேரண்டி..

ஆக்ஷன் , செண்டிமெண்ட் , காமெடி

எல்லாம் இருக்கு...

S .J சூர்யா  ஸ்டைல்ல சொன்னா

வேற மாதிரி இருக்கு...





படம் ஒரு குடி மகனோட


ஏக்க வாய்ஸ்...


சிவா தாங்க படத்துக்கு


PERFECT சாய்ஸ்..


தளபதிகளும் , ஸ்டார்களும்


உஷாரா இருங்க...


கதையே இல்லாம


கலக்குறாங்க பசங்க...





 மக்கு மற்றும் சூப்பர் சரோவா


நம்ம லேகா...


வாய் தவிர மத்தது


எல்லாம் பக்கா...


வழக்கமான கதாநாயகி


போலவே லூசு..


வீண்போகலை கவுண்டர்ல


கொடுத்த காசு..







இசைல G.V பின்னிட்டான்...


RR லையோ அடப்பாவி அள்ளிட்டான்..

இயக்குனர்கள் HUSBAND & WIFE ...

இவ்ளோ தாங்க நம்ம லைப்...





 வசனங்கள் தாங்க படத்துக்கு பிளஸ்..

சிவாவோட டைமிங் டாப் கிளாஸ்...

நிச்சயமா இது வெற்றிக்கூட்டணி..

இந்த காம்பினேஷன்ல படங்கள்

வரணும் இனி...



தேடல்தானேங்க வாழ்க்கை...


அதுதான் படம் முழுக்க..


இப்படி ஒரு அருமையான கருத்து...


இந்த படத்திலையும் இருக்கு...





இதை புரிஞ்சிக்க முடியாதவங்க..


தயவு செய்து குறை சொல்ல

வேணாங்க..


இயக்குனர்களே இதுபோலவே
 
இயல்பா எடுங்க...
 


எப்படியும் படம் பிச்சிகிட்டு ஒடுங்க..

No comments: