அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
எங்களது தொழிற்சாலையில்
MAINTANENCE துறையின்
தலைவராக இருந்து
ஓய்வு பெற்ற
திரு . ஆறுமுகம் அவர்களுக்கு...
ப்ரியா ( ப்ரிய ) விடை...
ஆலோசகராய் நில்லாமல்...
ஒரு ஆசானாய்
அனைத்து வேலைகளிலும்
துணை நின்றாய்..
அதிகம் பேசாமல்..
உன் உழைப்பின் மூலம்
எங்களை அதிகம்
பேச வைத்தாய்...
பொலிவிழந்து கிடந்த
துறைக்கு
புத்துணர்ச்சியோடு புது ரத்தம்
பாய்ச்சினாய்...
இன்குபேட்டரில் வைத்திருந்த
இயந்திரங்களுக்கு
இதய அறுவை செய்து
இன்று செயல் பட வைத்தாய்...
ஈடுபாடு , இனிமை , எளிமை
எனும் சொற்களுக்கு
எடுத்துக்காட்டாய் இருந்தாய்..
கோபம் , வெறுப்பு , சிரிப்பு
என்று பன்முகம்
காட்டிய எங்களுக்கு என்றும்
புன்முறுவலுடன்
இன்முகம் காட்டினாய்...
முதுமை உன் நரையில்
தெரிந்தாலும்...
இளமை உந்தன் நடையில்
தெரிகிறது...
நீ காட்டிய வழியில்
நித்தமும் துடிப்புடன்
நடப்போம்...
அகத்தின் அழகு முகத்தில்
தெரியும் என்பது போல...
அன்பின் முகவரியாய் விளங்கும்
உங்களது ஆனந்தமும் ,
ஆரோக்கியமும் என்றும் நிலைக்க
ஆண்டவனை வணங்கி ..
உங்களை வாழ்த்தி
விடை தருகிறோம்...
என்றும் அன்புடன்...
No comments:
Post a Comment