Tuesday, October 2, 2012

மாத்தி யோசி..68

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



ஒரு ஆபிஸ்ல வேலைக்குன்னு போனாலே ஏகப்பட்ட 

பிரச்சினைகள் இருக்கும்..அதுல முதல் பிரச்சினை அந்த 

ஆபிஸ்க்கு வேலைக்கு போறது தான்..

அதனால ஆபிஸை மாத்துங்க..

கூட்டத்தில இருக்கும்போது அமைதியாய் இருப்பவன் 

ஆடு என கொ(ல்)ள்க..



ராஜாவா,ரஹ்மானா னு ரெண்டு ஆண்களைப் பற்றி 

விவாதம் பண்றவங்க ஏன் அனுஷ்கா ஷர்மாவா, 

அனுஷ்கா ஷெட்டியானு விவாதம் பண்ண மாட்றாங்க..# ஏக்கம்..


நல்லவர்களுக்கு வரும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு 


அவங்களே தான் காரணமா இருக்காங்க..# பைல்ஸ் ரீசன்



கெட்டவன் இன்னொரு கெட்டவனை நல்லவனாக் 


காட்ட முயற்சிப்பதில்லை..ஆனா நல்லவன் னு 

சொல்லிக்கிறவங்க அடுத்தவனைக் கெட்டவனாக் 

காட்டுவதில் தெளிவா இருக்காங்க..

# அப்போ யாரு கெட்டவன்..?




ரகசியங்கள் வெளியேற மட்டும் எத்தனையோ 


வழிகள் உருவாகின்றன..



ஒரு விஷயம் நமக்கு சரின்னு தோணியதுக்கு அப்புறம்,


அதை நியாயப்படுத்த எத்தனை காரணங்கள் கிடைக்குது..!!!!



குழந்தைகளுக்கு மட்டுமல்ல, குமரிகளுக்கு இடையிலும் 


போதிய இடைவெளி தேவை..# கூட்டமா வந்தா சைட் 

அடிக்க சங்கடமா இருக்கு..


ஒரு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடையாது / முடியாது னு 


இருக்கும் நிலையில் தற்காலிகத்தீர்வு 

தெரிந்தால் தொடரலாமே..வருத்தப்படுறதுல 

என்ன நன்மை…?


சில வருடங்கள் முன்பு மரங்கள்,கோவில்களை அடையாளமாக்கி 

வழி சொல்லுவாங்க..இப்போ டாஸ்மாக்,ATM 

மை பயன்படுத்துறாங்க..#வீதிக்கு வீதி இது ரெண்டும் 

தானே இருக்கு…ஹ்ம்ம்ம்….