Saturday, October 6, 2012

ஏன் இப்படி..69

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




ஒரு விஷயம் தனக்கு தெரியலை / புரியலை னு 


சொல்லுறவங்களை விட,தெரியும் / புரியுது னு 

சொல்லி மாட்டிக்கிறவங்களே அதிகம்..



ஒரு விஷயத்தை அடுத்தவன் செய்து அது தப்பா 


போகிறவரை காத்திருந்து அட்வைஸ் பண்ணுறவனுங்களே..

முதல்லையே சொல்லி தொலைய வேண்டியது தானே..

 இப்போ வந்து ஏன் எழவு கொட்டுறீங்க...



ஒரு பிரச்சினைக்கு அட்வைஸ் பண்ண அம்புட்டுபயலும் 


ஓடி வர்றான்..அழைப்பு இல்லாமையே.. தீர்வு கேட்டா 

ஓடி போயிடுறானுங்க..சொல்லிக்காமையே..




ரோட்ல ஒரு பொண்ணு குனிஞ்ச தலை நிமிராம போச்சு..


இந்த காலத்தில இப்படி அடக்கமா ஒரு பொண்ணானு 

திரும்பி பார்த்தா சுள்ளுன்னு சுட்டுச்சு..எதிர் வெயில்..



ஆபிஸ்ல ஒரு பெரிய முதலை தகிடுத்தத்தம் பண்ணியதை 


ஒரு சின்ன முயல் கண்டுபிடிச்சி சிங்கத்திடம் சொன்னா,

முதல் ஆபத்து முயலுக்கு தான்..#ரெண்டு பேரும் எப்படா 

கூட்டு சேர்ந்தீங்க…?


குற்றத்தை செஞ்சவனை விட,அதை கண்டுபிடிச்சவனுக்கே 


ஆபத்து அதிகம்..# ஆபிஸ் அவலங்கள்..




தப்பு செய்தவனுக்கு இருக்க குற்ற உணர்ச்சியை விட,


அதை கண்டுபிடிச்சும் சொல்லமுடியாத நிலைமையில 

இருக்குறவனுக்கே குற்ற உணர்ச்சி அதிகம்..




பொய் சொல்றவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான்..


ஒரு உண்மையை கண்டுபிடிச்சி அதை சொல்ல முடியாம

 சங்கடத்தில் இருக்கான் ஒருத்தன்..
எதிரிகளை விட துரோகிகளாலேயே ஆபத்து அதிகம்…


# எங்கேயும் எப்போதும்.. கண்ணு சிமிட்டுற நேரத்தில 

காலை வாருறானுங்க..அவ்வவ்வ்வ்வ்…



ஒரு வேலையை சுலபமாக்க ஒருத்தனும் வழி சொல்ல மாட்றான்..


அதை மேலும் சிக்கலாக்க அத்தனை பேரும் ஆளுக்கு பல 

வழிகள் சொல்றாங்க..# ஓடிப் போயிடுங்கடா டேய்..

No comments: